ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்துக் கைமணம் – கம்பு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கிராமத்துக் கைமணம் – கம்பு Empty கிராமத்துக் கைமணம் – கம்பு

Post by சாமி Sat May 03, 2014 11:05 pm

கிராமத்துக் கைமணம் – கம்பு Nv6KdG1BSNOwHyd0Mni2+kambu

கம்பு என்றாலே அதனைக்கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிடவேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. கஞ்சியாக மட்டுமல்ல; சாதமாக அவலாக பொரியாக...எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம்.

> கம்பு ரொட்டி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
> கம்பில் உள்ள லோகிளைசிமிக் தன்மையாலும், அதில் ஏற்கனவே உள்ள கூடுதல் நார்ச்சத்தினாலும் காலை/மதிய உணவில் இதை எடுக்கும்போது பட்டைதீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும், கம்பஞ்சோறும் பிரச்சினையைத்தராது.
> அரிசியைப்போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள்பகுதியில் உள்ள அத்தனை நல்ல விசயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும்.
> உடலின் செல்கள் பாதுகாப்புக்கு கம்பு உதவும்
> கொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கம்பு Empty Re: கிராமத்துக் கைமணம் – கம்பு

Post by சிவா Sat May 03, 2014 11:08 pm

கேழ்வரகுக்குப் பிறகு கம்பு பற்றிய சமையல் குறிப்புகள்! அருமை திரு சாமி!


கிராமத்துக் கைமணம் – கம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கம்பு Empty Re: கிராமத்துக் கைமணம் – கம்பு

Post by சாமி Sun May 04, 2014 4:12 pm

1. கம்பு பொங்கல்

கிராமத்துக் கைமணம் – கம்பு Jbh10fR8R7elC8bD6w9V+kambupongal

தேவையான பொருட்கள்:-
கம்பு - 1/2 கிலோ
பாசிபருப்பு 100 கிராம்
மிளகு , சீரகம், உப்பு தேவையான அளவு
இஞ்சி துருவியது சிறிது
நெய் சிறிதளவு
காய்ந்த மிளகாய் 2

செய்முறை:-
> கம்பை தண்ணீர் தெளித்து, பிசிறி, மிக்சியில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.
> உமி தனியாக வரும், வராவிட்டால் இன்னொரு முறை போட்டு எடுத்து, உமியை புடைத்து எடுக்கவும்.
> புடைத்த கம்பை மிக்ஸியில் போட்டு, குருணையும் மாவுமாக இருப்பது போல் அரைத்து எடுக்கவும்.
> பாசிப்பருப்பை ஊற வைக்கவும்
> குக்கரில் நெய்விட்டு மிளகு , சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து துருவிய இஞ்சி சேர்த்து வதக்கி கம்பு மற்றும் பாசிப்பயறு சேர்த்து 1 டமளர் கம்புக்கு 2 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சிறிது சேர்த்து குக்கரை மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.
> சுவையான கம்பு பொங்கல் தயார் .
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கம்பு Empty Re: கிராமத்துக் கைமணம் – கம்பு

Post by மாணிக்கம் நடேசன் Mon May 05, 2014 8:04 am

கம்பு பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கம்பு Empty Re: கிராமத்துக் கைமணம் – கம்பு

Post by கிருஷ்ணா Mon May 05, 2014 5:33 pm

கிராமத்துக் கைமணம் – கம்பு 3838410834 கிராமத்துக் கைமணம் – கம்பு 103459460 கிராமத்துக் கைமணம் – கம்பு 1571444738 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கம்பு Empty Re: கிராமத்துக் கைமணம் – கம்பு

Post by சாமி Tue May 06, 2014 9:21 pm

2. கம்பு அடை

கிராமத்துக் கைமணம் – கம்பு TfD8fFlbS9Otu2vCIwPW+kambuadai

தேவையான பொருட்கள்:-
கம்பு - 1 கப்,
பச்சரிசி - 1/2 கப்,
துவரம் பருப்பு - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 1/4 கப்,
உளுத்தம் பருப்பு - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 8,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:-
* அரிசி, கம்பை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, தனித்தனியாக கரகரப்பாக, கெட்டியாக அரைக்கவும்.
* பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, கனமான அடைகளாக தட்டி, நடுவில் ஓட்டை போடவும்.
* நடுவிலும் சுற்றிலும் லேசாக எண்ணெய் விட்டு, திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும் (அடுப்பை சிறு தீயில் [சிம்மில்] வைக்க வேண்டும்).
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கம்பு Empty Re: கிராமத்துக் கைமணம் – கம்பு

Post by krishnaamma Wed May 07, 2014 7:39 pm

நல்லா இருக்கு உங்களின் இரண்டு குறிப்புகளும், நான் கம்புமாவில் ரொட்டி தான் செய்துள்ளேன். கம்பு பொங்கல் , அடை செய்ததில்லை. செய்து பார்க்கிறேன் புன்னகை நன்றி சாமி !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கம்பு Empty Re: கிராமத்துக் கைமணம் – கம்பு

Post by சாமி Thu May 08, 2014 3:32 pm

3. இனிப்பு கம்பு அடை

கிராமத்துக் கைமணம் – கம்பு TgbQzxKMRQGIB9EGXlOK+inippukambuadai

தேவையான பொருட்கள்:-
கம்பு மாவு - ஒரு கப்
வெல்லம் (துருவியது) - 1/2 ல் ‍இருந்து 3/4 கப் வ‌ரை
தேங்காய் துண்டுகள் -‍ 1/3 கப்
ஏலக்காய் - 2
உப்பு ‍ - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய்/நெய் -‍ 2 மேசைக்கரண்டி

செய்முறை:-
வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து, கரைத்துக்கொண்டு அதனுடன் கம்பு மாவு, பொடித்த ஏலக்காய்த்தூள், சிட்டிகை உப்பு, தேங்காய்த்துண்டுகள் எல்லாவற்றையும் கலந்து சப்பாத்தி மாவுப் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த இந்த மாவை ஒரு ஈரத்துணியால் மூடி, அரை மணி நேரம் விடவும். அதன்பிறகு, மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

பின்னர், ஒவ்வொரு உருண்டையையும் உள்ளங்கையிலேயோ (அல்லது) எண்ணெய் தடவிய நெகிழியிலோ (ப்ளாஸ்டிக் கவர்) மெல்லிதாக தட்டி நான்கு, ஐந்தாக தவாவில் போட்டு, சுற்றிலும் சிறிது நெய்/நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்.

ஒரு பக்கம் வெந்ததும், அடைகளை மெதுவாக‌ திருப்பிவிட்டு மேலும் ஒரு சில நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

மாலை நேர‌த்தில் சாப்பிட‌, சுவையான‌, அதே ச‌ம‌ய‌ம் ஆரோக்கிய‌மான‌ உணவாக‌ இருக்கும் இந்த இனிப்பு‌ கம்பு அடை.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கம்பு Empty Re: கிராமத்துக் கைமணம் – கம்பு

Post by சாமி Mon May 12, 2014 3:51 pm

4. கம்பு இட்லி

கிராமத்துக் கைமணம் – கம்பு YatoqQDARm6qOALHHsu7+kambuidli

தேவையான பொருட்கள்:-
கம்பு - ஒரு கப்
பச்சரிசி - ஒரு கப்
உளுந்து - ஒரு கைப்பிடி
வெந்தயம் - சிறிது
உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை :-
உப்பு தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு வெட் கிரைண்டேரில் ஊற வைத்தவற்றை போட்டு அரைத்து எடுத்து உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
புளிக்க வைத்த மாவை மறுநாள் இட்லி தட்டில் ஊற்றி பானையில் வைத்து வேக வைக்கவும்.
நன்கு வேக வைத்து இறக்கவும். சுவையான, எளிதாக செய்யக்கூடிய கம்பு இட்லி ரெடி.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கம்பு Empty Re: கிராமத்துக் கைமணம் – கம்பு

Post by சிவா Thu Sep 18, 2014 1:52 am

கம்பு களி (அ) கம்பங்களி

தேவையானவை :

1. கம்பு மாவு - 1 கப்
2. உப்பு - சிறிதளவு

செய்முறை :

1. முதலில் கம்பு மாவுடன் உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும். சலித்த மாவுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு அதனை கைவிடாமல் கிளறி கொதிக்கவிடவும்.

2. பின் அந்தப் பாத்திரத்தை நீர் உள்ள குக்கரில் வைத்து மூன்று விசில் விடவும்.

சுவையான, சத்தான கம்பு களி தயார்.

சூடான கம்பு களியை, புளி அல்லது கீரை குழம்புடன் சாப்பிடலாம். இதனை பெரிய உருண்டைகளாக்கி தண்ணீரில் போட்டு வைத்து மோருடன் கலந்தும் சாப்பிடலாம்.


கிராமத்துக் கைமணம் – கம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கம்பு Empty Re: கிராமத்துக் கைமணம் – கம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum