ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்த்து விட்ட விடுதலை

Go down

வளர்த்து விட்ட விடுதலை Empty வளர்த்து விட்ட விடுதலை

Post by சிவா Fri Aug 15, 2014 6:38 pm


இன்று நாட்டின் 68வதுசுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947 ஆக., 15ல் விடுதலை பெற்ற இந்தியா, 68 ஆண்டுகளில், கல்வி, சுகாதாரம், உணவு உற்பத்தி, தொழில் வளர்ச்சி, விண்வெளி, போக்குவரத்து, அடிப்படை கட்டமைப்பு, இறக்குமதி உள்ளிட்ட பல துறைகளிலும் குறிப்பிடத்தக்கவளர்ச்சியை பெற்றுள்ளது.

சமூக வளர்ச்சி: எந்த ஒரு நாடுமே கல்வி, சுகாதாரம், ஆண் - பெண் சம உரிமை, வாழ்க்கை தரம் போன்ற துறைகளில் முன்னேற்றம் அடைந்திருக்க வேண்டும். அதன்படி 1947ல் எழுத்தறிவு சதவீதம்18 ஆக இருந்தது. தற்போது 74 ஆக உயர்ந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி: இந்தியா வளரும் நாடாக இருந்தாலும், இந்த 21ம் நுாற்றாண்டில் உலக நாடுகள் உற்றுப்பார்க்கும் வகையில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. 1950 -- 59ல் நாட்டின்ஜி.டி.பி., (மொத்த உள்நாட்டு உற்பத்தி) சராசரியாக 3.3சதவீதமாக இருந்தது.1960 -- 69ல் 4.4 சதவீதமாகவும், 1980 -- 82ல் 5.6 சதவீதமாகவும் உயர்ந்தது. 2003 -- 2007ல் 8.9 சதவீதமாக இருக்கிறது. 1947ல் ஜி.டி.பி., 9,370 கோடி ரூபாயாகஇருந்தது. 2006ல் 410 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

விவசாய வளர்ச்சி: 1950ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்,விவசாயத்துறையின் பங்களிப்பு 42.8 சதவீதமாக இருந்தது. 2006 --- 07ல் இது 18.1 சதவீதமாக குறைந்துள்ளது.உணவு உற்பத்தியை பொறுத்தவரை 1950ல், 50 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டது.இது 1960ல் 82 மில்லியன் டன்னாகவும், 1980ல் 129.8 மில்லியன் டன்னாகவும்உயர்ந்தது. 2011 -- 12ல் 257 மில்லியன் டன் உணவு தானியம் உற்பத்திசெய்யப்படுகிறது.

துறைமுகம்: இந்திய கடற்கரையின் நீளம் 7,517 கி.மீ.,. வெளிநாட்டுஏற்றுமதியில் 90 சதவீதம் துறைமுகம் மூலமே நடக்கிறது. சுதந்திரம் பெற்ற போது கோல்கட்டா, மும்பை, சென்னை, விசாகபட்டினம் ஆகிய 4 பெரிய துறைமுகங்கள் இருந்தன. தற்போது 13 பெரிய துறைமுகங்கள்உள்ளன.இதுதவிர 187 நடுத்தர/ சிறிய துறைமுகங்கள் செயல்படுகின்றன.

ஏற்றுமதி / இறக்குமதி: 2014 ஜூன் நிலவரப்படி, நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாய் 15.85 லட்சம் கோடி ரூபாய். அதே போல, 22.84 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்துள்ளது.

விண்வெளி வளர்ச்சி: 1969ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது. 1975ல் இந்தியா 'ஆர்யபட்டா' என்ற செயற்கைக்கோளை முதன்முதலாக விண்ணில் செலுத்தியது. அப்போது வேறொரு நாட்டின் ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஆனால் இன்று மற்ற நாட்டின் செயற்கைக்கோள்கள்,இந்திய ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. நிலவுக்கு விண்கலம் அனுப்பியது; செவ்வாய்க்குமங்கள்யான் அனுப்பியது நாட்டின் விண்வெளி வளர்ச்சியின்முக்கிய தருணம்.

போர் விதவைகள் அதிகம்:
நினைவகமோ இல்லை:அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்ற இந்தியா, காலச்சூழ்நிலையால் சில போர்களில் ஈடுபட வேண்டி வந்தது.இந்திய ராணுவம் பாரம்பரியம் மிக்கது. முதலாம் உலகப்போரின் போது 11 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பிரான்ஸ், எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, கிழக்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டனர். அடுத்த நாடுகளுக்காக போரிட, வீரர்களை அனுப்பிய பெருமை நமக்கு மட்டுமே உண்டு. இதுவரை நடந்த போர்களில் இன்னுயிரை நீத்த வீரர்கள் பலர்.

உலகிலேயே அதிகமாக, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விதவைகளை இந்தியா கொண்டுள்ளது. இருப்பினும் மறைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், தேசிய போர் நினைவகம் அமைக்கப்படவில்லை என்பது வேதனையான விஷயம்.

இந்தியாவில் ராணுவ வீரர் இறந்தால், சில நாட்களுக்கு அவர்களின் தியாகத்தை நினைக்கிறோம். அவர்களின் குடும்பம் என்னாகிறது என யாரும் யோசிப்பதில்லை. இந்நிலைக்கு பொறுப்பற்ற அரசியல்வாதிகளும் காரணம். பல நாடுகளின் தலைநகரங்களில் தங்கள் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக நினைவகங்களை எழுப்பியுள்ளனர். அந்நாட்டு மக்கள்அதை பாரம்பரிய சின்னமாக போற்றுகின்றனர். அங்கு சென்று தங்கள் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின்தியாகத்தை நினைவுகூர்கின்றனர்.

போர் வரலாறு: இந்தியா பழமையான போர் வரலாற்றை கொண்டது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் போர்கள் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளன. மன்னர் காலத்தில் நாட்டை பிடிக்கவும், செல்வங்களை கொள்ளையடிக்கவும் படையெடுப்புகளை நடத்தினர்.

இந்தியா: சுதந்திரம் பெற்ற பின் சில போர்கள் நடந்தன. சுதந்திரத்தின் போது சிதறுண்டு கிடந்த இந்தியாவை ஒன்று சேர்க்க சில ராணுவ நடவடிக்கைகள் தேவைப்பட்டன. ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஆப்பரேஷனில் 1,104 வீரர்கள் இறந்தனர். 1965, 1971, 1999ல் பாகிஸ்தானுடன், 1965ல் சீனாவுடனும் போர் நடந்தது. 1987ல் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜனநாயக நாட்டில், ஒவ்வொருவரின் அமைதியான வாழ்க்கைக்கும் எல்லையில் காவல்புரியும் வீரரே காரணமாகிறார். நாட்டைக் காக்க இறந்த வீரர்களின் தியாகத்தை போற்ற வேண்டியது நம் கடமை. அதற்காக தேசிய போர் நினைவகத்தை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.

விமான நிலையங்கள்: 1947ல் நாட்டில் 9 நிறுவனங்கள் விமான சேவையில் ஈடுபட்டது. தற்போது 22 நிறுவனங்கள் இச்சேவையில்ஈடுபட்டுள்ளன. 90 உள்நாட்டு/வெளிநாட்டு விமான நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளது. உலகளவில் விமான சேவையில் இந்தியா 9வது இடத்தில்உள்ளது. 2020ம் ஆண்டு 3வது இடத்துக்கு முன்னேறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்த பாலின விகிதம்: இந்தியா சுதந்திரம் பெற்ற பின் கணக்கிடப்பட்ட 1951 மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஆயிரம் ஆண்களுக்கு 946 பெண்கள் இருந்தனர். இது தற்போது 2011ல் 940 ஆக குறைந்துள்ளது.

புதியவர்கள்: சுதந்திர தின வரலாற்றில் முதன்முதலாக தேசியக்கொடி ஏற்றுபவர்கள்: நரேந்திர மோடி (குஜராத் முதல்வராகதேசியக்கொடி ஏற்றியிருந்தாலும், பிரதமராக முதன்முறையாக கொடி ஏற்றுகிறார்). இவர் தவிர ஜிதன் ராம் மஞ்சி (பீகார்) , ஆனந்தி பென் படேல் (குஜராத்), டி.ஆர்.ஜெலியாங் (நாகலாந்து), சந்திரசேகர ராவ் (தெலுங்கானா), ஹரிஷ் ராவத் (உத்தரகண்ட்) ஆகியோர் முதன்முறையாக முதல்வராகியுள்ள தால், தேசியக்கொடி ஏற்றும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

தேசத்தின் பெருமைகள்:

நமது நாட்டுக்கு என்றே எத்தனையோபெருமைகள் இருக்கின்றன. இவைபற்றிஎத்தனை பேருக்கு தெரியும்...

* எண் கணிதம் இந்தியாவில் தான்தோன்றியது. ஜீரோவை ஆர்யபட்டா கண்டுபிடித்தார். தசம முறையும் இந்தியர்களின் கண்டு பிடிப்பே. அல்ஜீப்ரா,கால்குலஸ், டிரிக்னாமெட்ரி போன்ற நவீன கணித முறைகளும் இந்தியாவில் தான் தோன்றின.

* நீர்வழிபயணங்கள் குறித்து 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் அறிந்து வைத்திருந்தனர்.

* உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்ட அமைப்பு இந்திய ரயில்வே. 10 லட்சம் பேருக்கும் அதிகமாக இங்கு பணியாற்றுகின்றனர். உலகிலேயேஇந்தியாவில் தான்தபால் நிலையங்களின் எண்ணிக்கை அதிகம்.

* இந்தியா உலகின் எந்த நாட்டின் மீதும் படையெடுத்தது இல்லை.

* இந்தியாவில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் ஆயுர்வேதம் தோன்றியது. இது உலகின் பழமையான மருத்துவ முறை. முதன்முதலில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சுஸ்ருதர்.

* தேயிலை, பால் மற்றும் மாம்பழம்உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

* இந்தியா உலகிலேயே 2வது நீண்ட தூர (33 லட்சம்) சாலைகளை கொண்டுள்ளது.

* பிரிட்டன் படையெடுப்புக்கு முன் உலகிலேயே பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தது இந்தியா. இதனால் இந்தியாவுக்கு வழிதேடி கிளம்பினார் கொலம்பஸ். அப்போது அவர் தற்செயலாககண்டுபிடித்தது தான் அமெரிக்கா.

* உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம், இமாச்சலப்பிரதேசத்தில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2,444 மீட்டர் உயரமானது.

* இந்தியா (தென் கொரியா, வட கொரியா, பக்ரீன், காங்கோ) நான்கு நாடுகளுடன் சுதந்திர தினத்தை பகிர்ந்து கொள்கிறது.

* யோகா இந்தியாவில் தான் தோன்றியது. 5000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில்இக்கலை இருந்துள்ளது.

* உலகிலேயே மிகப்பழமையான பல்கலைக்கழகம் கி.மு., 700ல் தட்சசீலத்தில் அமைந்தது. 4ம் நூற்றாண்டில் நாலந்தா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

* 6ம் நூற்றாண்டில் இந்திய கணித நிபுணர் புத்தாயனா, "பை' என்ற கணித அமைப்பை கண்டறிந்தார். பிதாகரஸ் தேற்றத்தையும் அவரே முதலில் உருவாக்கினார்.

* சூரியனை சுற்றிவர பூமி எடுத்துக்கொள்ளும் நேரத்தை முதன்முதலில் அறிந்து கூறியவர் பாஸ்கராச்சார்யா.

* வைரங்களின் சிறப்பை அறிந்து அதை முதன்முதலில் பயன்படுத்த தொடங்கியவர்கள் இந்தியர்களே. ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவில் வைரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

* அறிவுத்திறனை சோதிக்கும் செஸ் போட்டி இந்தியாவில் தான் தோன்றியது.

* இந்தியா 90 நாடுகளுக்கு மென்பொருள் தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்கிறது.

* இந்தியாவில் தான் அதிக சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன.

ஓங்கிஒலிக்குமா தேசிய கீதம்

''ஆடுவோமே பள்ளு பாடுவோமேஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று''என நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே தீர்க்கதரிசியாக தேச விடுதலைக்கு பாடினார் நமது மகாகவி பாரதி. இன்று நாடு விடுதலையடைந்து 67 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. நாமும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் நாளை சுதந்திரதிருநாளாக கொண்டாடி வருகிறோம். ஆனால் அந்த தியாக நாளின் மகத்துவத்தை இன்றைய இளைய தலைமுறை நன்றாக உணர்ந்திருக்கிறதா? அல்லது நாம் உணர்த்தியிருக்கிறோமா? என்பதே கேள்வி.

அகிம்சை என்ற ஆயுதத்தை பயன்படுத்தி இந்த உலகில் எதையும் வெல்லலாம் என்று எடுத்துக்காட்டிய நமது உன்னத தேசத்தின் ஒவ்வொரு சுதந்திர நாளும் துப்பாக்கி முனைகளின் பாதுகாப்புடன் கொண்டாடப்படுவது வேதனை. ஏன் இந்த நிலை?

தியாகிகளின் தியாகம் : சுதந்திரத்திற்காக தன் சொத்துக்களை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து ஆங்கிலேயர் அடக்குமுறையால் இரும்பு கம்பிகளுக்குப் பின்னே சிறைபட்டு இறுதியில் நம் தாய் மண்ணின் விடுதலைக்காக தம் இன்னுயிரைத் தந்த அந்த தேசத் தலைவர்களின் தியாகங்களின் தியாகங்களை இன்றைய இளைய தலைமுறை மறந்துவிட்டதோ என எண்ண தோன்றுகிறது. ஏனெனில் நம் தாய் மண்ணின் சுதந்திரத்திற்காக சிறை சென்ற தியாகச் செம்மல்களின் சிலைகளைக் கூட இன்றைய சுதந்திர இந்தியாவில் இரும்பு கம்பிகளுக்குள்ளே அடைத்து வைத்திருக்கிறது நம் இளைய தலைமுறை.

அகதிகளாக்கும் நவீனம் : நம் தாய்த்திருநாட்டில் மலை, சிலை, மரம், ஏரி, குளம், கண்மாய், உடை, உணவு, செடி, கொடி, விலங்கு ஏன் தெரு என ஒவ்வொன்றிற்கும் ஒரு வரலாற்றுப் பெருமை உண்டு. அவற்றை மத, இன, மொழி உணர்வால் உடைத்தெறியாமல் வரலாற்றை வரும் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது நமது கடமை. தன் வரலாற்றை தொலைத்து விட்டு நவீனம் என்று வேகமாக வளரும் எந்த நாடும், அதன் மக்களும் தங்கள் முகவரியை இழந்து கண்டிப்பாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழவேண்டிய நிலை ஏற்படும்.

இருண்டு போன வரலாறு : வரலாற்றை வரும் தலைமுறைகளுக்கு பாதுகாத்து தரவேண்டிய மிகப்பெரிய சமூகப் பொறுப்பு கல்விக் கூடங்களுக்கே உள்ளது. ஆனால், இன்று வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் நிலை உள்ளது. வரலாறு பாடத்தைக் கூட மாணவர்களுக்கு அவை கற்பிக்க தயாரில்லை. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர்களின் கலாசாரத்தை கல்வி நிலையங்களில் புகுத்தி வருகின்றனர். ஆனால் அதே கல்வி நிலையங்கள், நம் மக்கள் சுட்ட செங்கற்களால் வீடு கட்டி நாகரிக நகர வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் (சிந்து சமவெளி காலம்) வெள்ளையர்களுக்கு டவுசர் கூட போட தெரியாது என்ற வரலாற்றை சொல்லி தருவதில்லை.நெஞ்சை நிமிர்த்தி 52 வினாடிகள் இந்தியன் என்ற கர்வத்தோடு பாட வேண்டிய நமது தேசிய கீதம் கூட சப்தமில்லாமல் வெறும் சம்பிரதாயமாக பாடப்படுகிறது. இந்த சுதந்திர தின நன்னாளிலிருந்தாவது நம் வரலாற்றை உணர்ந்து ஓங்கி ஒலிக்குமா? நமது தேசிய கீதம் இளைஞர்களின் உள் இயத்திலிருந்து.
ஜெய்ஹிந்த்!

-பேராசிரியர். சி. செல்லப்பாண்டியன்,தேவாங்கர் கலைக்கல்லுாரி, அருப்புக்கோட்டை


வளர்த்து விட்ட விடுதலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum