ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Empty பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்

Post by சிவா Wed Oct 30, 2013 5:08 pm

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  1395319_10200552808612217_354290195_n

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள்...! அவரின் வாழ்க்கை வரலாறு சிறு தொகுப்பாய்க் கீழே...!

தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த குடும்பத்தில் அக்டோபர் 30, 1908 -ல் உக்கிரபாண்டித் தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார். இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். குழந்தை முத்துராமலிங்கத்திற்கு இப்போது ஆறாவது மாதம் தவித்து கலங்கியது.

தேவர் திருமகனார் அவர்களுக்கு மாட்டுப் பாலோ ஆட்டுப்பாலோ கொடுக்க விரும்பவில்லை, வைத்தியர் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் அப்போதுதான் அறிவு நன்றாக வளரும் எனத் தெரிவித்தார். பசும்பொன் கிராமம் முழுக்க தாய்மார்கள் தேடப்பட்டார்கள்.

தேடியதில் “மாதா சாந்த் பீவி” தாயாக இருந்தார்கள். அந்த இசுலாமியத் தாய் தன் குழந்தையினும் மேலாக பாலுட்டி வளர்த்தார். இவர்க்கு பால் கொடுத்ததால் பிற்காலத்தில் அந்த தாயின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் தாயை இழந்த பின்பு இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்கத் தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் கல்லுபட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.

இளமைப் பருவத்தில் தேவரவர்கள் குழந்தைசாமி பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.

1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. இவரது தந்தையாரின் அடுத்தடுத்த இரண்டு திருமணங்களின் காரணத்தால் பசும்பொன் திரும்பிய பிறகு வாரிசு உரிமைக்கும் குடும்பப் பாரம்பரிய சொத்துகளுக்கும் இவர் போராட வேண்டியிருந்தது. 1927இல் வழக்குமன்றத்தில் இது சம்பந்தமான தீர்ப்பானது முத்துராமலிங்கத் தேவருக்குச் சாதகமாக முடிந்தது. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டித் தேவர் 1939ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் மறைந்தார்.

1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராகத் தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்புதான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார்.

ஆப்பநாடின் 19 கிராம மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கைது செய்த பின்பு தேவர் மிகப் பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டிப் போராடினார். இந்தப் போராட்டத்தில் தேவருடன் இருந்த Dr.P.வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதக்ருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த சட்டம் பிரித்தானிய அரசினால் நீக்கப்படவில்லை.

குற்றபரம்பரைச் சட்டத்தின் காரணமாக நீதி கட்சியின் அரசின் மீது இருந்த வெறுப்பு உண்டாகியது. இதன் பின் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் 1936ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்தார். பின்னாளில் வந்த தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்குப் பின்னர் தேவர் மாவட்ட வாரியத் தலைவரானார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Empty Re: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்

Post by சிவா Wed Oct 30, 2013 5:09 pm

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  1380723_454510738003704_2062120839_n

ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள் என்று உரைத்த நம் பசும்பொன் முத்துராம லிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள் இன்று !! தேவர் ஜெயந்தியாக தமிழகம் எங்கும் அது கொண்டாடப்படுகிறது.

நெற்றி முழுதும் திருநீறு, நெஞ்சம் முழுதும் இறை பக்தி என்று வாழ்ந்த ஒரு பழுத்த ஆன்மிகவாதி தேவர் அவர்கள். உலக அரங்கில் இந்தியா கம்பீரமாய் எழுந்து நிற்க வேண்டும் என்று நினைத்தவர்களுள் அவரும் ஒருவர். சுதந்திர கணலாக பொங்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களோடு உறுதுனையாக இருந்தவர்களுள் தேவர் ஐயா மிக முக்கியமானவர்.

"திராவிடம்" எனும் பெயரை கண்டெடுத்து அதை வைத்து அரசியல் லாபம் பார்க்கத் தொடங்கிய திராவிட மலங்களை தேவர் ஐயா வெறுத்தார். குள்ளநரி கூட்டமாக உருவெடுத்திருந்த திராவிட முன்னேற்ற கழகத்தை அவர் எதிர்த்தார். திராவிட நாத்திகவாதிகளை "போலிகள்" என்று அவர் வரையறுத்தார்.

ஒரு மனிதர் சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருந்துக் கொண்டு அதே சமயத்தில் அரசியலை ஒதுக்கி விடாமல் மக்களுக்கு எப்படி சேவையாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டு தேவர் பெருமகனார்.

அவரின் பிறந்தநாளான இன்று என்னுடைய பிறந்தநாளும் அமைந்திருப்பது நான் செய்த பாக்கியம். எனக்குவரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தேவர் ஐயாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Empty Re: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்

Post by சிவா Wed Oct 30, 2013 5:10 pm

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  1382067_574780762595025_999352007_n

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 106-வது பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Empty Re: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்

Post by சிவா Wed Oct 30, 2013 5:11 pm

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 106-வது பிறந்த நாளையொட்டி தே.மு.தி.க சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேவரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தபட்டது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  62724_574779859261782_10337675_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Empty Re: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்

Post by சிவா Wed Oct 30, 2013 5:11 pm

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 106-வது பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம்,செல்லூர் கே,ராஜூ,ஆர்.காமராஜ், கலெக்டர் நந்தகுமார், ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  1424341_574780539261714_1414399290_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Empty Re: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்

Post by சிவா Wed Oct 30, 2013 5:11 pm

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 106-வது பிறந்த நாளையொட்டி நந்தனம் சந்திப்பில் உள்ள அவரது சிலை அருகே அமைக்கபட்டு உள்ள அவரது உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  941824_574779342595167_295803248_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Empty Re: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்

Post by சிவா Wed Oct 30, 2013 5:16 pm

தேவர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  3ab97294-5c3b-4dcf-aee3-aaf4c4502e26_S_secvpf

முத்துராமலிங்க தேவரின் 106–வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், தங்கபாலு, தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், நாச்சிகுளம் சரவணன், அரிகிருஷ்ண ரெட்டி, சாந்தி, காஞ்சி பன்னீர்செல்வம், எஸ்.,கே.அன்பழகன், சீதாராமன், சொர்ண சேதுராமன், குமாரமுருகன், தி.நகர் கார்த்திக், கொய்யாதோப்பு ராம்குமார், பட்டுக்கோட்டை ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் காங்கிரஸ் தலைவர் யஷ்வந்த்சாகர், சித்ரா கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்..

பா.ஜனதா சார்பில் மூத்த தலைவர் இல.கணேசன், டாக்டர் தமிழிசை சவுந்தர் ராஜன், சக்கரவர்த்தி, பிரகாஷ், திருப்புகழ், ஆறுமுக ராஜ், கேன்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், மாவட்ட செயலாளர் சி.ராஜா, ஏ.பி.எஸ்.பொன்னரசன், எஸ்.பிரசாத், பாபு ஆகியோர் மாலை அணிவித்தனர்.

லட்சிய தி.மு.க. சார்பில் அதன் தலைவர் டி.ராஜேந்தர், எம்.எம்.ஆர். மதன் மரியாதை செலுத்தினர்.

அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் மணியரசன், தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரிஅருண் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

தமிழக யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷேக்தாவூத் மாலை அணிவித்தார்.

வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியில் உள்ள தேவர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை மண்டல செயலாளர் எம்.ஏ.சேவியர் தலைமையில் பகுதி செயலாளர் முருகேச பாண்டியன், ரஞ்சன், அருள் ராஜ், எட்.ராஜா, மாரிமுத்து உள்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்து சத்ய சேனா சார்பில் மாநில தலைவர் வசந்த குமார் தலைமையில் சீனிவாசன், காந்தி உள்பட அமைப்பின் நிர்வாகிகள் பலர் மரியாதை செலுத்தினர். தேவர் புலிப்படை சார்பில் நிர்வாகிகள் சுரேஷ் காந்தி, நீலகண்டன், ஆதிமூலம், அன்பழகன், நீதிராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினர். தேவர் பேரவை சார்பில் நிர்வாகிகள் செல்லம், சந்திரன், சித்திரை குமார், தர்மராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Empty Re: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்

Post by சிவா Wed Oct 30, 2013 5:31 pm


தி.மு.க. ஆட்சியில் தேவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது: மு.க.ஸ்டாலின் பேட்டி

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Oct/15422dc1-dcfd-4e2d-b0c6-1a4b7380a4a1_S_secvpf.gif

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடைபெற்றது. தி.மு.க. சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 12.25 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:–

பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் அனைத்து சமூக மக்களால் போற்றப்பட கூடியவர். தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்லூரிகளுக்கு பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் பெயர் சூட்டி பெருமை சேர்த்தோம்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் பசும்பொன்னில் அனையா விளக்கு அமைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் தேவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அவர் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு தேவையற்றது. தேர்தலுக்காக இங்கு நாங்கள் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Empty Re: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்

Post by சிவா Wed Oct 30, 2013 5:34 pm


தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'பாராகிளைடிங்'–ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  07ba396a-3103-476d-b942-4c5f2a1db27d_S_secvpf

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாராகிளைடிங் மற்றும் ஆள் இல்லா விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நேற்று தொடங்கி உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன்னில் தேவர் நினைவிடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு தேவரின பக்தர்கள் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்நாள் ஆன்மீக விழாவாக முடிந்த நிலையில் 2–வது நாளான இன்று அரசியல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு, அரசியல் பிரவேசம் போன்றவை சொற்பொழிவாக நிகழ்த்தப்பட்டன. நாளை (30–ம்தேதி) குருபூஜை தினம் என்பதால் அரசியல் கட்சியினர், சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் வந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் தலைமையில் போலீசார் பல பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார்சிங் முகாமிட்டுள்ளார்.

வெளிமாவட்டங்களில் இருந்து டி.ஐ.ஜி.க்கள், கண்காணிப்பாளர்கள், கூடுதல் உதவி கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தின் பதற்றமான பகுதிகள் உள்பட பல பகுதிகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக சிறப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர். இதன் ஒரு முயற்சியாக வானில் பறந்து கண்காணிக்கும் வகையில் பாராகிளைடிங் பாராசூட் வரவழைக்கப்பட உள்ளது. சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த மணிக்கண்ணன், தான் பாராகிளைடிங் மூலம் கண்காணிப்பு பணியை செய்ய உள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகணன் கூறியதாவது:–

பாராகிளைடிங் பாராசூட் இயக்க கற்றுத் தரும் பயிற்சியாளராக மணிக் கண்ணன், தனது பாரா கிளைடிங் பாராசூட்டில் அமர்ந்து கொண்டு வானில் பறப்பார். அவரது தலையில் அணிந்திருக்கும் ஹெல்மெட்டில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தாழ்வாக பறக்கும் அவர் காமிரா மூலம் பதட்டம் ஏற்படும் இடங்கள், கூட்டம், போக்குவரத்து நெரிசல் போன்றவை பற்றி வயர்லெஸ் மூலம் தகவல் கொடுப்பார். அதனை வைத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று குற்ற நிகழ்வுகளை தடுப்பார்கள். இதுதவிர ஆள் இல்லா விமானமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பாரா கிளைடிங் பாராசூட் செயல்பாடு குறித்து அனைவருக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பசும்பொன் செல்பவர் களை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச் சேத்தி, மானாமதுரை வழியாக செல்லும்போது அங்கு அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேமரா பொருத்தப்பட்ட ஆள் இல்லா விமானம் மூலம் அந்த பகுதியில் போலீசார் கண்காணிக்கிறார்கள். இந்த விமானம் மூலம் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முடியும். ரிமோட் மூலம் இந்த விமானத்தை இயக்க சென்னை அண்ணா பல்கலைக்கழக தகவல் தொழில் நுட்ப உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் முதுகலை தகவல் தொழில் நுட்ப மாணவர்கள் 6 பேரும் வந்துள்ளனர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் போலீஸ் பாதூகப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னையில் இருந்தே கண்காணிக்கும் வகையில், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் 'வெப்' காமிராவும் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Empty Re: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்

Post by M.M.SENTHIL Wed Oct 30, 2013 11:15 pm

இந்த நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்  Empty Re: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஏன் இத்தனை தெய்வங்கள் நம்மிடம் - பசும்பொன் தேவர் திருமகனார் விளக்கம்
» பசும்பொன் தேவர் ஜாதி தலைவரா? அவர் ஜாதியை வெறுத்த தலைவர்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum