Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?
+5
யினியவன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
ரேவதி
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?
வெவ்வேறு தேவைகளுக்கான, ஒரு அடையாள ஆவணமாக இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையைப் பயன்படுத்துகின்றனர். வேலைசெய்யாத மற்றும் வரி தாக்கல் செய்யாத பலர், அடையாள ஆவண தேவைக்காக மட்டுமே இந்த பான் கார்டை வைத்துள்ளனர். இந்த கார்டின் தேவை சில வருடங்களாக அதிகரித்திருப்பதால், ஏராளமானோர் இதைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கின்றனர். இதன் காரணமாக, வருமான வரித் துறை பான் கார்ட் பெறுவதற்கான செயல்முறையை எளிமைபடுத்த முயன்று வருகிறது. ஆரம்ப நாட்களில் இடைத் தரகர்கள், குறிப்பாக சாட்டட் அக்கெளன்டன்டுகள் மூலமே இந்த பான் கார்டை பெறமுடிந்தது, ஆனால் இன்று இலகுவாக ஆன்லைன் மூலம் பான் கார்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணபத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தெளிவான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிமுறைகள் கொடுக்கப்படுவதால், இது மிக எளிமையான மற்றும் இலகுவான செயல்முறையாகும். ஆன்லைன் மூலம் பான் கார்ட் விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் பின்வருமாறு;
இணையத்தளம் வருமான வரி பான் சேவைப் பிரிவின் பின்வரும் இணையத்தள முகரிக்குச் செல்லவும் - https://tin.tin.nsdl.com/pan/
பான் விண்ணப்பப் படிவம்
பான் விண்ணப்பப் படிவம் இது வருமான வரி பான் சேவைப் பிரிவு இணையத்தளத்தின் முதல் பக்கமாகும், இதில் புதிய பான் விண்ணப்பப் படிவம், தகவல் அறிதல், ட்ராக்கிங்க் ஸ்டேடஸ், பான் கார்ட் ரீ-பிரிண்ட் செய்தல் மற்றும் பான் கார்ட் விபரங்கள் மாற்றம் செய்தல் அல்லது திருத்தங்கள் செய்தல் ஆகிய தேர்வுகள் உள்ளன. விண்ணப்பதாரர் தனக்குப் பொருத்தமான ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.
படிவம் 49ஏ
புதிதாக பான் கார்ட் விண்ணப்பம் செய்வதற்கு படிவம் 49ஏ ஐ பயன்படுத்த வேண்டும். https://tin.tin.nsdl.com/pan2/servlet/NewPanApp என்ற இணையத்தள முகவரியில், படிவம் 49ஏ ஐ ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்ய முடியும். கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கவும். ஆன்லைன் மூலம் இந்த படிவம் சரியான முறையில் சமர்ப்பிக்கப் பட்ட பின்னர், இதற்கான அக்னாலேஜ்மென்ட், டிஸ்ப்ளே செய்யப்படும். இதில் 15 இலக்க அக்னாலேஜ்மென்ட் நம்பர் இருக்கும். அடுத்தடுத்த செயல்முறைக்காக இந்த அக்னாலேஜ்மென்டைப் பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆவணங்களை இணைத்தல்
இந்த அக்னாலேஜ்மென்ட் படிவம் வருமான வரித்துறைக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். இதை அனுப்புவதற்கு முன்னர் இதனுடன் முகவரிச் சான்று மற்றும் அடையாள சான்று ஆகிய முக்கிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆவணங்களில் உங்கள் பெயர் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதே போலவே பான் விண்ணப்ப படிவத்திலும் இருக்க வேண்டும். ஆகவே படிவம் 49ஏ ஐ பூர்த்தி செய்யும் போது மிக கவனமாக இருக்கவும்.
புகைப்படம்
சமீபத்தில் எடுத்த இரண்டு கலர் புகைப்படங்களை, இந்த அக்னாலேஜ்மென்ட் படிவத்தில் அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒட்ட வேண்டும். அதே போல் குறிக்கப்பட்ட இடங்களில் கையெழுத்திட வேண்டும். நீங்கள் ஒட்டும் புகைப்படமே உங்கள் கார்டில் பிர்ண்ட் செய்யப்படுவதால், இந்த புகைபடங்கள் அண்மையில் எடுத்ததாகவும். தெளிவானதாகவும் இருக்க வேண்டும்.
இதற்கான கட்டணம் வெறும் ரூ.96
தான் உங்கள் தொடர்பு முகவரி இந்தியாவுக்குள் இருந்தால். நீங்கள் பான் விண்ணப்பத்திற்காக ரூ.96/- கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை பின்வரும் முறைகள் மூலம் செலுத்தலாம் - காசோலை, டிமான்ட் ட்ராப்ட், இன்டர்நெட் பாங்கிங், கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட். தொடர்பு முகவரி வெளிநாட்டு முகவரியாக இருந்தால், ரூ.962/- கட்டணமாக செலுத்த வேண்டும் மற்றும் இந்த தொகை டிமான்ட் ட்ராப்ட் மூலம் செலுத்தபட வேண்டும். ஒரு வேளை, இன்டர்நெட் பாங்கிங், கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலம் செலுத்த விரும்பினால், விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்படும் போதே செலுத்த வேண்டும், இதற்கு பேமென்ட் அக்னாலேஜ்மென்ட் கொடுக்கப்படும். இதை பிரிண்ட் செய்து அக்னாலேஜ்மென்ட் படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
15 நாட்கள் மட்டுமே
ஆகவே அக்னாலேஜ்மென்ட் படிவத்துடன் - புகைப்படங்கள், முகவரிச் சான்று, அடையாளச் சான்று மற்றும் கட்டணதொகை/ கட்டணம் செலுத்தப்பட்டதற்கான சான்று ஆகியவை இணைந்திருக்க வேண்டும். இது விண்ணபித்த தேதியிலிருந்து 15 நாட்களுக்குள், பூனாவிலுள்ள என்எஸ்டிஎல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதை அனுப்பும் போது அஞ்சல் உறையின் மீது ‘அப்ளிகேஷன் ஃபார் பான்- அக்னாலேஜ்மென்ட் நம்பர்' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். கட்டணத் தொகை கிடைத்த பின்னர், என்எஸ்டிஎல், விண்ணப்பத்தை ஃப்ராசஸ் செய்யும் அதாவது காசோலை அல்லது டிமாண்ட் ட்ராஃப் மூலம் கட்டணம் செலுத்தப்பட்டால், பேமென்ட் கிளியர் ஆகும் வரை காத்திருக்க வேண்டும்.
ஆப்ளிகேஷன் டிரக்கிங்
அக்னாலேஜ்மென்ட் படிவத்தை அனுப்பிய பின்னர், ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்ப ஸ்டேடஸ் பற்றி தெரிந்து கொள்ள முடியும். கட்டணம் செலுத்தப்பட்ட விபரங்களையும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். என்எஸ்டிஎல் முகவரிக்கு எழுதுவதன் மூலம் அல்லது 57575 என்ற நம்பருக்கு - என்எஸ்டிஎல்பான் - இடைவெளி - அக்னாலேஜ்மென்ட் நம்பர் டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் ட்ராக்கிங் செய்யும் வசதியை என்எஸ்டிஎல் வழங்குகிறது.
விபரங்களை மாற்றுதல் அல்லது திருத்தம் செய்தல்
உங்களிடம் ஏற்கனவே உள்ள பான் கார்ட் விபரங்களை மாற்றுவதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கான செயல்முறை, புதிய பான் கார்ட் விண்ணப்பம் செய்யும் முறையை ஒத்தது. இதற்கு வருமான வரித்துறையின் பான் சேவைப் பிரிவு இணையத்தள முகப்பில் உள்ள "பான் விபர மாற்றங்கள் அல்லது திருத்தங்கள்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் பான் மாற்ற வேண்டுகோள் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றவும். இந்த பான் மாற்ற வேண்டுகோள் பிரிவிலும், தனிப்பட்ட வழிமுறைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ஆகிய அனைத்தும் கொடுக்கபட்டிருக்கும்.
இனிமேல் ஈசியாக பான் கார்ட் பெறலாம்
ஆகவே நீங்கள் இனிமேல் பான் கார்ட் பெறுவதற்கு வேறு ஒருவரை அல்லது உங்களுக்கு தெரிந்த ஒருவரை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலே கூறப்பட்ட ஸ்டெப்புகளை பின்பற்றி பான் கார்டை இலகுவாக பெற்றுக்கொள்ளுங்கள். மேலே கூறப்பட்டுள்ள நடைமுறைகள் எளிதாக மற்றும் சுயமாக புரிந்து கொள்ளும் விதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. போதிய அறிவுறுத்தல்கள், வழிமுறைகள் மற்றும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாவை ஆகிய அனைத்து விபரங்களும் பான் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது, இணையத்தளத்தில் உங்களுக்கு தெளிவாக கொடுக்கப்படும்.
dinakaran

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?
இன்னிக்கு தான் நீ ஒரு ஆடி-டிட்டடர் போல பதிவு போட்டுருக்கே ரேவதி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?
நானும் இப்படித்தான் வாங்கினேன் ரேவதி சர்வீஸ் ரொம்ப சூப்பர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?
ஆடிட்டர் அம்மா சொல்லிட்டாங்க - வாங்கிடுங்க ஆளுக்கு ரெண்டு கார்டு இன்னிக்கே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?
வாங்கலாம் பாட்டி ஆனால் குறைத்த பட்சம் 2 சான்றுகள் வேண்டும் கடன் அட்டை , வங்கி அறிக்கை , ஓட்டுனர் உரிமம் - பாஸ்போர்ட் அல்லது வோட்டர் ஐடிஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி ரேவ்
ரேஷன் கார்ட் இல்லாம வாங்கலாமா?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?
ஓட்டர் ஐடி, பேங்க் பாஸ்புக் வைத்து வாங்கலாமா?ரேவதி wrote:வாங்கலாம் பாட்டி ஆனால் குறைத்த பட்சம் 2 சான்றுகள் வேண்டும் கடன் அட்டை , வங்கி அறிக்கை , ஓட்டுனர் உரிமம் - பாஸ்போர்ட் அல்லது வோட்டர் ஐடிஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி ரேவ்
ரேஷன் கார்ட் இல்லாம வாங்கலாமா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?
2 கார் வெச்சிருக்கலாம் ஆனால் 2 பான் கார்ட் வெச்சிக்க கூடாதுயினியவன் wrote:ஆடிட்டர் அம்மா சொல்லிட்டாங்க - வாங்கிடுங்க ஆளுக்கு ரெண்டு கார்டு இன்னிக்கே
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?
கொஞ்சம் கடன் குடுத்து கடன் அட்டை குடுங்க - அப்புறம் கடன் அட்டை ஐடியோட பான் கார்டு வாங்கிக்கறேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?
பாங்க் பாஸ் புக் ஓகே என்றுதான் நினைக்கிறேன் ..கூடவே உங்கள் ஸ்கூல் அல்ல்து கல்லூரி சர்டிபிகேட் கொடுங்கள் இன்னும் எளிதாக கிடைக்கும்ஜாஹீதாபானு wrote:ஓட்டர் ஐடி, பேங்க் பாஸ்புக் வைத்து வாங்கலாமா?ரேவதி wrote:வாங்கலாம் பாட்டி ஆனால் குறைத்த பட்சம் 2 சான்றுகள் வேண்டும் கடன் அட்டை , வங்கி அறிக்கை , ஓட்டுனர் உரிமம் - பாஸ்போர்ட் அல்லது வோட்டர் ஐடிஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி ரேவ்
ரேஷன் கார்ட் இல்லாம வாங்கலாமா?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஏழே வழிகளில் ஈசியாக கருப்பு பணத்தை வெள்ளையாக்க........
» ஆதார் /பான் கார்ட் -ஒருவரே பல கார்டுகள் பெறமுடியுமா?
» வாடகைக்கு வீடு கேட்கும் போது பான் கார்ட் எண்ணையும் கேட்டுக்கோங்க...
» நல்ல செய்தி, பொதுவாகவே ஈஸீ(EC - Encumbrance Certificate) எனப்படும் என்கும்பரன்ஸ் சர்டிஃபிக்கட் (வில்லங்க சான்றிதழ்) ஈசியாக கிடைக்கின்றது..
» ஆதார்- பான் இணைப்பு காலக்கெடு முடிவு: பான் அட்டை செயலிழந்தால் என்ன செய்ய வேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|