ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை

3 posters

Go down

“கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை Empty “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை

Post by அபிராமிவேலூ Wed Nov 04, 2009 5:03 pm

[You must be registered and logged in to see this image.]
“உங்களுக்கு ஒரு பையன் பொறந்திருக்கான்” என நிக்கை (Nick Vujicic)
அவனுடைய தந்தையிடம் காட்டியபோது உள்ளுக்குள் குமட்டிக் கொண்டு வர,
ஆஸ்பத்திரியை விட்டு வெளியே ஒடி வந்து வாந்தியெடுத்தார் தந்தை !
“இந்தாங்க உங்க பையன்” என தாயிடம் நீட்டியபோது “ஐயோ.. என்
முன்னாலிருந்து கொண்டு போங்கள்…” என நான்கு மாதங்கள் அவனைத் தொடாமலேயே
அழுது தீர்த்தாள் தாய்.
விஷயம் இது தான். நாளும் கிழமையும் எண்ணி எண்ணி ஆவலுடன் குழந்தையைக்
கொஞ்ச காத்திருந்த அந்த பெற்றோருக்குப் பிறந்ததோ கைகளும் கால்களும் இல்லாத
ஒரு குழந்தை ! இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத ஒருவனால் என்ன
செய்ய முடியும் பிச்சை எடுப்பதைத் தவிர ? என்று தானே நினைக்கத்
தோன்றுகிறது ?
அந்தக் கவலைதான் அந்த ஆஸ்திரேலியப் பெற்றோருக்கும் இருந்தது. ஒரு சின்ன
குறை இருந்தாலே சமூகத்தில் தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம். கைகளும்
இல்லாமல், கால்களும் இல்லாமல் இல்லாமல் இவனெல்லாம் என்ன வாழ்க்கை
வாழப்போகிறான் ? தொட்டதுக்கெல்லாம் யாரோ ஒருவருடைய உதவியில் தானே இவன் வாழ
முடியும் என்பதே பெற்றோரின் தலையாய கவலையாய் ஆகிப் போனது.
அன்றைக்கு அவர்களிடம் போய், “கவலைப்படாதீர்கள். உங்கள் மகன் ஒரு நாள் ஓடுவான், குதிப்பான், நீச்சலடிப்பான், கால்ஃப் [You must be registered and logged in to see this image.]விளையாடுவான்,
புட்பால் விளையாடுவான், கடலில் ஷர்ப் செய்வான் என்றெல்லாம்
சொல்லியிருந்தால்” அன்றைக்கே ஒரு கொலை விழுந்தாலும் விழுந்திருக்கும்.
ஆனால் எல்லாமே ஒரு பரபரப்பான சினிமா போல நிஜமாகியிருக்கிறது இன்று.
தற்போது தனது இருபத்து ஆறாவது வயதில் இருக்கும் நிக், இன்றைக்கு மேலே
சொன்ன எல்லாவற்றையும் செய்கிறார். கூடவே கோடானு கோடி மக்களுக்கு
தன்னம்பிக்கை ஊட்டும் சின்னமாகவும் உருவெடுத்திருக்கிறார்.
இப்போது மிகவும் உற்சாகமாய் இருக்கும் நிக் கடந்து வந்த ஆரம்ப வாழ்க்கை
ரொம்பவே கொடுமையானது. கைகளும் கால்களும் இல்லையென்றாலும் பெற்றோர் அவனை
பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்கள். பள்ளிக்கூடத்துக்குச் சென்றால்
பிள்ளைகள் நிக்கை நெருங்கி வரவே பயப்பட்டார்கள். ஏதோ ஏலியனைப் பார்ப்பது
போலத் தான் நிக்கை பார்த்தார்கள்.
எல்லாரையும் போல சாதாரணமாய் வாழ முடியாத ஏக்கம் நிக்கிற்குள் டன்
கணக்காய் கனத்தது. மற்றவர்களின் கிண்டலும், கேலியும், அருவருப்புப்
பார்வையும் நிக்கை நிலைகுலைய வைத்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. டீன் ஏஜ்
வயது வரை நிக் செய்த செபம் என்ன தெரியுமா ? “கடவுளே தலைமுடி வளர்வது போல
எனக்கு கைகளும் கால்களும் வளர வேண்டுமே” என்பது தான்.
[You must be registered and logged in to see this image.]
அப்போதெல்லாம் தொட்டதுக்கெல்லாம் தற்கொலைச் சிந்தனைகள் வந்து கொண்டே
இருந்தன. எப்படியாவது செத்துப் போகவேண்டும் என்று நினைத்தாலும் அதையும்
தனியே செய்ய முடியாத நிலை. “கொஞ்சம் என்னைக் கொல்வீர்களா பிளீஸ்” என
யாரிடமாவது கெஞ்ச வேண்டிய நிலையே நிக்கிற்கு.
அப்படியும் ஒருமுறை பாத்டப்பில் தண்ணீரை நிரப்பி மூழ்கிச் சாக
முனைத்திருக்கிறார். இன்னொரு கழுத்து உடையட்டும் செத்து விடலாம் என
டேபிளில் இருந்து தலைகீழாய் குதித்திருக்கிறார். ! என்ன செய்ய?
வாழவேண்டும் எனும் விதி அவருக்கு. எல்லா தற்கொலை முயற்சிகளும்
தோல்வியிலேயே முடிந்தன.
ஆரம்ப காலத்தில் நிக்கின் உருவத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த
பெற்றோர் பின்னர் நிக்கிற்கு தன்னம்பிக்கையை ஊட்டத் துவங்கினர். 18 மாதமாக
இருந்தபோதே நீச்சல் பழக்கத் துவக்கிய தந்தை, ஆறு வயதாக இருக்கும் போது
கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்தார். தாய் பிளாஸ்டிக்கில் ஒரு வளையத்தைச்
செய்து அதில் பென்சிலை மாட்டி எழுத கற்றுக் கொடுத்தார். இவையெல்லாம் தான்
நிக்கிற்கு நிமிர்ந்து நிற்கும் தைரியத்தைக் கொடுத்தது.
[You must be registered and logged in to see this image.]
நிக்கின் இடது கால் இருக்க வேண்டிய இடத்தில் ஆறாவது விரல் போல நீட்டிக்
கொண்டிருக்கும் ஒரு பாகம் தான் அவனுடைய வரப்பிரசாதம். அதுதான் அவனுடைய கை,
கால், துடுப்பு, எல்லாமே !. நடப்பது, எழுதுவது, நீந்துவது, விளையாடுவது என
சர்வமும் அதன் வழியாகவே. இது மட்டும் இல்லாமலிருந்தால் நான் என்ன
செய்திருப்பேனோ தெரியாது என சொல்லி சிரிக்கிறார் நிக்.
தனது பதின்மூன்றாவது வயதில் ஊனமுற்ற ஒருவரைப் பற்றிய வரலாறு ஒன்றை நிக்
படித்தார். அதுதான் அவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அந்த ஊனமுற்ற
மனிதர் கழுத்தையும், நாடியையும் பயன்படுத்தி கால்ப் விளையாடியதைப்
படித்தபோது நிக்கிற்குள் ஒரு மின்னல் அடித்தது.
[You must be registered and logged in to see this image.]
“அடடா… தேவையில்லாமல் தற்கொலை செய்யப் பார்த்தேனே” என தன்னையே நொந்து
கொண்டவர், “நல்ல வேளை இதுவரை சாகவில்லை” என நினைத்துக் கொண்டு வாழ்க்கையை
புதிய உத்வேகத்துடன் எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். அதுவரை கண்ணாடியைப்
பார்க்கும் போது கைகளும், கால்களும் இல்லாத சதுர உடம்பு மட்டுமே தெரிந்த
நிக்கிற்கு அதன் பின் தான் தனது அழகிய கண்கள் தெரிந்தன என
சிலிர்ப்பூட்டும் நம்பிக்கை விதைக்கிறார்.
அதன் பிறகு கடவுளைப் பழிப்பது, சாக நினைப்பது, முனகுவது, அழுவது, கவலை
கொள்வது என அனைத்து வேண்டாத விஷயங்களையும் மூட்டை கட்டி தூர எறிந்து
விட்டு உற்சாகமாகிவிட்டார் நிக். பிறருக்கு தன்னம்பிக்கை ஊட்டும்
பேச்சுகளையும் மீட்டிங்களையும் நடத்தத் துவங்கிவிட்டார்.
அப்படி ஆரம்பித்த அவரது தெம்பூட்டும் பணி, 24 நாடுகளுக்குப் பயணம்
செய்து இலட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தில் உரையாற்றுமளவுக்கு பரந்து
விரிந்திருப்பது வியக்க வைக்கிறது ! தற்போது ஊனமுற்றவர்களுக்காக இயங்கும்
“லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ்” எனும் நிறுவனத்தின் இயக்குனராகவும்
இருக்கிறார் அவர்.
[You must be registered and logged in to see this image.]
ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் பிறந்த நிக் இப்போது வசிப்பது
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில். சோர்வுற்றும், சோகமுற்றும்
இருப்பவர்களுக்கு இப்போது உற்சாக டானிக் இவர் தான், இவருடைய பேச்சுகள்
தான்.
ஐயோ அது இல்லையே, இது இல்லையே என புலம்பும் மக்கள் எதுவும் இல்லாமல்
எல்லாம் இருப்பதை விட மகிழ்ச்சியாய் இருக்கும் நிக்கைப் பார்த்ததும்
விளக்கைப் போட்ட இருட்டு அறைபோல சட்டென தெளிவாகி விடுகின்றனராம்.
குறிப்பாக இளம் வயதினரின் தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கைக் குறைவு,
மன அழுத்தம் இவையெல்லாம் இவரைப் பார்த்ததும் பனிக்கட்டியில் வரைந்த
ஓவியமாய் ஈரமாய் ஒழுகி மறைந்துவிடுகிறதாம்.
“கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை” எனச் சிரிக்கும் நிக்
உண்மையிலேயே இந்த நூற்றாண்டின் வியப்புக் குறியீடாய் நிமிர்ந்து
நிற்கிறார்.
[You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

“கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை Empty Re: “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை

Post by தாமு Wed Nov 04, 2009 5:12 pm

இந்த ஆண்டவன் ரொம்ப மோசமானவன்.... [You must be registered and logged in to see this image.]

ஆனா ஒருவிதத்ல் நல்லவர்.... ஏன் என்றால் எமக்கு இருக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும், விடாமுயற்ச்சியும் அவர்கலுக்கு அதிகம் குடுத்து அவர்கள் வாழ்வில் வெற்றிக்கு வழிவகுக்கிரான்.... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

“கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை Empty Re: “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை

Post by ramesh.vait Wed Nov 04, 2009 5:30 pm

We put God in a "box". The awesome thing about the Power of God, is that if we want to do something for God, instead of focusing on our capability, concentrate on our availability for we know that it is God through us and we can't do anything without Him. Once we make ourselves available for God's work, guess whose capabilities we rely on? God's! - Nick Vujicic
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

“கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை Empty Re: “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை

Post by அபிராமிவேலூ Thu Nov 05, 2009 11:26 am

ramesh.vait wrote:We put God in a "box". The awesome thing about the Power of God, is that if we want to do something for God, instead of focusing on our capability, concentrate on our availability for we know that it is God through us and we can't do anything without Him. Once we make ourselves available for God's work, guess whose capabilities we rely on? God's! - Nick Vujicic
தமிழாக்கம் இருந்தால் எனக்கு புரிந்திருக்கும் [You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

“கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை Empty Re: “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum