ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு...

5 posters

Go down

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு... Empty ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு...

Post by சாமி Wed Jan 15, 2014 3:46 pm

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு- பெண் செவிலியர் கட்டாயம் இருக்க வேண்டும்

சமீபத்தில் தனியார் மருத்துவ மனைக்குச் சிகிச்சை பெறச் சென்ற ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சென்னை டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாகவோ பரவலாகவோ நடைபெறுவதில்லை. ஆனால், ஒரு சில நபர்கள், டாக்டர் என்று மிகுந்த உரிமை எடுத்துக் கொண்டு எதிர்பாலினரிடம் வரம்பு மீற முற் பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருந்தாலும், அவர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாதென நோயாளிகள் அதை பெரிதுபடுத்து வதில்லை. ஆனால், சென்னை சம்பவம் இதைப் பற்றிய விழிப்பு ணர்வை ஏற்பட வேண்டிய அவசி யத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் மருத்துவ சிகிச்சை முறைகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழ கம் மருத்துவத்துறையில் முதல் இடத்தில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. மிகவும் அரிதானதாக சொல்லப்படும் இதயம், கல்லீரல், நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் சர்வ சாதாரணமாக குறைந்த செலவில் சென்னையில் செய்யப்படுகிறது.

ஆனால் தனியார் மருத்துவ மனை மற்றும் தனியார் கிளினிக்கு களுக்கு சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளிகளிடம் ஒரு சில டாக்டர் கள் வரம்பு மீறுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை பெரும் பாலான பெண் நோயாளிகள் வெளியே சொல்ல தயங்குகின்ற னர். இதனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளும் சிலர், தங் களது அத்துமீறல்களைத் தொடர் கின்றனர்.

ஒரு சில பெண் நோயாளிகள் வெளியே சொல்லும் போது, சம்பந் தப்பட்ட டாக்டர் கைது செய்யப் படுகிறார். கடந்த மாதம் 31-ம் தேதி திருவேற்காடு அடுத்துள்ள வேலப்பன்சாவடி பள்ளிக்குப்பம் பகுதியில் தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வந்த இளம் பெண் நோயாளியிடம், அங்கு பணியில் இருந்த டாக்டர் சித்தார்த்தசீலன் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, அந்த பெண் திருவேற்காடு போலீஸில் புகார் அளித்ததின் பேரில், டாக்டர் சித்தார்த்தசீலனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத் தனர். இதுபோல ஒரு சில டாக் டர்கள் செய்யும் தவறால், ஒட்டு மொத்த டாக்டர்களுக்கு மட்டு மின்றி தமிழக மருத்துவத் துறைக்கே அவப்பெயர் ஏற்படு கிறது. இதுதொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் கீதாலட்சுமி, ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவ மனை ஆர்.எம்.ஓ. டாக்டர் கலை வாணி ஆகியோர் கூறியதாவது:

பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப்பிடிக்க வேண் டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன. தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக் கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம்.

பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரி சோதனைகளை (தொடுதல்) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனை களை டாக்டர் செய்ய வேண்டும். வயிறு வலி, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சினைகளுடன் பெண் கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச் சினையைக் கண்டறிய முடியும்.

இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத் தவோ, தட்டிப்பார்க்கவோ வேண் டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித் தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும்; இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புகார் கொடுக்கலாம்:

சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், எண்.914, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். அந்த புகாரின்படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தால், அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.thehindutamil
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு... Empty Re: ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு...

Post by krishnaamma Fri Feb 21, 2014 8:34 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு சாமி புன்னகை ரொம்ப நன்றி !  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு... Empty Re: ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு...

Post by SenthilMookan Fri Feb 21, 2014 11:53 pm

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு... 103459460 


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு... Empty Re: ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு...

Post by ஜாஹீதாபானு Sat Feb 22, 2014 2:58 pm

பகிர்வுக்கு நன்றீ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு... Empty Re: ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு...

Post by M.M.SENTHIL Sat Feb 22, 2014 3:01 pm

மருத்துவத் தொழில் ஒரு புனிதமான தொழில், மருத்துவர்கள் கடவுளுக்கு இணையாக மக்களால் பார்க்கப் படுபவர்கள். அப்படிப்பட்ட நபர்கள் சிலர் இது போல செய்வதனால், ஒட்டு மொத்த மருத்துவ துறைக்கே இழுக்கு. நிச்சயம் அவர்களுக்கு நல்ல தண்டனை கிடைக்க வேண்டும். அவர்களின் மருத்துவப் பட்டம் பறிக்கப் படவேண்டும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு... Empty Re: ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு...

Post by ஜாஹீதாபானு Sat Feb 22, 2014 3:28 pm

M.M.SENTHIL wrote:மருத்துவத் தொழில் ஒரு புனிதமான தொழில், மருத்துவர்கள் கடவுளுக்கு இணையாக மக்களால் பார்க்கப் படுபவர்கள். அப்படிப்பட்ட நபர்கள் சிலர் இது போல செய்வதனால், ஒட்டு மொத்த மருத்துவ துறைக்கே இழுக்கு. நிச்சயம் அவர்களுக்கு நல்ல தண்டனை கிடைக்க வேண்டும். அவர்களின் மருத்துவப் பட்டம் பறிக்கப் படவேண்டும்.

 ஆமோதித்தல் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு... Empty Re: ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum