ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!

3 posters

Go down

"எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்! Empty "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!

Post by சிவா Fri Sep 12, 2014 2:30 am


சென்னை: எதற்கெடுத்தாலும் என் தலைமை, என் ஆட்சி, என் அரசு என்று நான், நான், நான் என்று சொல்லும் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகம் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்ததற்கு முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் புள்ளியியல்துறை 2012–13ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது என்பது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களாக கருதப்படும் மாநிலங்கெல்லாம் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருகின்றன. ஆனால் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய தமிழ்நாடு கடைசி இடத்திற்கு சென்றதுதான் ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசின் சாதனையா?.

இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதம் ஆகும். ஆனால் இந்த சராசரியைவிட தமிழ்நாடு, பொருளாதார வளர்ச்சியில் 3.39 சதவீதம் என்று குறைந்திருப்பது ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிக்காட்டுகிறது. தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு கடுமையான மின்வெட்டு, லஞ்சம், ஊழல், எளிதில் அணுக முடியாத நிர்வாகம், தொழில் தொடங்குவோருக்கு பல்வேறு நிர்பந்தங்கள் மற்றும் சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால்தான் தொழில்துறை நலிவுற்று பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது.

நேற்று டெல்லியில் அனைத்து மாநில மின்துறை அமைச்சர்கள் கூட்டம் நடை பெற்றது. அங்கே சென்று தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்வெட்டு பிரச்னையை பேசி தீர்க்க வேண்டி தமிழக அரசின் மின்துறை அமைச்சரோ தூத்துக்குடியில் மேயர் தேர்தல் பணிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் லட்சணம் ஆகும்.

முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளெல்லாம் வெற்று அறிவிப்புகள் என நிரூபணமாகிறது. ஏழை எளிய மக்களின் வறுமையை பயன்படுத்திக் கொண்டு, கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, அதை முழுமையாக செயல்படுத்தாமலும், மக்களுக்காக வளர்ச்சி திட்டங்களை பற்றி சிந்திக்காமலும் செயல்பட்டதன் விளைவுதான், தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் கடைசி நிலையை நோக்கிச் சென்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிய தொழில் துவங்க நம் மாநிலத்தில் உள்ளவர்களே முன்வருவார்களா என்பது சந்தேகமே. மேலும் வெளிமாநிலத்திலிருந்தோ, வெளிநாட்டிலிருந்தோ, இந்த நிலையை பார்த்த பிறகு தொழிலதிபர்கள், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க எப்படி முன்வருவார்கள்.

டாஸ்மாக் வருமானத்தை உயர்த்த காட்டும் அக்கறையை, தொழில் துறை வளர்ச்சியில் இந்த அரசு காட்டி இருந்தால் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தொழில்துறையை முன்னேற்றி இருக்கலாம். அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு இருக்கும். சட்டப்பேரவையில் இதுபோன்ற பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வர எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் முயலும் போதெல்லாம் அவர்களை ஏளனம் பேசியும், வாய்ச்சவாலின் மூலம் பிரச்னைகளை திசை திருப்பியும், முதலமைச்சரை துதி பாடுவதிலும், வீணடிக்கும் நேரத்தை மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தி இருந்தால், நம் தமிழகம் உண்மையான வளர்ச்சியை கண்டிருக்கும்.

எதற்கெடுத்தாலும் என் தலைமை, என் ஆட்சி, என் அரசு என்று நான், நான், நான் என்று சொல்லும் முதலமைச்சர் இந்த பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்ததற்கு முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என மக்கள் கூறுகிறார்கள். "முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது" என்பதுபோல தமிழகத்தின் உண்மை நிலையை மத்திய அரசின் புள்ளியியல் துறை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளதை, இனியும் தமிழக மக்களிடம் மறைக்க முடியாது. எனவே இனியாவது தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுத்து, பொருளாதார வளர்ச்சியில் கடைகோடியில் இருக்கும் தமிழகத்தை வளர்ச்சி பெறும் மாநிலமாக மாற்ற முன்வர வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.


"எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்! Empty Re: "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!

Post by ayyasamy ram Fri Sep 12, 2014 5:44 am

ரகுராம் ராஜன் அறிக்கையின் படி[2013ஆம் ஆண்டு],
தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்கு கீழே வாழும்
மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு.

இது மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகயில்,
தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்! Empty Re: "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!

Post by தமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 6:35 am

மொத்தமா மொட்டை அடிக்காம விடமாட்டாங்க இந்த அரசியல்வாதிங்க.... சோகம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

"எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்! Empty Re: "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» ‘அன்று எதிர்ப்பு... இன்று கட்டாயம்...’ - ஆதார் + மின் இணைப்பு விவகாரத்தில் ஸ்டாலின் மீது ஓபிஎஸ் சாடல்
» ஒரே மேடையில் ஜெயலலிதா - விஜய் - விஜயகாந்த்!
» ஜெயலலிதா, விஜயகாந்த் எம்.எல்.ஏ., பதவி பறித்தால் என்ன ?
» ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார் விஜயகாந்த்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum