ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐப்பசி மாத ராசி பலன்கள் !

Page 1 of 2 1, 2  Next

Go down

ஐப்பசி மாத ராசி பலன்கள் ! Empty ஐப்பசி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma Sun Nov 03, 2013 7:50 pm

மேஷம்: பொதுவுடைமை சிந்தனையுடைய நீங்கள், அநியாயத்தை தட்டிக் கேட்பதில் வல்லவர்கள். உதவும் குணம் கொண்ட நீங்கள், பலரின் நம்பகத் தன்மையைப் பெற்றிருப்பீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ராசிநாதனான செவ்வாய் 5ல் நிற்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் வந்துபோகும்.

சூரியன் பலவீனமாக இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். வருமான வரி, சொத்து வரி செலுத்துவதில் தாமதம் வேண்டாம். கண், பல்வலி வந்துபோகும். தொண்டைப் புகைச்சல் வரும். கண்டகச்சனி நடைபெறுவதால் மனைவிவழி உறவினர்களின் அன்புத் தொந்தரவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையும் ஏற்படும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால் வாழ்க்கை மீது ஒருவித கசப்புணர்வு வந்து நீங்கும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் அவ்வப்போது குழம்புவீர்கள்.

தோலில் அலர்ஜி, நமைச்சல் வந்து நீங்கும். குருபகவான் 3ம் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஒரே வேலையை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். அரசியல்வாதிகளே! தலைமையின் கட்டளையை மீற வேண்டாம். கோஷ்டிப் பூசலில் சிக்காதீர்கள். கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். மாணவர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். பழைய இடத்தை சிலர் விரிவுபடுத்துவீர்கள். பூ, ஸ்டேஷனரி மருந்து வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்கள் திறமையை பரிசோதிப்பார்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். மேலதிகாரியின் சொந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். விவசாயிகளே! பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். விளைச்சலில் கவனம் செலுத்தப் பாருங்கள். சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

அக்டோபர் 22, 23, 31, நவம்பர் 1, 2, 3, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

நவம்பர் 4ந் தேதி மாலை 5:30 மணி முதல் 5, 6 ஆகிய தேதிகளில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

விருத்தாசலத்திற்கு அருகேயுள்ள மணவாள நல்லூரில் அருளும் கொளஞ்சியப்பரை தரிசியுங்கள். விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரத்ததானம் செய்யுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐப்பசி மாத ராசி பலன்கள் ! Empty ரிஷபம் !

Post by krishnaamma Sun Nov 03, 2013 7:50 pm

வெள்ளையுள்ளம் கொண்ட நீங்கள், கடமையிலேயே கண்ணாக இருப்பீர்கள். எதிரே இருப்பவர்களின் பலம் பலவீனத்தை அறிந்து அதற்கேற்ப காய் நகர்த்துவதில் வல்லவர்கள். செவ்வாயும், குருவும் சாதகமாக இருப்பதால் கடினமான காரியங்களை எளிதாக முடிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். சகோதர, சகோதரிகள் உதவுவார்கள். உங்களின் சுகாதிபதியான சூரியன் 6ல் நீசமாகி ராகுவுடன் சேர்ந்து பலவீனமாக இருப்பதால் ஆரோக்யம் பாதிக்கும். தாயாருடன் மனத்தாங்கல் வரும்.

தாயாரின் உடல் நலத்திலும் அக்கறை காட்டுவது நல்லது. உங்களின் தன, பூர்வ புண்யாதிபதியான புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இல்லாததால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். ராசிநாதனான சுக்கிரன் சாதக மான நட்சத்திரத்தில் செல்வதால் திருமணம் தள்ளிப் போனவர் களுக்கு கூடி வரும். விருந்தி னர்களின் வருகையால் வீடு களைகட்டும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். சனியும், ராகுவும் 6ம் வீட்டில் வலுவாக நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். தந்தை வழியில் ஆதரவு பெருகும். அரசியல் வாதிகளே! கட்சித் தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் எது என்பதை உணர்வீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். மாணவர்களே! வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களை கேளுங்கள். கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசை வெல்வீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். சிலர் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பதிப்பகம், பேன்ஸி ஸ்டோர், உணவு வகைகளால் லாபமடைவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவை யறிந்து கொள்முதல் செய்வீர்கள்.

உத்யோகத்தில் முன்பு உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி இப்போது உங்களை ஆதரிப்பார். உங்களுடைய தொலைநோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். கலைத்துறையினரே! சின்னச் சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். சம்பளபாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! இயற்கை உரங்களால் விலைச்சலை அதிகப்படுத்துவீர்கள். எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். எதிர்பாராத செலவினங்களை சமாளிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

அக்டோபர் 18, 20, 24, 25, 27, 30, நவம்பர் 3, 5, 6, 12, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்:

நவம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் பேச்சால் பிரச்னைகள் வந்து போகும்.

பரிகாரம்:

சென்னை - கும்பகோணம் சாலையில் வடலூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள நற்கருங்குழி எனும் தலத்தில் அருள்பாலிக்கும் சித்தி விநாயகரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐப்பசி மாத ராசி பலன்கள் ! Empty மிதுனம்

Post by krishnaamma Sun Nov 03, 2013 7:51 pm

அஷ்டாவதானியான நீங்கள், ஒரே நேரத்தில் பல வித வேலைகளை திறம்பட செய்வீர்கள். எந்தவிதப் பிரச்னைக்கும் யதார்த்தமான தீர்வு கூறுவதில் திறமையானவர்கள். செவ்வாய், தைரிய ஸ்தானத்தில் நிற்பதால் எதிர்ப்புகளையும், பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். 30ந் தேதி வரை சுக்கிரன் 6ல் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளும், கருத்து மோதல்களும் வந்துபோகும்.

31ந் தேதி முதல் சுக்கிரன் 7ல் அமர்வதால் குடும்பத்தில் ஒரளவு அமைதி திரும்பும். மனைவியின் உடல்நிலை சீராகும். வாகனப் பழுது சரியாகும். மாதப் பிற்பகுதியில் சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதனான புதன் இந்த மாதம் முழுக்க பலவீனமாக இருப்பதால் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. 5ல் சூரியன், சனி, ராகு ஆகிய கிரகங்கள் அமர்ந்திருப்பதால் தூக்கம் குறையும். கெட்ட கனவுகள் வந்து போகும். ராசிக்குள்ளேயே நிற்கும் குருபகவான் யாரிடமாவது சண்டைபோட வேண்டும் என்று யோசிக்க வைக்கும்.

உங்களைப் பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்து புலம்புவீர்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். அரசியல்வாதிகளே! தகுந்த ஆதாரமின்றி எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம். தொகுதி மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப் பாருங்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். மாணவர்களே! அவ்வப்போது மந்தம்,
மறதி வந்து நீங்கும். படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும் என்றாலும் அவர்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கடையை இடமாற்றம் செய்ய வெளியில் கடன் வாங்குவீர்கள். துணி, மூலிகை, பெட்ரோ-கெமிக்கல் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரரை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் குறை கூறுவார்கள்.

சக ஊழியர்கள் யதார்த்தமாக பழகுவதாக நினைத்து உங்கள் குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்பிற்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார். சம்பளப் பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வார்வீர்கள். குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும் சமாளிக்க வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

அக்டோபர் 18, 19, 20, 22, 27, 28, 29, 30, 31, நவம்பர் 5, 6, 7, 8, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்:

நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் எதிலும் பொறுமை காப்பது நல்லது.

பரிகாரம்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்திலுள்ள பைரவரை மறக்காமல் தரிசித்துவிட்டு வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐப்பசி மாத ராசி பலன்கள் ! Empty கடகம்

Post by krishnaamma Sun Nov 03, 2013 7:52 pm

எறும்பைப்போல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படும் நீங்கள், மற்றவர்களையும் பரபரப்பாக இயங்க வைப்பதில் வல்லவர்கள். ஊர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உங்கள் ராசிக்கு முன்னும் பின்னும் யோகாதிபதிகளான குருவும், செவ்வாயும் அமர்ந்திருப்பதால் எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். ஓரளவு பணமும் வரும். ராசிக்கு 4ம் வீட்டில் சூரியன், ராகு, சனி நிற்பதால் வேலைச்சுமை கடுமையாகிக் கொண்டே போகும். ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். சோர்வு, களைப்பால் அவ்வப்போது மந்தமாக காணப்படுவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

வழக்கால் அலைச்சலும், மனஉளைச்சலும் வந்துபோகும். தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்புகள் வரும். தாயாருக்கு சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகள் வரும். தன் வேலையாகும் வரை தன்னை பயன்படுத்திக் கொண்டு பின்னர் கண்டும் காணாமல் விலகுகிறார்கள் என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 30ந் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளை பாக்யமும் கிடைக்கும். பழுதான வாகனம் சீராகும். வீடு, மனை விற்பது நல்ல விதத்தில் முடிவடையும்.

ஆனால், 31ந் தேதி முதல் சுக்கிரன் 6ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். ஈகோ பிரச்னையால் சில காரியங்கள் தடைபடும். வாகனத்தையும் வேகமாக இயக்க வேண்டாம். ஓட்டுநர் உரிமம், வண்டிக்கான இன்சூரன்ஸ் இவற்றையெல்லாம் புதுப்பிக்க தவறாதீர்கள். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற மின்சார சாதனங்கள் பழுதாகும். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு கொண்டு செல்லுங்கள். கட்சியில் மேல்மட்டத்தை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுது உணருவீர்கள்.

கல்யாண முயற்சிகள் தாமதமாகும். மாணவர்களே! வகுப்பறையில் சந்தேகங்களை ஆசிரியரிடம் உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். பங்குதா ரர்களையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளிமாநில வேலைக்காரர்கள் மூலமாக ஆதாயம் உண்டு. வாடிக்கை யாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும்.

விரும்பத்தகாத விவாதங்கள் வரும். மாதத்தின் பிற்பகுதியில் இடமாற்றம் வரும். சக ஊழியர்களைப்பற்றி குறை கூற வேண்டாம். கலைத்துறையினரே! உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். விவசாயிகளே! பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த நிலத்தை மீதிப்பணம் தந்து முடிப்பீர்கள். பழுதான பம்பு செட்டை மாற்றுவீர்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்ட வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

அக்டோபர் 20, 22, 29, 30, 31, நவம்பர் 1, 2, 3, 7, 8, 9, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

நவம்பர் 11,12 ஆகிய தேதிகளில் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

மதுரையிலுள்ள நவநீதகிருஷ்ணனை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐப்பசி மாத ராசி பலன்கள் ! Empty சிம்மம்

Post by krishnaamma Sun Nov 03, 2013 7:54 pm

சர்வாதிகாரியைப்போல் செயல்பட்டாலும் குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பதில் வல்லவர்களான நீங்கள், அன்புக்கு கட்டுப் படுபவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவு களை எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். குரு லாப ஸ்தானத்தில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு இருந்த கூடாப்பழக்கம் விலகும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.

உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் மனைவிவழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். விலை உயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். ராசிநாதன் சூரியன் நீசம் பெற்றதுடன் பாவகிரகங்களின் சேர்க்கைப் பெற்றதால் வேலைச்சுமை அதிகமாகும். தூக்கம் குறையும்.

கண், காது, பல் வலி வந்து நீங்கும். சனியும் ராகுவும் வலுவாக இருப்பதால் வேற்றுமொழிப் பேசுபவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது நெஞ்சில் நிழலாடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசியல்வாதிகளே! பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும். கோஷ்டிப் பூசல்கள் மறையும். கன்னிப் பெண்களே! உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். கலைப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களுக்காக பரிந்து பேசுவீர்கள். புது வாய்ப்புகளும் தேடி வரும். எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வும் உண்டு. கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்பால் எல்லோரின் பாராட்டையும் பெறுவீர்கள். விவசாயிகளே! அயராத உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். புதிய திட்டங்கள் நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

அக்டோபர் 22, 23, 24, 25, 26, நவம்பர் 2, 3, 9, 10, 11, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 18 மற்றும் நவம்பர் 13, 14, 15ந் தேதி காலை 11 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்:

புதுக்கோட்டையிலுள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐப்பசி மாத ராசி பலன்கள் ! Empty கன்னி

Post by krishnaamma Sun Nov 03, 2013 7:55 pm

எடுத்த முடிவில் பின்வாங்காத நேர்மையா ளர்களான நீங்கள், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சமாளிப்பவர்கள். மற்றவர்களின் ரகசியங்களை கட்டிக் காப்பீர்கள். உங்களின் யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. உருட்டி புரட்டி செலவுகளை சமாளிப்பீர்கள். 2ம் வீட்டில் சனி, ராகு, சூரியன் நிற்பதால் பேச்சால் பிரச்னை வரக்கூடும். மற்றவர்களை தாக்கிப் பேச வேண்டாம். அரசாங்க விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வழக்கறிஞரை கலந்தாலோசிக்கத் தவறாதீர்கள்.

சாலைகளை கடக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். செவ்வாய் 12ல் நிற்பதால் எதிர்பாராத செலவுகளும், பயணங்களும் துரத்தும். சகோதர, சகோதரிகளால் தர்மசங்கடத்தில் மூழ்குவீர்கள். சொத்துப் பிரச்னையை பெரிதாக்காமல் சுமுகமாக முடிப்பது நல்லது. சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படக் கூடும். மின்சாரத்தையும் கவனமாகக் கையாளுங்கள். வீடு, மனை விற்கும் போதும் ஒரே தவணையாக பணத்தை கேட்டு வாங்கப் பாருங்கள்.

ஏனெனில் சிலர் முன் பணம் தந்து விட்டு ஆறு அல்லது எட்டு மாதத்திற்குப் பிறகு உங்கள் இடத்தை வாங்கிக் கொள்வதாக இழுத்தடிப்பார்கள். 10ல் குரு தொடர்வதால் இனந்தெரியாத மனக்கவலைகளும், சோர்வும் களைப்பும் வந்து நீங்கும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் வந்துபோகும். மறதியால் தங்க நகைகள், சாவிக் கொத்துக்களை இழந்து விடாதீர்கள். அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டியது வரும். சகாக்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். மாணவர்களே! காலநேரத்தை வீணடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் கேள்வி கேட்க தயக்கம் வேண்டாம். வியாபாரம் மந்தமாக இருக்கும். என்றாலும் சுக்கிரனால் கொஞ்சம் சூடு பிடிக்கும். வேலையாட்களால் நிம்மதி இழப்பீர்கள். பங்குதாரர்கள் சந்தர்ப்ப சூழ்நிலை தெரியாமல் பேசுவார்கள். அனுசரித்துப் போவது நல்லது. புது ஏஜென்சியை யோசித்து எடுங்கள். கல்வி நிறுவனங்கள், பேக்கரி, செங்கல் சூளை வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். மேலதிகாரி உங்களின் செயலை உற்று நோக்குவார். சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். கலைத்துறையினரே! உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். விவசாயிகளே! புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். காய்கறி, பயிர் வகைகளால் லாபமடைவீர்கள். எலித் தொல்லை அதிகரிக்கும். சிக்கனமும், விட்டுக் கொடுக்கும் மனப்போக்கும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:

அக்டோபர் 18, 25, 26, 27, 28, நவம்பர் 3, 5, 6, 7, 8, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 19, 20, 21ந் தேதி நண்பகல் வரை மற்றும் நவம்பர் 15 காலை 11 மணி முதல் 16 ஆகிய தேதிகளில் திட்டமிட்டவை தாமதமாக முடியும்.

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அய்யாவாடி பிரத்யங்கரா தேவியை தரிசித்து வணங்கி வாருங்கள். ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐப்பசி மாத ராசி பலன்கள் ! Empty துலாம்

Post by krishnaamma Sun Nov 03, 2013 7:56 pm

எல்லோருக்கும் செல்லப் பிள்ளைகளான நீங்கள், கடுமையான உழைப்பாளிகள். பாரபட்சமின்றி உதவுபவர்கள். மற்றவர்கள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். லாப வீட்டில் செவ்வாய் நிற்பதால் தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். எதிர்ப்புகள் அகலும். ராசிநாதனான சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் இதமாகவும், இங்கிதமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உங்கள் ராசியிலேயே ராகுவும், சூரியனும் நிற்பதால் வயிறு, தொண்டை வலி வந்துபோகும். அவ்வப்போது அலுத்துக் கொள்வீர்கள்.

முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். தூக்கம் குறையும். ஜென்மச்சனி நடைபெறுவதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். பழைய கசப்பான சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர வேண்டாம். பாதகாதிபதியான புதன் பலவீனமாக இருப்பதால் தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரும். அவருக்கு அறுவை சிகிச்சையும் வரக்கூடும். பணப் பற்றாக்குறையால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். குரு உங்களுக்கு 9ம் வீட்டில் வலுவாக தொடர்வதால் வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கமாவீர்கள்.

அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். கேது 7ல் நிற்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. மனைவி உரிமையுடன் எதையாவது பேசினால் அதை பெரிதாக்கிப் பார்க்க வேண்டாம். அவரின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப்பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள். மாணவர்களே! விளையாட்டில் பதக்கம் பெறுவீர்கள். கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. கன்னிப் பெண்களே!

உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். காதல் கனியும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். கனிவாகப் பேசி பாக்கிகளை வசூலிப்பீர்கள். சிலர் புது கிளைகளை தொடங்குவீர்கள். தேடிக் கொண்டிருந்த தொலைந்துபோன பழைய ஆவணம் ஒன்று கிடைக்கும். உயரதிகாரி உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைப்பார். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் கலைத் திறன் வளரும். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். விவசாயிகளே! மகசூல் இரட்டிப்பாகும். அவ்வப்போது வாய்க்கால் வரப்புச் சண்டை வந்து நீங்கும். மனஉறுதி தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:

அக்டோபர் 18, 20, 27, 28, 29, 30, நவம்பர் 5, 6, 7, 8, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 21ந் தேதி நண்பகல் முதல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள்.

பரிகாரம்:

திருவள்ளூருக்கு அருகேயுள்ள திருநின்றவூர் தலத்தில் அருளும் என்னைப் பெற்ற தாயார் எனும் திருப்பெயரோடேயே அருளும் மகாலட்சுமியை தரிசித்து வாருங்கள். புராதன கோயில்களுக்குச் சென்று உழவாரப்பணியை மேற்கொள்ளுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐப்பசி மாத ராசி பலன்கள் ! Empty விருச்சிகம்

Post by krishnaamma Sun Nov 03, 2013 8:40 pm

நக்கீரன் பரம்பரையில் வந்த நீங்கள், தவறுகளை தயங்காமல் சுட்டிக் காட்டி வழி நடத்துவதில் வல்லவர்கள். வெளிப்படையான கருத்துக் களால் எல்லோரையும் கவரு வீர்கள். குரு எட்டில் மறைந் தாலும் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் சாதுர்யமான பேச்சால் சாதித்துக் காட்டு வீர்கள். 12ல் முக்கிய கிரகங்கள் மறைந்து கிடப்பதால் தவிர்க்க முடியாத, செலவுகள் அதி கரிக்கும். தர்ம சங்கடமான சூழ்நிலைகளும் ஏற்படும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சூரியன் பலவீனமாக இருப்பதால் உத்யோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் வரக்கூடும்.

வேலைச்சுமையும் அதிகமாகும். மூத்த அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவசரப் பட்டு புது வேலைக்கு மாற வேண்டாம். தந்தையாருக்கு சிறுசிறு விபத்துகள் வந்து போகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10ம் வீட்டில் வலு வடைந்திருப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். அதி காரிகளின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வலிய வந்து உதவுவார்கள். கேது வலுவாக 6ம் வீட்டிலேயே தொடர்வதால் போராட்டங்களை சளைக்காமல் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். மறைமுக எதிரிகளால் ஆதாய மடைவீர்கள். மகான்கள், சித்தர்களின் ஆசிகளை பெறுவீர்கள்.

நெருங்கிய உறவினர்களின் பிரச்னைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைக்க உதவிகள் செய்வீர்கள். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கட்சியில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பெற்றோர் உங்களை புரிந்து கொள்வார்கள். மாணவர்களே! யோகா, தியானம் செய்து நினைவாற்றலை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல நட்புச்சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
வியாபாரம் சுமார்தான். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப் பின்மையால் லாபம் குறையும். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. புது ஆர்டர்கள், ஏஜென்சிகளை போராடிப் பெறுவீர்கள்.

வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் ஏதேனும் குறை கூறுவார்கள். புரோக்கரேஜ், ஹோட்டல், எலக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் போராட்டங்கள் மற்றவர்களுக்கு புரியவில்லையே என வருந்து வீர்கள். சக ஊழியர்களால் சில நெருக் கடிகளை சந்திக்க நேரிடும். கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள் விவசாயிகளே! சொத்துப் பிரச்னைகளை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு மகசூலை அதிகப்படுத்த முயற்சி எடுங்கள். எலித்தொல்லை, பூச்சித் தொல்லைகள் வரக்கூடும். உணர்ச்சிவசப் படாமல் காரியம் சாதிக்க வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

அக்டோபர் 19, 20, 22, 29, 30, 31, நவம்பர் 1, 2, 8, 9, 10, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 24, 25 மற்றும் 26ந் தேதி காலை 9 மணி வரை மன உளைச்சல் வந்து நீங்கும்.

பரிகாரம்:

சென்னை - மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். தந்தையிழந்தை பிள்ளைக்கு உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐப்பசி மாத ராசி பலன்கள் ! Empty தனுசு

Post by krishnaamma Sun Nov 03, 2013 8:41 pm

அனைத்துத் துறைகளிலும் வல்ல வர்களான நீங்கள், ஆணித்தரமாக வாதாடுவீர்கள். அதிபுத்திசாலித்தனமாக கேள்விக் கணைகள் தொடுத்து மற்றவர்களை விழிபிதுங்க வைப்பீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் சாதகமாக இருப்பதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து உயரும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். மகளுக்கு வேலை கிடைக்கும். என்றாலும் 5ல் கேது நிற்பதால் பிள்ளைகள் கொஞ்சம் கோபப்படுவார்கள். பாதை மாறிவிடுவார்களோ என்ற அச்சமும் அடிமனதில் வந்துபோகும்.

ராசிநாதனான குரு வலுவாக இருப்பதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். என்றாலும் சப்தமாதிபதி புதன் வலுவிழந்திருப்பதால் மனைவியின் ஆரோக்யம் பாதிக்கும். லாப வீட்டில் முக்கிய கிரகங்கள் நிற்பதால் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பணமும் வரும். வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் கௌரவப் பதவிக்கு, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. தந்தையாரின் ஆரோக்யம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! கட்சியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தலைமையே அதிசயிக்கும்படி சிலவற்றை செய்வீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சியை பெற்றோர் ஆதரிப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் சேர்வீர்கள். மாணவர்களே! சோம்பல் நீங்கி இனி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள்.

வியாபாரம் தழைக்கும். சிலர் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். கடன் பாக்கிகள் வசூலாகும். கடையை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். பழைய வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். சிலர் தனியாகப் பிரிந்து சென்று புதுத் தொழில் தொடங்குவீர்கள். ரியல் எஸ்டேட், சிமென்ட், வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். நீங்களும் பல ஆலோசனைகள் தருவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பளம் உயரும். சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகளால் உற்சாகமடைவீர்கள். விவசாயிகளே! அடகு வைத்திருந்த பத்திரத்தை மீட்பீர்கள். டிராக்டர், களப்பையையெல்லாம் புதிதாக வாங்குவீர்கள். நினைத்ததை நடத்திக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்:

அக்டோபர் 21, 22, 23, 24, நவம்பர் 1, 2, 3, 4, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 26ந் தேதி காலை 9 மணி முதல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஓய்வின்றி உழைக்க வேண்டியது வரும்.

பரிகாரம்:

சிதம்பரத்திலுள்ள தில்லைகாளியை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐப்பசி மாத ராசி பலன்கள் ! Empty மகரம்

Post by krishnaamma Sun Nov 03, 2013 8:43 pm

கடமைத் தவறாதவர்களான நீங்கள், எடுத்த வேலையை திருத்தமாகவும், திறம்படவும் செய்து முடிப்பீர்கள். எதிலும் உண்மையையே விரும்புவீர்கள். உங்களின் யோகாதிபதி சுக்கிரனின் ஆதரவு இந்த மாதம் முழுவதும் உள்ளதால் நெருக்கடிகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பணம் கிடைக்காது. ஆனால், பிரச்னைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அளவிற்கு வருமானம் இருக்கும். புதன் வக்ரமானாலும் சாதகமான வீடுகளில் செல்வதால் வளைந்து கொடுத்துப் போவீர்கள். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். எட்டில் அமர்ந்து உங்களை பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் செவ்வாயால் தூக்கம் குறையும்.

நிம்மதி கெடும். வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது நல்லது. சிறுசிறு விபத்துகள் வந்துபோகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அவருடன் கருத்து மோதல்களும் வரக்கூடும். சொத்து வாங்கும்போது வில்லங்க பத்திரங்களை யெல்லாம் சரி பார்த்து வாங்கவும். சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பதும் நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். 6ல் நிற்கும் குருவால் சிலர் உங்களை தவறாக விமர்சிப்பார்கள். கடன் பிரச்னைகளால் கௌரவக் குறைவு வந்துவிடுமோ என கலங்குவீர்கள். ராசிநாதனான சனி கேந்திரபலம் பெற்றிருப்பதால் சாதிக்க வேண்டுமென்ற நெருப்பு உங்கள் உள்மனதில் அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கும்.

வேற்றுமொழியினர் உதவுவார்கள். சூரியன் 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். அரசால் ஆதாயம் உண்டு. வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்களில் கலந்து கொண்டு முக்கிய நிர்வாகிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். எதிர்காலத் தைப்பற்றியும் யோசியுங்கள். ஆடை, அணிகலன் சேரும். மாணவர்களே! பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். வகுப்பறையில் சக மாணவர்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பீர்கள்.

வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் அதிகரிக்கும். புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்கள் முரண்பாடாகப் பேசுவார்கள். வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். மின்னணு, வாகனங்கள், மூலிகை, கட்டிட வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்களை கோபப்படும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டியது வரும். சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். மூத்த அதிகாரிகளைப்பற்றி குறை கூறாதீர்கள். கலைத்துறையினரே! திரையிடாமல் தடைபட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும். விவசாயிகளே! ஒரே விதமான பயிர்களை சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிரிட முயற்சி செய்யுங்கள். எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

அக்டோபர் 18, 20, 24, 25, 26, 27, நவம்பர் 3, 5, 6, 7, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

விளாத்திகுளத்திற்கு அருகேயுள்ள ஜமீன் கரிசல்குளம் பகளாமுகியை தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளிகளுக்கு உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐப்பசி மாத ராசி பலன்கள் ! Empty Re: ஐப்பசி மாத ராசி பலன்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum