ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தோஷம் எதுவென்றால்.....

+2
ayyasamy ram
krishnaamma
6 posters

Go down

சந்தோஷம் எதுவென்றால்..... Empty சந்தோஷம் எதுவென்றால்.....

Post by krishnaamma Sun Aug 17, 2014 10:14 pm

அந்த மாடு, இப்படி திடீரென்று வந்து முட்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை கோபிசந்த்.
அவர் காலையில் கீரைக் கட்டுகளுடன் வரும்போதே, தெருக் கடைசியில் கட்டப்பட்டிருக்கும் மாடு, எப்படியோ அவர் வரவை உணர்ந்து எழுந்து நிற்கும். மாட்டின் உரிமையாளர் அதை கட்டிப் போட்டிருப்பதால், சாணத்தின் மேலேயே உட்கார வேண்டிய நிலமை; அதன் பின்புறத்தில் சாணம் ஒட்டி, அதன் இயற்கை வெண்மை நிறத்தை மாற்றியிருக்கும்.

அதைப் பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கும்; இவர் கீரைக்கட்டுடன் போகும் போது மாடு நின்றிருந்தால், தலையை இட, வலமாக ஆட்டி ஆட்டி, அவருக்கு தன்னுடைய மரியாதையை காண்பிக்கும்; அதைப் பார்க்கும் போது அவருடைய மனசுக்கு சந்தோஷமாக இருக்கும். கீரைக் கட்டுகளை கீழே போட்டால் சாப்பிடாது; அதன் வாயறுகே கொண்டு செல்ல வேண்டும். அப்படி கொண்டு சென்றால் வாயினால் அதை பிடுங்கி, 'கறுக் முறுக்' கென்று, ஒரு நிமிடத்தில் முழு கட்டையும் சாப்பிட்டு விடும்.
வாயில்லா ஜீவனின் பசிக்கு உணவளித்ததில், அவருக்கு மனத்திருப்தியும், சந்தோஷமும் ததும்பும்.
இது தினமும் நடப்பதுதான்; இன்று என்ன கோபமோ கீரைக்கட்டை அதன் வாயருகே கொண்டு போன போது ஒரே முட்டாக முட்டி கீழே தள்ளிவிட்டது.
மாடு முட்டிய கோபம் ஒருபுறம்; அது முட்டியதால் பின்புறமாக மல்லாந்து விழுந்ததில், முதுகின் கீழே, 'வெடுக்'கென்று தோன்றிய வலி ஒரு புறம்.

அவர் கீழே மல்லாந்து விழுந்ததைப் பார்த்த ஒருவர், உதவிக்கு ஓடி வந்தார்.
கோபிசந்த் எழுந்து கொள்ள முயற்சித்தார்; முடியவில்லை. இடுப்பில் அப்படி ஒரு வலி!
''நல்ல வேளை சார்... மண்டையில அடிபடல... மாட்டுக்கு பக்கத்துல ஏன் போனீங்க... என்ன இருந்தாலும் அது ஒரு விலங்கு தானே... கிட்ட போனா முட்டத்தானே செய்யும்,'' என்றார்.

பதில் சொல்ல முடியவில்லை; வலி இப்போது முதுகு முழுவதும் பரவியிருந்தது.
அவர் மாடுகளுக்கு கீரை போட ஆரம்பித்தது சமீபகாலமாகத் தான்; அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த நண்பர் ஒருவர், தினமும் கீரைக்கட்டுகளை வாங்கி மாட்டுக்கு போடுவார். ஒரு சமயம் அவர், காய்ச்சலில் படுக்கையில் இருந்த போது, 'சார் நீங்கதான் தினமும் வாக்கிங் போறீங்களே... கீரைக்காரம்மா கீரைக்கட்டுகள கீழே பெஞ்சிலே வச்சிட்டு போயிருப்பாங்க... அதை எடுத்து மாடுகளுக்கு போட்டுருங்களேன்...' என்று கேட்டுக் கொண்டார்.

கோபிசந்தும் தலையசைத்தார்.
முதல் நாள் கீரைக்கட்டுகளை தூக்கி கொண்டு தெருவில் நடக்க வெட்கமாக இருந்தது. ஆனால், அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை; ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலை. அவருடைய வாக்கிங் நண்பர் ஒருவர், 'என்ன சார் கீரைக்கட்டு மாட்டுக்கா?'என்று கேட்டார்.
'ஆமாம்...'
'மாட்டுக்கு கீரை, பழங்கள் கொடுத்தா கோடி புண்ணியம் சார்...'

'இத நான் வாங்கல்ல சார்... எங்க அபார்ட்மென்ட்லே ஒருத்தர் மாட்டுக்கு இதப் போடச்சொல்லி கேட்டுக்கிட்டார்... அதனாலே தான்...'
'அதிலே ஒண்ணும் தப்பில்ல சார்... பணம் இருந்தா யார் வேணா கீரை வாங்கலாம்; ஆனா, அதை காலையிலே, கீரை பிரெஷ்ஷா இருக்கும் போதே மாட்டுக்கு கொண்டு போய் குடுக்கணுமே... அதுதானே முக்கியம்...'என்றார்.

புன்னகைத்து நகர்ந்தார் கோபிசந்த். பழக்கம் இல்லாததால், ஒரே கையில் கட்டுகளை தூக்கியபடி நடப்பது கஷ்டமாக இருந்தது. நிசப்தமாக இருந்த அந்த சிறு கோவிலின் உள்ளே இருந்த மாட்டுக் கொட்டகையில் நுழைந்தார்.
சீவப்படாத தலையுடன், சவரம் செய்யப்படாத தாடியுடன் ஒரு பெரியவர் பால் கறந்து கொண்டிருந்தார்.
'போடுங்க சாமி...' என்று, அவர் கோபிசந்தை உற்சாகப்படுத்தினார்; அவருக்கு ஒரு உந்துதல் கிடைத்தது.
மாடு அவரை நன்றியுடன் பார்ப்பது மாதிரி இருந்தது; ஒவ்வொரு கடிக்கு பின், அது அவரைப் பார்த்த பார்வையில், ஒரு கனிவு இருந்தது. இந்தக்கனிவு தான் சமீபகாலமாக அவர் குடும்ப உறவுகளிடமிருந்து கிடைக்காத பொருளாக மாறி இருந்தது.
இதன் காரணமாக என்ன கஷ்டம் வந்தாலும், மாடுகளுக்கு கீரை போடுவதை அவர் நிப்பாட்டவில்லை; மாடுகளும் அவர் கண்ணுக்கு புஷ்டியானது மாதிரி தெரிந்தது.

பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், அவர் நிலைமை மிகவும் மோசமாக மாறியிருந்தது. அரசு வேலை என்றாலும் அவருக்கு பென்ஷன் பெறும் வாய்ப்பு இல்லாமல் இருந்ததால், எதற்கும் இருக்கட்டும் என்று வீட்டுக்கு தெரியாமல் வங்கியில் டிபாசிட் செய்திருந்த பணம், மாதம் மூவாயிரம் ரூபாய் மட்டுமே அவருடைய தனிப்பட்ட செலவுக்கு கை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அவருக்கென்று மாதம் மாதம் கையில் கிடைக்கும் பணம் அது ஒன்று தான்; ஓய்வு பெறும் போது மகள் கல்யாணம் முடிவாக, இருந்த பணத்தை எல்லாம் போட்டு செலவு செய்து விட்டார். கல்யாணம் முடிந்து, மகளை மாப்பிள்ளையுடன் ஜெர்மனிக்கு விமானத்தில் ஏற்றிவிட்டு, கால் டாக்சியில் வீடு திரும்பும் போது அவர் கையிலும், சேமிப்பிலும் ஐநூறு ரூபாய் தான் தேறியது.
வேலையில் இருந்த போது நினைத்த மாதிரி செலவு செய்த அவர், இப்போது பத்து ரூபாயை பாக்கெட்டில் இருந்து எடுப்பதற்கே யோசிக்க வேண்டியதாயிற்று.

மனைவி வேலையில் இருந்ததால் வீட்டுச் செலவை சமாளிக்க முடிந்தது. ஆனால், அதுவே அவருக்கு பாதகமாகவும் அமைந்து விட்டது.
'ஏங்க... மளிகைச் சாமானுக்கு பணம் குடுத்துட்டு வாங்க; கடைக்காரரு கேட்டுவிட்டுருக்காரு...'
'என் கிட்டே ஏது பணம்... நீ தான் கொடுக்கணும்...'
'இல்லையா... வாங்குன சம்பளம் என்னாச்சி?' என்று கேட்டவள், நாக்கை கடித்துக் கொண்டாள்.

'சரி, இந்தாங்க குடுத்துட்டு வாங்க...' என்று, தன் கைப்பையில் இருந்து மூவாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தவள், 'பாத்தீங்களா... ஒரு காலத்தில என்னை எப்படி விரட்டினீங்க... உங்கம்மா என்னை என்ன பாடு படுத்துனாங்க... இப்போ நீங்க என்னைத்தானே சார்ந்து இருக்க வேண்டியிருக்கு; நானில்லன்னா, என் சம்பாத்தியம் இல்லேன்னா குடும்பத்த ஓட்ட முடியுமா?' என்றாள்.
இத்தனைக்கும் ஆபத்து காலங்களில் அவள் குடும்பத்திற்கு தேவையான எத்தனையோ உதவிகளை, தன் பெற்றோருக்கு தெரியாமல் அவர் செய்திருக்கிறார்; அதையெல்லாம் எப்படி அவள் மறந்தாள்!

தொடரும்.......................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சந்தோஷம் எதுவென்றால்..... Empty Re: சந்தோஷம் எதுவென்றால்.....

Post by krishnaamma Sun Aug 17, 2014 10:15 pm

இப்போதெல்லாம் தனக்கென சட்டை வாங்க நினைத்தாலும், கல்யாணத்தில் மொய் எழுதினாலும், தன் நண்பர்களுக்கு ஏதாவது உதவி செய்ய நினைத்தாலும், 'பேசாம வாயை மூடிட்டு இருங்க; செய்யப்போறது நான். உங்களுக்கு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு...' என்ற தொனியில் மனைவி பேசுவது மனதை வேதனைப்படுத்தியது.

ஆறு மாதத்திற்கு முன், இருபதாயிரம் கொடுத்து வாங்கிய மொபைல் போன், 'ரிப்பேர்' ஆகிவிட்டது. மறுபடியும் வேறு போன் வாங்க வேண்டும் என்று மகன் கோரிக்கை வைத்த போது, 'இப்பத்தானேப்பா போன் வாங்குனே?' என்று தெரியாமல் கேட்டுவிட்டார்; வந்ததே கோபம் மகனுக்கு... 'உனக்கு இதிலே சம்பந்தமில்லப்பா... நான் அம்மாகிட்டே பேசிகிட்டிருக்கேன்...' என்று பெற்ற தந்தையை, மனச்சாட்சி இல்லாமல் வெட்டி விட்டான்.

இந்த மன நெருக்கடியான சந்தர்ப்பத்தில், மாடுக்கு கீரை போடுவது ஒன்று தான் அவர் மனதுக்கு திருப்தியாக இருந்தது. இப்போது மாடு தள்ளிவிட்டதால், இதுவரைக் காட்டி வந்த கனிவை அது மறந்ததால், இனி கீரை போடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தார்.

உடம்பு வலியோடு, மன வலியும் சேர்ந்து கொண்டது; மொபைல் போன் மூலம் செய்தி கிடைத்த நண்பர் கதிர்வேல், உடனே அங்கு ஆஜரானார். ஆட்டோவில் ஏற்றி பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார்.

எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்ததில், எலும்பு முறிவு இல்லை என்பது உறுதியானது; டாக்டர் ஊசி போட்டவுடன் வலியெல்லாம் பறந்து போய், ஐந்து நிமிடத்தில் நடக்க ஆரம்பித்தார். வீட்டிற்கு திரும்பும் போது,''இந்த நன்றி கெட்ட மாடு இப்படி செய்து விட்டதே...'' என்று புலம்பியவர், ''வீட்டில தான் நன்றியில்லையென்றால் இந்த மாடுமா இப்படி மாறும்?'' என்று வேதனையுடன் கதிர்வேலுவிடம் சொன்னதும், அவர் உரக்க சிரித்தார்.
''எதுக்கு சிரிக்கிற?'' என்ற கேட்டார்.
''இன்னும் நீ உன் வாழ்க்கையையும், மனிதர்களையும் சரியா புரிஞ்சிக்கலைன்னு நினைக்கிறேன்,'' என்றார்.
''ஏன் அப்படி சொல்லுறே?''

''வாழ்க்கையிலே நாம செய்கிற தப்புகளிலே பெரிய தப்பு, நன்றியை எதிர்பாக்குறது தான். நீ நன்றியை எதிர்பார்த்து எதிர்பார்த்து அது கிடைக்காததாலே கவலைப்பட்டு, உன் உடம்பு மெலிஞ்சு போச்சு; முகத்திலே முதுமையும் வந்து ஒட்டிக்கிருச்சி. இப்ப நன்றி கெட்ட மாடுன்னு அந்த வாயில்லா ஜீவனை திட்ட ஆரம்பிச்சிருக்கிறே... ஆனா, ஒன்னு தெரிஞ்சுக்க... இந்த ஆறு மாசமா தினமும் மாட்டுக்கு கீரை போட ஆரம்பிச்ச பிறகு, உன் முகத்திலே ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிச்சிருக்கு; அதை மறந்துடாதே! அதோட அன்பு பார்வை கொடுத்த பரவசத்த மறந்துடாதே,'' என்றார்.
''இப்ப நான் என்ன செய்யணும்ன்னு சொல்லுறே?''

''உன் இளமைக் காலத்த நினைச்சு பாரு... நாம ரெண்டு பேரும் மதுரையிலே ஒரே தெருவிலே தான் இருந்தோம்; நீ தெரு விளக்கிலே தான் படிச்சே... வீடோ ரொம்ப சின்னது. மழை பெஞ்சா வராண்டாவிலே தான் படுக்கணும்; ஏன்னா உள்ளே படுக்கறதுக்கு இடம் இருக்காது. உங்கப்பா உன் படிப்புக்காக ஐஞ்சு பைசா செலவு செய்யலே. ஆனா, நீ நல்ல மார்க் வாங்கினதாலேயும், சில வசதியான மனிதர்கள் உனக்கு உதவி செஞ்சதுனாலயும், அரசாங்கம் கொடுத்த ஸ்காலர்ஷிப்பாலும் நல்லா படிச்சி, நல்ல வேலையிலும் உக்காந்தே. கஷ்டப்பட்டு கல்யாணம் செஞ்சு கொடுத்த உன் தங்கச்சி, அத நினைச்சி பாக்காம உன்னை எடுத்து எரிஞ்சி பேசினப்போ நீ கவலைப்படலே... 'என் கடமைய தான் செஞ்சேன்'னு அமைதியா இருந்தே; அப்ப உன் மனசு வலிமையா இருந்துச்சு. அதனாலே உடம்புல நோய், நொடியில்லாம ஆரோக்கியமா இருந்தே... வேலையிலயும் நல்ல பேர் வாங்கி, சீக்கிரம் பதவி உயர்வு வாங்கினே...''
''நீ சொல்றது உண்மைதான்; நான் இப்போ நிறைய எதிர்பாக்குறேன்னு நினைக்கிறேன்.''

''மாடு உன்னை முட்டுனது நல்லதுக்குன்னு நெனச்சிக்கிட்டு, அதுக்கு தொடர்ந்து கீரை வாங்கி போடு; அதுக்கு சிந்தனை இருந்திருந்தா உன்னை முட்டியிருக்காது. அது, அதனோட தப்பில்லே... மாட்டை கட்டிப்போட்ருக்கான்னு பாத்துட்டு நீ பக்கத்திலே போயிருக்கணும். இதே மாதிரி, மனிதர்களிடம் அது மனைவியோ, மகனோ யார் வேணா இருக்கலாம்... உன்னாலே முடிஞ்ச உதவிய செய்; அப்போ அவர்கள் சந்தோஷப்படறதை மட்டும் மனசிலே வச்சுக்க. அதுக்கப்புறம் நீ செஞ்ச உதவியை மறந்துரு; ஆனா, வாய்ப்பு கிடைக்கும் போது உதவு. உன் மன நிம்மதிக்கு அது தான் உரம்,''என்றார்.நண்பனின் பேச்சு கோபிசந்துக்கு உற்சாகத்தை கொடுத்தது; மாட்டிற்கு கீரை போடுவதை நிறுத்தக் கூடாது என்று முடிவு செய்தார்.

எல்.வி.வாசுதேவன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சந்தோஷம் எதுவென்றால்..... Empty Re: சந்தோஷம் எதுவென்றால்.....

Post by ayyasamy ram Sun Aug 17, 2014 10:20 pm

படிப்பினை தரும் கதை...
-
 சந்தோஷம் எதுவென்றால்..... 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சந்தோஷம் எதுவென்றால்..... Empty Re: சந்தோஷம் எதுவென்றால்.....

Post by jesifer Mon Aug 18, 2014 11:35 am

அருமையான பதிவு க்ரிஷ்ணாம்மா.....கதையை படித்துக் கொண்டிருக்கும் போது உங்க தலைப்பு ”வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது” ன்றிருக்குமோ ன்னு நெனச்சன்.. ஆனால் அது எங்கயோ போய் அருமையான ”நன்றி என்றும் எதிர்பாத்தல் கூடாது” ன்னு முடிந்தது.

நன்றாக ரசித்துப் படித்தேன்.

 சந்தோஷம் எதுவென்றால்..... 3838410834  சந்தோஷம் எதுவென்றால்..... 103459460 
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

சந்தோஷம் எதுவென்றால்..... Empty Re: சந்தோஷம் எதுவென்றால்.....

Post by விமந்தனி Mon Aug 18, 2014 11:44 pm

கதை அருமை.


சந்தோஷம் எதுவென்றால்..... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசந்தோஷம் எதுவென்றால்..... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சந்தோஷம் எதுவென்றால்..... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சந்தோஷம் எதுவென்றால்..... Empty Re: சந்தோஷம் எதுவென்றால்.....

Post by Dr.S.Soundarapandian Tue Aug 19, 2014 12:22 pm

அருமையிருக்கு 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சந்தோஷம் எதுவென்றால்..... Empty Re: சந்தோஷம் எதுவென்றால்.....

Post by ஜாஹீதாபானு Tue Aug 19, 2014 1:26 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றிமா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சந்தோஷம் எதுவென்றால்..... Empty Re: சந்தோஷம் எதுவென்றால்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum