ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

+4
ராஜா
Muthumohamed
அசுரன்
சாமி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Empty ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by சாமி Sun Oct 06, 2013 6:25 am

சென்னையில் ராமலிங்க அடிகளார் வசித்த வீட்டுத் திண்ணை கழிப்பறையாக மாற்றப்பட்டிருப்பது வேதனையின் உச்சகட்டம் என்று சன்மார்க்க சங்க அன்பர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

ராமலிங்க அடிகளார்
வள்ளலார் ராமலிங்க அடிகள் பிறந்த நாளையொட்டி தி இந்து தமிழ் நாளிதழ் வெள்ளிக்கிழமை கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனைப் படித்த வாசகர் ஒருவர், ராமலிங்கர் வசித்த வீடு பற்றிய தகவலை 'தி இந்து' தமிழ் நாளிதழுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பியிருந்தார். அதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று சேகரித்த தகவல்கள்:

ஏழுகிணறில் வீடு
ராமலிங்க அடிகள் சென்னை பாரிமுனையை அடுத்துள்ள ஏழுகிணறு வீராசாமிப் பிள்ளை தெருவில் உள்ள 39-ம் நம்பர் வீட்டில் தனது 2-வது வயது முதல் 32-வது வயது வரை (கி.பி.1826 முதல் 1858 வரை) வசித்தார். இங்கு தனது 9-வது வயதில் முருகப்பெருமானை நினைத்து தவம் செய்தார்.

காட்சி கொடுத்த முருகப் பெருமான்
ஒருநாள், சுவரில் கண்ணாடியை மாட்டி, மலர் சாத்தி, தீபம் வைத்து அந்தக் கண்ணாடியில் உள்ள தீபத்தை நோக்கி தியானம் செய்து கொண்டிருந்தார் ராமலிங்கர். அப்போது அந்தக் கண்ணாடியில் முருகப் பெருமான் காட்சி கொடுத்தார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

ஆயிரக்கணக்கான பாடல்கள்
இந்த வீட்டின் மாடியில் இருந்துதான் ராமலிங்கர் ஆயிரக்கணக்கான திருவருட்பா பாடல்களை எழுதினார். இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார். கடைசி நாட்களில் இந்த வீட்டில்தான் ராமலிங்கரின் மனைவியும், பின்னர் அவரது தாயாரும் இறைவனடி சேர்ந்தனர்.

மகத்துவம் மிக்க திண்ணை
இந்த வீ்ட்டில் தெருவை ஒட்டி இரும்புக் கதவும், உள்ளே 39 என்ற பித்தளை எண்ணுடன் கூடிய ஒற்றை மரக்கதவும் உள்ளன. இந்த இரண்டு கதவுகளுக்கும் இடையே தெருவில் இருந்து உள்ளே நுழையும்போது வலது பக்கத்தில் ஒரு சிறிய திண்ணை இருந்தது.

ராமலிங்க அடிகளார், சிறுவனாய் இருந்தபோது, தினமும் திருவொற்றியூர் போய்விட்டு இரவு நேரம்கழித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் மரக்கதவை தாழிட்டுவிட்டு, இரும்புக் கம்பி கதவை சாத்தி வைத்திருப்பார்கள். ராமலிங்கர் அந்த இரும்புக் கம்பி கதவைத் திறந்து அங்கிருந்த திண்ணையில் படுத்துத் தூங்குவார்.

ஒருநாள் இரவு பசியோடு வந்து திண்ணையில் படுத்து உறங்கியபோது உமாதேவியார் கிண்ணத்தில் அமுதோடு வந்து, ஒற்றியூர் போய் பசித்தணையோ என்று கேட்டு, உணவளித்தார் என்று திருவருட்பா சொல்கிறது.

மகத்துவம் வாய்ந்த அந்த திண்ணை இன்று கழிப்பிடமாக மாற்றப்பட்டிருப்பது வேதனையின் உச்சகட்டம் என்று சன்மார்க்க அன்பர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

கழிப்பறை அகற்றப்படுகிறது
இந்த வீட்டின் தற்போதைய உரிமையாளரான ஸ்ரீபதி கூறுகையில், எங்கள் தாத்தா 1936ம் ஆண்டு இந்த வீட்டை வாங்கினார். கடந்த 80 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

எங்களுக்கு முன்பு இந்த வீட்டை வைத்திருந்தவர்கள் வலதுபுற திண்ணையை இடித்துவிட்டு அதில் கழிப்பறை கட்டியிருந்தனர்.

ராமலிங்க அடிகளார் இருந்த இடம் என்பதால் அந்த கழிப்பறையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இடதுபுறத்தில் உள்ள பெரிய திண்ணையைத்தான் ராமலிங்க அடிகளார் அதிகம் பயன்படுத்தினார். அந்த திண்ணை தற்போது தனி அறையாக உள்ளது' என்றார். - திஹிந்து
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Empty Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by அசுரன் Sun Oct 06, 2013 11:39 am

அந்த வீட்டை அரசாங்கம் நினைவு இல்லமாக மாற்றியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Empty Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by Muthumohamed Sun Oct 06, 2013 4:30 pm

அசுரன் wrote:அந்த வீட்டை அரசாங்கம் நினைவு இல்லமாக மாற்றியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?
இப்ப வந்து விட்டதே என்ன செய்ய

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Mராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Uராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Tராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Hராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Uராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Mராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Oராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Hராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Aராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Mராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Eராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Empty Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by ராஜா Sun Oct 06, 2013 4:45 pm

இதிலென்ன இருக்கிறது.

இப்படி ஒவ்வொருவரும் தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த / பயன்படுத்தியது என்று அனைத்தையும் அப்படியே வைத்திருந்தால் நாடு என்னவாகும்.

ராமலிங்கடிகளார் இருக்கும் வரை மனதை தூய்மையாக்கும் வழியை சொல்லிக்கொடுத்தார் ,அவர் வாழ்ந்த இடத்தின் மூலம் மனிதனின் உடலை தூய்மையாக்கும் வழியை சொல்லிக்கொடுத்துவிட்டு போயிருக்கிறார் என்று நினைத்துக்கொள்ளவேண்டியது தான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Empty Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by Aathira Sun Oct 06, 2013 4:47 pm

இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார்.
இராமலிங்கர் இல்லறம் நடத்தினாரா????!!!!

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Aராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Aராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Tராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Hராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Iராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Rராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Aராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Empty Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by சிவா Sun Oct 06, 2013 4:55 pm

Aathira wrote:
இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார்.
இராமலிங்கர் இல்லறம் நடத்தினாரா????!!!!
உங்களுக்கு தெரியாதா? எனக்கும் தெரியாது!

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Empty Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by ayyasamy ram Sun Oct 06, 2013 4:56 pm

-
=
ஞானிகள் (சித்தர்கள்) அடக்கம் ஆன ஸதலங்களில்தான்
பெரும்பாலான கோயில்கள் அமைந்துள்ளன....
-
அவ்வாறே வள்ளலாரே வடலூரில் நிறுவிய சத்திய ஞான சபை
இன்றும் சீரும் சிறப்போடும் இயங்கி வருகிறது...
-
அவர் இளமையில் வாழ்ந்த வீட்டை எல்லாம் நினைவு
இல்லமாக மாற்றுவது தேவையில்லாத ஒன்று...
-
அப்படி செய்வது என்றால் தமிழ் நாட்டில் பல ஞானிகள்
வாழ்ந்துள்ளனர்...எல்லோருக்கும் நினைவு இல்லம்
பராமரிக்க இயலாது...
-
ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Txxm
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Empty Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by Aathira Sun Oct 06, 2013 4:57 pm

சிவா wrote:
Aathira wrote:
இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார்.
இராமலிங்கர் இல்லறம் நடத்தினாரா????!!!!
உங்களுக்கு தெரியாதா? எனக்கும் தெரியாது!
எழுதுவது எல்லாம் எழுத்தென்று ஆகிவிட்டது. என்ன செய்ய சிவா? இந்து நாளிதழுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Aராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Aராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Tராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Hராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Iராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Rராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Aராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Empty Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by சிவா Sun Oct 06, 2013 4:59 pm

Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:
இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார்.
இராமலிங்கர் இல்லறம் நடத்தினாரா????!!!!
உங்களுக்கு தெரியாதா? எனக்கும் தெரியாது!
எழுதுவது எல்லாம் எழுத்தென்று ஆகிவிட்டது. என்ன செய்ய சிவா? இந்து நாளிதழுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இப்படித்தான் சிலரது வாழ்க்கை திரித்துக் கூறப்பட்டுவிடுகிறது!

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Empty Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by ayyasamy ram Sun Oct 06, 2013 5:12 pm

அவரது 27-வது வயதில் அக்காள் மகளை திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் திருமண வாழ்க்கையில் ஆர்வம் இல்லாத அவர் ஆன்மிக பாதையில் மட்டும் நாட்டம் செலுத்தினார்
-
மேலும் படிக்க:
http://www.eegarai.net/t95056-topic
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது Empty Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum