ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!

+5
சிவா
யினியவன்
ராஜா
krishnaamma
தமிழ்நேசன்1981
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Empty உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 7:01 pm

பேசுவதற்கும் எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும் நாம் அதிகம் பயன்படுத்தும் செல்போன், இப்போது பணப் பரிமாற்றம் செய்வதற்கும் பெரிய அளவில் பயன்படுகிறது.

இன்டர்நெட் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும்போதுதான் நம் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களைத் திருடினார்கள் என்றால், இப்போது செல்போன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போதும் நம் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல் களைத் திருடி, நம் கணக்கில் இருக்கும் பணம் அனைத்தையும் கொள்ளையடிக்கத்தான் செய்கிறார்கள். இருந்த இடத்தில் இருந்தபடி பணத்தை அனுப்ப நினைத்தால், நம் பணத்தை இழக்க வேண்டிய துர்பாக்கியம் ஏற்படுகிறது.

இதெப்படி சாத்தியம்? என் செல்போனில் இருக்கும் தகவல்கள் என்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியப்போகிறது என அப்பாவியாகக் கேட்கும் பலருக்கும் காத்திருக்கிறது பல அதிர்ச்சித் தகவல்கள்.

நீங்கள் உங்கள் செல்போனில் பதிவு செய்யும் உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள், உங்கள் ரகசிய எண்கள் போன்றவை மிகச் சுலபமாகத் திருடுபோவதற்கு வாய்ப்புள்ளது.
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Nav19d
எப்படி இந்தத் திருட்டு நடக்கும், இந்தத் திருட்டில் நீங்கள் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இன்ஃபிசெக் (InfySEC) நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி வினோத் செந்திலிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
‘‘ஃபைனான்ஷியல் நிறுவனங்களில் சைபர் பாதுகாப்பு என்பது சற்று குறைவாகத்தான் உள்ளது. இந்த நிறுவனங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தங்கள் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திருடப்படுகிறது என்பதை அறிந்த நிறுவனங்கள்; மற்றொன்று, கணக்குகள் திருடப்படுவது குறித்து தெரியாமலே இயங்கும் நிறுவனங்கள்.

இதில் அதிகம் பாதிக்கப்படுவது வங்கிகள்தான். காரணம், ேஹக்கர்கள் எனப்படும் தகவல் திருடுபவர்கள் வங்கியின் கேட்வே எனப்படும் பேமன்ட் வழிக்குள் நுழைந்து தகவல் களைத் திருடிவிடுகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுக்க 40 மில்லியன் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது என்பது அதிர்ச்சியான தகவல்.

இதை ஹேக்கர்கள் எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்தால் அசந்து போவீர்கள். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஆப்ஸ் போன்றோ அல்லது இணையதளம் போன்றோ ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அதை உங்கள் எண்ணுக்கு அனுப்புவார் கள். உங்கள் வங்கிதான் அதை அனுப்பி இருக்கிறது என்று நினைத்து, நீங்களும் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் வங்கிக் கணக்கு தொடர்பான அத்தனை தகவல்களையும் அதில் பதிவீர்கள்.

இப்படி நீங்கள் பதிவு செய்யும் தகவல்கள் அனைத்தையும் வேறு ஓர் இடத்திலிருந்து கண்காணிப்பார்கள் ஹேக்கர்கள். உங்கள் வங்கிக் கணக்கு பற்றிய தகவல்கள் கிடைத்த அடுத்த சில நொடிகளில் உங்கள் கணக்கில் உள்ள பணம் அத்தனையையும் வழித் தெடுத்துவிடுவார்கள்.

இன்னும் சிலர், நான் சரியான வங்கி இணையதளத்தில்தான் லாக்-இன் செய்தேன் என்று சொல்வார்கள். கணினி அமைப்பில் உள்ள ASCII கோடுகளைப் பயன்படுத்தி, அதே பெயரில் வேறு இணையதளத்தை உங்கள் வங்கியின் அமைப்பிலேயே உருவாக்க வாய்ப்புள்ளது என்பதால் நீங்கள் எளிதாக ஏமாந்து போவதற்கு நிறையவே சாத்தியம் உள்ளது. சென்ற ஆண்டில் மட்டும் 3.5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு ஃபைனான்ஷியல் ஃப்ராடுகள் நடந்துள்ளன.

இதுமாதிரியான திருட்டுகளைத் தடுக்க எங்களைப் போன்ற சைபர் செக்யூரிட்டி அமைப்புகள் நிறுவனங்களின் நெட்வொர்க்கை முழுமையாக ஆராய்ந்து அதில் எந்த இடத்தில் ஹேக்கர்கள் தாக்க வழி உள்ளது என்பதை ஆய்வு செய்து, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து தருகிறோம்’’ என்றார்.

இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து வாடிக்கையாளர் எப்படி தங்களைப் பாதுகாத்துகொள்வது என்பது குறித்து தனியார் வங்கி அதிகாரியிடம் கேட்டோம்.

‘‘மொபைல் பேங்கிங் செய்பவர்கள் தங்களது செல்போனில் வங்கிக்கான ஆப்ஸை தரவிறக்கம் செய்துதான் இதனைப் பயன்படுத்த வேண்டும். இங்குதான் சிக்கல் வரத் தொடங்குகிறது. தவறான, வங்கி அல்லாத சேவை வழங்குவோரிடமிருந்து வந்த ஆப்ஸை நீங்கள் தரவிறக்கம் செய்திருந்தால், உங்களுக்கு ஆபத்துதான்.

உங்கள் வங்கி அளிக்கும் ஆப்ஸை பயன்படுத்தி, அதில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைப் பதிந்தால், அந்தத் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வங்கி உத்தரவாதம் அளிக்கும்.
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Nav19c
நம் பணத்தை சுருட்டும் மோசடி ஆப்ஸ்களைத் தவிர்ப்பதற்கு சில எளிய வழிகள் உள்ளன.

பணப் பரிவர்த்தனைக்கான ஆப்ஸ்களை நீங்கள் டவுன்லோடு செய்யும்போது வங்கிகளின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் இருந்து டவுன்லோடு செய்யுங்கள்.
வங்கிகளை அணுகினால் அவர்களே உங்கள் செல்போன் நம்பருக்கு ஓர் இணையதள முகவரியை அனுப்பி டவுன்லோடு செய்ய வழிவகைச் செய்வார்கள். அதுதான் பாதுகாப்பானதும்கூட.

உங்கள் கணக்கின் தகவல்களை உங்கள் செல்போனில் உள்ள ஆப்ஸ்களில் மட்டும் பயன்படுத்துங்கள். மற்றவர் போனில் அவசரத்துக்குப் பயன்படுத்துகிறேன் என்று உங்கள் தகவல்களைப் பதிவு செய்யாதீர்கள்.
உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Nav19a
வங்கிகள் தரும் ஆப்ஸில் பயன்படுத்தி னாலும் பரிமாற்றத்துக்காக வழங்கும் OTP (One Time Password) எனும் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டை யாருடனும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதும் நல்லது’’ என்றனர்.

நேரம் வீணாகும் என்று நினைத்து மோசடி ஆப்ஸ்களில் சிக்கி பணத்தை இழக்காமல், சரியான ஆப்ஸ்களைத் தரவிறக்கம் செய்து, பணத்தைப் பத்திரமாக பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Empty Re: உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!

Post by krishnaamma Sun Sep 14, 2014 7:08 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு நேசன்...............எனக்கு எப்பவும் online transfers பயம் தான் புன்னகை நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Empty Re: உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!

Post by ராஜா Sun Sep 14, 2014 7:15 pm

வங்கியின் வலைதளத்தில் இருந்து Apps தரவிறக்கி பயன்படுத்தினால் இந்த பிரச்சினை வராது....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Empty Re: உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!

Post by யினியவன் Sun Sep 14, 2014 7:40 pm

சரி யாராவது பணம் போட்டு வங்கி கணக்கு ஆரம்பித்து கொடுங்க - நான் பத்திரமா பரிமாற்றம் செய்றேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Empty Re: உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 7:42 pm

யினியவன் wrote:சரி யாராவது பணம் போட்டு வங்கி கணக்கு ஆரம்பித்து கொடுங்க - நான் பத்திரமா பரிமாற்றம் செய்றேன்
மேற்கோள் செய்த பதிவு: 1087574

இது என்ன புதிய மோசடியா இருக்கே...அசுக்கு புசுக்கு...அதெல்லாம் முடியாது ஜாலி ஜாலி ஜாலி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Empty Re: உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!

Post by யினியவன் Sun Sep 14, 2014 7:48 pm

தமிழ்நேசன்1981 wrote:இது என்ன புதிய மோசடியா இருக்கே...அசுக்கு புசுக்கு...அதெல்லாம் முடியாது ஜாலி ஜாலி ஜாலி
சதுரங்க வேட்டை மாதிரி இது ஈகரை சேட்டை புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Empty Re: உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!

Post by சிவா Sun Sep 14, 2014 8:48 pm

பேங்க்ல பணம் உள்ளவன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், கடன் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவலைகளெல்லாம் இல்லவே இல்லை!

... கடன்காரனா இருக்குறதுல எவ்வளவு நிம்மதி பாருங்கள் மக்களே!


உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Empty Re: உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 8:49 pm

சிவா wrote:பேங்க்ல பணம் உள்ளவன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், கடன் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவலைகளெல்லாம் இல்லவே இல்லை!

... கடன்காரனா இருக்குறதுல எவ்வளவு நிம்மதி பாருங்கள் மக்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1087619
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Empty Re: உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!

Post by krishnaamma Sun Sep 14, 2014 10:34 pm

சிவா wrote:பேங்க்ல பணம் உள்ளவன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், கடன் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவலைகளெல்லாம் இல்லவே இல்லை!

... கடன்காரனா இருக்குறதுல எவ்வளவு நிம்மதி பாருங்கள் மக்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1087619

ஆம்மாம் சிவா, மேலும் பணம் கொடுத்தவர்கள் நாம் நல்லா இருக்கணும் என்று பெருமாளை வேண்டுவா.............ஏன்னா நாம் நல்லா இருந்தாதானே, சம்பாதித்து அவங்க பணத்தை திருப்ப முடியும்......இந்த வசதியும் இருக்கே ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Empty Re: உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!

Post by T.N.Balasubramanian Mon Sep 15, 2014 11:05 am

krishnaamma wrote:
சிவா wrote:பேங்க்ல பணம் உள்ளவன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், கடன் வாங்கி வைத்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவலைகளெல்லாம் இல்லவே இல்லை!

... கடன்காரனா இருக்குறதுல எவ்வளவு நிம்மதி பாருங்கள் மக்களே!
மேற்கோள் செய்த பதிவு: 1087619

ஆம்மாம் சிவா, மேலும் பணம் கொடுத்தவர்கள் நாம் நல்லா இருக்கணும் என்று பெருமாளை வேண்டுவா.............ஏன்னா நாம் நல்லா இருந்தாதானே, சம்பாதித்து அவங்க பணத்தை திருப்ப முடியும்......இந்த வசதியும் இருக்கே ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1087666

ஓஹோஹோ !அப்படி ஒரு விஷயம் இருக்கா ?
கிருஷ்ணம்மா , கைமாத்தா ஒரு லக்ஷம் கொடுக்கவும் .! முக்கியமான தேவை !!
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Empty Re: உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum