ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைட்டமின் மாத்திரைகளின் தீமைகள்

Go down

 வைட்டமின் மாத்திரைகளின் தீமைகள்  Empty வைட்டமின் மாத்திரைகளின் தீமைகள்

Post by சிவா Thu Jul 17, 2014 3:38 am


உணவு அல்லாத பொருட்களை எல்லாம் உணவு எனச் சொல்லிக்கொண்டு இருப்பதாலும், சூப்பர் மார்க்கட்டுகளில் விற்கப்படும் "உணவு மாதிரியான பொருட்கள்" அடிப்படையில் குப்பை என்பதாலும் போதுமான ஊட்டச் சத்துகள் அவற்றில் கிடைப்பது இல்லை. அது தவிர தம் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானவை என்பதைக் காட்ட இக்கம்பனியினர் சீரியலில் வைட்டமின்களை கலந்து "ஹார்ட் ஹெல்தி (heart healthy)" எனச் சொல்லி விற்று வருகிறார்கள்.

கொக்கோகோலா கம்பனி ஒரு படி மேலே போய், தண்ணீரை விட ஆரோக்கியமான பானம் ஒன்றை அறிமுகப்படுத்தியது (!). அப்பேர்ப்பட்ட மாய மந்திர பானம் என்ன எனக் கேட்கிறீர்களா? வைட்டமின் வாட்டர் தான். நீரில் சிந்தடிக் வைட்டமின்களையும், ஸ்ப்ளெண்டா மாதிரி செயற்கை சர்க்கரைகளையும், பிரசர்வேடிவ்களையும் கெமிக்கல்களையும் கலந்தால் வைட்டமின் வாட்டர் தயார்!!!!! இதனுடன் சாதா குழாய் நீரால் சந்தையில் போட்டியிட முடியுமா?

வைட்டமின், மினரல்களுக்குப் பயன்படும் மூலப் பொருட்கள் பலவும் உடலால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கெமிக்கல் குப்பைகள். அவை பெயரளவுக்குத் தான் வைட்டமின், மினரல்கள். உதாரணமாக நார்ச் சத்து (பைபர்) மாத்திரைகளை எடுத்துக்கொள்வோம். இன்றைய நாகரிக சமூகத்தின் காலரி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வெள்ளை அரிசி, மைதாவில் எல்லாம் நார்ச் சத்து இல்லை. காய்கறிகளை நாம் உண்பதும் இல்லை. அதனால் மருத்துவர்களிடம் போனால் அவர்கள் "நார்ச்சத்து மாத்திரை சாப்பிடு" எனச் சொல்லி பெனிபைபர் மாதிரி குப்பைகளை உண்ணச் சொல்லிப் பரிந்துரைப்பார்கள். இப்போது சில ரொட்டி கம்பனிகள் "எங்கள் ரொட்டியில் இரு மடங்கு அதிக நார்ச் சத்து உள்ளது" எனச் சொல்லி விளம்பரம் செய்து வருகின்றன.

பெனிபைபரிலும், இம்மாதிரி ரொட்டிகளிலும், சீரியல்களிலும் செயற்கையாகச் சேர்க்கப்படும் நார்ச் சத்து செல்லுலோஸ் எனும் வகை நார்ச் சத்து. செல்லுலோஸ் எளிதில் நீரில் கரைந்து விடும் என்பதால் இது நார்ச் சத்தாகப் பயன்படுகிறது. அத்துடன் கலர்களையும் கெமிக்கல்களையும் செயற்கை இனிப்புகளையும் கலந்தால் பைபர் சப்ளிமெண்ட் ரெடி. ஆனால் செல்லுலோஸ் எதில் இருந்து எடுக்கப்படுகிறது? பஞ்சு, மரப் பட்டை முதாலானவற்றில் இருந்து. காய்கறிகளிலும் பழங்களிலும் இருந்தும் செல்லுலோஸை எடுக்கலாம். ஆனால் அதிக விலை காரணமாகக் கம்பனிகள் அத்தவற்றைச் செய்வது கிடையாது. நீங்கள் உண்ணும் பைபர் சப்ளிமெண்ட் மரப் பட்டையில் இருந்தும், பஞ்சில் இருந்தும் வந்திருக்கும் வாய்ப்பே அதிகம்.

இப்பேர்ப்பட்ட செல்லுலோஸை ஜீரணம் செய்யும் சக்தி படைத்த ஒரே உயிரினம் மாடுகளும் எருமைகளும் மட்டுமே. அவற்றுக்கு ஆறு வயிறுகள் இருப்பதால் செல்லுலோஸை ஆறு வயிறுகளிலும், மறுபடி மீண்டும் வாய்க்கும் கொண்டு வந்து மணிக்கணக்கில் அசைபோட்டும் கஷ்டப்பட்டு அவற்றால் ஜீரணம் செய்ய இயலும். ஆனால் செல்லுலோஸை ஜீரணம் செய்யும் சக்தி மனிதனுக்கு மட்டுமல்ல வேறு எந்த உயிர்னத்துக்கும் கிடையாது. எப்.டி.ஏ (அமெரிக்க உணவுப் பொருள் கழகம்) வலைத் தளத் தகவல்படி "மனிதர்கள் உண்ணும் 100% செல்லுலோஸும் அவர்களது மலம் வழியாக அடுத்த நாலு நாட்களில் வெளிவந்துவிடும். அவை உடலால் கிரகிக்கப்படுவது இல்லை..."

இப்படி வயிற்றின் வழியாக முழுமையாக வெளிவந்தாலும் செல்லுலோஸ் மலத்தின் அளவைக் கூட்டுவதால் நிறைய மலம் கழிகிறது என வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பைபர் சப்ளிமெண்ட் விற்பனையும் தூள் பறக்கும்!!!!

வைட்டமின் மாத்திரைகளின் தன்மை என்ன, வைட்டமின்களின் தன்மை என்ன என்பதும் பொது மக்களுக்குப் புரிவது கிடையாது. உதாரணமாக வைட்டமின் டி மாத்திரை உட்கொள்ளும் பலரும் அதில் என்ன வகை வைட்டமின் உண்டு என்பதைப் பார்ப்பது கிடையாது. வைட்டமின் டியில் இருவகை உண்டு டி2, டி3.

சூரிய ஒளியில் நின்று உடலுக்குக் கிடைப்பது டி3. இதுவே பல்லுக்கும், எலும்புகளுக்கும் நன்மையளிப்பது. டி2 என்பது தாவரங்களில் கிடைக்கும் பலனற்ற வைட்டமின். அதை உண்பதால் எந்த நன்மையும் கிடையாது. ஆனால் இதன் விலை குறைவு என்பதால் கம்பனிகள் டி2வைத் தான் மாத்திரை வடிவில் விற்கிறார்கள். கடைக்கு போய் வைட்டமின் டி வேண்டும் என கேட்டு வாங்கும் பலரும் அதில் இருப்பது டி2 ஆ இல்லை டி3ஆ என்பதைப் பார்ப்பது கிடையாது. விளைவாக வைட்டமின் டி சாப்பிட்டும் ஏன் எனக்கு பல், எலும்புகளில் சிக்கல் வருகிறது எனக் குழம்பிவிடுவார்கள்.

பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளும் அதுபோல ஆபத்தானவையே. அமெரிக்கச் சுகாதாரத் துறை வலைத் தளம், "ஒரு வருடம் தொடர்ந்து பி6 வைட்டமின் மாத்திரை உண்டு வந்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம்" என எச்சரிக்கை செய்கிறது. அத்துடன் இந்த மாத்திரை ஆஸ்துமா, டிபி மருந்துகளுடன் கடுமையாக வேதிவினை புரிந்து அவர்களின் நரம்பு செல்களைக் கடுமையாகத் தாக்கி முடமாக்கி விடும். இயற்கையாக உணவின் மூலம் நீங்கள் பி6 வைட்டமினை எத்தனை அதிக அளவில் உட்கொண்டாலும் இந்தச் சிக்கல் கிடையாது. கெமிக்கல் குப்பைகளுக்கே உடல் இந்த அளவு கடுமையான பின்விளைவுகளைக் காட்டுகிறது.

வைட்டமின் ஈ, இன்னொரு முக்கிய வைட்டமின். ஆண்மையை அளிக்கும் சக்தி வாய்ந்தது, பெண்களுக்குக் கருப் பிறப்பை உறுதி செய்யும் வைட்டமின். தோல், முடி ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் நல்லது. ஆனால் இத்தனை நன்மைகளை அளிக்கும் இந்த வைட்டமினை சப்ளிமெண்டாக அதிக அளவில் உட்கொள்வது மரண விகிதத்தை அதிகரிக்கும் என மேயோ கிளினிக் எச்சரிக்கை செய்கிறது. மேயோ கிளினிக், அமெரிக்காவின் நம்பர் ஒன் மருத்துவமனையாகும். இதே வைட்டமின் ஈயை இயற்கையான உணவுகள் மூலம் எத்தனை அதிக அளவில் உட்கொண்டாலும் எக்கெடுதலும் உடலுக்குக் கிடையாது.

வைட்டமின் ஓவர்டோஸ் ஆகும் வாய்ப்புகள் எத்தனை எனக் கேட்கலாம். இன்றைய உணவுகள் பலவற்றிலும் செயற்கையாக வைட்டமின்கள் சேர்க்கப்படுகின்றன. காம்ப்ளான், ஹார்லிக்ஸ் குடித்து காலையில் சீரியல் சாப்பிட்டு ஒரே ஒரு மல்டி வைட்டமின் மாத்திரை சாப்பிட்டால் ஓவர்டோஸ் ஆகிவிடும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் எனச் சொல்லி, உடலைக் கெடுத்துக்கொள்வதே இவற்றின் பலன். கம்பனிகளும் விற்பனையைத் தவிர எதையும் கண்டுகொள்வதில்லை என்பதும் வாடிக்கையாளரும் சுவையைத் தவிர உணவில் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்பதும் இந்த நிலைக்குக் காரணம் ஆகிவிடுகிறது

வெப்துனியா
உசாத்துணை:
http://ods.od.nih.gov/factsheets/VitaminB6-Consumer/#h8
http://www.mayoclinic.org/drugs-supplements/vitamin-e/safety/hrb-20060476
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum