ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை

+3
அருண்
ayyasamy ram
V.R.SATHISHKUMARAN
7 posters

Go down

ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை  Empty ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை

Post by V.R.SATHISHKUMARAN Wed Feb 05, 2014 12:48 pm

முன்னுரை:
குடும்ப அட்டை( ரேஷன் கார்டு ) அதன் பிறகு அனைவரின் மனதிலும் தற்போது பதிந்து வரும் பெயர்தான் "ஆதார்" என்பதாகும். ஆதார் என்றால் ஆதாரம் எனவும் பொருள் கூறப்படுகிறது. ஆதார் அட்டை பெறுவதற்கு வயது வரம்பு அவசியமே இல்லை. குடிமக்கள் ஒவ்வொருவரின் புகைப்படம், இடது, வலது கை விரல்கள் ரேகை, கருவிழி படலம் ( கருவிழிதிரை ) போன்ற தகவல்களை சேகரித்து ''12'' எண்களை கொண்ட தனிப்பட்ட அடையாள எண்ணை வழங்குவதே ஆகும்.
நோக்கம்:
சேகரிக்கப்பட்ட தகவல்களை மையமாக கொண்டு வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை ( தனிப்பட்ட பிரத்தியேக அடையாள அட்டை குறியீட்டு எண் ) மூலமாகவே அரசின் மக்கள் நலத்திட்டங்கள் போலி அடையாள அட்டை மூலமும், இருமுறை திட்டத்தின் பயனை பெறுவதற்கும் ஏதுவான சூழ்நிலையை தடுத்து சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்ளும் முறையினை முற்றிலும் தடுக்கிறது. ஆதார் மயமாக்கலுக்கு பிறகு அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் திட்டங்களுக்குப் பெறப்படும் முக்கியமான ஒரே ஆவணமாக ஆதார் அடையாள அட்டை விளங்கும் என்பது குறுப்பிடத்தக்கது.

ஆதார் அட்டை பெற:
2011 இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வீடுதோறும் வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டை வைத்து குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சி நிர்வாக அறிவிப்பின்படி நேரடியாக மக்கள் வரவழைக்கப்பட்டு ஒரு சில மாவட்டங்களில் 50% க்கும் மேலான பணிகள் நிறைவு பெற்று விட்டது. இதில் விடுபட்டவர்கள் உள்ளூர் கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு (VAO) நேரில் சென்று ஆதார் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே கொடுத்து விட வேண்டும். பிறகு ஒரு நாள் படிவத்தின் தகவல் உண்மை நிலையை அறிய, நேரடி தகவல் பரிசீலிப்பு பணி ஒவ்வொருவரின் வீட்டிற்கு நேரடியாகவோ அல்லது மண்டல அலுவலகங்களின் ஆலோசனையின் பேரில் உள்ளூர் ஊராட்சி, பஞ்சாயத்து பேரூராட்சி மற்றும் இதர அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சரிபார்க்கப்பட்ட தகவலை வைத்து,
அறிவிக்கப்படும் தேதியில் சமூக நலக்கூடங்கள், அரசு பள்ளிகள், தாலுகா அலுவலகங்கள் என அரசு நிர்வாகம் அறிவிக்கும் இடங்களில் மக்கள் வரவழைக்கப்பட்டு புகைப்படம், கைவிரல்கள் ரேகை, கருவிழிதிரை விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஒப்புகை சீட்டு வழங்கபடுகிறது. அதில் ஆதார் பதிவு எண், தேதி மற்றும் நேரம் குறிப்பிடபட்டிருக்கும். இந்த ஒப்புகை சீட்டை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது நம்முடைய பொறுப்பாகும். சில சமயங்களில் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் மொபைல் எண்ணை பதிவு செய்வதில்லை. இதனால் இன்டர்நெட் மூலம் ஆதார் எண்ணை பெறும் வாய்ப்பையும், ஆதார் எண் உருவாக்கப்பட்டு விட்டது என உறுதி செய்து அனுப்பப்படும் குறுஞ்செய்தியை பெற முடியாமல் போகும். மொபைல் எண் இல்லாதவர்கள் உறவினர்களின் எப்போதுமே பயன்பாட்டில் உள்ள எண்ணையாவது கொடுப்பது நல்லது. மேலும் இ-மெயில் முகவரியை கொடுப்பது இன்னும் பயனுள்ளது. மொபைல் எண்ணை பதியாதவர்கள் மறு பதிவு செய்ய மற்றும் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் ஒருங்கிணைக்க தனியாக அதற்கென இருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலமாகவே அனுப்பி மட்டுமே பதிவு செய்து கொள்ள முடியும்.
வதந்திகளை நம்ப வேண்டாம்:
ஆதார் அட்டை இல்லையெனில் அரசு சலுகைகள், இலவச பொருட்கள் கிடைக்காது என மக்கள் வருத்தப்பட வேண்டாம். குடிமக்களின் உரிமையை ஏழை, பணக்காரர் என பாகுபாடில்லாமல் பெற்று தருவதிலும், பாதுகாப்பதிலும் அரசு முனைப்பாக செயல்படும் என்பதை மக்கள் நன்கு உணர வேண்டும்.

அரசின் மேலான கவனத்திற்கு:
கணக்கெடுப்பு, புள்ளி விவரம் சேகரிப்பு போன்றவற்றிற்கு பொதுவாக அரசு பள்ளி ஆசிரியைகள், சத்துணவு பெண் ஊழியர்கள் என வருவது வழக்கமான நிகழ்வு. ஆதார் மயமாக்கல் சூழ்நிலையையும், மக்களின் அறியாமையை சரியான நேரத்தில் பயன்படுத்தி, போலி அடையாள அட்டை வைத்துக் கொண்டு புள்ளி விவரக் கணக்கெடுப்பு எனக் கூறி திருட்டு, கொள்ளை என சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. இதை கண்காணிக்கவும், சந்தேகப்படும்படியான நபர்களை கண்டுபிடிக்கவும், அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தகவல் சேகரிக்க வருபவர்கள் ஆண்களா அல்லது பெண்களா எனவும் தெளிவுபடுத்த வேண்டும்.

பொதுமக்கள் கவனத்திற்கு :
புள்ளி விவரம், கணக்கெடுப்பு என வருபவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலர்(vao ) அல்லது கவுன்சிலர்கள் மற்றும் தலைவர் போன்றவர்களை தொடர்பு கொண்டு இதுபோன்ற பணி தற்போது நடைபெறுகிறதா என கேட்டறிந்து தெளிவு கொள்ளவேண்டும். மூன்றாவது நபர் அல்லது வெளிநபர் யாராக இருப்பினும் வீட்டிற்கு வெளியில் நிற்க வைத்துக்கூட தகவல்களை தரலாம் என, இது போன்ற சூழ்நிலையை தடுக்க அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட போது அறிவுரை கூறினார்.

சிக்கல்கள் சில :
மத்திய அரசின் உங்கள் பணம் உங்கள் கையில் எனும் திட்டம் மூலம் வங்கி கணக்கு வாயிலாக ஆண்டிற்கு ரூ.4000/- எரிவாயு சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் எனவும், இதனால் ஆதார் எண் இல்லாதவர்கள் அக்டோபர் மாதத்திற்குள் பெற வேண்டும் எனவும் கூறப்படுவது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விசயமாக மக்கள் மனதில் தோன்றுகிறது. மேலும் எரிவாயு இணைப்பு தாத்தா, பாட்டி என மூத்த குடிமக்கள் பெயரில் எடுக்கப்பட்டு தற்போது பயன்பட்டு வருவதன் எண்ணிக்கை அதிகம் உள்ளது. காலமான குடும்ப உறுப்பினர் பெயரில் உள்ள எரிவாயு இணைப்பை ஆதார் எண்ணை வைத்து எப்படி ஒருங்கிணைக்க முடியும். அதற்கு குடும்ப உறுப்பினரில் யாராவது ஒருவர் பெயரில் இணைப்பை மாற்ற வேண்டும். இதற்கு இறந்தவரின் இறப்பு சான்றிதழ், உறவு முறை சான்று மற்றும் இணைப்பு வழங்கும் போது கொடுத்த படிவம் என இன்னும் சில ஆவணங்களை சமர்ப்பித்து, அதன்பிறகு எரிவாயு இணைப்பு வழங்கும் அலுவலக ஊழியர்களால் நேரில் சென்று உண்மை நிலையை கண்டறிந்து பிறகு அறிக்கை சமர்ப்பித்தவுடன் ஒரு தொகையை பெயர் மற்றம் செய்ய செலுத்த வேண்டிய சூழ்நிலை, படிப்பறிவில்லாதவர்கள் மற்றும் படித்தவர்களிடையேயும் மிகுந்த அலைச்சலை ஏற்படுத்தும் என்பது உண்மை நிலை.

ஆதார் உதவிமையம் மற்றும் தகவல்களுக்கு :
ஆதார் அட்டை பெற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டில் உள்ள தகவல் மைய இலவச தொடர்பு எண் (1800 180 1947 ) தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய எண் ( 1800 300 1947 ). ஆனால் இந்த சேவை எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் அறிய ஆங்கிலம் அல்லது மற்ற மாநில மொழிகளான கன்னடம், தெலுங்கு,இந்தி ஆகிய மொழி பேசும் சேவை மைய உதவியாளர்களே உள்ளனர். இந்த நிலை விரைவில் மாற்றப்படும் என எதிர்பார்க்கபடுகிறது .
டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமரன் சிட்லபாக்கம்


V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

Back to top Go down

ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை  Empty Re: ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை

Post by ayyasamy ram Wed Feb 05, 2014 12:53 pm

மானிய விலையில் சிலிண்டர் பெற ஆதார்
அட்டை கட்டாயமாக்கப்படவில்லை...
-
ஆதார் அட்டை அவசியத்தேவை என்பவர்கள் ஆன்லைனில்
விண்ணப்பித்து பெற முடியும்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை  Empty Re: ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை

Post by அருண் Wed Feb 05, 2014 1:31 pm

ஆதார் அவசியமில்லை என்று மத்திய அரசே! கூறிவிட்டது.
இந்த ஆதார் தேவை இல்லாதது..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை  Empty Re: ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை

Post by krishnaamma Wed Feb 05, 2014 1:44 pm

விவரங்களுக்கு நன்றி சதிஷ்குமார் புன்னகை அன்பு மலர் 
.
.
.
ஆதார் கார்டு காஸ் க்கு தேவை இல்லை என்றாலும் நமக்கு தேவைதான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை  Empty Re: ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை

Post by ஜாஹீதாபானு Wed Feb 05, 2014 1:57 pm

ஆதார் அட்டை என்றாலே.............அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை  Empty Re: ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை

Post by ராஜா Wed Feb 05, 2014 4:31 pm

நாம் ஆதார் அட்டை வாங்குவது நமக்கு தேவையோ இல்லையோ அமெரிக்காகாரனுக்கு ரொம்ப அவசியம் என்று கேள்விபட்டேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை  Empty Re: ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை

Post by krishnaamma Wed Feb 05, 2014 6:30 pm

ராஜா wrote:நாம் ஆதார் அட்டை வாங்குவது நமக்கு தேவையோ இல்லையோ அமெரிக்காகாரனுக்கு ரொம்ப அவசியம் என்று கேள்விபட்டேன்

புரியலயே ராஜா !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை  Empty Re: ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை

Post by M.M.SENTHIL Wed Feb 05, 2014 10:14 pm

krishnaamma wrote:
ராஜா wrote:நாம் ஆதார் அட்டை வாங்குவது நமக்கு தேவையோ இல்லையோ அமெரிக்காகாரனுக்கு ரொம்ப அவசியம் என்று கேள்விபட்டேன்

புரியலயே ராஜா !

நமது விவரங்கள் எல்லாம், அமெரிக்கனுக்கு கொடுக்கப் படுகிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை  Empty Re: ஆதார் அட்டை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum