ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு

+2
ayyasamy ram
சிவா
6 posters

Go down

அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Empty அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு

Post by சிவா Thu Nov 07, 2013 11:48 pm

''மூணு நாளா செம காய்ச்சல்... ஜாயின்ட் எல்லாம் வலி பின்னிருச்சு. 'டெங்கு’வா இருக்குமோனு பயந்துட்டேன். நல்லவேளை, செக்கப்ல நார்மல்னு சொல்லிட்டாங்க. தப்பிச்சேன்டா சாமி!'' -'வருஷம் 16’ காலத்தை நினைவுபடுத்தும் சிரிப்பு இன்னும் மின்னுகிறது குஷ்புவிடம். 'தமிழ் சினிமாவின் க்வீன்’ ஆக இருந்தவர், இன்று சினிமாவிலிருந்தே ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், அதுகுறித்த எந்த வருத்தங்களும் இல்லை. வீட்டைச் சுத்தம் செய்வது, பூந்தொட்டிகளைச் சீராக்குவது, உணவு மேஜையை அலங்கரிப்பது என பரபரப்பாகவே இருக்கிறார் 'ஹோம் மேக்கர்’ குஷ்பு.

''தோ... இன்னைக்கு சின்னவளுக்கும் ஃபீவர். காலைல செக்கப் போயிட்டு வந்தேன். மூத்தவ எட்டாவது, சின்னவ ஆறாவது படிக்கிறாங்க. ஒரு அம்மாவா இப்போ நான் அவங்ககூட இருந்தே ஆகணும். இந்த நேரத்துல என்னால் ஷூட்டிங்னு அலைய முடியாது. நானே ஒரு தயாரிப்பாளர், ஒரு இயக்குநரின் மனைவி. அதனால ஒரு நடிகை திடீர்னு ஷூட்டிங் போகலைன்னா, அந்த யூனிட் எவ்வளவு சிரமப்படும்னு எனக்குத் தெரியும். எதுக்குத் தேவை இல்லாம அடுத்தவங்களைக் கஷ்டப்படுத்தணும்னுதான் நானே சினிமாவிலிருந்து ஒதுங்கிட்டேன்!''

''இதே மாதிரி தொடர் சர்ச்சைகள் காரணமா அரசியலில் இருந்தும் ஒதுங்கிட்டீங்...'' - கேள்வியை முடிக்கும் முன்னரே படபடக்கிறார்...

''அரசியலில் இருந்து ஒதுங்கிட்டேன்னு நான் சொன்னேனா? இப்பவும் நான் முழுநேர அரசியலில்தான் இருக்கேன். அறிவாலயத்தில் நடக்கும் எல்லாக் கூட்டங்களிலும் கலந்துக்கிறேன். ஃபாரீன்ல இருந்ததால், நடுவுல ஒரு கூட்டத்தில் மட்டும் கலந்துக்க முடியலை. அரசியல் நிகழ்ச்சிகளில் நான் கலந்துக்கிட்டா, 'குஷ்புவுக்கு அதிக முக்கியத்துவம்’னு சொல்வாங்க. போகலைன்னா, 'குஷ்பு ஒதுக்கப்பட்டுவிட்டார்’னு கிளப்புவாங்க. அட, இதுக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லைங்க!''

''இந்த இரண்டு வருட அரசியலில் சந்தோஷம், துக்கம், வருத்தங்கள்னு நிறையப் பார்த்திருப்பீங்க... அரசியல் பிடிச்சிருக்கா?''

''துக்கம், வருத்தமா? (மென்மையாகச் சிரிக்கிறார்!) அரசியல், எனக்கு இப்போ வரை சந்தோஷம் மட்டும்தான் கொடுத்திருக்கு. ஒரு விஷயம் என்னைக் கஷ்டப்படுத்தினா, நானே அதில் இருந்து விலகிடுவேன். அரசியல்ல நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். இங்கே எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எப்பவும் எந்தப் பலனையும் எதிர்பார்த்து நான் ஒரு விஷயத்தைப் பண்ண மாட்டேன். எதிர்பார்ப்புகள்தான் ஏமாற்றம் தரும். சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கும்போது, இதே மனநிலையோடுதான் வந்தேன். இப்போ புது ஹீரோயின்கள், 'குஷ்பு மாதிரி ஆகணும்’னு சொல்றப்போ நான் எங்க சார்கிட்ட (கணவர் சுந்தர்.சி-யை 'சார்’ என்றுதான் அழைக்கிறார்) 'நான் சினிமால அப்படி என்ன பண்ணேன்?’னு கேட்பேன். இப்போ அதே மாதிரி அரசியலிலும் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதனால, ஜாலியா இருக்கேன்!''

''கட்சிரீதியா ஸ்டாலினோட உங்களுக்கு நேரடிப் பழக்கம் இப்பவும் இருக்கா?''

''ஏன்... அதில் என்ன பிரச்னை? எப்பவும் போல நல்லாத்தான் இருக்கு. எத்தனையோ முறை தளபதியை நேர்ல சந்திச்சிருக்கேன்; பேசியிருக்கேன். 'தீயா வேலை செய்யணும் குமாரு’ பட ஆடியோ ரிலீஸ் அழைப்பிதழைக் கொடுத்துட்டு வந்தேன். சாங்ஸ் கேட்டுட்டுப் பேசினார். எனக்கும் அவருக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. ஆனா, ரெண்டு பேருக்கும் நடுவுல டேர்ம்ஸ் சரியில்லைனு எப்படி நியூஸ் வருதுன்னே தெரியலை. இப்படித்தான் நான் கட்சியில் சேர்ந்தப்போ, எனக்கும் கனிமொழிக்கும் பிரச்னைனு சொன்னாங்க. ஆனா, அதுக்கு முன்னாடி இருந்தே நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸ்னு யாருக்கும் தெரியாது. என் அரசியல் டிராவல், நான் எதிர்பார்த்ததைவிட ஹெல்த்தியா இருக்கு. ஆனா, அதை நிரூபிக்க நான் யார் யார்கிட்டப் பேசுறேன், பழகுறேன்னு உலகத்துக்கு சொல்லிட்டே இருக்கணும்னு அவசியமே கிடையாது. அதெல்லாம் என் பெர்சனல்!''

''அ.தி.மு.க. அரசு, கிட்டத்தட்ட பாதி ஆட்சிக் காலத்தைக் கடந்திருக்கு. இந்த ஆட்சியை எப்படி மதிப்பிடுவீங்க?''

''மக்களை இந்த அளவுக்கு ஏமாற்றும் ஒரு கவர்ன்மென்ட் இந்தியாவிலேயே கிடையாது. எம்.ஜி.ஆர். சமாதிக்கு முன்னாடி இரட்டை இலை வெப்பீங்க. அப்புறம் அது பறக்கும் குதிரையின் விங்ஸ்னு சொல்வீங்க. மினரல் வாட்டர் பாட்டில்ல இரட்டை இலை போடுவீங்க. அப்புறம் அது வெறும் டிசைன்னு சொல்வீங்க. பஸ்ல இலை வரைஞ்சிட்டு, அதுவும் இலை இல்லை. பசுமைச் சின்னம்னு சொல்வீங்க. பப்ளிக் ஒண்ணும் முட்டாள் கிடையாது, நீங்க சொல்றது எல்லாத்தையும் அப்படியே நம்புறதுக்கு!

தலைவரைப் பத்தி, கட்சியைப் பத்தி, தலைவர் குடும்பத்தைப் பத்தி தப்பாப் பேசுறவருக்கு உடனே மினிஸ்டர் போஸ்ட் கொடுப்பது ஹெல்த்தி பாலிடிக்ஸ் இல்லை. தி.மு.க-வை யாராச்சும் திட்டினா, அவங்க உடனே ஜெயலலிதாவின் 'குட்புக்’ல இடம் பிடிச்சிடுறாங்க. இதே தி.மு.க. ஆட்சியில், கோவை செம்மொழி மாநாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு கொடுக்கணும். அப்போ யாரை வேணும்னாலும் நாங்க அனுப்பி இருக்கலாம். ஆனா, தளபதியே நேரில் போய் இன்வைட் கொடுத்துட்டு வந்தார். அப்படி கண்ணியமா பாலிடிக்ஸ் பண்ணத்தான் எங்களுக்குத் தெரியும்.

ஒரு கவர்மென்ட் செஞ்ச நல்லதைப் பத்தி மக்கள்தான் பேசணும். ஆனா, இங்கே நல்லது எதுவும் செய்யாததால, ஏ.டி.எம்.கே. ஆட்கள் எப்பவும் அம்மா புகழ் பாடிட்டே இருக்காங்க! அட, சென்னையில் எந்த ரோட்ல போனாலும் 'அம்மா’ போட்டோஸ்தான். 10 வயசு குழந்தை ஒண்ணு என்கிட்ட கேட்டுச்சு... 'அவங்க வீட்டுல கண்ணாடி இல்லையா? அவங்க முகத்தை அவங்க அதுல பார்த்துக்க மாட்டாங்களா?’னு!

ஏன் இவ்வளவு போஸ்டர்ஸ், எதுக்காக இவ்வளவு பேனர்ஸ்? மத்தபடி இப்போ நடக்கிற ஆட்சியைப் பத்திச் சொல்றதுக்கு வேற ஒண்ணும் இல்லை!''

''சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல்... ஆரம்பிச்சு பல கலைஞர்கள் உதாசீனப்படுத்தப் பட்டார்களே... ஒரு நடிகையா நீங்க அதை எப்படிப் பார்க்கிறீங்க?''

''நான் கேள்விப்பட்ட வரை முதல் வரிசையில் உட்கார்ந்த ரஜினி சாரையும் கமல் சாரையும் எழுப்பி பின்னாடி உட்காரவெச்சிருக்காங்க. 'ஏன் இப்படிப் பண்ணாங்க?’னு கேட்டா, 'அது ஒரு புரோட்டோகால்’னு சொல்றாங்க. மூணாவது தடவை சி.எம்-மா இருக்கிற அவங்களே 'புரோட்டோகால்’ பார்க்கும்போது, ஐந்து முறை முதல்வரா இருந்த தலைவருக்கு புரோட்டோகால் தெரியாதா?

தலைவர் ஆட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ரைட்ல ரஜினி, லெஃப்ட்ல கமல் இருப்பாங்க. ரெண்டு பேருக்கும் நடுவில் தலைவர் உட்கார்ந்து நிகழ்ச்சி முழுக்க சிரிச்சுப் பேசிட்டு இருப்பார். ஆனா, 'அம்மா’வுக்கு பத்தடி தூரம் தள்ளிதான் எல்லாரும் உக்கார்றாங்க. ரஜினியும் கமலும் என்ன கத்தி வெச்சுக்கிட்டு குண்டு போடவா அந்த ஃபங்ஷனுக்கு வந்தாங்க? இல்லையே! ரஜினி, கமல் உட்பட, உண்மையான நிறையக் கலைஞர்கள் அவமானப்படுத்தப்பட்டாங்கனு எல்லாரும் ரகசியமாப் புலம்புறாங்க. தலைவர் ஆட்சியில் ஒரு பிரச்னைனா, எல்லாரும் குரல் கொடுத்தீங்களே... எங்க, இப்போ குரல் கொடுக்களேன் பார்க்கலாம்! ஏன் பயப்படுறீங்க? இதுவே தலைவர் ஆட்சியில் இப்படி ஏதாவது நடந்திருந்தா, என்ன பேச்சுப் பேசி இருப்பீங்க? ஆனா, இப்போ ஏன் யாருமே பேசலை? தி.மு.க. ஆட்சியில் இருந்த சுதந்திரம் இப்போ இல்லை. அதுக்கு அந்த ஃபங்ஷன்தான் ஆதாரம்!''

''ஹன்சிகாவை சினிமா இண்டஸ்ட்ரியில் 'சின்ன குஷ்பு’னு சொல்றாங்களே!''

(சட்டென உஷ்ணமாகிறார்) ''அது ஏன் அப்படிச் சொல்லணும்? நான் எப்பவும் அப்படி யாரையும் சொன்னது இல்லையே. அவங்கவங்க திறமையை மட்டுமே வெச்சு பாராட்டுங்களேன். ஏன் இன்னொருத்தவங்களோட கம்பேர் பண்ணணும்? நான் இப்போ எல்லாப் படங்களும் பார்க்கிறது இல்லை. பார்த்தவரைக்கும் எனக்குப் பிடிச்ச ஹீரோயின் சமந்தா. அழகா இருக்கா... க்யூட்டா நடிக்கிறா. குட் கேர்ள்!''

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Empty Re: அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு

Post by ayyasamy ram Fri Nov 08, 2013 9:25 am

எனக்கும் பிடிச்ச ஹீரோயின் சமந்தா..!!
-
அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு T8KD9iMGTuKHdkjDuPbU+13-samantha6-30
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Empty Re: அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு

Post by raghuramanp Fri Nov 08, 2013 9:57 am

'அம்மா’வுக்கு பத்தடி தூரம் தள்ளிதான் எல்லாரும் உக்கார்றாங்க. ரஜினியும் கமலும் என்ன கத்தி வெச்சுக்கிட்டு குண்டு போடவா அந்த ஃபங்ஷனுக்கு வந்தாங்க? இல்லையே'

அப்படிபோடு அருவாள
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Empty Re: அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு

Post by Muthumohamed Sat Nov 09, 2013 12:13 am

குஷ்புவின் மேல் அம்மாவின் நடவடிக்கை கண்டிப்பாக இருக்குமே புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Mஅம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Uஅம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Tஅம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Hஅம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Uஅம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Mஅம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Oஅம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Hஅம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Aஅம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Mஅம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Eஅம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Empty Re: அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு

Post by M.M.SENTHIL Sat Nov 09, 2013 3:11 pm

அம்மாவுக்கு எதிரான பேச்சா? பாத்து மேடம் பத்திரமா இருங்க.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Empty Re: அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு

Post by ராஜா Sun Nov 10, 2013 11:49 am

கொலைஞனை பற்றி சரியா தெரியாமல் இந்த குச்சுப்பூ கொஞ்சம் ஓவரா ஆடுது.
திமுகவின் அடுத்த பலியாடு கொம்பு சீவி வளர்க்கபடுகிறது, காவு கொடுக்கும் பொது தான் தெரியும் இந்த ஆட்டுக்கு புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Empty Re: அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum