ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! Empty மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

Post by சிவா Thu Apr 17, 2014 11:01 pm

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! 10176220_657440667662367_7455441579495612005_n

பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கம்பார் அருகில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடத்திலேயே, அந்த தருணத்திலேயே கர்ப்பாலும் அவருடன் பயணம் செய்த அவருடைய உதவியாளர் சி.மைக்கல் என்பவரும் உயிரிழந்தனர்.

கர்ப்பாலின் மகன் ராம் கர்ப்பால் மற்றும் கர்ப்பாலின் வாகன ஓட்டுநர் சி.செல்வம் ஆகிய இருவரும் அதே விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பினாங்குக்கு வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கர்ப்பால் சிங் சென்று கொண்டிருந்த வழியில் அவர் சென்ற அல்பார்ட் ரக வாகனம் ஒரு லாரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! Empty Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

Post by சிவா Thu Apr 17, 2014 11:03 pm

கர்ப்பால் மரணம்: பிரதமர் நஜிப் ஆழ்ந்த இரங்கல்!

இன்று அதிகாலை கார் விபத்தில் காலமான ஜசெக தலைவர் கர்ப்பால் சிங்கின் மறைவிற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

துருக்கி நாட்டிற்கு அரசாங்க பணி நிமித்தமாக சென்றுள்ள நஜிப், இந்த துயரச் செய்தியை அறிந்து தனது டிவிட்டர் தளத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

துருக்கி பிரதமரின் அழைப்பின் ஏற்று நஜிப் அந்நாட்டிற்கு சென்றுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விபத்தில் கர்பாலின் உதவியாளர் மைக்கல் என்பவரும் காலாமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! Empty Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

Post by சிவா Thu Apr 17, 2014 11:05 pm

விபத்திற்குள்ளான கர்ப்பால் சிங் சென்ற வாகனம்

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! ZlnhIX32Q6SKHafzL9bB+acci
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! Empty Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

Post by சிவா Thu Apr 17, 2014 11:09 pm

பினாங்கில் கர்பாலுக்கு அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்கு

பினாங்கு அரசு, காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங்குக்கு அதிகாரப்பூர்வமான முறையில் இறுதிச் சடங்குகளைச் செய்யும்.

கர்பாலின் நல்லுடல் பினாங்கு கொடியால் போர்த்தப்படும் என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

மாநில அரசுக் கட்டிடங்களில் பினாங்கு கொடிகள், ஞாயிற்றுக்கிழமைவரை அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.

கர்பாலின் உடல் பொதுமக்கள் இறுதி மரியாதை தெரிவிப்பதற்காக டேவான் ஸ்ரீ பினாங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9-இலிருந்து 11 வரை கிடத்தி வைக்கப்பட்டிருக்கும்.

பினாங்கு மாநில ஆட்சிக்குழு இன்று அவசரக் கூட்டம் நடத்தி இம்முடிவைச் செய்ததாக லிம் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! Empty Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

Post by சிவா Thu Apr 17, 2014 11:15 pm

கர்ப்பால் சிங்கின் மரணத்தில் மகிழ்ச்சியடையும் சுல்கிப்ளி நோர்டின்

கர்பால் சிங்கிற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் உட்பட பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வரும் வேளையில், பெர்காசா உதவித்தலைவர் சுல்கிப்ளி நோர்டின் அதை ஹுடுட் சட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாக கருதுவதாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

“ஹுடுட் சட்டத்தை அமலாக்கம் செய்வதற்குத் தடையாக இருந்த கர்பாலை அல்லாஹ் தன்னிடத்தில் அழைத்துக் கொண்டார்” என்று டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் கருத்து வெளியிட்ட ஒரு சில நிமிடங்களில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுதீன், “வாயை மூடு, உண்மையில், வாயை மூடிக் கொண்டு இரு” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தனது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, இன்னொரு டிவிட்டர் பதிவில், “என்னதான் இருந்தாலும், சட்டத்துறை சிறந்த மூத்த வழக்கறிஞரை இழந்துவிட்டது. கர்ப்பாலின் பெயர் வரலாற்றில் பதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! Empty Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

Post by சிவா Thu Apr 17, 2014 11:21 pm

கர்பால் சிங் மரணம் குறித்து செம்பருத்தி வெளியிட்டுள்ள கட்டுரை!

ஆண்டியை அரவணைத்தான், அரசனை எதிர்த்தான், தலைமை நீதிபதியை நீயா நானா என்று கேட்டான் மாட்டுக்காரப் பையன் கர்பால் சிங்! அந்த கர்ஜிக்கும் சிங்கத்தின் குரல் இன்று அதிகாலையில் அடங்கிவிட்டது.

“குற்றம் புரிந்தவன் கொற்றவனேயானாலும் குற்றம் குற்றமே” என்று படித்திருக்கிறோம்; பலர் பேசக் கேட்டிருக்கிறோம். ஆனால், இந்நாட்டில் குற்றம் புரிந்த கொற்றவன் மீது குற்றம் சுமத்திய ஒரே ஒரு வழக்குரைஞர் கர்பால் சிங் மட்டுமே. அதற்காக அக்கொற்றவன் அவருடைய நாய்களில் ஒன்றுக்கு கர்பால் சிங் என்று பெயரிட்டார். புண்ணியம் செய்த நாய்!

சட்டம், நீதி ஆகியவற்றுக்காக ஆட்சியாளர்களுடன் மோதிய ஒரே வழக்குரைஞர் கர்பால் சிங். பேராக் மாநில அரசியல் நெருக்கடியின் போது அம்மாநில ஆட்சியாளர் மேற்கொண்ட முறை குறித்து கேள்வி எழுப்பி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதற்காக அரசால் தொடரப்பட்ட வழக்கின் முதல் சுற்றில் அவர் வெற்றி பெற்றாலும், மேல்முறையீட்டின் வழி கர்பால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எதையும் எதிர்க்கும் சிங்கம் அதையும் எதிர்த்தது. கர்பால் சிங்கை உள்ளே தள்ளி அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்று கனவு கண்ட அரசியல்வாதிகள், சமயவாதிகள் போன்றோரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டார் கர்பால். இனி அவரை யாரும் பிடிக்க முடியாத அளவிற்கு அவர் ஏழை எளிய மலேசிய மக்களின் நிரந்தர ஹீரோ ஆகிவிட்டார்.

பினாங்கில் ஒரு சாதாரண மாடு வளர்த்து பிழைத்து வந்த குடும்பத்தில் பிறந்த கர்பால் சிங்கையில் சட்டம் பயின்று வழக்குரைஞரானார்.

மே 13, இனக் கலவரத்திற்குப் பின்னர், நாட்டில் பல்லின சுபிட்சத்தை உருவாக்குவதற்காக தோற்றுவிக்கப்பட்ட டிஎபியில் 1970 ஆம் ஆண்டில் இணைந்தார்.

1974 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கெடா மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், பினாங்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்த்டுக்கப்பட்ட கர்பால் 21 ஆண்டுகளுக்கு அப்பதவியில் தொடர்ந்தார். 1999 இல் அவர் தோல்வி கண்டாலும், 2004 ஆண்டிலிருந்து இன்று வரையில் அவர் புக்கிட் குளுகுர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

கர்பாலின் சட்ட மற்றும் நாடாளுமன்ற வாழ்க்கை சூறாவளி நிறைந்தது. அம்மன்றங்களின் உறுப்பினர் என்ற முறையில் தமது உரிமையை நிலைநிறுத்துவதில் அவர் விடாப்பிடி மன்னனாக இருந்தார்.

karpal2பினாங்கு மாநில சட்டமன்ற தலைவர், கர்பாலை அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பித்து அவரை வெளியேற்ற போலீசாரை அழைத்தார். அவையினுள் நுழைந்த போலீசாரிடம், “Don’t touch me. You have no business to be in this House” என்று கர்பால் முழங்கியதைக் கேட்டு போலீசார் திகைத்து நின்றனர். கர்பால் தாமாகவே வெளியேறினார். கர்பாலை வெளியேற உத்தரவிடுவது, அவரை நாடாளுமன்ற அவையிலிருந்து தள்ளி வைப்பது, ஆறு மாதங்கள் வரையில் கூட, போன்ற சம்பவங்கள் ஏராளம். ஆனால், இவை அனைத்தும் அவரின் திண்மையைச் சிதைப்பதில் தோல்வி கண்டன. சக்கர நாற்காலில் வாழ்ந்தாலும் “Singh is King” என்றார்!

மகாத்மா காந்தியாலும் ஜோன் கென்னடியாலும் கவரப்பட்ட கர்பால் சிங், மரண தண்டனையைக் கடுமையாக எதிர்த்தார். அதிலும், குறிப்பாக போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையை அவர் எதிர்த்தார். பல வழக்குகளில், வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் உட்பட, அவர் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இரு விவகாரங்கள் கர்பாலுக்கு அவருடைய உயிருக்கும் மேலானதாக இருந்தன. இஸ்லாமிய ஹூடுட் சட்டத்தை கர்பால் கடுமையாக எதிர்த்தார். இந்த விவகாரத்தில் பாஸ் கட்சிக்கு சிம்மசொப்பனமாக இருப்பது கர்பால் சிங்தான். இனிமேல், ஹூடுட் சட்ட விவகாரத்தில் டிஎபியின் நிலைப்பாட்டில் ஆட்டம் காணலாம்.

karpal1மலேசியா ஒரு சமயசார்பற்ற நாடு. நமது அரசமைப்புச் சட்டம் நமது நாடு சமயச் சார்பற்ற நாடு என்று திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது என்பதை வலியுறுத்தி வந்ததில் கர்பாலுக்கு இணை கர்பால்தான். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் தலைவர்களுக்கும் மலேசியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்பது தெரியும். ஆனால், அவர்கள் வாய் திறப்பதில்லை. கர்பாலுக்கு மலேசியா ஒரு சமய சார்பற்ற நாடு என்பது அவரது உரிமை. அந்த உரிமைக்காக அவர் உயிர்விட தயாராக இருந்தார். இஸ்லாம் என்பது அதிகாரபூர்வ சமயம் என்பதை ஏற்றுக்கொண்ட அவர், மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு என்பதை தாம் இறந்தாலும் விடமாட்டேன் என்பதை வலியுறுத்த “over my dead body” என்று கர்ஜித்தார். இந்த ஒரு விவகாரத்தில் கர்பால் கிட்டத்தட்ட இந்நாட்டிலுள்ள அனைத்து சமயவாத கொள்கை கொண்ட அரசியல் கட்சிகளின் முதல் எதிரியாக விளங்கினார் என்று கூறினால் மிகையாகாது.

இன்னொரு விவகாரத்திலும் கர்பால் மிகக் கடுமையான கொள்கையைப் பின்பற்றினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட சட்ட மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்குப் பின்னர் கட்சி தாவுதலை அவர் கடுமையாக எதிர்த்தார். அவ்வாறான செயல் மக்களையும் ஜனநாயக முறையையும் அவமதிப்பதாகும் என்பது அவரது நிலைப்பாடு.

karpal32008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், “செப்டெம்பர் 16” இல் அன்வார் இப்ராகிம் ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்காக கட்சி தாவுதல்களுக்கு தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்ற தகவல் ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில், இக்கீழறுப்பு செயலுக்கு அன்வார்தான் பின்னணி என்று உணர்ந்த கர்பால், அன்வாரிடம் “Resign and Get out” என்று உத்தரவே இட்டார் என்று கூறலாம். அன்றே “செப்டெம்பர் 16” முடிவிற்கு வந்தது. அதன் வழி ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு பெரும் கலவரம் நிறுத்தப்பட்டது. இதனைச் சாதிக்கக்கூடிய தகைமை பெற்றிருந்த ஒரே தலைவராக கர்பால் விளங்கினார். அதற்காக, இந்த நாடும் இந்நாட்டு மக்களும் கர்பாலுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளனர்.

மாட்டுக்கார பையன் கர்பால் மகத்தான தலைவரானார். இன்றைய தினத்திலிருந்து அவர் நம்முடன் இருக்க மாட்டார். ஆனால், நமது நாட்டின் மற்றும் நமது மக்களின் மகத்தான நல்வாழ்க்கைக்காக நமது நாடு ஒரு சமய சார்பற்ற நாடு என்பது நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பது போன்ற பல முக்கிய பொறுப்புகளை நம்மிடம் ஒப்படைத்துள்ளார். அவற்றுக்காக போராட வேண்டியது நமது கடமை. போராட்டம் ஒன்றே வெற்றிக்கான ஒரே வழி. “ஒருவர் எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க முடியாது. ஆனால், அதற்காக முயற்சி செய்யாமலும் இருக்கக் கூடாது” என்று கர்பால் நமக்கு ஊக்க மூட்டியுள்ளார். நமது உரிமை, நீதி போன்றவற்றுக்காக நாம் போராடுவோம். அதன் வெற்றியை கர்பாலுக்கு காணிக்கையாக படைப்போம்.

[thanks]செல்லியல் மற்றும் செம்பருத்தி[/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! Empty Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

Post by மாணிக்கம் நடேசன் Fri Apr 18, 2014 6:49 pm

விபத்து நடந்த இடம் எங்கள் வீட்டிலிருந்து சுமார் 30 கி.மீ.தூரம்தான். அடிக்கடி நான் அந்த வழியாக பயணம் செய்வது உண்டு. இன்று அந்த வழியாக வந்தபோது கவனித்தேன், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் ஒரு மேடான பகுதி, அங்கு கனரக வாகனங்கள் மிகவும் மெதுவாகத்தான் செல்லும். லாரி ஒன்று திரு கர்பால் பயணம் செய்து வாகனத்தில் பகுதிக்கு எந்த வித சமிக்ஞையும் தராமல் திடிரென வலது பக்கம் திரும்பியதால் இவ்விவத்து ஏற்பட்டுள்ளது, மேலும் அந்த லாரி ஓட்டுனர் கஞ்ஞா என்னும் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாகவும் போலிசார் கூறினர். மலேசிய ஒரு சிறந்த வழக்கறிஞரை இழந்துள்ளது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! Empty Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

Post by சிவா Fri Apr 18, 2014 9:27 pm

கர்ப்பாலின் மறைவு சட்டத்துறைக்கு பேரிழப்பு -அன்வார்

ஜசெக தலைவர் கர்ப்பால் சிங் நேற்று அதிகாலை 1.10 மணிக்கு விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார் என்ற செய்தியால் மின்னல் தாக்கியது போன்ற உணர்வுக்கு தாம் ஆளாகியிருப்பதாகவும், அவரின் மறைவு சட்டத்துறைக்கு பேரிழப்பாகவும் உள்ளது என்றார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

விபத்தில் உயிரிழப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் கர்ப்பாலை தாம் சந்தித்ததாகவும் அன்வார் வேதனையுடன் குறிப்பிட்டார். மேலும், அதிகாலை 3 மணிக்கு கர்பால் உயிரிழந்தார் என்ற செய்தி தனக்கு தெரிவிக்கப்பட்டது.

முதல் நாள் மாலையில் அவருடன் பேச்சு நடத்திய தமக்கு இந்த செய்தி பேரிடியாக இருந்தது என்றார் அன்வார். ஜெலுத்தோங் சிங்கம் என வருணிக்கப்படும் கர்ப்பால், அநீதிக்கும் அடக்குமுறைக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் என்றும், இவரின் மறைவு சட்டத்துறைக்கு பெரும் இழப்பாகும் என்றும் கூறினார்.

கோழை பல முறை இறக்கிறான். ஆனால் வீரன் ஒரு முறை தான் மரணமடைகிறான். ஒரு வீரனாகவே கர்ப்பால் மறைந்துள்ளார். ஒரு நல்ல நண்பரையும், தலைவரையும் இழந்துவிட்டேன்.

தமது எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு எனது மேல்முறையீடு குறித்து அடுத்த இரு நாட்களில் கவனம் செலுத்தப்போவதாக கர்ப்பால் தம்மிடம் தெரிவித்தாகவும் அன்வார் சொன்னார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் தமது போராட்டத்திற்கு கர்ப்பால் எப்போதும் துணையாக இருந்து வந்ததையும் அன்வார் வேதனையுடன் தெரிவித்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும்,  ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்! Empty Re: மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகி நடிகரான மனோ கார் விபத்தில் காலமானார்
» ஜப்பானிய தேர்தலில் வரலாற்று திருப்பம் லிபரல் ஜனநாயக கட்சியின் ஆட்சிக்கு முடிவு
» மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்!
» ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் அப்துல் ரசூல் காலமானார்
» இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum