ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதியை வைத்து பிழைக்காதீர்கள் - குஷ்பு

2 posters

Go down

சாதியை வைத்து பிழைக்காதீர்கள் - குஷ்பு  Empty சாதியை வைத்து பிழைக்காதீர்கள் - குஷ்பு

Post by சிவா Sat Nov 02, 2013 1:54 am

அன்று மதியம் தந்தி தொலைக்காட்சியில் அவர் நடத்தும் "அச்சம் தவிர்' படப்பிடிப்பு ரத்தானதால் கொஞ்சம் ரிலாக்ஸ்டாகவே இருந்தார் குஷ்பு. வரவேற்பறையில் 4க்கு 3 சைஸில் கருணாநிதி படம். அதில் நான்கில் ஒரு பங்காக ஸ்டாலின் படம். விளைவுகளைப் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் தம் மனதுக்கு சரியென்று தோன்றுவதைத் தயங்காமல் பேசுபவர் குஷ்பு. அதனால் பல பிரச்னைகளைச் சந்தித்தவர். ஒரு வரையறுக்கப்பட்ட நேர்காணல் போல் அல்லாமல் இயல்பாக அமைந்த உரையாடலிலிருந்து....

"அச்சம் தவிர்' எப்படி போய்கிட்டிருக்கு?

ரொம்ப நல்லா போய்க்கிட்டிருக்கு. வித்தியாசமான தலைப்புகளில் பேசுகிறோம். பெண்கள் மீதான் ஆசிட் வீச்சு, காதலைக் கவிழ்க்கும் சாதிப் பிரச்சனைகள், திருநங்கைகள் என்று சமூகத்தை ஆட்டிப் படைக்கும் பல பிரச்னைகளைப் பற்றிப் பேசுகிறோம். பங்கு பெறுபவர்களின் கருத்துக்கள் மிகப் புதுமையாகவும் வெளிப்படையாகவும் இருக்கின்றன. சிலரது மனக்குன்றுகளில் இருந்து எரிமலை வெடித்துக் கிளம்பியதைப் பார்க்கும்போது, சமூகம் எப்படிப்பட்ட சூழலில் பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பது புரிகிறது.

காதலையும், காதலர்களையும் சாதி மிரட்டுகிறதே?

முன்பெல்லாம் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். இப்போது சாதி மோதல்கள் அதிகமாகிவிட்டது. மோதலுக்குக் காதலும் ஒரு காரணமாகிவிட்டது. நல்ல படிப்பும் வேலைவாய்ப்பும் சமூகத்தைப் பற்றிய புரிதலும் நல்லிணக்கத்தை நாடக்கூடிய மனப்பக்குவமும் வளர வேண்டும். ஒரு தனிமனிதன் பக்தியையும் சதி மதத்தையும் வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். வாசலை விட்டு வெளியில் இறங்கினால், அவற்றை மறந்துவிட்டு இந்தியனாக இருக்க வேண்டும். மதவெறியையும் சாதிவெறியையும் வளர்ப்பது சமூகத்துக்குப் பெரிய தீங்கைக் கொண்டு சேர்க்கும். சாதியை வைத்து யாரும் பிழைப்பு நடத்தக்கூடாது.

திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவு குறித்து குஷ்புவின் கருத்து அரசியல் களத்தில் இருக்கும் தமிழின பண்பாட்டுவாதிகளிடம் கடுமையான எதிர்ப்பை உண்டாக்கிவிட்டது. அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்கம் நடந்தன. அவர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளில் இருந்து சட்டபூர்வமாகத் தம்மை விடுவித்துக் கொண்டுவிட்டார் குஷ்பு. அவரை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்களில் விடுதலை சிறுத்தைகளும் உண்டு. ஆனால் திருமாவளவன் தந்தை இறந்தபோது முதலில் போய் துக்கம் விசாரித்தவர் குஷ்புதான்.

அதுபோன்ற சர்ச்சைகளில் ஒரு பாதுகாப்பு வேண்டுமென்றுதான் தி.மு.க.வில் இணைந்தீர்களா?

நான் அப்போது சொன்ன சில கருத்துக்களை பின்னால் நீதிமன்றங்களே ஒப்புக் கொண்டு இருக்கின்றன. அடுத்து அப்பொழுது நான் ஜெயா டி.வியில் நிகழ்ச்சிகள் செய்து கொண்டு இருந்தேன். அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. பாதுகாப்பு வேண்டுமென்றால், அந்தக் கட்சியிலேயே சேர்ந்திருக்கலாமே! தி.மு.க.வில் சேர்ந்ததற்குக் காரணம் அதன் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாடுதான். தி.மு.க.வில் யாரிடமும் பழிவாங்கும் எண்ணம் கிடையாது. மூடநம்பிக்கைகளை எதிர்ப்பது, பெண்களுக்கு உரிய மரியாதை எல்லாம் தி.மு.க.வில் இருக்கிறது. எந்தப் பதவியையும் எதிர்பார்த்துப் போகவில்லை. அடிமட்டத் தொண்டனாகத்தான் இருக்கிறேன்.

தி.மு.க.வில் கம்ஃபர்டபிளாக இருக்கிறீர்களா?

ஒய் நாட்? ரொம்ப மகிழ்ச்சியோடு இருக்கேன். இப்போ சொல்றேன் கேட்டுக்கங்க. நான் இன்றைக்ம் தி.மு.க., என்றைக்கும் தி.மு.க.

அவசரப்பட்டு ஸ்டேட்மென்ட் கொடுக்காதீங்க என்று சிரித்துக் கொண்டே நாம் சொன்னபோது, அதை மறுத்து, "நான் மனப்பூர்வமாக சொல்கிறேன் சார்' என்றார் குஷ்பு.

அது சரி, கலைஞரிடம் பார்த்து, பிரமிக்கிற ஒரு விஷயத்தைச் சொல்லுங்களேன்?

அவருடைய நினைவாற்றல்தான். வயது 91 என்றாலும் பத்தொன்பது வயது இளைஞனின் புத்திக்கூர்மையோடு கலைஞர் இருக்கிறார்.

கூட்டத்தில் பேசும் அனுபவம் எப்படி?

சார் நமக்கு அவர்களே, இவர்களே என்றெல்லாம் பேச வராது. நண்பர்களிடம் பேசுவது போல் மேடைகளில் பேசுவேன். இதை மிகவும் ரசிக்கிறார்கள்.

திரைப்பட வாய்ப்புகளை மறுக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்?

ஆமாம் சார், உண்மைதான். தொலைக்காட்சித் தொடர் என்றால் நேரத்தை நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், திரைப்படங்களில் நடிப்பதென்றால், வெளியூர் போவது, இரவு ஷூட்டிங் என்றெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும். இரண்டு டீன் ஏஜ் பெண்களின் தாயாராக இருப்பதால் என் கவனத்தை அவர்கள் மீது முழுமையாகச் செலுத்த விரும்புகிறேன். எனவேதான் பட வாய்ப்புகளை மறுக்கிறேன். என் பெண்கள், சப்ஜெக்டுகளில் மார்க் எடுப்பதை விட, அவர்களது கேரக்டர், நடத்தை ஆகியவற்றை நல்லவிதமாக ஷேப் செய்வதற்கு அவர்களது இந்த வயதில் என் நெருக்கமும் இருப்பும் தேவை என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். ஆனால் அதற்காகத் திரைப்படத் துறையை ஒரேடியாக ஒதுக்கி விடவில்லை. ஒரு தயாரிப்பாளராக இருக்கிறேன்.

அரசியலில் நுழையும் பெண்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?

ஏதோ என்னை பெரிய சீனியர் போல நினைத்து அட்வைஸ் சொல்ல வைத்திடாதீங்க. இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காகச் சொல்கிறேன். அச்சத்தை தவிர்த்து மனத்தில் உறுதியோடு உழைப்பை நம்பி அரசியலுக்கு வந்தால், முன்னேற்றம் கண்டிப்பா உண்டு.

பொதுவாழ்க்கையில் வரும் பெண்களை தவறாகப் பார்க்கும் கண்ணோட்டம் இருக்கிறதே?

இந்தக் கண்ணோட்டம் மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும். நமக்கு எப்போதுமே ஒரு மனோபாவம் உண்டு. நம் வீட்டுக் கும்பையைச் சுத்தப்படுத்துவதைவிட அடுத்த வீட்டுக் குப்பையைக் குறித்த விமர்சனம் செய்வோம். நாட்டின் ஜனத்தொகையில் ஐம்பது சதவிகிதம் மேல் இருக்கும் பெண்களில் அரசியலிலும் நிர்வாகத்திலும் உரிய பங்கு கிடைக்கும் வகையில் ஊக்கமளிக்க வேண்டும்.

தினசரி பேப்பரை திறந்தாலே கள்ள உறவு, கணவர் கொலை என்ற செய்திகள் ரொம்பவே டிஸ்டர்ப் செய்கிறதே?

நமது சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் மீடியா இதுபோன்ற சம்பவங்களுக்கு இப்போது அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. அதனாலேயே இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாகிவிட்டது போலத் தோற்றம் தெரிகிறது. சமூகத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் இதுபோன்ற செய்திகளை மீடியாக்கள் புறக்கணிக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். என்று சொன்னவாறே போதும், சார், பை என்று விடை பெற்றுக் கொண்டார் குஷ்பு.

- ஸ்ரீநி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதியை வைத்து பிழைக்காதீர்கள் - குஷ்பு  Empty Re: சாதியை வைத்து பிழைக்காதீர்கள் - குஷ்பு

Post by ayyasamy ram Sat Nov 02, 2013 6:15 am

சமூகத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்
இதுபோன்ற செய்திகளை மீடியாக்கள் புறக்கணிக்க
வேண்டும்...
-
நல்ல கருத்து..
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum