ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

2 posters

Go down

மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் :  கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Empty மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Tue Jun 17, 2014 8:55 am

மின்னலில் விளக்கேற்றி
நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
மீனாள் பதிப்பகம், 28-ஜி, பிளாக் தணிகாசலம் நகர், சென்னை-110. விலை: ரூ.25
*****
நூலின் அட்டைப்படம் மிக நன்று. தலைப்புக்கு ஏற்ற வண்ணப்படம். இனிய நண்பர் கே.ஜி. ராஜேந்திர பாபு அவர்கள் சில ஆண்டுகள் மதுரையில் வாழ்ந்தவர். தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றங்களில் முழங்கியவர். தற்போது சென்னையில் வாழ்கிறார். வங்கிப் பணியில் இருந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர். உரத்த சிந்தனையாளர். அன்பாகப் பழகிடும் நல்ல உள்ளம் பெற்றவர்.

இந்த நூலில் திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் அணிந்துரை தோரண வாயிலாக உள்ளது. திரு. எம். பாலகிருஷ்ணன், புதுகைத் தென்றல் ஆசிரியர் புதுகை மு. தருமராசன், கவிதை உறவு, ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ஆகியோரின் அணிந்துரை மிக நன்று.

நூலின் முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

கடல்.

கடல் மனிதனின் மனத்தைப் போலவே
அலை பாய்கிறது.
அதனால் தானே
அது இது வரை
ஏறவில்லை கரை!

கடலை இவர் பார்க்கும் பார்வை வித்தியாசமானது.

உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் விவசாயிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வருகின்றனர். அதனை உணர்த்தும் கவிதை மிக நுட்பமானது.

முடிவு

உழுதான் உழுதான் உழுதான் முடிவிலே
அழுதான் அழுதான் அழுதான்.

பல்வேறு பாடுபொருள்களில் கவிதை வடித்து உள்ளார். எதையும் உற்று நோக்கும் ஆற்றல் மிக்கவர் நூலாசிரியர்.

பொறுப்பில்லாமல், ஆரோக்கியம் பற்றிய அக்கறை இல்லாமல் சிகரெட் குடிக்கும் இளைஞர்கள் பற்றிய கவிதை நன்று.

சிகரெட்

வீட்டில் அடுப்பு எரியவில்லை! ஆனால்-
அவன் உதட்டில் சிகரெட் எரிகிறது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பாணியில் விழிப்புணர்வு விதைக்கும் கவிதை

முன்னேற

பஞ்சாங்கத்தை அப்புறப்படுத்து
பஞ்ச அங்கத்தை பயன்படுத்து

உழைக்காமலே ராசி பலன், சோதிடம் பார்க்கும் சோம்பேறிகளின் கவிதை மிக நன்று. ஒரு படைப்பாளியின் கடமை இது தான். செவ்வன செய்துள்ளார். உழைத்தால் உயரலாம். இந்த உண்மை புரிந்தால் வீடும் நாடும் வளம் பெறும். அதனை உணர்த்திடும் கவிதை.

உழைப்பு

“உழைப்பு சூரியன் போல் உன்னை மட்டுமல்ல
ஊரையே ஒளிமயமாக்கும்”

நூலின் தலைப்பில் உள்ள கவிதையின் கற்பனை மிக நன்று. கவிதைக்கு கற்பனை அழகு தான்.

மின்னலில் விளக்கேற்றி

மின்னலில் – கவிதை விளக்கேற்றி
சமூகச் சன்னலில் வைத்திடுவோம்
பொன்னொளி வீசட்டும்.

பாட்டரசன் மகாகவி பாரதி பற்றிய கவிதை மிக நன்று. பாரதி பற்றி எத்தனையோ கவிதைகள் வந்தாலும் இந்தக்கவிதை தனித்துவம் பெற்ற கவிதையாக ஒளிர்கின்றது.

தமிழைக் கொதிப்பாக்கித் தந்தவன்

வெள்ளை அரசு – அவனை
விரட்டியது ; வேட்டையாடியது
அதனால் அவன்
ஓடிக்கொண்டே பாடினான்
பாடிக்கொண்டே ஓடினான்
மண் விடுதலைக் கனலை ஊட்டினான்
பெண் விடுதலைத் தீபம் ஏற்றினான்.

இரும்பு கூட சும்மா இருந்தால் துருப்பிடித்து விடும். மனிதனும் உழைக்காமல் சும்மா இருந்தால் அவனை அவன் அம்மா கூட மதிக்க மாட்டாள் என்பது உண்மை. உழைப்பின் மேன்மை உணர்த்தும் கவிதை மிக நன்று.

உழைத்தால் தான் கிடைக்கும்

இரும்புக்குள் யந்திரம் உண்டு
செய்தால் தான் கிடைக்கும்
நூலுக்குள் ஆடையுண்டு
நெய்தால் தான் கிடைக்கும்
மூங்கிலுக்கும் ராகமுண்டு
இசைத்தால் தான் கிடைக்கும்.

இதழ்களில் எழுதிய கவிதைகள், கவியரங்கில் வாசித்த கவிதைகள் என அனைத்தையும் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள். பாராட்டுக்கள். சில வருடங்களுக்கு முன் தந்த இந்த நூலை இன்றுதான் வாசிக்க நேர்ந்தது. வாசித்தவுடன் விமர்சனம் பதிவு செய்துள்ளேன். இவ்வளவு நாள் படிக்காமல் இருந்து விட்டோமே என்று வருத்தப்பட்டேன். நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.

*****
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் :  கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Empty Re: மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by ayyasamy ram Tue Jun 17, 2014 10:20 pm


மூங்கிலுக்கும் ராகமுண்டு
இசைத்தால் தான் கிடைக்கும்.
-

 மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் :  கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி 3838410834  மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் :  கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் :  கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Empty Re: மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Wed Jun 18, 2014 8:14 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் :  கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Empty Re: மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அச்சம் தவிர் ! நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» சூரியக் கீற்றுகள் (கவிதைகள்) நூலாசிரியர் : முனைவர் கவிஞர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum