ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !

3 posters

Go down

புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Empty புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !

Post by eraeravi Tue Jul 29, 2014 9:21 am

புத்தகம் போற்றுதும் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
அருமை நண்பர் இரா. இரவியின் புத்தகம் போற்றுதும் நூல், வாசிப்பவர்க்கு ஒரு இனிய அனுபவமாகும்.
புத்தகம் போற்றுதும் என்பதும், கடவுளை வணங்குங்கள் என்று சொல்வதும் என்வரையில் ஒன்றுக்கொன்று இணையானதாகும்.
கடவுளுக்கு நிகரான புத்தகங்களைப் போற்றுவதன் மூலம், நாத்திகர்கள் கூட மறைமுகமாக ஆத்திகர்களாகி விடுகிறார்கள் என்பதே என் அழுத்தமான கருத்து.
நண்பர் ரவி, இந்த நூலில் ஐம்பது நூல்களுக்கான ஒரு முன்னோட்டத்தை அளித்திருக்கிறார். இந்த ஒரு நூலை வாசிப்பதன் மூலம் அந்த ஐம்பது நூல்களையும் ருசி பார்த்த ஒரு திருப்தி ஏற்படுகிறது. கூடுதலாக, ருசித்த உணவை மிகவே விரும்பி உண்பது போல, அந்த நூல்களை எல்லாம் தேடிப் பிடித்து வாசிக்க வேண்டும் என்றும் வேட்கை உருவாகிறது.
இதற்காகவே ரவியை பாராட்ட வேண்டும்.
இலக்கிய உலகில் எவ்வளவோ நூல்கள், நாவல், கவிதை, சிறுகதை, திறனாய்வு, கட்டுரை என்று சுவைகளில் பல பிரிவுகள்.
இந்த புத்தகம் போற்றுதும் நூல் இதில் எந்த பிரிவிலும் சேராமல் ஒரு தனிப்பிரிவாய் நிற்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
ஒரு நூலுக்குள் ஐம்பது நூலின் சாரம் அடங்கியிருப்பதை எப்படிச் சொல்வது? மலர்களில் பல மலர்களைத் தொகுத்தால் கதம்பம். அது போல் இதையும் கதம்ப நூல் எனலாமா?
இக்கேள்விக்கான விடையை சான்றோர்களே கூறட்டும்.
நண்பர் இரவி அடிப்படையில் ஒரு கவிஞர். அதிலும் ஹைக்கூ கவிஞர். இதனால் சுருங்கச் சொல்லி விளங்க மற்றும் வியக்க வைப்பதில் பேர் எடுத்தவர். இந்த நூலைத் தந்ததன் மூலம் பெரிய நூல்களையும் ஹைக்கூ போல சிறு கட்டுரை வடிவில் புரிய வைத்து விட முடியும் என்று முனைந்திருக்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது.
ஹைக்கூ கவிதைகள் எப்படி மின்னல்வெட்டாய் தாக்குமோ அதே தாக்கம் இந்நூலில் எனக்கு ஏற்பட்டது.
இந்த 50 நூல்களும் இவர் வியந்த நூல்கள். இதன் சிறப்பை மிக எளிய மொழி கொண்டு இவர் கூறியிருப்பதும், மயிற்பீலியால் வருடித்தருவது போல பாராட்டியிருப்பதும் ஒரு தனிச் சுகமாகத் தெரிகிறது. சில நூல் ஆசிரியர்கள் எதிலும் தங்களை முன்நிறுத்திக்கொள்வார்கள். தங்களுக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லி அதோடு வாசித்ததை ஒப்பிட்டு, அதோடு தங்களின் கருத்தைச் சேர்த்துக் கட்டி வாசிக்கையில் ஆயாசப்பட வைப்பார்கள். இரவி, முகத்துக்கு நேராக நின்று ஒரு சாமான்ய மனிதர் போன்ற பாவனையில் ஜிகினாக்கள் துளியும் இன்றி, ஆனால் தான் உணர்ந்ததை அப்படியே பேசுகிறார்.
இந்த எளிமை ஓர் அரிய விஷயமாக எனக்குப்படுகிறது. இந்நூலில் கவிஞர் புதுயுகனின் மதிப்புரையும், திரு. இரா. மோகன் அவர்களின் மதிப்புரையும் இடம் பெற்றுள்ளது. இரண்டுமே மதிப்புரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாடம் எழுதுவது போல் உள்ளன.
புதுயுகன் உணர்வுக்கு முக்கியத்துவம் தந்தால் திரு. மோகன் உணர்வோடு வடிவத்துக்கும் முக்கியத்துவம் தருகிறார். திரு. மோகன் இலக்கிய மரபு வழி செல்பவர். தமிழ்க் கொண்டல் திரு. மு. வரதராசனாரின் அருமை மாணவர்களில் ஒருவர். பணி ஓய்வுக்குப் பின்பும் எழுத்துக்கு ஓய்வே கிடையாது என்று இயங்கி வருபவர். தான் வளர்வதோடு தன்னைச் சார்ந்தவர்கள் வளர பெரிதும் துணை நிற்பவர்.
திரு. இரவியும், திரு. மோகனின் இதமான அரவணைப்பில் வளர்பவர். அதே போல் பன்முகத்திறமைகள் கொண்ட முனைவர் இறையன்பு அவர்களின் நெறிகாட்டுதலும் உடையவர். மறந்தும் பிறரிடம் உள்ள பலவீனங்களைப் பாராதவர். உண்மையாக இருக்க வேண்டும் என்கிற நோக்கம் கொண்டவர். இப்படிப்பட்டவரின் இந்த நூலைப் போற்றுவதா, இல்லை இவரைப் போற்றுவதா என்கிற ஒரு சிறுதவிப்பு எனக்கு நேரிட்டது. இருவித போற்றுதலையும் கொள்வதே சிறப்பு எனப்படுகிறது. அவ்வகையில் இந்நூலையும் சரி, திரு. இரவியையும் சரி மனதார போற்றுகின்றேன்.
இந்நூல் வெளியீட்டின் போதே இதன் தொடர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த நூலை விரைவாக எதிர்பார்த்து அதற்கும் இப்போதே என் வாழ்த்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். வாழ்க! வாழ்க!
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Empty Re: புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !

Post by ayyasamy ram Tue Jul 29, 2014 11:39 am

புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Empty Re: புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !

Post by eraeravi Tue Jul 29, 2014 12:31 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Empty Re: புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !

Post by M.M.SENTHIL Tue Jul 29, 2014 2:19 pm

புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! 103459460 சூப்பருங்க 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Empty Re: புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !

Post by eraeravi Tue Jul 29, 2014 4:04 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! Empty Re: புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !
» ‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்
» மனம் ஒரு மர்ம தேசம் ! எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum