ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் சுற்றுகலன் திட்டம்(மங்கள்யான்)...

Go down

செவ்வாய் சுற்றுகலன் திட்டம்(மங்கள்யான்)... Empty செவ்வாய் சுற்றுகலன் திட்டம்(மங்கள்யான்)...

Post by ந.கார்த்தி Fri Oct 03, 2014 6:49 pm

செவ்வாய் சுற்றுகலன் திட்டம்(மங்கள்யான்)...

http://ta.wikipedia.org/s/3apc

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (Mars Orbiter Mission), அல்லது மங்கள்யான் (Mangalyaan) என்பது செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2013 நவம்பர் 5 அன்று வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும்.

இவ்விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இதன் மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு செயற்கைக் கோள் ஒன்றை வெற்றிகரமாக அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

செவ்வாய் சுற்றுக்கலன் முனைய துணைக்கோள் ஏவுகலம் (PSLV) சி25 மூலம் ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து 2013 நவம்பர் 5 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 02:38 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இக்கலன் புவியின் சுற்றுப்பாதையில் ஒரு மாதமளவில் தங்கியிருந்த பின்னர் 2013 நவம்பர் 30 இல் செவ்வாயை நோக்கி செலுத்தப்பட்டது.

இத்திட்டம் இந்தியாவின் முதலாவது கோளிடைத் திட்டமாகும். சோவியத், நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் விண்கலம் தற்போது பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் விண்கலக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இந்திய தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் (IDSN) உணர்நீட்சி மூலமாகக் கண்காணிக்கப்படுகிறது.

திட்டசெலவு

2008 ஆம் ஆண்டில் சந்திரயான்-1 நிலவுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து 2010 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இயலுமை ஆய்வுடன் மங்கள்யான் திட்டப்பணி ஆரம்பமாகியது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் சுற்றுக்கலனின் ஆய்வுக்காக ரூ.4.54 பில்லியன் ($74 மில்லியன்) செலவிலான ஆய்வுப் பணிகளை முடித்ததை அடுத்து, 2012 ஆகத்து 3 இல் இந்திய அரசு இத்திட்டத்தை அங்கீகரித்தது.[26] திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.4.54 பில். ($74 மில்.) ஆகும். இதில் ஐந்து ஆய்வுக் கருவிகளுடன் கூடிய செயற்கைக்கோளுக்கான செலவு ரூ.1.53 பில்லியன் ($25 மில்லியன்) ஆகும். உலகில் குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் என இது புகழ்பெற்றுள்ளது.

நோக்கம்

செவ்வாயை சென்றடையும் அளவுக்கு தொழில்நுட்பத் திறன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருக்கிறதா என்பன உள்ளிட்ட ஆய்வுகளை நடத்துவதுமே மங்கள்யானின் முக்கிய நோக்கங்கள். மேலும் ,

விண்வெளிப் பயணங்களுக்குத் தூக்கிச் செல்லும் ராக்கெட் திறனை உறுதிப் படுத்துவது; விண்ணுளவி அமைப்பு, இயக்க நெறிகளைச் செயலாக்க முற்படுவது; அண்டவெளித் தேடல் பணிகளைத் திட்டமிட்டு நிறைவேற்றுவது. விண்வெளித் தொடர்பு முறைகளை விருத்தி செய்வது.
செவ்வாய்க் கோள் சுற்றுளவியை அமைப்பது; அது நெடுந்தூரப் பயணத்துக்குத் தயார் செய்வது; அது செந்நிறக் கோளில் இறங்கச் செய்வது.
செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து படமெடுப்பது. அங்கே மீதேன் வாயு இருப்பதைச் சோதிப்பது.
செந்நிறக் கோளில் ஒரு காலத்தில் இருந்த சூழ்வெளி வாயு மண்டல இழப்பை ஆராய்வது.

துணைக் கருவிகள்

செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் 15 கிலோ எடையுள்ள ஐந்து துணைக் கருவிகள் உள்ளடக்கியுள்ளது:

காற்றுமண்டல ஆய்வுகள்


லைமன் ஆல்ஃபா ஒளிமானி (Lyman Alpha Photometer)
செவ்வாய்க்கான மீத்தேன் உணரி(Mars Methane Sensor)

மேற்புற படிம ஆய்வுகள்

செவ்வாய் வண்ண ஒளிப்படக்கருவி (Mars Color Camera)
வெதுப்பு அகச்செங்கதிர் படிமமாக்கல் பட்டைமானி (Thermal Infrared Imaging Spectrometer)

துகள் சுற்றுப்புற ஆய்வுகள்

செவ்வாய் புறக்காற்று மண்டல நடுநிலை பொதிவு பகுப்பாய்வி (mars exospheric neutral composition analyser).

செயல்பாடு

1350 கிலோ எடையுள்ள மங்கள்யான், விண்ணில் ஏவப்பட்டு 10 மாதங்களுக்கு பின் செவ்வாயை சென்றடைந்தது. சுமார் ஆறுமாத காலமே இது செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக அந்த கிரகத்தை மங்கள்யான் 60 முறை சுற்றிவரும். சந்திரயானில் மொத்தமாக 11 கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. அதில் சில வெளிநாட்டு நிறுவனங்களுடையவை. ஆனால் இதில் எடுத்துச் செல்லப்பட்டுள்ள 5 உபகரணங்களும் இந்தியாவுடையது.மங்கள்யான் விண்கலத்தின் மொத்த எடை 1,350 கிகி ஆகும்.

வேகம்

மங்கள்யான் உயரே சென்றடைந்தபோது அதன் வேகம் மணிக்கு சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர். மங்கள்யானின் வேகத்தை அதிகரிக்க பூமியின் ஈர்ப்பு சக்தி உதவியது. பூமியை வட்டவடிவப் பாதையில் சுற்றும்படி மங்கள்யானைச் செலுத்தினால், அதன் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்பதால், நீள் வட்டப் பாதையில் அதை செலுத்தினர். பூமியை ஆறாவது தடவை சுற்றி முடித்தபோது, மங்கள்யானின் வேகம் மணிக்கு சுமார் 38 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்தது. இவ்விதம் (பூமி உள்பட) ஒரு கிரகத்தின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை அதிகரிக்கும் உத்திக்கு ஆங்கிலத்தில் கிராவிடி அசிஸ்ட் என்று பெயர். கடந்த காலங்களில், "பயனீர்', "வாயேஜர்' விண்கலங்களை அனுப்பியபோது, நாசா இந்த உத்தியைப் பயன்படுத்தியது.

புகைப்படம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செயற்கைக் கோள், வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஹெலன் புயலை புகைப்படம் எடுத்து அனுப்பியது.

தடங்கல் இந்தியாவின் முனைய துணைக்கோள் ஏவுகலம்

இஸ்ரோ மங்கள்யானின் கண்காணிப்பு மற்றும் சுற்றுப்பாதை தகவல் பெற நாசாவை சார்ந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா அரசாங்கத்தின் பணிநிறுத்தம் காரணமாக நாசாவின் பல கண்காணிப்பு நிலையங்கள் ஆளில்லா நிலையங்களாக மாற்றப்பட்டிருந்தன. இப்பணிநிறுத்தம் இஸ்ரோவின் கல ஏவு கால அளவை கடந்து தொடர்ந்தால் மங்கள்யான் கல ஏவு கால அளவிற்காக 2015 அல்லது 2016 வரை காத்திருக்க நேரிடும் சூழ்நிலை இருந்தது .நவம்பர் 5 அன்று பிற்பகல் 2:38 மணிக்கு ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி.-25 மூலமாக மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ பின்னர் தெரிவித்தது.

பயணக் கட்டங்கள்

பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ஏவுகலம் மூலம் மங்கள்யான் செயற்கைகோள், நவம்பர் 5, 2013 அன்று பிற்பகல் 2:38 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தற்போது இந்த ஏவுகலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வருகிறது. இந்த சுற்றுவட்டப் பாதையின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இறுதியாக திசம்பர் 1, 2013 அன்று செவ்வாய் கிரகத்தை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 43 நிமிடங்கள் பயணத்துக்குப் பிறகு பூமி அருகில் குறைந்தது 246 கிலோமீட்டர் தொலைவிலும் அதிகப்படியாக 23,566 கிலோமீட்டர்கள் கொண்ட நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது. 11.11.2013 திங்கள்கிழமை அன்று அதிகாலை 2.06 மணிக்கு 3ஆவது சுற்றுப்பாதையை கடந்து 4 ஆவது சுற்றுப்பாதைக்கு மங்கள்யானை முன்னேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சில இயந்திரக்கோளாறு காரணமாக தடங்கல் ஏற்பட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

2 லட்சம் கிமீ

16.11.2013 (சனிக்கிழமை) அதிகாலை 1.27 மணி நிலவரப்படி மங்கள்யான் 1.92,874 கிமீ தூரத்தில் 217 கிமீ நீள்வட்டப்பாதையில், விநாடிக்கு 101 கிமீகள் வேகத்தில் மங்கள்யான் சுற்றிவந்தது. 30.11.2013 (சனிக்கிழமை இரவு) புவியின் நீள்வட்டப் பாதையிலிருந்து 12.49 மணிக்கு விண்கல கட்டுப்பாட்டறையில் அமைந்துள்ள 440 நியூட்டன் திரவ எரிபொருள் என்ஜினை 22 நிமிடங்கள் இயக்கி செவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்க உந்தப்பட்டது. மங்கள்யான் 04.12.2013 அன்றுடன் 72 மணி நேர பயணத்தின் மூலம் 9.25 லட்சம் கிமீ தூரத்தைக்கடந்தது. அடுத்த 300 தினங்களில் சூரியனைக் கடக்குமென கணிக்கப்பட்டது.

10 லட்சம் கிமீ

டிசம்பர் 4 2013 அன்று அதிகாலை 1.14 மணிக்கு புவி ஈர்ப்புவிசையை விட்டு வெளியே மங்கள்யான் விண்கலம் கடந்தது. 25.05.2014 அன்றைய கணக்குப்படி 200 நாளில் 42 கோடி கிமீ அதாவது 60 சதவீத தூரத்தைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருந்தது.

பாதை மாற்றம் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் பாதை

மங்கள்யான் விண்கலம் சரியான திட்டமிட்ட பாதையில் செல்வதைக் கண்காணித்து தேவையெனில் நான்கு முறை நிர்ணயித்தப் பாதையை நோக்கி திருப்பிவிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி,

முதல் நிர்ணயிக்கப்பட்ட பாதைத் திருப்பம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் நாள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் இயந்திரம் 40.5 வினாடிகள் இயக்கப்பட்டு நிர்ணயித்தப் பாதையில் விண்கலத்தைத் திருப்பினர்.
இரண்டாவது பாதைத் திருப்பம் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று திட்டமிடப்பட்டது. ஆனால் மங்கள்யான் விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்வதால் அத்திருப்பம் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.
மூன்றாவது பாதைத் திருப்பம் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தியதி திட்டமிடப்பட்டது. அதன் படி மங்கள்யானின் இயந்திரம் 16 வினாடிகள் இயக்கப்பட்டு நிர்ணயித்தப் பாதையில் திருப்பிவிடப்பட்டது.
கடைசி பாதைப் திருப்பம் இரண்டு கட்டமாக ஆகஸ்டு மாதம் மற்றும் செப்டம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டது.

வெற்றி


மங்கள்யான் விண்கலம் சரியான திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தியதி இந்திய நேரப்படி காலை 7.41மணிக்கு செலுத்தப்பட்டது. இவ்விண்கலனில் பொருத்தப்பட்டிருந்த எட்டு சிறிய இயந்திரங்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு அதன் வேகத்தை குறைத்து செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. விண்கலத்தின் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறும் போது விண்கலத்திற்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இயந்திரங்கள் எரியூட்டப்பட்டு அதன் திசைவேகம் குறைக்கப்படும் போது, செவ்வாய் கிரகம் விண்கலத்திற்கும் பூமிக்கும் இடையே இருந்ததால் விண்கலமும் தரைக்கட்டுப்பாட்டு மையமும் எந்த வித சமிக்கைத் தொடர்பும் கொள்ளமுடியாத நிலையில் இருந்தன. மீண்டும் விண்கலம் பூமியைத் தொடர்பு கொள்ளும் போது, 1099 மீட்டர்கள்/வினாடி சமிக்கை கிடைத்தது. இதன் மூலம் விண்கலம் செவ்வாயின் வட்டப்பாதையில் நுழைந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறும் போது விண்கலத்திற்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு 12.5 ஒளி நிமிடங்கள் ஆகும்.

நன்றி : விக்கிபீடியா -தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


செவ்வாய் சுற்றுகலன் திட்டம்(மங்கள்யான்)... Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum