ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்து மருமகள் அல்ல...

4 posters

Go down

சிந்து மருமகள் அல்ல... Empty சிந்து மருமகள் அல்ல...

Post by krishnaamma Mon Aug 25, 2014 10:54 pm

மாப்பிள்ளை வீட்டுகாரர்கள் வந்து போன பரபரப்பு மறைந்து, சிந்துவின் வெட்கமும் குறைந்திருந்தது.
''அம்மா சிந்து... வர்ற புதன்கிழம நிச்சயதார்த்தம் இருக்குறதால சொந்த பந்தங்களுக்கெல்லாம் சொல்லணும்; தூரத்துல இருக்கிறவங்களுக்கு போன் போட்டு விஷயத்த சொல்லிட்டாலும், மத்தவங்களுக்கு நேர்ல போய் சொல்றதுதான் முறை; இப்பக் கிளம்புனாத்தான் எல்லாருக்கும் சொல்லிட்டு, மத்த வேலைகள பாக்க முடியும்,'' என்று கிளம்பிக் கொண்டே மகளிடம் சொன்னார் நடராஜன்.
''சரிப்பா... போய்ட்டு வாங்க.''

நிச்சயதார்த்த விழாவிற்கு தன் கல்லூரி தோழி புவனாவை அழைக்க, அவள் வீட்டுக்கு சென்றாள் சிந்து.
''ஏய்... என்னடி இது! சர்ப்ரைசா வந்து நிக்கறே...''
''ஆமான்டி; ஒரு குட் நியூஸ்...'' என்று சொல்லிச் சிரித்தாள் சிந்து.
''என்னடி குட் நியூஸ்... ரொம்ப சந்தோஷமா வேற தெரியுறே...மேரேஜ் பிக்சாயிடுச்சா?''
''ஆமான்டி,'' என்றாள் வெட்கத்துடன்.
''ஹை... உண்மையாவா... வாழ்த்துக்கள்டி,'' என்று கூறி, சிந்துவின் கையை பற்றி குலுக்கியவள், ''யாரு அந்த அப்பாவி?'' என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.
''பக்கத்து ஊருதான்.''
''மாப்ளே என்ன செய்றார்?''

''உன் வீட்டுக்காரரு மாதிரிதான் துபாயில இருக்காரு,'' என்று சிந்து சொன்னதும், புவனாவின் முகம் சுருங்கியது. நெருப்பு பிரவாகமெடுத்தது போன்று, உடம்பு முழுவதும் வெப்பம் பரவியது.
''துபாய் மாப்பிள்ளைக்கு போயி ஏண்டி சரின்னு சொன்னே...'' என்று புவனா கேட்டதும், மனசுக்குள் மிரண்ட சிந்து, ''ஏண்டி இப்படி சொல்றே?'' என்று கேட்டாள்.
''துபாய் மாப்பிள்ளைய கட்டிக்கிட்டு நான் படுறது போதாதா... நீயும் அவஸ்தை படணுமா? ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டுருக்கலாம்ல!''

புவனா சொல்ல, சிந்துவிற்கு அடிவயிற்றை பிசைந்தது.
''துபாய் மாப்பிள்ளைய கட்டிகிட்டா என்னவாம்,'' பயமாய் கேட்டாள்.
''அத ஏண்டி கேக்ற... நான் படுற பாட்டை யாருகிட்ட போய் சொல்லி அழுகுறது. மாமியாரு வீட்டுல, புருஷன் கூட நாம இருந்தாத் தான் நாமெல்லாம் மருமக; இல்லன்னா வெறும் சுண்டக்காய்தான். என் மாமியார் செய்ற அட்டகாசம் இருக்கே... கொஞ்சமா நஞ்சமா... அடுக்கிட்டே போலாம். கல்யாணமான ஒரு மாசத்துலயே அவரு துபாய்க்கு போயிட்டார்.

அதுக்கு பிறகு தான் எனக்கு பிடிச்சது ஏழரைச் சனி; அவர் வர்ற அடுத்த ஆறு மாசத்துக்குள்ள வீட்ல நடக்குற கதை, திரைக்கதை, வசனம், டைரக் ஷன் எல்லாமே என் மாமியார் தான்.
''கொஞ்சம் அழகா பூ வச்சுட்டு வெளில போயி வர முடியல; ஆயிரம் சந்தேகம். எப்போதும், அவங்க கண்முன்ன ஒரு காட்சி பொருளா கெடக்க வேண்டியிருக்கு. மகன் வெளிநாட்ல இருக்கான்; மருமகள தன் மகளப் போல வச்சிருக்கணும்ன்னு தோணுறதுல்ல; ஒரு அடிமைய போல்தான் நடத்துறாங்க.
''தப்பித் தவறி ஏதாவது ஒரு சின்ன தவறு செய்திட்டாக் கூட போதும்; உடனே, 'என் மகனுக்கு அங்க பொண்ணு பாத்தோம், இங்க பொண்ணு பாத்தோம்... கடைசியில கறுப்பா இருக்குற இவள போயி எம் பையனுக்கு கட்டி வச்சுட்டோம்'ன்னு என் முன்னாடியே சொல்லுறாங்க.

''சரி ரெண்டு நாளு நிம்மதியா அம்மா வீட்ல இருந்துட்டு வரலாம்ன்னு எங்க வீட்டுக்கு போனா... என் கூடவே அவங்களும் வந்துடுறாங்க. என் மேல உள்ள பாசத்தால இல்ல; இங்க நடக்குறத எங்க வீட்ல சொல்லிடுவேனோங்கிற பயத்துலதான்.

''புருஷன் கூட இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா... ஜாலியா நாலு எடத்துக்கு போயிட்டு வரலாம்; சுதந்திரமா இருக்கலாம்; மாமியாரோட அதிகாரம் எடுபடாது. இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா... உனக்கும் என் நிலம வந்துடக்கூடாதேன்னு தான்,'' என்று புவனா சொல்லி முடித்ததும், எதுவும் பேசாமல் அசைவற்று நின்றிருந்தாள் சிந்து. தோழியின் பேச்சைக் கேட்டதும், சிந்துவிற்கு மனதில் பயம் ஆட்டிவித்தது.
''புவனா... இப்போ என்னடி செய்றது... கல்யாணத்த பேசி முடிச்சாச்சு. நாள மறுநாள் நிச்சயதார்த்தம்; நிறுத்த முடியாதே,'' என்று லேசாய் கண் கலங்கியபடி, அவள் கையை பற்றிக்கொண்டே சொன்னாள்.
''பேசித்தான முடிச்சிருக்காங்க; நிறுத்த முடியாதுன்னு யாரு சொன்னா...மேலே படிக்க போறேன்னு சொல்லு; நிச்சயதார்த்தம் நின்னுடும்.''

''அப்பாகிட்ட நீ சொன்னது மாதிரியே சொல்லப் பாக்றேன்; சரிடி... நேரமாச்சு கிளம்புறேன்,'' என, தோழியிடமிருந்து விடை பெற்று வீட்டுக்கு கிளம்பினாள் சிந்து.
மனதில் ஏகப்பட்ட குழப்பங்களுடன், சூப்பர் மார்க்கெட் வழியா ஸ்கூட்டியில் போகும்போது, தன்னை யாரோ கூப்பிடுகிற சத்தத்தை கேட்டு, வண்டியை நிறுத்தி, திரும்பிப் பார்த்தாள் சிந்து. இன்னொரு கல்லூரி தோழி கவிதா.

''ஏய்...கவி, எப்படி இருக்கே?'' என்றபடி, வண்டியை, 'பார்க்' செய்துட்டு, அவளிடம் வந்தாள்.
''நல்லாயிருக்கேன்டி நீ எப்படி இருக்கே?''
''ம்... நல்லாயிருக்கேன்; ஆமா... என்ன இந்த பக்கம்?''
''மளிகைச் சாமான் வாங்க வந்தேன்; நீ எங்கடி போயிட்டு வர்றே?''
''நம்ம புவனா வீட்டுக்கு போயிட்டு வரேன்.''
''அவ வீட்டுக்கெல்லாம் போற... ஆனா, என் வீட்டுக்கு மட்டும் வர மாட்டேங்கிற...''
''அவ வீட்டுக்கு போயிட்டு, அப்படியே உன்னைய பாக்க வரலாம்ன்னுதான் இருந்தேன்; ஆனா, மனசு சரில்ல; அதான் வீட்டுக்கு கிளம்பிட்டேன்.''
''ஏண்டி என்னாச்சு?''

''எனக்கு கல்யாணம் பேசி முடிச்சிருக்காங்க; வர்ற புதன் கிழமை நிச்சயதார்த்தம். இதை புவனாகிட்ட சொல்லிட்டு, உன்கிட்ட சொல்ல வரலாம்ன்னு தான் இருந்தேன். அவ வீட்டு கதையை கேட்டதும், கல்யாண ஆசையே போயிடுச்சு,'' என்று கூறியவள், புவனா சொல்லிய விஷயங்களை சொன்னாள்.
''ஆமாம்... நானும் கேள்விப்பட்டேன்; புருஷன துபாய்க்கு அனுப்பிச்சுட்டு, இவ மட்டும் தனியா கஷ்டப்படுறான்னு. சரி, உனக்கு பாத்துருக்கிற மாப்பிள்ளைக்கு கல்யாணம் ஆகாத தங்கச்சி இருக்காளா?''
''ஆமாம்... ஒரே ஒரு தங்கச்சி; இப்ப தான் காலேஜ் முடிச்சிட்டு வீட்ல இருக்காளாம்.''
''ஒரு தொல்ல பத்தாதுன்னு இன்னொரு தொல்லயும் சேர்ந்திடுச்சா... ரொம்ப கஷ்டம்டி; எப்படி தான் சமாளிக்கப் போறியோ தெரியல.''

தொடரும்.................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிந்து மருமகள் அல்ல... Empty Re: சிந்து மருமகள் அல்ல...

Post by krishnaamma Mon Aug 25, 2014 10:56 pm

''ஏண்டி எல்லாரும் சேர்ந்து என்னை பயமுறுத்திறீங்க... நாத்தனார் இருந்தா எனக்கென்னடி பிரச்னை...''
''என்னடி நீ ஒரு விவரமும் தெரியாதவளா இருக்கே... ஒரே வீட்டுக்குள்ள மாமியார், நாத்தனார், மருமக எப்படி சந்தோஷமா இருக்க முடியும்... என் அக்கா வீட்டுக்காரர், இப்போ சிங்கப்பூர்ல இருக்கார். அவளோட நாத்தனார், அவ அண்ணன் பக்கத்துல இல்லாத தைரியத்துலயும், தன் அம்மாவோட சப்போட்லயும் அதிகாரம் செய்துகிட்டு, என் அக்காவ வறுத்து எடுக்குறா; அண்ணின்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம நடந்துக்குறா... அவ நினைக்கிறது தான் சட்டம்ன்னு மிதப்பா இருக்கா.

வெளிநாட்டு மாப்பிள்ளைய கல்யாணம் செய்துகிட்டா ஒரு மதிப்பும், பெருமையும் தான் இருக்கும்; நிம்மதி இருக்காதுடி.

''எங்க அக்கா வீட்டுக்காரரு, அவரு நண்பர் மூலமா அக்காவிற்கு ஒரு புடவ வாங்கி அனுப்பியிருந்தார்; அதையும் அவளே எடுத்துட்டா. தங்கச்சி பாசத்தால அண்ணன் எதையும் கேட்கறதில்ல. அதனால தான் சொல்றேன்... ஒண்ணு கணவன் கூட மனைவியும் வெளிநாட்டுக்கு போயிடணும்; இல்ல நாத்தனாருக்கு முதல்ல கல்யாணத்த முடிச்சிருக்கணும். இப்போ என் அக்காவோட நாத்தனாருக்கு கல்யாணப் பேச்சு நடக்குது. 'அவ வீட்டை விட்டு போனா தான் நிம்மதி'ன்னு சொல்லிட்டுருக்கா. அதனால, நீ என்ன செய்றேன்னா... 'மாப்பிள்ளையோட தங்கச்சிக்கு கல்யாணம் முடியட்டும்; அப்புறம் எங்களோட நிச்சயதார்த்தத்த வச்சுக்கலாம்'ன்னு ஒரு போடு போடு,''என்றாள் கவிதா.

அவளிடம் விடை பெற்று வீட்டிற்கு திரும்பிய சிந்து, 'என்ன இது... புவனாவோ மாமியார் இல்லாத வீடு வேணுங்கிறா; இவ, நாத்தனார் இல்லாத வீடு வேணுங்கிறா. நான் இப்போ என்ன செய்றது... ரெண்டு பேரும் சேர்ந்து என்னை குழப்பிட்டாங்களே... வெளிநாட்டு மாப்பிள்ளைய கட்டிக்கிட்டா, இவ்வளவு சங்கடங்கள சந்திக்கணுமா... ஆரம்பமே தடையா இருக்குதே! பேசாம இந்த கல்யாணத்த வேணாம்ன்னு சொல்லிட வேண்டியதுதான்...' என்ற முடிவுக்கு வந்தாள்.

அப்பாவிடம் பயந்து பயந்து, தன்னோட முடிவை சொன்னாள் சிந்து. உடனே நடராஜன் வானத்துக்கும், பூமிக்குமாக குதித்து, ''முடியவே முடியாது; இந்த நிச்சயதார்த்தம் கண்டிப்பா நடக்கும். அந்த வீட்டு பொண்ணுக்கு எப்ப வேணாலும் கல்யாணம் நடக்கும்; உன் சுயநலத்துக்காக அவங்க இதுக்கு சம்மதிக்க மாட்டாங்க. இங்க பாரு சிந்து... இது நல்ல இடம்; பையன் வெளிநாட்ல இருக்கான்; கை நிறைய சம்பளம். இப்படியொரு இடத்தை கண்டுபிடிக்க எப்படி அலஞ்சிருப்பேன் தெரியுமா... நாளை மறுநாள் நிச்சயதார்த்தத்த வைச்சுகிட்டு, இப்படி பேசுறது நல்லாயில்ல. உனக்கு பிடிக்கலன்னா கல்யாணம் பேசி முடிக்கையிலேயே சொல்லியிருக்க வேண்டியது தானே,'' என்று காட்டமாக பேசினார் நடராஜன்.
''சாரிப்பா... அப்போ எனக்கு அது தோணல; இப்ப சொல்றேன்... எனக்கு இந்த இடம் பிடிக்கல, வேற வரனப் பாருங்க,'' என்று சொல்லி, அறைக்குள் புகுந்து, கதவை அடைத்துக் கொண்டாள்.
'என்னது இவ! சுத்த பைத்தியகாரத்தனமா இருக்கா... நல்லா இருந்தவள குழப்பி விட்டது யாரு...' என நினைத்து, புரியாமல் தவித்தார் நடராஜன்.

மறுநாள் —
மாப்பிள்ளையின் தங்கச்சி திடீரென வந்து நின்றதும், சிந்துவுக்கு ஆச்சரியம்; அவள் இதை எதிர்பார்க்கவில்லை. நடராஜன் வீட்டில் இல்லை.

''அண்ணி... நான் கேள்விபட்டதெல்லாம் உண்மையா... எனக்கு கல்யாணம் ஆன பிறகு தான், நீங்க கல்யாணத்துக்கு ஒத்துப்பீங்களா? நீங்க ஏன் இப்படி சொல்றீங்கன்னு எனக்கு தெரியும். புருஷன் வெளிநாட்டுல இருக்கிற சூழ்நிலையில, வீட்ல இருக்கும் நாத்தனாரும், மாமியாரும் சேர்ந்து நம்மள கொடுமை படுத்துவாங்களேன்னு நினைச்சுத் தானே இப்படியொரு முடிவுக்கு வந்தீங்க...
''அண்ணி... நான் சின்ன வயசுலேயே அப்பாவ இழந்திட்டேன்; என்னையும், அண்ணனையும் படிக்க வச்சதெல்லாம் என் அம்மா தான். அவங்கள தனியா விட்டுட்டு, நான் கல்யாணம் முடிச்சு போக முடியாது. எங்கம்மாவிற்கு ஒரு நல்ல மருமக வந்த பிறகு, ஆறு மாசத்துல நானும் கல்யாணமாகி போயிடுவேன்,'' என்று அவள் சொன்னதும், சிந்துவிற்கு மனச்சுமை கொஞ்சம் இறங்கியது போலிருந்தது.
அவள் சென்ற பின், யோசனையில் ஆழ்ந்திருந்த சிந்து, 'இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கவா, வேணாமான்னு அம்மனுக்கு பூ கட்டி போட்டு பாத்துடலாம்...' என முடிவு செய்து, மாலையில் கோவிலுக்கு சென்றாள். பிரகாரத்தை வலம் வந்த போது, ''சிந்து...'' என்ற குரல் வந்த திசை நோக்கி திரும்பினாள்.
மாப்பிள்ளையின் அம்மா நின்றிருந்தாள்.

''ம்... வாங்க கோவிலுக்கு வந்தீங்களா?'' என்று நெளிந்தபடியே கேட்டாள் சிந்து.
''ஆமாம்மா... உன்னை பாக்கத்தான் வீட்டிற்கு போயிருந்தேன்; நீ கோவிலுக்கு போயி இருக்கிறதா உங்க அப்பா சொன்னாரு. அதன் கோவிலுக்கு வந்தேன்; உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்மா.''
''என்ன முக்கியமான விஷயம்?''

''சிந்து... உன்னை எம் பையனுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு; அவனுக்கு மட்டுமல்ல எல்லாத்துக்கும் தான். புருசன் வெளியூர்ல இருந்தா வீட்ல மாமியார், நாத்தனாரின் ராஜ்ஜியம்தான் நடக்கும்ன்னு தப்பா நினைச்சுக்கிட்டு இந்த கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லிடாதே... எல்லா மாமியாரும், நாத்தனாரும் கொடுமைக்காரங்க கிடையாது. அவங்கள்ளயும் நல்லவங்க இருக்காங்க. சிந்து... உனக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா... என் பையனுக்கும், பொண்ணுக்கும் கூட தெரியாத ஒரு விஷயத்த உன்கிட்ட மட்டும் சொல்லப் போறேன். தயவு செய்து இத என் புள்ளகிட்டக் கூட சொல்லிடாதே... நீ நினைக்கிற மாதிரி அவங்க ரெண்டு பேரும் என் வயித்துல பொறக்கல...''
''என்ன சொல்றீங்க...'' பதட்டமானாள் சிந்து.

''ஆமாம் சிந்து; எனக்கு கல்யாணமான ரெண்டு மாசத்துலேயே என் புருஷன் ஒரு விபத்துல இறந்துட்டாரு. சொந்தக்காரங்க எல்லாரும் சேந்து, எனக்கு மறு கல்யாணம் செய்து வைக்கணும்ன்னு நினைச்சாங்க. நான் பிடிவாதமா மறுத்து, ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்து வளத்தேன்; அவன்தான் உனக்கு வரப்போற மாப்பிள்ள. வீடுகள்ல பத்து பாத்திரம் கழுவித்தான் வாழ்க்கைய தொடர்ந்தேன்.

''அதே போல, ஒரு நாள், பஸ் ஸ்டாப்புல ஒரு குழந்தை அனாதையா அழுதுகிட்டு கிடந்தது. வறுமையால தூக்கி எறிஞ்சிட்டு போன குழந்தைன்னு தெரிஞ்சது. அதை ஒரு சுமையாக நினைக்காம, சுகமான சுமையா நினைச்சு வளக்க ஆரம்பிச்சேன். அந்த ரெண்டு குழந்தைகளையும் வளத்து, ஆளாக்கப் பட்ட பாடு அந்த கடவுளுக்குத்தான் தெரியும். ஒரு ஆத்துல விழுந்த எறும்பு, எப்படி இலையில ஏறி தத்தளிச்சு கரை சேந்ததோ, அது மாதிரிதாம்மா என் வாழ்க்கையும். பையனையும், பொண்ணயும் அவங்க விருப்பப்பட்ட மாதிரியே நல்லா படிக்க வச்சேன்.
''ஆனா, நீ மாமியார் கொடும, நாத்தனார் கொடுமன்னு என் பையன வேணாம்ன்னு சொல்லிட்டியேம்மா... என் வயித்துல பொறக்காத புள்ளைகள எப்படி என் புள்ளைகன்னு நினைச்சு வளத்தேனோ... அதே மாதிரி, உன்னையும் என் புள்ளயா நினைக்குறேன்மா. நீயும் சின்ன வயசுல அம்மாவ இழந்தவ; உன்னை என் மூணாவது குழந்தையா நினைச்சு, என் உள்ளங்கையில வச்சு பாத்துக்குவேம்மா.

''முதல்ல என் பொண்ணு கல்யாணத்த முடிக்கலாம்ன்னு தான் இருந்தேன்; ஆனா, அவ தான், 'நான் கல்யாணம் ஆகிப் போயிட்டா நீ தனியா இருந்து கஷ்டப்படுவே... அதனால, முதல்ல இந்த வீட்டுக்கு அண்ணி வரட்டும்; அப்பறம் நான் கல்யாணம் செய்துக்கிறேன்'னு சொல்லிட்டா. எம் பையனும் இன்னும் மூணு வருஷம் கழிச்சு, இங்கேயே செட்டிலாகிடுவான். அது வரைக்கும், எனக்கு ஒத்தாசயா இருப்பியாம்மா... ரெண்டு கன்றுகளுக்கு தாயா இருந்துட்டேன்; இன்னொரு கன்றுக்கு தாயா இருக்கட்டுமா?'' என்று பொங்கி வரும் கண்ணீரை துடைத்தபடியே கேட்டாள்.

சிந்துவுக்கு பேச்சு வரவில்லை. தன் முன்னால் அந்த அம்மனே வந்து நிற்பது மாதிரி தோன்ற கையெடுத்துக் கும்பிட்டு, ''அம்மா...''என்றபடி அவள் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
''அம்மா...நான் என்ன பெத்தவள பாத்ததில்ல; இப்ப உங்க ரூபத்துல அவளப் பாக்றேன். நீங்க ஒரு கடல்ன்னா நான் ஒரு நதி. கடைசியாக நான் எங்க ஐக்கியமாகணுமோ அங்கயே ஐக்கியமாயிட்டேன்.''
மாமியார் என்ற அம்மா அவளது கூந்தலை, ஒரு தாயாக வருடினாள்.

பால்கண்ணன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிந்து மருமகள் அல்ல... Empty Re: சிந்து மருமகள் அல்ல...

Post by ஜாஹீதாபானு Tue Aug 26, 2014 12:47 pm

அருமையான கதை...

பகிர்வுக்கு நன்றிமா....

இப்பவே என்னை பையனுக்கு கல்யாணம் செய்தா தனியா வச்சிடு பிரச்சனை இருக்காதுனு மருமகள் பயம் காட்டுறாங்க... நான் சொல்லிட்டேன் சும்மா பயம் காட்டாதிங்க மருமக வீட்டுக்கு வந்தா அவளும் எனக்கு மகள் தான் அப்படித் தான் நடத்துவேன்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிந்து மருமகள் அல்ல... Empty Re: சிந்து மருமகள் அல்ல...

Post by சே.சையது அலி Tue Aug 26, 2014 1:25 pm

அருமையான கதை மருமகளையும் மகளாக நினைப்பவர்கள் வெகு சிலரே
சே.சையது அலி
சே.சையது அலி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 19/07/2014

Back to top Go down

சிந்து மருமகள் அல்ல... Empty Re: சிந்து மருமகள் அல்ல...

Post by விமந்தனி Tue Aug 26, 2014 8:16 pm

கதை அருமை.


சிந்து மருமகள் அல்ல... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிந்து மருமகள் அல்ல... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிந்து மருமகள் அல்ல... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிந்து மருமகள் அல்ல... Empty Re: சிந்து மருமகள் அல்ல...

Post by krishnaamma Tue Aug 26, 2014 9:03 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான கதை...

பகிர்வுக்கு நன்றிமா....

இப்பவே என்னை பையனுக்கு கல்யாணம் செய்தா தனியா வச்சிடு பிரச்சனை இருக்காதுனு மருமகள் பயம் காட்டுறாங்க... நான் சொல்லிட்டேன் சும்மா பயம் காட்டாதிங்க மருமக வீட்டுக்கு வந்தா அவளும் எனக்கு மகள் தான் அப்படித் தான் நடத்துவேன்.

யார் பேச்சையும் கேட்காதிங்க பானு புன்னகை நாமும் சிங்கம் புலி இல்லை வரும் பெண்ணும் சிங்கம் புலி இல்லை , மனம் இருந்தால் மார்க்கம் உண்டு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிந்து மருமகள் அல்ல... Empty Re: சிந்து மருமகள் அல்ல...

Post by krishnaamma Tue Aug 26, 2014 9:04 pm

சே.சையது அலி wrote: அருமையான கதை மருமகளையும் மகளாக நினைப்பவர்கள் வெகு சிலரே

ஆமாம் சையது அலி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிந்து மருமகள் அல்ல... Empty Re: சிந்து மருமகள் அல்ல...

Post by krishnaamma Tue Aug 26, 2014 9:04 pm

விமந்தனி wrote:கதை அருமை.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிந்து மருமகள் அல்ல... Empty Re: சிந்து மருமகள் அல்ல...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum