ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது

3 posters

Go down

பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Empty பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது

Post by சாமி Sun May 04, 2014 7:15 pm

மதுரை தமிழோடு பிற மொழியைக் கலந்து பேசுவதே, மொழிச் சிதைவுக்குக் காரணமாக இருக்கிறது என்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறினார்.

உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் வளர்ச்சியில் முன்னேற்றம் என்ற கருத்தரங்கில், மொழிச் சிதைவு என்ற தலைப்பில் அவர் பேசியது:

பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இரு வகையாக தமிழ் பயன்பாட்டில் இருக்கிறது. தூய தமிழைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவது எழுத்துத் தமிழைத்தான். அதற்காக பேசும்போது, தூய தமிழ் இருக்க வேண்டும் என்பதல்ல. பேசுவதற்கு, வழக்கத்தில் இருக்கும் சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், பிற மொழிக் கலப்புதான் மொழியின் சிதைவுக்குக் காரணமாக இருக்கிறது.

ஆங்கிலச் சொற்கள் கலப்பு இருப்பது தெரியாமலேயே, நாம் தமிழில் பேசுவதாகக் கருதுகிறோம். மொழியின் வளர்ச்சிக்கு இது உகந்தது அல்ல. மொழியைச் சிதைவில் இருந்து காப்பது என்பது ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் துவங்க வேண்டும். பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களில் தமிழ் பாடத்தையும் சேர்த்தால், தமிழ் இன்னும் முக்கியத்துவம் பெறும் என்றார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பதிவாளர் மு.முத்துவேல் (சட்டத் தமிழ்): சட்டப் படிப்பை ஆங்கிலத்தில் படித்துவிட்டு, தமிழில் வழக்காடுவது சாத்தியமில்லை என்பதால் உயர் நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக அனுமதிப்பதில் தடை இருந்து வருகிறது. தமிழில் சட்ட நூல்கள் எழுதுவதற்காக 2002 இல் ஒரு குழு அமைக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட சட்ட நூல்கள் எழுதப்பட்டன. அந்த நூல்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 1968-லேயே சட்ட சொல் அகராதி தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. நமது அரசியல் அமைப்புச் சட்டம், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சட்டத் தமிழ் வளர்ச்சிக்கு இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. சட்டத் துறையின் கீழ் உள்ள மொழி சார்ந்த அமைப்புகளை ஒரே குடையின்கீழ் கொண்டு வர வேண்டும்.

அறிவியல் அறிஞர் நெல்லை சு.முத்து (அறிவியல் தமிழ்): அறிவியல் துறை வியத்தகு முன்னேற்றங்களை அடைந்து கொண்டிருக்கிறது. அறிவியலின் வளர்ச்சி புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றைச் சார்ந்தது. புதிய தொழில்நுட்பங்கள் சமூகத்தைச் சென்றடைவதில் அறிவியல் தமிழின் பங்களிப்பு இன்றியமையாதது. அறிவியல் தமிழை எழுதுவதிலும், படைப்பதிலும் மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு, உருபெயர்ப்பு ஆகிய உத்திகளைப் பின்பற்றுவது அவசியம்.

கவிஞர் தங்க காமராசு (ஊடகத் தமிழ்): காகித ஊடகம், காட்சி ஊடகம், கணினி ஊடகம் என மூன்று வகைகளில் ஊடகத் தமிழின் வளர்ச்சி அமைந்திருக்கிறது. ஊடகங்களில் ஆங்கிலக் கலப்பு என்பது சாதாரணமாகி விட்டது. அது தவிர்க்கப்பட வேண்டும். கணினி ஊடகம் பெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது. வலைப்பூக்கள் மூலமாக தமிழ் ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.

சென்னை பல்கலை. ஓய்வுபெற்ற பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் (கணினித் தமிழ்): அச்சு ஊடக மொழித் தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக, கணினியிலும் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்படுகின்றன. தமிழ் எழுத்துரு, விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டதன் காரணமாக இப்போது இணையதளத்தில் தமிழ் மலர்ந்து நிற்கிறது. இணையதளங்கள், வலைப்பூக்கள், விக்கிபீடியா, முகநூல் என பல நிலைகளில் தமிழைக் காண முடிகிறது என்றார்.

ஏன் இந்த அவசரம்?
உலகத் தமிழ்ச் சங்கம் நடத்திய கருத்தரங்கம், துவக்க விழா மற்றும் கருத்தரங்க அமர்வு என இரு பகுதிகளாக நடத்தப்பட்டது. துவக்க விழாவில் தமிழக அமைச்சர்கள் வைகைச் செல்வன், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் பங்கேற்றனர். துவக்க விழா முடிவதற்கே மதிய உணவு நேரம் வந்துவிட்டது.

இதன் பிறகு கருத்தரங்க அமர்வை விரைவில் முடிப்பதிலேயே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறியாக இருந்தனர். உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்படும் முதல் கருத்தரங்கம் என்பதால் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இருந்து தமிழாசிரியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். முக்கியத் தலைப்புகளில் பேசுவதற்கு கருத்தாளர்களும் வந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு குறுகிய நேரமே வழங்கப்பட்டதால், சொல்ல வந்த கருத்துகளை அவர்களால் முழுமையாகச் சொல்ல முடியவில்லை.

கடைசியாக உரையாற்ற கருத்தாளர் வந்தபோது, உணவு இடைவேளைக்குப் பிறகு தொடரலாமா, இப்போதே தொடர்ந்து நடத்தலாமா எனக் கேட்கப்பட்டதால் கருத்தரங்க நிகழ்வில் சலசலப்பு ஏற்பட்டது.

பள்ளி, கல்லூரியில் இருந்து தமிழாசிரியர்கள் வந்திருக்கிறோம், கருத்தரங்கை அவசர கதியில் நடத்துவது ஏன் என கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் கேள்வி எழுப்பினர். துவக்க விழாவை முதல் அமர்வாகவும் மதிய உணவுக்குப் பிறகு கருத்தரங்க அமர்வையும் நடத்தியிருந்தால், நோக்கம் முழுமையாக நிறைவேறி இருக்குமே என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர். பின்னர், மதிய உணவுக்குப் பிறகு கடைசி பேச்சாளரின் கருத்துரை நடந்தது. (தினமணி)


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Empty Re: பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது

Post by சிவா Mon May 05, 2014 6:20 am

அமைசர்கள் அம்மாவிற்கு பணிவிடை செய்ய செல்ல வேண்டியயிருந்திருக்கும், அதனால்தான் அவசரநிலையில் முடித்திருப்பார்கள்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Empty Re: பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது

Post by கிருஷ்ணா Mon May 05, 2014 5:29 pm

உண்மை. பிறமொழிக் கலப்பு இன்றி நாம் பேசினாலே தமிழ் அதன் சுவை கெடாமல் இருக்கும்.


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Empty Re: பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum