ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தநாள்' கொண்டாடி, எந்த விதத்தில் உயர்ந்து விட்டோம்?

2 posters

Go down

பிறந்தநாள்' கொண்டாடி, எந்த விதத்தில் உயர்ந்து விட்டோம்? Empty பிறந்தநாள்' கொண்டாடி, எந்த விதத்தில் உயர்ந்து விட்டோம்?

Post by paari Tue Nov 03, 2009 6:22 pm

பிறந்தநாள்' கொண்டாடி, எந்த விதத்தில் உயர்ந்து விட்டோம்?


இதோ இன்னொரு விடியல், இன்னொரு காலைப்பொழுது, என் வாழ்க்கையின் குத்தகை மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இஹழ்ல்ங்க்ண்ங்ம் என்பார்கள் லத்தீன் மொழியில். இதன் பொருளாவது, இன்றைய தினத்தைக் கெட்டியாக (உடும்புப் பிடியாக) பிடித்துக்கொள் என்பதாகும்.


""உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு''


என்றார் வள்ளுவர். அப்படித்தான் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறக்கிறோம். இதில் வருடம் ஒருமுறை பிறந்தநாள் கொண்டாட என்ன இருக்கிறது? இன்னும் அடுத்த சில நிமிடங்களில் நம் வாழ்க்கையில் என்ன நிகழப்போகிறது என்பதைக் கூட நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாத நிலை.


""என் ஆயுள் காலம் எவ்வளவு எஞ்சியுள்ளது எனத் தெரியாத நிலையில் இன்று நான் உயிருடன் இருப்பதே மாபெரும் பரிசு. பணமோ, புகழோ வேண்டாம். இவை எல்லாமும் மற்றும் எதுவுமே உயிர்க்கு சமமில்லை'' என்கிறார் வள்ளலார் பெருமான்.


இதையெல்லாம் ஏன் இங்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். இன்றைக்கு பலர் பல லட்சங்களையும் கோடிகளையும் வாரி இறைத்து தங்களுக்குத் தாங்களே புகழ் தேடிக்கொள்கின்றனர். அப்படித் தேடிக்கொள்ளும் புகழில் ஒன்றுதான் வருடத்துக்கு ஒரு முறை கொண்டாடும் "பிறந்தநாள்' விழா.


மேல்தட்டு மக்கள் கோடிகளையும் லட்சங்களையும் "பிறந்தநாள்' என்ற பெயரில் விரயம் செய்கிறார்கள் என்றால், நடுத்தர மக்கள் ஆயிரங்களை விரயம் செய்கின்றனர். ஆனால் கிராமப் புறங்களில் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் வர்க்கத்தினரிடம் சென்று, ""உங்கள் பிறந்த தினம் எப்போது?'' என்று கேட்டால், ""யாருக்குத் தெரியும்? என்னோட ஆத்தா அதைச் சொல்லாமலேயே போயிட்டா'' என்று அப்பாவித்தனமாகச் சொல்வதை இன்றும் கேட்க முடிகிறது.


இப்படி தன்னுடைய பிறந்த நாள், நட்சத்திரம், மாதம், வருடம் கூடத் தெரியாமல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் அவர்களை விட நாம் "பிறந்தநாள்' கொண்டாடி, எந்த விதத்தில் உயர்ந்து விட்டோம் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.


ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர், வள்ளுவர், புத்தர், கம்பர், பாரதி இப்படிப் பல மேதைகளும் ஞானிகளும் அறிஞர்களும் தங்களது பிறந்தநாளைக் கொண்டாடியா புகழ் பெற்றார்கள்? அவர்கள் பெற்ற புகழ் இறவாப் புகழல்லவா? தம்முடைய பிறந்தநாளை பிறர் கொண்டாட வாழ்ந்தவரே, வாழ்பவரே உண்மையில் இறவாப் புகழின் உச்சியில் வைத்து எண்ணப்படுபவர். தனக்குத் தானே பிறந்தநாள் கொண்டாடும் அவலம் மேலை நாடுகளைப் போல இப்போது தமிழரின் பண்பாடு, கலாசாரம், மரபு கூறும் தமிழகத்திலும் தலைவிரித்து ஆடுகிறது.


இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், தீபத்தை ஏற்றி வைத்து, வாயால் ஊதி அணைத்து, ஒளிமயமான பிறந்த தினத்தை இருள்மயமாக்கி சூன்யமாக்குவது.


பிறந்த நாளன்று சிலர் கோயிலுக்குச் சென்று தங்களது பெயரில் அர்ச்சனை செய்கின்றனர், சிலர் ரத்த தானம் செய்கின்றனர், வேறு சிலர் அன்னதானம் செய்கின்றனர். இவைகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், பிறந்தநாள் கொண்டாடுவதுதான் நாகரிகம் என்பதுபோல, தங்களது இல்லங்களில் கேக் வைத்து தீபத்தை ஏற்றி, வாயால் ஊதி அணைத்துக் கொண்டாடும் அபத்தமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அன்றைக்கு ஒரு நாள் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். நல்லதை நினைத்து, நல்லதைச் செய்பவருக்கு எல்லா நாளும் மகிழ்வான நாள்தான்.
ஈனப் பிறவியான எலி ஒன்று, அறியாமல் ஒரு தீபத்தை தனது மூக்கினால் தூண்டிவிட்டதன் பயனாய், அது அடுத்த பிறவியில் மிகப்பெரிய அரசனான மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தது என்பதை புராணங்கள் கூறுகின்றன.


""ஒரு தீபத்தை ஏற்றினால் எத்தனை புண்ணியமோ, அதுபோல ஒரு தீபத்தை, அதுவும் வாயால் ஊதி அணைக்க ஏழு தலைமுறைக்குப் பாவம் தொடரும்'' என்றும் வேதங்கள் கூறுகின்றன. அப்படி விளக்கை அமர்த்த வேண்டுமானால், பசும்பால் கொண்டோ, பூவைக் கொண்டோதான் அமர்த்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளன.


பிறந்த தினம் எதற்காகக் கொண்டாட வேண்டும்? அது ஒரு தாயின் மறுபிறவிக்கான வேதனை இல்லையா? அவள் ஒரு மகவைப் பெற்றெடுக்க மறுபிறவிஎடுத்த நாளல்லவா? அது அவள் பிறந்த நாள்தானே. அன்று அவளை வணங்கி அவள் ஆசியைப் பெற்று அவளைத் தானே போற்ற வேண்டும்? இதைவிடுத்து நாமே நமக்குப் பிறந்தநாள் கொண்டாடிக் கொள்கிறோமே இது என்ன அபத்தம்?


நம்மைப் பெற்றெடுப்பதற்காக தாய் அனுபவித்த மரண வேதனையை இப்படியா மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது? தாய் நமக்காக மறுபிறவி எடுத்த நாளில் பல தீபங்களை அணைத்து கொண்டாடி மகிழ்வது எத்தனை பெரிய கொடுமை.


அக்னியை இவ்விதம் வாயினால் ஊதி அணைப்பது முக்கியமான மரணச் சடங்குகளில் ஒன்றாகும். மன நிறைவுடன் கொண்டாட வேண்டிய பிறந்த நாளில் மரணச் சடங்கையா செய்வது?


இந்தப் பிறவி, தாய்க்கு மட்டுமல்ல; இனி அடுத்தடுத் [த பிறவி வாய்த்தால் அந்தத் தாய்க்கும் நான் மரண வேதனையைத் தந்துவிடக்கூடாது; அதனால் எனக்குப் பிறவியே வேண்டாம் என்கிறார் பட்டினத்தடிகள் ஒரு பாடலில்.

""மாதா உடல் சலித்தாள்; வல்வினையேன் கால் சலித்தேன்;
வேதாவும் கை சலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னம்ஓர் அன்னைக்
கருப்பைஊர் வாராமல் கா''

நான் பிறந்த நாளே கொண்டாட மாட்டேன்; எனக்குப் பிறந்தநாள் யாரும் கொண்டாட வேண்டாம் என்று சொல்லியும் எழுதியும் மேடையில் முழங்கியும் வருபவர்கள்தான் ஆண்டு தவறாமல் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர் என்ற வேதனையைவிட, தீபத்தை அணைத்துக் கொண்டாடுகின்றனர் என்பது வேதனையிலும் வேதனை.
avatar
paari
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Back to top Go down

பிறந்தநாள்' கொண்டாடி, எந்த விதத்தில் உயர்ந்து விட்டோம்? Empty Re: பிறந்தநாள்' கொண்டாடி, எந்த விதத்தில் உயர்ந்து விட்டோம்?

Post by kirupairajah Tue Nov 03, 2009 6:38 pm

சிந்திக்க தூண்டும் தகவல், அத்துடன் வித்தியாசமான ஓர் பதிவு நன்றி பாரி!


பிறந்தநாள்' கொண்டாடி, எந்த விதத்தில் உயர்ந்து விட்டோம்? Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum