ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன்

2 posters

Go down

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Empty நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன்

Post by சிவா Sat Nov 09, 2013 2:17 pm

கண்ணதாசன்...
காலத்தின் கைகளில் அதிர்ந்துகொண்டே இருக்கும் கவிதை வீணை, எவ்வளவோ பேர் பருகியும் தீராத சந்த மதுகோப்பை, தேய்பிறை காணாத தேன் தமிழ் நிலவு, கவியரசருக்குக் காலமெல்லாம் காதல் மேல் உறவு.
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P179
மகரந்தச் சொற்களில் கவி பாடிய தென்றல், மரண தேவன் மார்பில் ஏறி விளையாடிய குழந்தை.
வார்த்தைகளில் மட்டுமில்லாமல் வாழ்க்கையிலும் காட்டாறாய் பொங்கிப் பிரவகித்தவர். ‘நான் நிரந்தரமானவன். அழிவதில்லை’ என செருக்காய் சிரித்த சிறுகூடல்பட்டிச் சிங்கம். வாழ்வே தடாலடியான தனி சினிமா... கவிஞரின் வாழ்விலிருந்து இங்கே கொஞ்சம்...

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P181a
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2கண்ணதாசனுக்கு 3 மனைவிகள். 15 பிள்ளைகள். அவர் வீடு முழுக்க எப்போதும் குழந்தைகளால் நிறைந்திருக்கும். குழந்தைகளின் பெயர்கள் சமயங்களில் அவருக்கு மறந்துவிடுமாம். ‘என்னடா இது... எவனுக்கு என்ன பேர் வெச்சோம்னே நினைப்பில்லாம மறந்து போகுது. பேசாம எல்லாத்துக்கும் 1, 2, 3-ன்னு நம்பரை எழுதி மாட்டிட வேண்டியதுதான்’ என்பாராம் சிரித்துக்கொண்டே.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2ஒருமுறை சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது ஷாப்பிங் போயிருக்கிறார். ‘குழந்தைகளுக்கு டிரெஸ் எடுங்களேன்’ என நண்பர்கள் சொல்ல, இவரும் ரொம்பவும் ஆர்வமாக விதவிதமான வண்ணங்களில் ஆடைகளை அள்ளியிருக்கிறார். அருகில் இருந்த நண்பர் பிரமிப்பாக, ‘உங்க எல்லாக் குழந்தைகளோட டிரெஸ் சைஸும் உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க, ‘எவனுக்குத் தெரியும்? எங்க வீட்லதான் எல்லா சைஸ்லேயும் குழந் தைங்க இருக்காங்களே. யாருக்கு எது பொருந்துதோ அதைப் போட்டுக்க வேண்டியதுதான்!’ என்றாராம் அதிர அதிரச் சிரித்தபடி.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P181
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P180e

நேரம் கிடைத்தால், குடும்பத்துடன் மொத்தக் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சுற்றுலா செல்வாராம். அப்படி ஒரு நாள், எல்லோருடனும் பெங்களூருக்குச் சென்றிருக்கிறார். அங்கேயிருந்து திடீரென அப்படியே ஊட்டிக்குப் போயிருக்கிறார்கள். ஊட்டியில் குடும்பத்துடன் இவர் தங்கியிருந்த ஓட்டலில் ஓர் ஊழியர், யாரோ ஒருவரிடம், ‘ஸாரி சார். ரூம் எல்லாமே ஃபுல். ஏதோ ஸ்கூல் லேருந்து டூர் வந்திருக்காங்க’ என்று சொன்னதைக் கேட்டுக் கொந்தளித்திருக்கிறது கவியரசர் குடும்பம். கவிஞரோ சிரித்தபடியே, ‘விடு விடு, அவன் சரியாத் தான் சொல்றான். நான் ஒரு ஸ்கூலையேதானே பெத்திருக்கேன்’ என்றா ராம்.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2முதல் மனைவி பொன்னழகியுடன் முதலிரவு. அவர் கிராமத்துப் பெண்மணி. வீட்டில் பார்த்து வைத்த கல்யாணம். பால் சொம்புடன் வந்த மனைவியை உட்காரவைத்து, ‘நீ எப்படி நடந்துக்கணும் தெரியுமா...’ என்று தன் குடும்பத்தைப் பற்றி, நண்பர்கள், தொழில் என எல்லாம் பேசியிருக்கிறார். பொன்னழகி எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்க, ‘சரிதான்... அடக்கமான பொண்ணா அமைஞ்சுட்டா’ என்று உற்சாகமாகி விட்டார். காலையில் கண்ணதாசன் வெளியே வர, ‘பொண்ணு நல்லபடியா இருந்தாளா? அவளுக்குக் காது மட்டும் கொஞ்சம் சரியா கேட்காது. மத்தபடி ரொம்ப நல்ல பொண்ணு’ என்று சொல்ல, கவியரசருக்கு அதிர்ச்சி. ‘நேத்து நைட் நான் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டி என்னை நம்ப வெச்சுட்டியேடி’ என மனைவியைக் கிண்டலடித்த கவியரசர், ‘கவிஞன் பாடுவது தமிழ்ப் பாட்டு, வந்த பொண் டாட்டியோ கைநாட்டு’ என்றாராம் அழகாக.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P180d
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2முதல் கல்யாணம் நடந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருக்கும். கவிஞரின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன் வீடு இருந்த தெருவிலேயே, ஒரு கட்டடத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் டிராமா ட்ரூப் இருந்தது.

அதில் நடிகையாக இருந்த பார்வதியுடன் காதல். இது என்.எஸ்.கே-வுக்குத் தெரிய வர, ‘அடேய் கவிஞா... எனக்கே தண்ணி காட்டிட்டியே!’ என்று அவரே திருமணம் செய்து வைத்தாராம்!

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P179c
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2கிட்டத்தட்ட ஐம்பதை நெருங்கும் நேரத்தில், மூன்றாவது கல்யாணம். வள்ளியம்மை, கவிஞருக்கு ரசிகையாக அறிமுகமானவர். கல்லூரி மாணவியான வள்ளியம்மை, கவிஞருக்கு அடிக்கடி கடிதங் கள் எழுதுவது வழக்கம். ஒருமுறை அந்தக் கல்லூரியின் வழியாகப் பயணம் போன கண்ணதாசன், திடீரெனக் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டார். நேராக முதல்வர் அறைக்குப் போனவர், ‘வள்ளியம் மையைக் கூப்பிடுங்க’ என வரச் சொல்லி பார்த்துப் பேசினார். அந்த இன்ப அதிர்ச்சி அடுத்தடுத்துத் தொடர, கடித வழியிலேயே நட்பு தொடர்ந்து, காதலாக வளர்ந்து, திருமணத்தில் முடிந்திருக்கிறது.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P179b
வள்ளியம்மையைக் கல்யாணம் செய்துகொண்டு, அண்ணன் வீட்டு வாசலில் நின்றிருக்கிறார் கவிஞர். அண்ணன் பயங்கரக் கோபமாகி, ‘குழந்தைங்க இருக்கும் போது இந்த வயசுல என்னடா இது?’ என டென்ஷனாக, அமைதியாக நின்றிருக்கிறார் கவிஞர். ‘நீயெல்லாம் திருந் தவே மாட்டே. எப்பிடி யாவது போய்த் தொலை’ என அவர் சொன்னதும், ‘அண் ணன் மன்னிச்சுட்டாரு, வா வா வா!’ என வள்ளியம்மையை அழைத்துக் கொண்டு உள்ளே போயி ருக்கிறார் கவிஞர்.
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2எத்தனை துயரமான பொழுது களிலும் தன் சோகம் குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் கவியரசர். அவர் குழந்தைகள் முன்னால் கதறி அழுதது ஒரே ஒரு முறைதான்.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P180c
சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு, பணமெல்லாம் இழந்து நின்ற நேரம். தீபாவளி வந்துவிட்டது. பணத்துக்காக பல இடங்களில் முயற்சி செய்தும் கிடைக்காமல் போகவே, குழந்தை களுக்கு எதுவும் செய்ய முடியாத சூழல். தீபாவளிக்கு முதல் நாள் ஊரே சந்தோஷத்தில் இருக்க, அறைக் குள் படுத்திருந்த கவிஞரிடம் பட்டா சும், புத்தாடைகளும் கேட்டு நின்றிருக் கின்றன குழந்தைகள். அப்படியே அவர்களை அணைத்தபடி உடைந்து போய் அழுதிருக்கிறார் கவிஞர். அன்றைக்கு ஒரு கம்பெனியில் பாட்டு எழுதக் கூப்பிட, ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் இதயத் திலே’ என்று எழுதினார். அந்தப் பாடலுக்காக வாங்கிய பணத்தில் அத்தனை பேருக்கும் புத்தாடைகள் வாங்கினாராம்.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P179a
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2கல்லக்குடி போராட்டத்தில் கண்ணதாசனைச் சிறையில் அடைத்துவிட்டது போலீஸ். சிறையில் இருந்து வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் கவிஞர். அதில், ‘இங்கே ஜெயில்ல இருக்க முடியலை. எனக்கு வயிற்றுப் போக்காக இருக்கிறது. இங்கேயே இருந்தா, செத்துப் போயிருவேன். அதனால், உடனே எனக்கு ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணுங்க’ என எழுதிவிட்டு, கடைசியில், ‘எனக்கு வீட்டில் 20 வெள்ளைப் பணியாரம் செய்து அண்ணனிடம் கொடுத்து விடவும். 20 இல்லை யென்றால் 10கூடப் போதும்’ என எழுதியிருக்கிறார்.

கவிஞருக்கு வெள்ளைப் பணியாரமும் காரச் சட்னியும் அவ்வளவு பிடிக்கும்.


நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2ஒருமுறை சிவாஜி யைப் பார்க்க அவரது இல்லத்துக்குச் சென்றிருக்கிறார் கவியரசர். ‘வாடா கவிஞா...’ என சிவாஜி வாஞ்சையுடன் வரவேற்க, கொஞ்சமும் யோசிக்காமல், சட்டென்று கோபமாகி, ‘என்னடா நடிகா?’ எனக் கேட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்துக் குப் பிறகு இருவரும் கொஞ்ச நாள் பேசிக்கொள்ளவில்லை.
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P180b

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2தன் மகன்களில் கலைவாணன் கண்ணதாசனை கவிஞருக்கு ரொம்பவும் பிடிக்கும். ‘என்னப் பத்தி ஒரு பாட்டு எழுதுங்களேன்’ என்று கலைவாணன் கேட்க, ‘அதான் ஏற்கெனவே எழுதிட்டேனடா... ‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந் தாயோ?’ பாட்டை உனக்காகத்தானே எழுதினேன்’ என்றார் சிரித்துக் கொண்டே. அதைப் பார்த்த மற்ற குழந்தைகள், ‘எங்களைப் பற்றி எழுத மாட்டீங்களா?’ என்று கோபத்துடன் கேட்க, ‘அதுவும் எழுதிட் டேனே.

‘ஒரேயரு ஊரிலே ஒரே யரு ராஜா... ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை. அந்த ஒன்பதிலே ஒன்றுகூட உருப்படி யில்லை’ன்னு வருதுல்ல... அந்தப் பாட்டு உங்களை மனசில் வெச்சு எழுதினதுதான்’ எனச் சிரிக்க வைத்திருக்கிறார்.


நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P180a
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2கண்ணதாசன் காங்கிரஸில் இருந்தார். காங்கிரஸின் அப்போ தைய சின்னம் காளை மாடு. மயிலை மாங்கொல்லையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ‘காளை மாடு சின்னத்தில் வாக்களியுங்கள். நாடு சுபிட்சமாய் இருக்கும்’ என்று ஆதரவு கேட்டுப் பேசினார் கண்ண தாசன். மறுநாள் அதே இடத்தில் தி.மு.க. கூட்டம். அதில் பேசிய கலைஞர், ‘நேற்று என் நண்பர் கண்ணதாசன் இங்கே காளை மாட்டுக்கு ஆதரவு கேட்டுப் பேசினார். அவர் பேச்சைக் கேட்டு காளை மாட்டுக்கு வாக்களித் தால் நாடு நன்றாக இருக்காது. அவருக்குத் தெரியாததல்ல... காளை மாடு கன்று போடாது. அதனால் நாட்டுக்குப் பயனில்லை’ என்றாராம்.

தனது ‘தென்றல்’ பத்திரிகையில் அது பற்றி எழுதிய கண்ணதாசன், ‘நண்பர் கலைஞர் சொல்வது சரிதான். காளை மாடு கன்று போடாது. ஆனால், காளை மாடு இல்லாவிட்டால் பசு என்றுமே கன்று போடாது. அதனால் மக்கள் அனைவரும் ‘காளை மாடு’ சின்னத்துக்கே வாக்களியுங்கள்’ என ரிப்பீட் கவுன்டர் கொடுக்க, அதை கலைஞர் உட்பட அத்தனை பேரும் ரசித்தார்கள்.

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் P180
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Bullet2‘சிவாஜிக்கு அரசியல் தெரியாது’ என்று கண்ணதாசன் ஒரு மேடையில் பேசிவிட்டார். ‘ராமன் எத்தனை ராமனடி’ படப்பிடிப்பில் இருந்த சிவாஜிக்குத் தகவல் தெரியப் படுத்தப்பட்டது. படத்தின் இயக்கு நரை அழைத்த சிவாஜி, ‘இதுக்கு சரியான பதில் சொல்ற மாதிரி ஒரு ஸீன் வைக்கணுமே. அதை எப்படி வைக்கலாம்னு கண்ணதாசனிடமே போய்க் கேளுங்க’ என்று சொல்லி யிருக்கிறார். விஷயம் கண்ணதாசனிடம் செல்ல, சிரித்தாராம். ‘படத்தில் ‘வீர சிவாஜி’ நாடகத்தை ஒரு காட்சியா வெச்சுக்கலாம்’ எனச் சொல்லி, அந்த நாடகத்துக்கான வசனத்தையும் அவரே எழுதிக் கொடுத்தாராம். நாடகத்தில், ‘எனக்கா அரசியல் தெரியாது’ என்று வீர சிவாஜியாக, சிவாஜி பேசிக்கொண்டே வருவதுதான் ஓபனிங் ஸீனே!

 
நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் White_spacer
நா.இரமேஷ்குமார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Empty Re: நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன்

Post by M.M.SENTHIL Sat Nov 09, 2013 2:25 pm

காலத்தால் அழியாத கலைஞன்.
அவரின் பாடல்கள் செவிகளில் கேட்கும்போதெல்லாம் இனிக்கும்.
வாழ்க்கையில் இன்பத்தையும், துன்பத்தையும் ஒரு சேர அனுபவித்த அறிஞன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum