ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முனைவர் இரா .மோகன் அவர்களின் புலமை நலம் ! ஆய்வுக் கட்டுரைக் கோவை ! பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசு ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

2 posters

Go down

முனைவர் இரா .மோகன் அவர்களின் புலமை நலம் ! ஆய்வுக் கட்டுரைக்  கோவை !  பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசு !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty முனைவர் இரா .மோகன் அவர்களின் புலமை நலம் ! ஆய்வுக் கட்டுரைக் கோவை ! பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசு ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sun Dec 15, 2013 4:25 pm

முனைவர் இரா .மோகன் அவர்களின் புலமை நலம் !
ஆய்வுக் கட்டுரைக் கோவை !

பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசு !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கதிரவன் பதிப்பகம் 3,நெல்லை நயினார் தெரு ,பாளயங்கோட்டை - 627002. பேசி ;0462-2579967.விலை ரூபாய் 120.

சிலர்க்கு நன்றாகப் பேச வரும் .சிலர்க்கு நன்றாக எழுதவரும் . வெகு சிலருக்குத்தான் நன்றாகப் பேசவும் , நன்றாக எழுதவும் வரும் .அந்த வெகு சிலரில் சிகரமாக விளங்குபவர் தமிழ்த் தேனீ முனைவர்
இரா .மோகன் அவர்கள்.108 என்ற எண் எல்லோரும் அறிந்த ஒன்று. அவசர ஊர்தியை அழைக்க உதவும் எண் .உயிர் காக்க உதவும் 108. ஆன்மிகவாதிகள் 108 போற்றி பாடுவார்கள் .108 ஆலயங்கள் சொல்வார்கள் .அவர்கள் 108 நூல்களின் ஆசிரியர் முனைவர் இரா .மோகன் அவர்கள் .அவர்க்கு வாழும் காலத்திலேயே புகழ் மகுடம் சூட்டும் விதமாக வந்துள்ள நூல் இது .

ஒரு படைப்பாளிக்கு கோடிப் பணம் தந்தால் வரும் மகிழ்ச்சியை விட தன்னுடைய நூல்கள் பாராட்டப் படும் போது கூடுதல் மகிழ்ச்சி வரும் .இந்த நூல் முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு அளவிலா மகிழ்ச்சி தரும் .இன்னும் இன்னும் நூல்கள் எழுதிட தூண்டுகோ லாக அமையும் இந்த நூல்எனது திண்ணம் .

வானதி பதிப்பக இல்லத் திருமண விழாவிற்கு முனைவர் மோகன் அவர்களுடன் தேவகோட்டை சென்று இருந்த போது பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசு அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது . உருவத்தால் மட்டுமல்ல உள்ளத்தாலும் பெரியவர் என்பதை உணர முடிந்தது .தள்ளாத வயதிலும் மனம் தளராமல் தமிழுக்குத் தொண்டு செய்து வரும் மாமனிதர். திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில் மாதம் தோறும் அய்யாவின் நூல்களை ஆய்வாளர்களுக்கு வழங்கி ஆய்வுரை நிகழ்த்த வைத்து அவற்றை கட்டுரைகளாகப் பெற்று தொகுத்து , வகுத்து நூலாக்கி உள்ளார்கள் .அவரின் கடின உழைப்பை உணர முடிந்தது .

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய 11 நூல்களின் ஆய்வுக் கட்டுரைக் கோவையாக நூல் வந்துள்ளது. நூலில் ஆய்வு செய்துள்ள நூல்களின் பெயர்களைப் படித்தாலே நூலை அவசியம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும் .

1. மூதறிஞர் மு .வரதராசனாரின் புதினங்கள் ,2.கு .ப .இரா .வின் சிறுகதைத் திறன் .3. மூதறிஞர் வ .சு .ப .மாணிக்கனார் .4.கணினி யுகதிற்குக் கம்பர் .5.புதுக் கவிதைத் திறன் .6.மாணிக்கவாசகர் .7.குமரகுருபரர் .8.அன்புள்ள நிலாவுக்கு .9.பன்முகப் பார்வையில் பாரதி .10.இனியவை நாற்பது .11.கவிதைக் களஞ்சியம் .

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் பெரும்பாலான நூல்கள் படித்துள்ளேன்.நூல் விமர்சனமும் எழுதி உள்ளேன் .இந்த நூல் படித்தபோது ஆய்வாளர்களின் ஆய்வு நுட்பம் கண்டு வியந்து போனேன் .நூலை முடி முதல் அடி வரை படித்து ,ஆராய்ந்து அற்புதமாக கட்டுரைகளை வடித்துள்ளனர் .ஆய்வாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் .பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசு அவர்களுக்கும் பாராட்டுக்கள் .

1. மூதறிஞர் மு .வரதராசனாரின் புதினங்கள் நூல் ஆய்வு பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசுஅவர்கள் .

11.கவிதைக் களஞ்சியம் நூல் ஆய்வு பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசுஅவர்கள் .இந்த நூலின் தொடுப்பும் முடிப்பும் அவரே .

முதல் கட்டுரையில் உள்ள வைர வரிகள் பதச் சோறாக உங்கள் பார்வைக்கு இதோ !

"பழந்தமிழ் இலக்கியங்களைப் படிப்பது போன்று புதினங்களைப் படித்து ஆராய வேண்டும் என்று தூண்டும் பேராசிரியர் மோகன் தம், அயரா உழைப்பாலும் விடா முயற்சியாலும் திட்ப நுட்ப பார்வையாலும் வெற்றி வாகை சூடியுள்ளார் .புதின ஆசிரியரைப் படித்து ஆராந்து மதிக்க வேண்டும்.என்று வற்புறுத்தும் வகையில்
திறனாய்வுத் துறையில் முத்திரை பதித்துள்ள வித்தகராக விளங்குகிறார் ."

ஆய்வு செய்யப்பட்ட நூல்களின் தரத்தைப் பறை சாற்ற இந்த வரிகளே போதுமானது .

கு .ப .இரா .வின் சிறுகதைத் திறன் . என்ற நூலை முனைவர்
நா .உசா தேவி ஆராய்ந்து எழுதி உள்ளார்கள் .நூலை ஆய்வு செய்த விதம் மிக நன்று .

மூதறிஞர் வ .சு .ப .மாணிக்கனார் என்ற நூலை இளமுனைவர்
அ. இராசகிளி .மேனாள் மாவட்டக் கல்வி அலுவலர் ஆராய்ந்து எழுதி உள்ளார்கள் .முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மட்டுமன்றி பல்துறை ஆய்வாளர்களும் ஆய்வு செய்து கட்டுரை வடித்துள்ளனர் .

நிறைவுரை முத்தாய்ப்பு ;

" உண்மை நிலையைத் தெளிவுபடுத்துவதில் மூதறிஞர் வ .சு .ப .மாணிக்கனார் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்டு விளங்கினார் .என்பதை முனைவர் மோகன் அவர்கள் பல்வேறு சான்றுகளுடன் விளக்கி மூதறிஞர் வ .சு .ப .மாணிக்கனார் பன்முக ஆற்றலையும் ,மொழி ஆளுமையையும் ,நுண் மாண் நுழை புல மிக்க திறமையையும் நுடப்த்தோடும் , திட்பத்தோடும் தெளிவாகக் காட்டியுள்ளார் .இதனால் வ .சு .ப .மா. என்ற இலக்கியச் சோலை மனம் பரப்பும் மலர்களாலும் செவி நுகர் கனிகளாலும் நிறைந்து காணப்படுவதை நாம் கண்டு மகிழ்கிறோம் ."

கணினி யுகதிற்குக் கம்பர் நூல் பற்றி தேசியப் பாவலர் இளமுனைவர் தா .மு .காசா மைதீன் எழுதி உள்ளார் .

" கணினி யுகதிற்குக் கம்பர் நூலின் ஆய்வு முடிந்ததன்று , காலம் தோறும் தொடரத் தக்க ஆய்வுக் கருவுலம் ." என்று எழுதி மிக நன்றாக முத்தாய்ப்பாக முடித்துள்ளார் .

அன்புள்ள நிலாவுக்கு நூலை திருமிகு உ .சிதம்பரப்பாண்டியன் ( மேனாள் மாவட்டப் பதிவாளர் )ஆய்வு செய்து மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள் .கடித இலக்கியம் ஒரு வகை . மிகக் குறைவான அளவிலேயே உள்ளது .அன்புள்ள நிலாவுக்கு நூல் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் தமிழ்ச் சுடர் முனைவர் நிர்மலா மோகன் அவர்களை காதலித்த பொது தவறு இப்போதும் காதலித்துக் கொண்டே இருக்கிறார் .எழுதிய கடிதங்களின் தொகுப்பு .

கட்டுரையின் முன்னுரை ;

" கடிதம் என்பது ஒரு மனிதனுடைய உள்ளத்தில் உதிக்கின்ற எண்ணங்களையும் அதனால் எழும் உணர்சிகளையும் வெளிப்படுத்தும் சாதனம் !"
உண்மை இன்று கணினி யுகத்தில் கடிதம் எழுதுவதே வழக்கொழிந்து வருகின்றது .அன்று எழுதியதை ஆவணப் படுத்தி நூலாக்கியது முனைவர் இரா .மோகன் அவர்களின் ஆவணப் படுத்தும் குணதிற்குச் சான்றாகும் .

ஆய்வுரையில் மேற்கோள் காட்டி உள்ள வைர வரிகள் இதோ .

" நான் களைத்துச் சோர்ந்து காதலியை அடிந்தேன் ,
அவள் மெல்லிய மடியில் என் தலையை வைத்தேன் ,
அவள் என் தலையைத் தன் விரல்களால் கோதியபோது,
தூங்கிப் போனேன் .இனி என் வாழ்வில் எல்லா நாளும்
அவளோடு வாழ்வதிலேயே அமைதி அடைய வேண்டும் என்று
உணர்ந்தேன் ."

அவ்வாறே இந்த இணையர்கள் என்றும் வாழியவே !
வாழியவே !

காதல் கடிதம் எழுதியதோடு நின்று விடாமல் காதலியின் கரம் பிடித்து வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டு மணி விழா கண்டுள்ள இலக்கிய இணையர் இன்றைய இளைய தலைமுறைக்கு பாடம் .

கணினி யுகதிற்குக் கம்பர் நூலை காசா மைதீன் அவர்கள் ஆய்வு செய்து இருப்பது மத நல்லிணக்கத்தைப் பறை சாற்றுவதாக உள்ளது .
இப்படி ஆய்வு நூலை நானும் ஆய்வு செய்து கொண்டே போகலாம்.

நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள் .தமிழ்த் தேனீ முனைவர்
இரா .மோகன் அவர்களின் எழுத்து ஆற்றலை, மொழி வளத்தை, செயல் நுட்பத்தை ,கடின உழைப்பை ,ஆளுமையை , பருந்துப் பார்வையை , ஆய்வு நோக்கை , ஒப்பியல் அறிவை , இலக்கிய ஆர்வத்தை குன்றத்து விளக்குப் போல ஒளிர்ந்திடும் வண்ணம் நூலாக்கிய மாமனிதர் பதிப்பாசிரியர் முனைவர்
பா .வளன்அரசு அவர்களுக்கு பாராட்டுக்கள் .தன்னலமற்ற இதுபோன்ற தமிழ்த் தொண்டு தொடர வேண்டும் .அடுத்த பதிப்பில் பொருள் நிரல் பக்கத்தில் நூல்களின் பெயர் அருகில் ஆய்வாளர்கள் பெயரும் இடம் பெறச் செய்யுங்கள் .

நூலின் முகப்பு அட்டை பின் அட்டை உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .பின் அட்டையில் வைரமென ஒளிர வாழ்க ! என்ற தலைப்பில் மிகச்சிறந்த பண்பாளர், சினம் கொள்ளாத நல்ல மனிதர் , பலரின் வழிக்காட்டி , புன்னகையை முகத்தில் என்றும் அணிந்து இருப்பவர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களைப் பற்றி தேசியப் பாவலர் இளமுனைவர் தா .மு .காசா மைதீன் அவர்கள் அற்புதமான மரபுக் கவிதை எழுதி உள்ளார் .மிக நன்று .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

முனைவர் இரா .மோகன் அவர்களின் புலமை நலம் ! ஆய்வுக் கட்டுரைக்  கோவை !  பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசு !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: முனைவர் இரா .மோகன் அவர்களின் புலமை நலம் ! ஆய்வுக் கட்டுரைக் கோவை ! பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசு ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by பார்த்திபன் Mon Dec 16, 2013 12:54 pm

விமர்சனம் மிக அருமை! மகிழ்ச்சி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» சிற்பியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி.
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum