ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான்பூச்சி பண்ணை

2 posters

Go down

சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான்பூச்சி பண்ணை Empty சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான்பூச்சி பண்ணை

Post by சிவா Tue Dec 17, 2013 1:53 am

சீனாவில், கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது.

கரப்பான் பூச்சி என்றாலே, முகத்தைச் சுளிப்பவர்கள் மத்தியில், சீனாவில் சிலர், கரப்பான்பூச்சி பண்ணை வைத்து, கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கின்றனர்.

அறுசுவை உணவு: சீனாவில், கரப்பான்பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டுப் புழுக்களை வறுத்துச் சாப்பிடுவது, அறுசுவை உணவாகக் கருதப்படுகிறது.

கரப்பான் பூச்சிகளை உலர வைத்து, சீன மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் பலவற்றிலும், பயன்படுத்துகின்றனர்.

இதிலுள்ள புரதச்சத்து, மற்ற வகை புரதச்சத்தைவிட, விலை மிகவும் குறைவு. மேலும், இவற்றின் இறக்கையில் உள்ள செலுலோஸ் என்ற பொருளையும் பயன்படுத்தலாம்.

கரப்பான் பூச்சிகளுக்கு, இருட்டான இடங்கள் பிடிக்கும். பழைய கோழி பண்ணைகள், இருட்டான கட்டடங்களில் முட்டை வைக்கும் தட்டுக்கள், இரும்பு தகடுகளுக்கு நடுவே இவற்றை வளர்க்கின்றனர். சீனாவில் மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி பண்ணைகள் உள்ளன.

"வாங்க் பூமிங்' என்ற கரப்பான் பூச்சி பண்ணை உரிமையாளர் மட்டும், த்னுடைய ஆறு பண்ணைகளில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகயை வளர்க்கிறார். அவர், 2010 ஆம் ஆண்டு பண்ணையை ஆரம்பித்தார்.

இந்த மூன்று ஆண்டுகளில், உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 10 மடங்காக உயர்ந்து உள்ளது என்கிறார். அரை கிலோ உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 120 ரூபாயிலிருந்து, 1200 ரூபாயாக உயர்ந்து உள்ளது.

இதற்கு முதலீடும் மிகக் குறைவு. 61 ரூபாய் முதலீடு செய்தால், 670 ரூபாய் லாபம் பார்க்கலாம்.

பெரிய அளவுலாபம்: பண்ணை ஆரம்பிக்க, கரப்பான் பூச்சி முட்டைகள் இருந்தால் போதும். அதுவும், அமெரிக்க இன கரப்பான் பூச்சிகளைத்தான் வளர்க்கின்றனர். இவை நீளமாக, பெரிதாகக் கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு இறக்கைகள் உண்டு.

இவற்றைக் கொல்லுவதும் எளிது என்கிறார் பூமிங். அப்படியே அள்ளி அல்லது வாக்யூம் செய்து, கொதிக்கும் நீரில் போட்டு, வடகம் போல் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கரப்பான் பூச்சி பண்ணøயில், பெரிய அளவு லாபம் பார்க்கலாம் என்பதே சீனாவில் பலருக்கும் தெரியாமல் இருந்தது.

ஒருமுறை கோடிக்கணக்கான கரப்பான்கள், ஒரு பண்ணையில் இருந்து எஸ்கேப் ஆகிய பின்பு தான் மக்களுக்கே தெரிய வந்தது.

இந்தப் பண்ணைகளை ரகசியமாக, மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து, தொலைவில் வைக்கின்றனர்.

இப்போது சீன டி.வி.களில், கரப்பான பண்ணை வளர்ப்பு முறை பற்றி விளம்பரங்கள் பிரபலமாக உள்ளன.

பூச்சிகளும், புரதச்சத்தும்: பசி, வறுமையை எளிதாக ஒழிக்க ஐ.நா சபை பல ஆண்டுகளாகவே பூச்சிகளை உணவாக உண்ண ஊக்கமளித்து வருகிறது.

பூச்சிளில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இவற்றை வளர்ப்பது சுலபம். பன்றி, கோழி, ஆட்டுப் பண்ணைகள் போன்று, சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாது. மேலும், விலங்கினங்களின் கழிவுகளில் உண்டாகும். மீத்தேன் வாயு, பூமியை வெப்பமாக்குகிறது. தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவிலுள்ள 200 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், கம்பளிப்புழு, வண்டு, தேள், வெட்டுக்கிளி, குளவி போன்ற பூச்சி, புழுக்களை விரும்பி உண்கின்றனர்.

பலன்கள்: சீனா மற்றும் தென்கொரியா பல்கலைக் கழகங்கள் கரப்பான்பூச்சியை வைத்துப் பலவித ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். அணு கதிர்வீச்சைக் கூட, தாங்கும் சக்தி உடையது கரப்பான்பூச்சி. இவை மூலம் - எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

"லீ ஷீவான்' என்ற 78 வயது சீன வைத்தியர், கரப்பான் பூச்சிகளை அரைத்து, தன் வழுக்கைத் தலையில் தினமும் தேய்த்துக் கொண்டதால், முடி வளர்ந்ததாகக் கூறுகிறார். மேலும், முகம் பளபளப்பாக இவற்றை அரைத்து முகத்தில் கூட பூசலாம் என்கிறார்.

 கலைமகள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான்பூச்சி பண்ணை Empty Re: சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான்பூச்சி பண்ணை

Post by ஜாஹீதாபானு Tue Dec 17, 2013 3:19 pm

சீனாக்காரர்களுக்கு எதுவுமே விதிவிலக்கு இல்ல போல... பயம் பயம் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum