ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி

5 posters

Go down

எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Empty எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி

Post by சிவா Mon Jul 28, 2014 2:49 am

எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி 10302096_710994745640292_8998335481757046758_n

தமிழக அரசின் இந்த அம்மா கூத்து எங்கே போய் முடியுமோ என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி பதில் பாணி அறிக்கையில்தான் இப்படிக் கூறியுள்ளார் கருணாநிதி. கருணாநிதியின் கேள்வி பதில் அறிக்கை:

கேள்வி: ஜெயலலிதா ஆட்சியில்தான் திரைப்படத் துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது என்று பேரவையில் அந்தத் துறையின் அமைச்சர் பேசியிருக்கிறாரே?

கருணாநிதி: இந்தப் பேச்சுக்கு உதாரணமாக நடிகர் கமல்ஹாசன் நடித்த "விஸ்வரூபம்" - நடிகர் விஜய் நடித்த "தலைவா" படங்களைக் கூறலாமே! "விஸ்வ ரூபம்" திரைப்படம் வெளிவருமா என்று இருந்த நிலையையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று அமைச்சர் எண்ணியிருப்பார் அல்லது ஒரு வேளை கிண்டலாகச் சொல்லியிருந்தாலும் சொல்லியிருக்கக் கூடும்!

கேள்வி: "அம்மா" திரையரங்கம் கட்டப் போகிறார்களாமே?

கருணாநிதி: ஆமாம், சோழிங்கநல்லூரில் அம்மா திரையரங்கம் அமைப்பதற்கான இடத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்திருக்கிறார். சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகம் அருகிலே மாநகராட்சிக்குச் சொந்தமான எட்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 2 ஏக்கர் நிலத்தில் கடைகள், சென்னை குடிநீர் அலுவலகம் போக மீதமுள்ள ஆறு ஏக்கர் நிலத்தில் "அம்மா" திரையரங்கம், அரசு மருத்துவமனை ஆகியவற்றை அமைப்பதற்காக மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார். "அம்மா" திரையரங்கம் தொடங்குவது வரை வந்திருக்கிறார்கள். இந்த "அம்மா" கூத்து எங்கே போய் முடியுமோ?

அ.தி.மு.க.வினர் சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளு மன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மக்கள் அவர்களைப் பெருவாரியாக ஆதரிக்கிறார்களாம். அதனால் கண்ணை மூடிக் கொண்டு எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள்.

கேள்வி: கடலாடியில் 1,500 கோடி ரூபாயில் கடல் நீரைச் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப் படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறாரே?

கருணாநிதி: 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் படித்த அறிக்கையில் சொன்னதுதானே? 110வது விதி என்பதற்குப் பதிலாக 111 என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்!

கேள்வி: சமஸ்கிருத வாரம் தமிழகத்திலே கொண்டாடுவதற்குத் தன்னுடைய கடுமையான எதிர்ப்பைத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தது பற்றி?

கருணாநிதி: சமஸ்கிருத வாரம் கூடாது என்று சொன்ன முதலமைச்சர் தமிழுக்கு வாரம் கொண்டாட வேண்டுமென்றும் கூறியிருந்ததை நான் படித்த போது, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள புலிக் குட்டிகளுக்கு தாரா என்றும் மீரா என்றும் பீமா என்றும், நர்மதா, அனு என்றும், திருவரங்கத்தில் "யாத்ரி நிவாஸ்" என்றும் சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டியது தான் நினைவுக்கு வந்தது. புலிக்குட்டிகளுக்குப் பெயரிடக் கூடத் தமிழ்ப் பெயர்களா கிடைக்க வில்லை?

இந்த அழகில்தான் "தமிழ்ச் செம்மல்" விருது அறிவித்திருக்கிறார். முதல் விருதை முதல்வருக்கே வழங்கலாமே?

அ.தி.மு.க. அரசுக்குத் தமிழ் மீது உள்ள பற்றுக்கு ஒரு உதாரணம் கூற வேண்டுமேயானால், தோல்வியே காணாத தமிழ் மன்னன், "அலைகடல் மீது பல கலம் செலுத்தி" பல நாடுகளை வென்றெடுத்த தமிழ் மன்னன், சோழ அரசை சொர்க்க பூமியாக மாற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா கங்கைகொண்டசோழ புரத்தில் தனியார் முயற்சியால் நடைபெறுகிறது.

தி.மு. கழக ஆட்சி நடைபெற்ற போது ராஜ ராஜ சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவைத் தஞ்சையில் தமிழக அரசு சார்பில் வெகு சிறப்பாக நடத்தி, அதில் நானே சென்று கலந்து கொண்டேன். தற்போது நடைபெறும் விழாவில் முதலமைச்சர் கூட அல்ல, வேறு எந்த ஒரு அமைச்சராவது பங்கேற்கிறார்களா? இது ஒன்று போதாதா, இந்த ஆட்சியினருக்கு தமிழ் மீதும், தமிழ்ப் பாரம்பரியத்தின் மீதும் எவ்வளவு அக்கறை என்பதை வெளிப்படுத்த?

கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மீதும் அவதூறு வழக்கா?

கருணாநிதி: ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், மணல் கடத்தல் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருந்தாராம். அது முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலே உள்ளது என்று முதலமைச்சர் சார்பில் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்குத் தொடுத்திருக்கிறார். எதிர்க்கட்சிகளின் தலைவர்களில் ஒருவரைக் கூட விட்டுவிடாமல் அனைவர் மீதும் அவதூறு வழக்குத் தொடுக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடுத்த கட்டம்தான் இது! வாழ்க கருத்துச் சுதந்திரம்; வாழ்க ஜனநாயகம்!.

கேள்வி: தமிழக அரசு நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்க்கப் போகிறதாமே?

கருணாநிதி: தனியாருக்கு அப்படித் தாரை வார்த்தால்தானே "கமிஷன்" தொகையை கோடிக் கணக்கிலே பெற்று, அதில் ஒரு பகுதியை தேர்தல் நேரத்தில் பாமர மக்களுக்குக் கொடுத்து அவர்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறமுடியும். முதலில் போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான பேருந்துகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் யோசனை வந்ததாம். அதற்கு எதிர்ப்பு கடுமையாக இருக்குமென்பதால், தற்போது நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளில் அ.தி.மு.க. அரசினர் வேகமாக இறங்கி விட்டார்களாம்.

தமிழக நெடுஞ்சாலைத் துறையால் 11,594 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகள் - 11,289 கிலோ மீட்டர் மாவட்ட முக்கிய சாலைகள் - 34,160 கிலோ மீட்டர் மாவட்ட இதர சாலைகள் - 2,250 கிலோ மீட்டர் என மொத்தம் 57,043 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைத் துறை சாலைப் பராமரிப்புப் பணிகளில், முதல் கட்டமாக, பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட, 378 கிலோ மீட்டர் சாலையை, ஐந்தாண்டுகளுக்குப் பராமரிக்க 237 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அருப்புக் கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டு விட்டதாம்.

இந்தப் பராமரிப்புப் பணிகளை இதுவரை சாலைப் பணியாளர்கள்தான் கவனித்து வந்தார்கள். அவர்களே தொடர்ந்து இந்தப் பணிகளை ஐந்தாண்டுகளுக்குக் கவனித்தால், 80 கோடி ரூபாய்தான் செலவாகும். தனியாரிடம் இந்தப் பணியைத் தாரை வார்ப்பதால், 157 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் உரிய காரணமின்றி அதிகமாகச் செலவிடப்படும். இதிலே நமக்குத் தெரியாத ஒன்று, இடையிலே அந்தத் தனியார் நிறுவனம் எவ்வளவு ரூபாயைக் கொடுத்தது என்பதுதான்.

பொள்ளாச்சியைத் தொடர்ந்து ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல் என வரிசையாக சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவ்வாறு செய்வதின் காரணமாக கழக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 9,600 சாலைப் பணியாளர்களின் பணியும் கேள்விக் குறியாகியுள்ளது. பரிதாபத்திற்குரிய அந்தச் சாலைப் பணியாளர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள். மக்கள் நலப் பணியாளர்கள், உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். சாலைப் பணியாளர்கள் என்ன செய்யப் போகிறார்களோ?

கேள்வி: வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விரைவாக முடிக்க வரைவுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும்படி மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருக்கிறாரே?

கருணாநிதி: நல்ல யோசனை! பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்திருக்க வேண்டிய யோசனை. இந்தத் திட்டம் அப்போதே எடுக்கப்பட்டிருந்தால், பலருடைய உண்மை உருவம் உலகத்திற்குத் தெரிந்திருக்கும்.

தட்ஸ்தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Empty Re: எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி

Post by M.M.SENTHIL Mon Jul 28, 2014 10:06 pm

சிவா wrote:
கேள்வி: வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விரைவாக முடிக்க வரைவுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும்படி மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருக்கிறாரே?

கருணாநிதி: நல்ல யோசனை! பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்திருக்க வேண்டிய யோசனை. இந்தத் திட்டம் அப்போதே எடுக்கப்பட்டிருந்தால், பலருடைய உண்மை உருவம் உலகத்திற்குத் தெரிந்திருக்கும்.

தட்ஸ்தமிழ்
மேற்கோள் செய்த பதிவு: 1076098

நம்ம கனிமொழி, ராசா முகத்தையா சொல்றீரு...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Empty Re: எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி

Post by அசுரன் Mon Jul 28, 2014 10:41 pm

தாத்தாவின் சாமர்த்தியமான கேள்வி பதில் அசத்தல். தனக்கு ஒன்னுமேயில்லைன்னு நினைக்கிறது தான் இவரது பலகீனம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Empty Re: எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி

Post by M.M.SENTHIL Mon Jul 28, 2014 10:42 pm

அசுரன் wrote:தாத்தாவின் சாமர்த்தியமான கேள்வி பதில் அசத்தல். தனக்கு ஒன்னுமேயில்லைன்னு நினைக்கிறது தான் இவரது பலகீனம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1076244

அவரு எப்பவுமே அப்படித்தானே சார்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Empty Re: எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி

Post by அசுரன் Mon Jul 28, 2014 10:46 pm

M.M.SENTHIL wrote:
அசுரன் wrote:தாத்தாவின் சாமர்த்தியமான கேள்வி பதில் அசத்தல். தனக்கு ஒன்னுமேயில்லைன்னு நினைக்கிறது தான் இவரது பலகீனம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1076244

அவரு எப்பவுமே அப்படித்தானே சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1076246
இவருக்குன்னா ரத்தம் மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்டினி ஹிஹி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Empty Re: எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி

Post by T.N.Balasubramanian Mon Jul 28, 2014 10:51 pm

அய்யாவோட கூத்து முடியும் நாளில்
அம்மாவோட கூத்தும் முடியுமோ என்னவோ !

அய்யாவோட ஆட்கள் கோரசாக கும்மி அடிச்சாங்க ,
அம்மா தனி ஆவர்தனம் !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Empty Re: எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி

Post by அசுரன் Mon Jul 28, 2014 10:55 pm

T.N.Balasubramanian wrote:அய்யாவோட கூத்து முடியும் நாளில்
அம்மாவோட கூத்தும் முடியுமோ என்னவோ !

அய்யாவோட ஆட்கள் கோரசாக கும்மி அடிச்சாங்க ,
அம்மா தனி ஆவர்தனம் !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1076250

கடைசி வரி அருமை ஐய்யா. புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Empty Re: எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி

Post by Muthumohamed Tue Jul 29, 2014 12:16 am

இவரு ரொம்ப உத்தமரு போல பேசுறாரு அவ்ளோதான்



எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Mஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Uஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Tஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Hஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Uஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Mஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Oஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Hஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Aஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Mஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Eஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Empty Re: எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum