ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல் முருகன்!

4 posters

Go down

கல் முருகன்! Empty கல் முருகன்!

Post by சிவா Thu Nov 14, 2013 3:22 am

சுமார் இருநூறு வருடங்களுக்கு முந்தைய ஒரு நாளின் பனிமூடிய விடிதயற்காலை நேரம். சிந்தை முழுக்க சிவபாலனை நிறை(னை)த்தபடி நடந்து கொண்டிருந்தார் அந்த பக்தர்.

"ணங்' என்று காலில் இடித்தது ஒரு கல். "ஆ' என்று அலறுவதற்கு பதில், "ஆறுமுகா' எனச் சொன்னார். மறுகணம் கல் இருந்த இடத்தில் கந்தனின் திருமுகம் தெரிய, சட்டென்று விழித்து எழுந்தார்.

ஆம். அத்தனையும் கனவு! வேலவனைக் கண்ட வியப்போடு, கல்லாகத் தோன்றிய கந்தன் எங்கே இருக்கிறான் எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் சேர்ந்துகொள்ள, இரவு முழுக்க வேல்முருகனை நினைத்தபடி தூங்காமல் விழித்திருந்தார்.

பொழுது புலர்ந்தது. கனவில் கண்ட இடம் தேடி, கால்போன போக்கில் நடந்தார். காடு, மேடு எனச் சுற்றியும் கண்டுபிடிக்க முடியாமல் வருந்தினர்.

உடல் சோர்வைவிட உள்ளத்தின் வலி அதிகமாக வாட்டவே, மேலும் நடக்க இயலாமல் தவித்தார். பக்கத்தில் இருந்த பாறை ஒன்றின் மேல் ஏறி ஓய்வாக அமர்ந்திட அவர் நினைத்த அதே சமயத்தில் மனம் இரங்கினான் மயிலோன்.

"ணங்' என்று இப்போது நிஜமாகவே அவர் காலில் இடித்தது ஒரு கல். குனிந்து பார்த்தவருக்குப் புரிந்தது கனவில் கண்ட அதே வடிவக் கல்... இல்லை இல்லை கல் வடிவில் உறைந்திருக்கும் கதிர்வேள்! உள்ளம் சிலிர்க்க, உடல்வியர்க்க, வீழ்ந்து வணங்கினார்.

அதே இடத்தில் கூரைக் கொட்டகை ஒன்றில் வைத்து வணங்கினார். குமரனை வழிபட்டோர் வாழ்வில் குறை யாவும் தீரவே பக்தர் கூட்டம் அதிகரித்தது. கொட்டகை சிறு கோயிலானது.

கல்லாக இருந்த குகனுக்கு கற்சிலை வடித்துவைக்க விரும்பினார்கள் பக்தர்கள். அதையே வேண்டுதலாக அவன் முன் வைத்தார்கள். அவன்தான் கேட்டதைத் தருபவன் ஆயிற்றே! பிறகென்ன, தடை ஏதும் இல்லாமல் தனக்கு ஒரு சிலை வைத்திட அருளினான். குமரன் குடிகொண்ட அந்தத் தலத்தின் பெயர், குன்னகம்பூண்டி. ஒரு காலத்தில் சித்தர்கள் நிறைந்து இருந்ததாலோ என்னவோ இந்த ஊருக்கு சித்தருகாவூர் மதுராபுதூர் (சி.எம். புதூர்) என்றும் ஒரு பெயர் உண்டு. இருந்தாலும் குன்னகம்பூண்டி அல்லது குண்ணம்பூண்டி என்றே பலரும் சொல்கிறார்கள்.

அன்றமைந்த அதே கோயிலில் இதோ இன்றும் அருள்மணம் குன்றாமல் சிவசுப்ரமண்யனாக ஆட்சி செய்கிறான் சிவமைந்தன். பாறை மீது அமைந்த கோயில் என்பதால் படி ஏறித்தான் செல்ல வேண்டும்.

ஏறுமயில் வாகனனை தரிசிக்க ஏறிச்செல்லும் படிகளிலும் ஒரு கணக்கு இருக்கிறது. நான்கு வேதங்களும், பதினெட்டுப் புராணங்களும், பன்னிரு திருமுறைகளும் போற்றும் முருகனைப் பணிந்தால் அஷ்டலட்சுமி கடாட்சம் கிட்டும். தடைகளையும் தீவினைகளையும் தகர்க்க நவவீரர்களும் துணை நிற்பார்கள் எனச் சொல்லாமல் சொல்லும் விதமாக 4, 18, 12, 8, 9 என படிகளுக்கு இடையே சமதள இடைவெளிகள் விட்டு அமைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஐம்பத்து ஒன்று சக்தி பீடங்களைக் குறிக்க, ஐந்தையும் ஒன்றையும் கூட்டுவதால் வரும் ஆறு, முருகனின் சடாட்சர மந்திரமான "ஓம் சரவண பவ' என்பதை உணர்த்துகிறது.

விவரங்களைத் தெரிந்துகொண்டு படியேறும்போது நம் கஷ்டங்கள் படிப்படியாக இறங்கிவிடுவது போன்ற உணர்வு படர்கிறது.

படியேறிச் சென்றால் உடனே தரிசிக்கும்படி நேர் எதிரே அமைந்திருக்கிறது கருவறை. வேண்டுவோர் குறைதீர்க்கச் செல்லும் வேலவனை சுமந்து செல்லத் தயாராக முன் நிற்கிறது மயில்.

மூலஸ்தானத்தில் மான் மகளும், தேவர் கோன் மகளும் உடனிருக்க மணக்கோல தரிசனம் தருகிறார் தமிழ்க்கடவுள். சிவசுப்ரமண்யன் என்பது இத்தலத்தில் இவருக்கு வழங்கும் திருப்பெயர். அக்னியில் உதித்தவன் இருக்கும் இடம். ஆனாலும் முருகனின் அருள்மழை எப்போதும் பொழிவதால் குளிர்ச்சியாக இருக்கிறது கோயில். கும்பிடும் பக்தர் கோரிடும் வரத்தினை குறைவின்றித் தரும் குமரன் இவன் எனச் சொல்கிறார்கள் பலன் பெற்ற பக்தர்கள்.

மூலவர் முன் சரவணபவ சக்கரம் வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சக்கரத்திற்கு முன்பாக ஆவுடை இல்லா சிவலிங்கம் போல் சிறிதாக ஒரு கல்இருக்கிறது. இதுவே ஆதியில் ஆறுமுகனின் அம்சமாக வழிபடப்பட்டதாம். உமைமைந்தன் தானே உவந்து குடிகொண்ட கல் அது என்பதை நினைக்கும்போது உள்ளம் நெகிழ்கிறது.

தம்பியின் கோயிலில் தனையன் ஆனைமுகன் முன் மண்டபத்தின் இடப்புறம் வீற்றிருக்கிறான். வலப்புறம் சிவலிங்கமும், பாலதண்டாயுதபாணியின் சிலைவடிவும் உள்ளன.

கருவறை முன் உள்ள விரிசல் விழுந்த சிறு மண்டபத்தின் நடுவே, மூடப்பட்ட பள்ளம் ஒன்று காணப்படுகிறது. பள்ளம் போல் காட்சியளிப்பது ஒரு சுரங்கம். அதன்மீது அமைந்துள்ள மண்டபத்தின் சுவர், குறிப்பிட்ட காலத்திற்குப் பின் விரிசல் ஏற்பட்டு விழுந்துவிடுமாம். பின்னர் மீண்டும் புதிதாகக் கட்டப்படும் என்கிறார்கள். பாறை மீது கட்டப்பட்ட கோயில் என்பது வலம் வரும்போது தெரிகிறது. சுற்றுப்பாதையில் சனிபகவானும் நவக்கிரகங்களும் இருக்கின்றனர்.

அகத்தியர் சீடனும் ஆறுமுகன் தூதனுமான இடும்பன் தனிச் சன்னதியில் காவடி சுமந்த நிலையில் காட்சியளிக்கிறான்.

வழக்கமாக வைகாசி விசாக தினத்தில்தான் பக்தர்கள் காவடி எடுத்துவந்து கந்தனை வணங்குவார்கள். இங்கே வித்தியாசமாக ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்று விதவிதமான காவடிகளோடு, வேண்டுதல்களையும் நன்றிகளையும் சுமந்து வருகிறார்கள், ஏராளமான பக்தர்கள்.

கந்தசஷ்டியை ஒட்டி சூரசம்ஹாரமும் சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது.

வேல் என்றால் வேதனை விலகும். மயில் என்றால் அச்சங்கள் அகலும். வேலுக்கும் மயிலுக்கும் உரியவனான் முருகன் பெயரைச் சொன்னாலோ முக்காலமும் வாழ்வினிக்கும். கல்லிலே தோன்றிய கந்தனை ஒருமுறை தரிசியுங்கள். உங்கள் வாழ்வில் தடைக்கல் ஏதும் வரவே வராது.


எங்கே இருக்கு: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இரந்து வெடால் செல்லும் வழியில் குன்னகம் பூண்டியில் இருக்கிறது இந்த முருகன் கோயில்.

எப்படிச் செல்வது: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சென்று அங்கிருந்து வெடால் செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும். குன்னகம்பூண்டி முருகன் கோயில் நிறுத்தத்தில் இறங்கினால் அருகிலேயே உள்ளது கோயில்.

தரிசன நேரம்: காலை 8 முதல் 9 மணி வரை, மாலை 5 முதல் 7 மணி வரை. அர்ச்சகர் வீடு அருகிலேயே இருக்கிறது. அழைத்தால்  நடை திறந்து தரிசனம் செய்து வைக்கின்றனர்.

-ஜெயாப்ரியன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல் முருகன்! Empty Re: கல் முருகன்!

Post by amirmaran Thu Nov 14, 2013 2:52 pm

கல் முருகன்! 103459460 கல் முருகன்! 103459460 கல் முருகன்! 1571444738 கல் முருகன்! 1571444738 கல் முருகன்! 1571444738 கல் முருகன்! 1571444738 கல் முருகன்! 1571444738


அன்புடன் அமிர்தா

கல் முருகன்! Aகல் முருகன்! Mகல் முருகன்! Iகல் முருகன்! Rகல் முருகன்! Tகல் முருகன்! Hகல் முருகன்! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

கல் முருகன்! Empty Re: கல் முருகன்!

Post by jenisiva Thu Nov 14, 2013 6:15 pm

கல் முருகன்! 3838410834 கல் முருகன்! 1571444738 கல் முருகன்! 1571444738 
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

கல் முருகன்! Empty Re: கல் முருகன்!

Post by பாலாஜி Thu Nov 14, 2013 6:39 pm

நல்ல பகிர்வு ...

புகைப்படங்கள் இருந்தால் கொடுங்கள் தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கல் முருகன்! Empty Re: கல் முருகன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum