ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைப் பதிவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்

4 posters

Go down

வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் Empty வலைப் பதிவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்

Post by சிவா Fri Aug 15, 2014 5:56 am

வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் CW8Lqm4uTBi0X4PNmYgX+cell

தகவல் தொழில் நுட்பக் குற்றங்களைத் தடுப்பதற்காக, சிறப்பு சட்டம் ஒன்றை, நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வந்திருக்கிறது, தமிழக அரசு.

அதாவது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது, இந்த சட்டத்தின் மீது வழக்குப் பதிந்து, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ஓராண்டு சிறையில் தள்ள, இந்த சட்டம் வகை செய்கிறது.சமூக வலைதளங்களில், சமூகம் குறித்த தங்கள் ஆதங்கங்களை பதிவு செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில், இது பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.குறிப்பாக, அரசுக்கு எதிரான கருத்துக்களை, சமூக வலைதளங்களில் இனி, தைரியமாக பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என, அவர்கள் புலம்புகின்றனர். அரசியல் வட்டாரங்களிலும் இது மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக, ம.தி.மு.க., பொது செயலர் கூறியிருப்பதாவது: தகவல் தொழில் நுட்பத்துறையில் வியத்தகு வளர்ச்சி பெற்று கோடிக்கணக்கானோர், சமூக வலைத் தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். அரசின் மீது கருத்து மாறுபாடு கொண்டோர், அரசு நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்தோர், இனி கருத்துக்களை பகிர்ந்தால், தற்போது கொண்டு வந்துள்ள சட்டத் திருத்த மசோதாவின்படி நடவடிக்கை எடுத்து, அவர்களை சிறையில் தள்ள முடியும். தகவல் தொழில் நுட்பக் குற்றங்களை தடுப்பதற்காகவே, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக, அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.ஆனால், இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதற்குத் தான், வாய்ப்புகள் அதிகம். இச்சட்டத் திருத்தம், இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 22க்கு எதிரானது என்று, ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு சொல்லியிருக்கிறார். மேலும், அரசியல் சாசனம் பிரிவு 21ன் கீழ், வழங்கப்பட்டுள்ள தனி மனித சுதந்திர உரிமையையும் தட்டிப் பறிப்பதாக, சட்டத் திருத்தம் அமைந்துள்ளது.இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது என்பதற்கு, எந்தவித உறுதிமொழியும் இல்லை. இவ்வாறு அவர், கூறியுள்ளார்.

வலைப் பதிவர் ஜேம்ஸ் பிரபாகர் கூறியதாவது: உள்ளங்கையில், உலகை சுருக்கி இருப்பது சமூக வலைதளங்கள் தான். சாதாரண குக்கிராமத்தில், அடி பம்பில் தண்ணீர் வராத பிரச்னையில் ஆரம்பித்து, நாசாவில் நடக்கும் ஆராய்ச்சி வரை, நொடிக்குள் உலகம் முழுவதற்கும் தகவல்களை கொண்டு சேர்க்கும் பிரதான காரணிகளாக இருப்பது, சமூக வலைதளங்கள். அவற்றில் சுதந்திரமாக இயங்க வகை செய்யாமல், சட்டம் போட்டு தடை செய்தால், அவைகளில் கருத்துகளை சொல்ல யாரும் முன் வரமாட்டார்கள். அரசியல்வாதிகளின் தவறுகள், இனி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவது, குறைந்து விடும்.கடந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் நடந்த முறைகேடுகளை, இந்தியா முழுவதற்கும் வெளிச்சம் போட்டு காட்டியதில், சமூக வலைதளங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த சட்டத் திருத்தத்தால், அப்பாவிகள் பாதிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

சமூக வலைபதிவர் சிவ சிவா கூறியதாவது: தமிழகத்தில், வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை. அந்தப் பணியை, பத்திரிகைகளும், சமூக வலைதளங்களில் இயங்கும் வலைப் பதிவர்களும் தான் செய்து கொண்டிருக்கின்றனர்.அதை நசுக்குவதற்காகத் தான், இப்போது, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, புதிய சட்ட மசோதவை கொண்டு வந்து இருக்கின்றனர்.தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள், தினந்தோறும் நடக்கின்றன. நேற்று கூட, சென்னை பூந்தமல்லியில் வீட்டில் இருந்த கணவன் மனைவியை, மர்ம நபர்கள் வெட்டி கொன்றனர். இந்தமாதிரி நிகழ்வுகளை வலைப்பதிவர்கள், சமூக வலைதளங்கள் மூலமாக, மக்களுக்கு, தங்கள் எண்ணங்களுடன் கொண்டு செல்கின்றனர்.

சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டட விவகாரம் குறித்து, அரசின் தவறுகளை, சமூக வலைதளங்களில் சுட்டிக் காட்டினோம். அரசு தரப்பு எடுத்த நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினோம்.இனி, அது மாதிரி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்திருக்கிறது, தமிழக அரசு.நாளையே என்னை கைது செய்ய வேண்டும் என்றால், தகவல் தொழில் நுட்பத்தை, நான் தவறாக பயன்படுத்தினேன் என்று சொல்லி, கைது செய்து, குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ், ஓராண்டு சிறையில் அடைக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகன் கூறியதாவது:புதிய சட்ட மசோதா, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையான, தனிமனித உரிமையை பறிக்கும் செயல். பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவற்றை முடக்கிப் போடும் செயல்.டாஸ்மாக், மதுபானக் கடைகள் மூலமாக, தினந்தோறும் மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் தாலி அறுத்து நிற்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளை எக்காரணம் கொண்டும் மூட முடியாது என, சட்டசபையில், கலால் துறை அமைச்சர் அறிவிக்கிறார்.இதை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இனி அவ்வாறு விமர்சிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.தொடர்ச்சியாக குற்றங்களை செய்து, சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதுதான், குண்டர்கள் தடுப்பு சட்டத்தை பாய்ச்சும் நிலைமை இருந்தது. ஆனால், இப்போதைய சட்ட திருத்தத்தால், ஒரு முறை, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தினார் என, வழக்கு பதியப்பட்டாலே, அவரை குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்துவிட முடியும்.இது கொடுமையான அறிவிப்பு. அதனால் அரசு, இந்த சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


Last edited by சிவா on Fri Aug 15, 2014 11:00 pm; edited 1 time in total


வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் Empty Re: வலைப் பதிவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்

Post by சிவா Fri Aug 15, 2014 10:03 pm

வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் 201408150127121192_Firstminister-of-the-First-Prize_SECVPF

தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் அம்மா தரும் பரிசுதான் முதல் பரிசாக இருக்கும். குழந்தைகளைக் காக்க வந்த தெய்வமே நீர் வாழ்க!

- இனிமேல் என்னுடைய பதிவுகள் எல்லாம் இப்படித்தான் இருக்கும்! (என்னால் ஒரு வருடமெல்லாம் சிறையில் இருக்க முடியாது)


வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் Empty Re: வலைப் பதிவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்

Post by M.M.SENTHIL Fri Aug 15, 2014 10:12 pm

சிவா wrote:வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் 201408150127121192_Firstminister-of-the-First-Prize_SECVPF

தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் அம்மா தரும் பரிசுதான் முதல் பரிசாக இருக்கும். குழந்தைகளைக் காக்க வந்த தெய்வமே நீர் வாழ்க!

- இனிமேல் என்னுடைய பதிவுகள் எல்லாம் இப்படித்தான் இருக்கும்! (என்னால் ஒரு வருடமெல்லாம் சிறையில் இருக்க முடியாது)
மேற்கோள் செய்த பதிவு: 1079684

விடுங்க பாஸ் நமக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் Empty Re: வலைப் பதிவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்

Post by யினியவன் Fri Aug 15, 2014 10:23 pm

இனிமேல் சிவா தான் வலை தளங்களில் பதிவிடா வலையாபதி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் Empty Re: வலைப் பதிவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்

Post by M.M.SENTHIL Fri Aug 15, 2014 10:24 pm

யினியவன் wrote:இனிமேல் சிவா தான் வலை தளங்களில் பதிவிடா வலையாபதி
மேற்கோள் செய்த பதிவு: 1079695

புரியலையே தல


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் Empty Re: வலைப் பதிவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்

Post by யினியவன் Fri Aug 15, 2014 10:31 pm

அம்மாக்கு பயந்து அவரு இனிமே அம்மா நாமம் மட்டுமே பாடப் போவதால் அப்படி சொன்னேன் செந்தில்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் Empty Re: வலைப் பதிவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்

Post by M.M.SENTHIL Fri Aug 15, 2014 10:36 pm

யினியவன் wrote:அம்மாக்கு பயந்து அவரு இனிமே அம்மா நாமம் மட்டுமே பாடப் போவதால் அப்படி சொன்னேன் செந்தில்
மேற்கோள் செய்த பதிவு: 1079702

நம்மளும் அப்படியே அம்மா நாமம் பாடிடுவோம் தல, இப்போ ஜெயில்ல சோறு நல்லா இல்லையாம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் Empty Re: வலைப் பதிவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்

Post by சிவா Sat Aug 23, 2014 3:41 am

நீதியரசர் சந்துரு: ''குண்டர் சட்டத்தின் நோக்கம் தண்டனை வழங்குவது அல்ல. மாறாக, தொடர் குற்றம் இழைப்பவரை தடுத்து நிறுத்துவது. இதற்கு விசாரணை இன்றி காவலில் வைப்பது என்று பெயர். இந்த குண்டர் சட்டத்தின் கீழ் பெரும்பாலும் ஏழை மக்களே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். கள்ளச்சாராய முதலாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அதை விலைக்கு வாங்கி சில்லறை விற்பனையில் ஈடுபட்டோர் இந்தச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பலமுறை உயர் நீதிமன்றம் அதிகாரிகளைக் கடிந்துகொண்ட பின்னரும், தடுப்புக் காவல் தொடர்கிறது. சென்னை நகரத்தில் இந்தச் சட்டத்தின் கீழ் அதிக தடுப்புக் காவலுக்குப் பரிந்துரைக்கும் ஆய்வாளர்களுக்கு, சுழற்கோப்பை விருது வழங்கப்படுகிறது.

குற்றங்களை முறையாகத் துப்புத்துலக்கி குற்றவாளிகளை நீதிமன்றங்கள் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தர முடியாத காவல் துறையினர், இந்தச் சட்டத்தைப் பெருமளவுக்குத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இந்தச் சட்டம் தொடர் குற்றமிழைக்க முற்படுவோரைத் தடுக்கப் பயன்படுகிறது என்று சொல்லிவிட்டு, இன்று ஒரு குற்றம் இழைத்தாலும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறுவது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானது.

வலைப்பதிவுகளின் மூலம் தவறிழைப்போரை, அந்தத் தவறிழைக்க முற்படும் முன்னரே இந்தச் சட்டத்தின் பிரிவுகளைப் பயன்படுத்தலாம் என்று கூறும் சட்டத்திருத்தம், சட்டத்தின் ஆட்சியையே குற்றுயிராக்கும். இது அதிகார துஷ்பிரயோகத்துக்குத்தான் வழிவகுக்கும். சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் கருத்துகளை சுதந்திர​மாக பதிவுசெய்யலாம் என்று எண்ணிக்​கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை அச்சுறுத்தவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கருத்து சுதந்திரத்​துக்கான மிகப்பெரும் பேரிடி இந்தச் சட்டம்.''


வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் Empty Re: வலைப் பதிவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்

Post by சிவா Sat Aug 23, 2014 3:41 am

பேராசிரியர் அ.மார்க்ஸ்: ''மிக மோசமான ஒரு சட்டம் இது. தடுப்பு காவல் சட்டம் என்பதே அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. 'அடிக்கடி பல குற்றங்களைச் செய்யக்கூடியவர்கள் தப்பித்துவிடுகிறார்கள். அவர்களுக்கு சுலபமாக பெயில் கிடைத்துவிடுகிறது. அதனால்தான், இந்தத் தடுப்புக் காவல் சட்டம்’ என்று அரசு தடுப்புக் காவல் சட்டத்தை நியாயப்படுத்துகிறது. ஆனால், அடிக்கடி குற்றங்களில் ஈடுபடுவோர் மட்டும் அல்லாமல், முதல் முறை குற்றம் செய்தவர்கள்கூட இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது எல்லாம் தவறு என நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்து விடுதலையாகி இருக்கிறார்கள். உதாரணமாக, கூடங்குளத்தில் ஃப்ளெக்ஸ் போர்டு எழுதிக் கொடுத்த ஒருவர் மீது, 'குண்டாஸ்’ சட்டம் பாய்ந்தது. அவர் ஃப்ளெக்ஸ் போர்டு எழுதினாரே தவிர, எந்தக் குற்றமும் செய்யவில்லை. நான் அவருக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி, எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து வைத்ததும் ரத்தானது.

நீதிமன்றங்களும் இதுபோல் நூற்றுக்கணக்கான வழக்குகளில் ரத்துசெய்து இருக்கிறார்கள். இப்போதோ, முதல் முறை யார் குற்றம் செய்திருந்தாலும், இனி அவர்களைக் கைதுசெய்து இந்தச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துவிடலாம். ஒரு வருடம் கழித்து குற்றமற்றவர் எனச் சொன்னாலும், ஒரு வருட காலம் ஜெயிலில் தண்டனை அனுபவித்த மாதிரிதான் இது. குற்றம் இழைக்காதவர்களுக்கு தண்டனை என்பது கண்டிக்கத்தக்கது. பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்​கள்தான். ஆனாலும், இதில் சில பொய் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. இதை முறையாக விசாரிக்காமல், இந்தச் சட்டத்தின் கீழ் முதல் முறை குற்றம்சாட்டப்படுபவரும் இதில் தண்டிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துபவர்களை குண்டாஸில் போடுவேன் என்று மிரட்டுவதும் அடிப்படை கருத்துரிமையை பாதிக்கும் விஷயம். இது மிகக் கொடூரமான சட்டம். இதனை எதிர்க்க வேண்டியது நமது கடமை.''


வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் Empty Re: வலைப் பதிவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்

Post by ராஜா Sat Aug 23, 2014 10:51 am

வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் 3838410834  வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் 3838410834 தேன்கூட்டில் கையை வைக்கபோகிறார்கள் , இதனால் இணையதளங்களில்  இன்னும் அசிங்கப்பட போகிறார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வலைப் பதிவர்களுக்கு  குண்டர் தடுப்பு சட்டம் Empty Re: வலைப் பதிவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குண்டர் தடுப்பு சட்டம் பாயுமா?? திமுக ஆதரவு ரவுடிகள் கலக்கம்..!
»  பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும்.
» சாலைகளில் பைக் ரேஸ் நடத்தினால் குண்டர் சட்டம்
» மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
» கொலை, கொள்ளை வழக்கில் சிக்கிய திமுக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum