ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Poll_c10பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Poll_m10பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Poll_c10 
ayyasamy ram
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Poll_c10பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Poll_m10பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Poll_c10 
mini
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Poll_c10பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Poll_m10பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Poll_c10 
mohamed nizamudeen
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Poll_c10பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Poll_m10பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை

Go down

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Empty பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை

Post by சிவா Thu Jul 17, 2014 3:41 am

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை 5PmJTexQzCeByjZh44Mg+1405517205-4194

பிரேசிலில் நடந்த ஆறாவது பிரிக்ஸ் மாநாட்டில், "வாசுதேவ குடும்பகம்" அதாவது "உலக முழுவதுமே ஒரே குடும்பம்" என்ற கருத்து, எங்கள் நாட்டின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்தகைய மண்ணில் இருந்து வரும் நான் இதனை ஒரு பெரிய பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார். அவரது முழு உரை இங்கே.

மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் டில்மா ரோசப்!
மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் விளாடிமிர் புடின்!
மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் ஜி ஜின்பிங்
மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் ஜெகப் ஜுமா

மரியாதைக்குரிய பிரதிநிதிகளே, பெண்களே, கனவான்களே!

பிரேசிலில் இருப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு அளித்த விருந்தோம்பலுக்காக பிரேசிலின் குடியரசு தலைவர் ரோசப், பிரேசில் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இது என்னுடைய முதல் பிரிக்ஸ் மாநாடு. உண்மையாகவே இது ஒரு செறிவூட்டும் அனுபவமாகும். இங்கு கூடியிருக்கும் உலகத் தலைவர்களின் உள்நோக்குப் பார்வையிலும் தொலைநோக்குச் சிந்தனைகளிலும் நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.

அது மட்டும் இல்லாமல் இங்கிருக்கும் ஒவ்வொரு தலைவருடனும் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளும் அரிய வாய்ப்பினைப் பெற்றதில் பெருமையடைகிறேன் வரும் நாட்களில் இந்த உறவு மேலும் வலிமை பெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

மதிப்புக்குரியவர்களே! இன்று மாநாட்டின் இரண்டாம் கட்டத்தை பிரிக்ஸ் அடைகிறது.

முக்கிய தருணத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. அதிக அளவிலான பொருளாதார மற்றும் அரசியல் குழப்பத்தை உலகம் சந்தித்து வருகிறது. பல முக்கிய பகுதிகளில் சச்சரவுகளும் நிலையற்ற தன்மையும் வளர்ந்து வருகிறது.

இவை வறுமையை சமாளிப்பதில் உள்ள சவால்களை அதிகப்படுத்துகிறது. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி மாதிரியை உருவாக்குவதற்கும் சலாலாக உள்ளது.

அமைதி மற்றும் நிலையான சூழ்நிலையை மீண்டும் கொண்டு வருவதே உலகில் அவசரத் தேவையாகும். இதற்காக ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான புதிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

இந்த அவசிய தேவையைப் பிரிக்ஸ்ஸால் பூர்த்தி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். நான் இவ்வாறு நம்புவதற்கு காரணம் சர்வதேச அமைப்புகளில் பிரிக்ஸ்-க்கு உள்ள தனித் தன்மை. ஏனென்றால் மற்ற அமைப்புகள், வளர்ச்சி அடைந்த நாடுகள் அல்லது ஒரே அடையாளங்களைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளின் கூட்டமைப்பாகும். ஆனால், பிரிக்ஸ் "வருங்காலத் திறன்" என்ற அளவுகோலைக் கொண்டே நாடுகளை ஒன்று சேர்ந்துள்ளது. ஆகையால், பிரிக்ஸின் அடிப்படை நோக்கமே முன்னோக்கிப் பார்ப்பதாகும்.

அதனால், ஏற்கெனவே உள்ள சர்வதேச அமைப்புகளில் பிரிக்ஸ் புதிய கண்ணோட்டத்தையும் வழிமுறைகளையும் சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். அதனால் நமது உறவு மற்றும் அமைப்பின் வளர்ச்சி இந்த அடிப்படை நோக்கத்தைத் தக்க வைத்துக்கொள்வதாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

அமைதியான, சீரான மற்றம் நிலையான உலகத்தை உருவாக்குவதில் பிரிக்ஸ் குரல் ஒன்று பட்டதாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.

தீவிரவாதம், இணையப் பாதுகாப்பு, பருவ நிலை மாற்றம் போன்ற உலகத்தின் முக்கிய சவால்களை எதிர்கொள்ள நமது ஒத்துழைப்பை நாம் இன்னும் பலப்படுத்த வேண்டும்.

வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உலகக் கருத்தினை வடிவமைப்பதில் பிரிக்ஸ் முன்னோடி பங்கு வகிக்க வேண்டும்.

2015-க்குப் பிறகான வளர்ச்சி செயல்திட்டத்தின் முக்கிய அம்சமாக வறுமை ஒழிப்பு இடம்பெறுவதும் இதில் அடங்கும்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழு, சர்வதேச நிதி நிறுவனங்கள் போன்ற உலக அமைப்புகளின் நிர்வாக முறையில் சீர்திருத்தங்களை நாம் உடனடியாக வலியுறுத்த வேண்டும்.


உலக வர்த்தக அமைப்பின் ஆட்சி முறையை வடிவமைப்பதில் நாம் உதவ வேண்டும். வலுவான, சீரான மற்றும் நிலையான உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிப்படையான வர்த்தக வளர்ச்சி முறை அவசியமாகும்.

இது வளரும் நாடுகளின், வளர்ச்சி குறித்த விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும்.

அதோடு நலிந்தவர்களுக்குக்கான சிறப்புத் தேவைகளும் இதில் இடம்பெற வேண்டும். முக்கியமாக உணவு, பாதுகாப்பு போன்ற துறைகளில் இவை இடம் பெற்றிருக்க வேண்டும்.

மரியாதைக்குரியவர்களே, உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் செல்வாக்கை பிரிக்ஸ் அடைந்துவிட்டது. நமது நலன்கள் சிறக்க நமது உறவை மேலும் பலப்படுத்த வேண்டும்.

இதனால் தான் இதற்கு முன் நடந்த கலந்துரையாடல்களில் இந்த வலுவான மன்றத்தைப் பரந்துபடுத்துவது பற்றிப் பேசியிருந்தேன்.

இந்த மாநாட்டைத் தாண்டி நாம் அனைவரும் ஒன்றிணைந்து இயங்க வேண்டும்.

நமது மாநிலங்கள், நகரங்கள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையேயான துணை தேசிய அளவிலான பரிமாற்றங்களில் நாம் முதன்மையாக விளங்க வேண்டும்.

'மக்களுடன் மக்கள்' தொடர்பை மையமாக கொண்டு பிரிக்ஸ் செயல்பட வேண்டும். குறிப்பாக நமது இளைஞர்கள் முன் நின்று வழிநடத்த வேண்டும். புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நோக்கோடு பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகள் மன்றத்தை நிறுவுதல் ஒரு நல்ல முயற்சியாக அமையும்.

பிரிக்ஸ் மொழிப் பள்ளிகள் ஆரம்பித்தல், மற்றொரு முயற்சியாக அமையும். அதில் நம் அனைவரின் மொழிகளும் கற்பிக்கப்படலாம்.

அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்க பெரியளவிலான திறந்த நிலை இணையப் படிப்புகளை ஆரம்பிப்பதைப் பற்றி நாம் பரிசீலிக்க வேண்டும்.

பிரிக்ஸ் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து நாம் ஆய்வு செய்ய வேண்டும். இந்தப் பல்கலைக்கழகம், நம் நாட்டில் உள்ள கல்வி வளாகங்களை இணையம் மூலமாகவும் மாணவர் ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பு மூலமாகவும் இணைக்க உதவும்.

மரியாதைக்குரியவர்களே, நம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்பது மூலம் நாம் ஒவ்வொருவரும் வெற்றிபெற முடியும் என்று நான் நம்புகிறேன்.

நாம் ஒவ்வொருவரும் மற்றவருடைய அறிவு, திறன்கள், ஆதார வளங்களில் பெற்றுள்ள பலத்தை அறிந்து போற்ற வேண்டும்.

நமது அனுபவங்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகளை வகுக்க வேண்டும்.

இதன் மூலம் எண்ணற்ற வழிகளைக் கண்டுபிடிக்கலாம். அவையாவன:

• மலிவான மற்றும் நம்பகமான தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களில் நமக்கு இருக்கும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.

• செயற்கைக்கோள், தகவல் தொழில்நுட்பம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தின் பயன்களைக் கொண்டு தரமான கல்வி மற்றும் சுகாதாரத்தை எளிதில் கிடைக்கச் செய்தல்.

• பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே சுற்றுலாத் துறை மேம்பாட்டின் வளர்ச்சியை வடிவமைத்தல்.

• பேரழிவு மேலாண்மையில் உள்ள அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.

• விளையாட்டுகளில் ஒத்துழைப்பும் போட்டிகளும்.

மரியாதைக்குரியவர்களே, உலக உறவுகளில் பொருளாதார சக்திகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. வர்த்தகம், சுற்றுலாத் துறை, தொழில்நுட்பம், பாரம்பரியம், திறமை போன்ற களங்களுக்கு ஏற்கெனவே உள்ள கோட்பாடுகளை மாற்றியமைக்கும் சக்தி உண்டு.

பிரிக்ஸில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவம் மற்றும் வளங்களின் தனிப்பட்ட கலவையைக் கொண்டு உள்ளோம். நாம் நான்கு கண்டங்களைப் பிரதிபலிக்கிறோம்.

நாம் ஒவ்வொருவரும் ஒப்பீட்டு அளவிலான நன்மைகளையும் நிறைவான பலத்தையும் பெற்றுள்ளோம். இதனைப் பயன்படுத்தும் வழிமுறைகளைப் பிரிக்ஸ் உருவாக்க வேண்டும். அது நம் அனைவருக்கும் நன்மை செய்யும். இதற்கான பணிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தில்லி மாநாட்டில் கண்ட புதிய வளர்ச்சி வங்கி என்ற கனவு, இன்று ஃபோர்டலேசாவில் நனவாகியுள்ளது. அது பிரிக்ஸ் நாடுகளுக்குப் பயன் தரும். அது மட்டுமல்லாமல் வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும். வளரும் நாடு என்ற வகையில் அது நம் சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

பிரிக்ஸின் எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கும் ஏற்பாடானது பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாக்கப் புதுக் கருவியாக உள்ளது. உலக நிதிச் சந்தைகளில் நிலையற்ற தன்மை அதிகரித்து இருக்கும் இந்த வேளையில் இது ஒரு முக்கிய முயற்சியாகும்.

ஏற்றுமதி, கடன் உறுதி முகமைகள் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக வங்கிகளுக்கிடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவை வேறு சில முக்கியமான நடவடிக்கையாகும். இவை பிரிக்ஸ் நாடுகளுக்கு மத்தியிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.

நாம் இன்னும் லட்சிய நோக்கோடு இருக்க வேண்டும் என்ற நிலையை நாம் அடைந்துவிட்டோம் என்று நான் நம்புகிறேன்.

நாம் இது போன்ற ஆக்கபூர்வமான வழிமுறைகள் மற்றும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். இவை பிரிக்ஸைத் தாக்கம் ஏற்படுத்தும் தளமாக மாற்றும்.

மரியாதைக்குரியவர்களே, எதிர்காலத்தை வரையறுக்கும் வாய்ப்பு நமக்குள்ளது. நம் நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல் உலகத்தின் எதிர்காலத்தையும் வரையறுக்கும். "வாசுதேவ குடும்பகம்" அதாவது "உலக முழுவதுமே ஒரே குடும்பம்" என்ற கருத்து, எங்கள் நாட்டின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்தகைய மண்ணில் இருந்து வரும் நான் இதனை ஒரு பெரிய பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன்.

வளரும் உலகத்தின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை வலுப்படுத்தும் வகையில் நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த பிரேசில் அதிபர் ரோசப்-க்கும், இந்நாட்டு மக்களுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு நரேந்திர மோடி உரையாற்றினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Empty Re: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை

Post by சிவா Thu Jul 17, 2014 3:46 am


பிரிக்ஸ் மாநாடு 2014: புதிய துறைகளில் ஒத்துழைக்க முடிவு

பிரேசிலில் நடந்த ஆறாவது பிரிக்ஸ் மாநாட்டில், புதிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி, பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு பரஸ்பர அங்கீகாரம், காப்பீடு, மற்றும் மறு காப்பீடு அதோடு தொழிலாளர் மற்றம் வேலை வாய்ப்பு பிரச்சனைகள் இதில் அடங்கும்.

கோட்டா முறை குறித்து இறுதி உடன்பாடு

மேலும், ஆறாவது பிரிக்ஸ் மாநாட்டின் ஃபோட்லேசா பிரகடனம். 2015 ஜனவரி மாதத்திற்குள் கோட்டா முறை குறித்த உடன்பாட்டை இறுதி செய்யுமாறு சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நிதியமானது கோட்டா முறை அமைப்பாகவே திகழ வேண்டும் என்று இந்தப் பிரகடனம் வலியுறுத்தியுள்ளது. 2010இல் பரிந்துரைக்கப்பட்ட எந்தச் சீர்திருத்த நடவடிக்கைகளையும் சர்வதேச நாணய நிதியம் செயல்படுத்தவில்லை என்று பிரிக்ஸ் நாடுகள் கவலைப்படுவதாகவும், இது சர்வதேச நாணய நிதியத்தின் நெறி, நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.


பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum