ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யா யா - திரை விமர்சனம்!

+3
யினியவன்
Muthumohamed
சாமி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யா யா - திரை விமர்சனம்! Empty யா யா - திரை விமர்சனம்!

Post by சாமி Fri Sep 20, 2013 11:07 pm

இது ஒரு படம்! இதுக்கெல்லாம் விமர்சனம் ஒரு கேடா?

இருந்தாலும் நான் பெற்ற துனபம் நீங்களும் படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இதை எழுதுகிறேன்.

காமெடி நினைச்சு இந்த படத்தை எடுத்திருக்காங்க! தொலைக்காட்சி 'டிராமா' எவ்வளவோ பரவாயில்லை. தியேட்டர்ல ஒவ்வொரு ஸீட் பக்கத்திலயும் ஒரு ஆளை நிக்கவச்சு 'கிச்சுகிச்சு மூட்டி' சிரிக்க வச்சிருக்கலாம்.

கதை என்னன்னா ....? நானும் படம் முடியரவரைக்கும் பார்த்துட்டேன். கதை என்னன்னு தெரியலங்க.

இப்ப வர படங்கள்ல வரமாதிரியே இதிலயும் படிக்காத, பொறுப்பில்லாத, தண்ணி அடிக்கிற ஹீரோவாக மிர்ச்சி சிவா, சந்தானத்தோட அறுவை காமெடி (எத்தன படத்துலதான் இந்த வாயா அந்த வாயான்னு கிண்டல் வசனம், காதல் தத்துவம்... சகிக்கல).

இந்தக்கொடுமை போறாதுன்னு 'பவர் ஸ்டார்' வேற.

'டாஸ்மாக் மார்க்கெட்டிங்க்குக்காக இதிலயும் 'டாஸ்மாக் ப்ரமோஷன்' பாடல். அப்பப்ப சோகமாக இருக்கும் போதும், ஜாலியா இருக்கும்போதும் வா மச்சான் சரக்கு அடிக்கலாம்னு வசனம்.

ஒரே ஒரு வசனத்தை பாராட்டலாம்! விஜய்யோட 'தலைவா' படம் வந்தபிறகு நம்ம தமிழ் நாட்டு இளசுகள் நண்பா ன்னு  கூப்பிடறதுக்கு பதிலா 'BRO' ன்னு கூப்பிட ஆரம்பிச்சுருக்காங்க. இந்த படத்துல 'BRO' ன்னா 'BROTHER' ன்னு நினைச்சியாடா 'BROKER' ன்னு அர்த்தம்டான்னு வசனம்!

ஓசியில டிக்கெட் கிடச்சாகூட இந்த படத்தைப் பாக்க போகாதீங்க!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

யா யா - திரை விமர்சனம்! Empty Re: யா யா - திரை விமர்சனம்!

Post by Muthumohamed Fri Sep 20, 2013 11:26 pm

யா யா - திரை விமர்சனம்! 1571444738 யா யா - திரை விமர்சனம்! 1571444738 யா யா - திரை விமர்சனம்! 1571444738



யா யா - திரை விமர்சனம்! Mயா யா - திரை விமர்சனம்! Uயா யா - திரை விமர்சனம்! Tயா யா - திரை விமர்சனம்! Hயா யா - திரை விமர்சனம்! Uயா யா - திரை விமர்சனம்! Mயா யா - திரை விமர்சனம்! Oயா யா - திரை விமர்சனம்! Hயா யா - திரை விமர்சனம்! Aயா யா - திரை விமர்சனம்! Mயா யா - திரை விமர்சனம்! Eயா யா - திரை விமர்சனம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

யா யா - திரை விமர்சனம்! Empty Re: யா யா - திரை விமர்சனம்!

Post by யினியவன் Sat Sep 21, 2013 12:08 am

நல்ல வேளை இன்னிக்கு போறதா இருந்தேன் - தப்பிச்சேன் - நன்றி சாமி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யா யா - திரை விமர்சனம்! Empty Re: யா யா - திரை விமர்சனம்!

Post by சாமி Sat Sep 21, 2013 10:41 am

மாலைமலர் விமர்சனம் !

கடந்த சில ஆண்டுகளாய் காமெடி படங்கள் தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் வெளிவந்துள்ள படம்தான் ‘யா யா’.

ஹீரோ சிவா எந்தவொரு வேலை வெட்டியும் இல்லாமல், அரசாங்க வேலை கிடைத்தால்தான் வேலைக்கு போக வேண்டும் என்ற நோக்குடன் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய நண்பனாக கூடவே சுற்றித் திரிகிறார் சந்தானம். ஒருநாள் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது தன்ஷிகாவைப் பார்க்கும் சிவா, அவர் மீது காதல் கொள்கிறார். அவரைத் தொடர்ந்து பலமுறை தன் காதலைச் சொல்ல பல்வேறு முயற்சிகள் செய்கிறார். ஆனால், அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகின்றன.

இந்நிலையில், தன் மீதான காதலைத் தெரிந்துகொள்வதற்காக மாடலான பவர் ஸ்டாரை கேடயமாக பயன்படுத்துகிறார் சிவா. அதில், சிவாவுக்கு வெற்றி கிடைக்கிறது. மறுமுனையில் சந்தானமும், சந்தியாவும் காதலர்களாக வலம் வருகிறார்கள். இந்நிலையில், ஒருநாள் பெண் கவுன்சிலரான தேவதர்ஷினி மீது சிவா தவறுதலாக மோதி விடுகிறார். இந்த மோதல் தேவதர்ஷினிக்குள் சிவா மீது காதலை வரவழைக்கிறது. சிவாவை எப்படியாவது அடையவேண்டும் என்று நினைக்கிறார் தேவதர்ஷினி. இதற்காக, சிவாவின் நண்பனான சந்தானத்தை அணுகுகிறார். சந்தானம், சிவா ஏற்கெனவே தன்ஷிகாவை காதலிப்பதை அவரிடம் கூறுகிறார். எனவே, தேவதர்ஷினி இவர்களின் காதலை முறிக்க முடிவெடுக்கிறார். இதற்காக சந்தானத்திடம் பணத்தைக் கொடுத்து அவர்களின் காதலை பிரிக்கச் சொல்கிறார்.

இறுதியில், சந்தானம் சிவாவுக்கு துரோகம் செய்தாரா? சிவா, தன்ஷிகா காதல் என்னவாயிற்று என்பதே மீதிக்கதை.

சிவா நடிப்பில் வெளிவந்த ‘தமிழ்படம்’, ‘தில்லுமுல்லு’ ஆகிய படங்களில் இவருடைய நடிப்பு எந்த அளவுக்கு ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்ததோ, அதே அளவுக்கு இந்த படத்திலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். இவருடன் சந்தானமும் சேர்ந்தால் காமெடிக்கு சொல்லவா? வேண்டும். படம் முழுவதும் ஒரே சிரிப்பு மழைதான்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானத்துக்கு இந்த படத்தில்தான் தனியாக ஒரு ஜோடி கொடுத்திருக்கிறார்கள். காதல் சந்தியா இவருடைய காதலியாக வருகிறார். சிறிது இடைவெளிக்கு பிறகு திரையில் பளிச்சிட்டாலும், இந்த படம் அவருக்கு ஒரு ரீ என்ட்ரியாக இருக்கும்.

சிவாவுக்கு ஜோடியாய் தன்ஷிகா, ‘பரதேசி’ படத்தில் பார்த்த தன்ஷிகாவை இப்படத்தில் மாடர்னாக பார்க்கும்போது வியக்க வைக்கிறார். சிவா தன்னைக் காதலிக்கிறார் என்று தெரிந்திருந்தும், அதை கண்டுகொள்ளாமல் அசால்டாக திரியும் இவருடைய நடிப்பு பாராட்ட வைக்கிறது.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் வெளிவந்த பின்னர் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட படம் என்பதால், இப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் வருகிறார். இவர் ஒருசில காட்சிகளே என்றாலும், இவர் செய்யும் காமெடி ரசிக்க வைக்கிறது. மற்றும் சிவாவின் அப்பா-அம்மாவாக வரும் இளவரசு-ரேகா, கவுன்சிலராக வரும் தேவதர்ஷினி ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் ராஜசேகரன் முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே பிரதானமாக வைத்து எடுத்திருப்பதால், படத்தை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். விஜய் எபினேஷர் இசையில் பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும், திரையில் பார்க்கும்போது காலை ஆட்ட வைத்திருக்கிறது. பின்னணி இசையிலும் முன்னேற்றம் தேவை. வெற்றி ஒளிப்பதிவில் பாடல்கள் படமாக்கிய விதம் அருமை.

மொத்தத்தில் ‘யா யா’ பார்க்கலாம்யா!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

யா யா - திரை விமர்சனம்! Empty Re: யா யா - திரை விமர்சனம்!

Post by சாமி Sat Sep 21, 2013 10:45 am

soundcameraaction. விமர்சனம்

சந்தானம் ஹீரோவாய் புரொமோசன் ஆகி செம ஹிட்டடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் வெற்றிக்கு பின் உடனடியாய் ஆரம்பிக்கப்பட்ட படம், அதேபோல சந்தானம், பவர்ஸ்டார் கூட்டணியில் சிவாவையும் சேர்த்துக்கொண்டு.

நீங்கள் இதுவரை பார்த்த படு மொக்கையான படங்களின் லிஸ்ட் எடுங்கள்.. அதில் நம்பர் 1 படத்தை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள். அதைவிட மொக்கையாய் ஒரு படம் இருக்க முடியுமா என கற்பனை செய்து பாருங்கள். இருக்கவே முடியாது என தோன்றும். அப்படியெல்லாம் நிம்மதியாகிவிடாதீர்கள். இருக்கு. அதுதான் இந்த யா யா படம். இதை படம் என்று சொல்வது திரைத்துறையையே அவமானப்படுத்துவது போலாகும்.

கடந்த சில ஆண்டுகளாய் காமெடி படங்கள் தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருக்கின்றன. செல்வராகவன் போன்ற சீரியஸ் டைரக்டர்கள் புலம்பும் அளவுக்கு அவற்றின் தாக்கம் இருக்கிறது.

ரொம்ப பெரிய அப்பாடக்கரான காமெடியெல்லாம் தேவையில்லை.. லைட்டா அங்கங்கே சிரிக்கவச்சா கூட போதும் பாஸூ என ஆடியன்சும் பல காமெடி படங்களை ஓட வைத்து வாழவைத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் கேடிபில்லா, வருத்தபடாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் பெரிய வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதுதான் ட்ரெண்டு போலருக்கு..நாமும் டப்புன்னு ரெண்டு காமெடி ஆர்டிஸ்ட் கால்சீட் வாங்கி அவசர அவரசமாய் ஒரு கதையை ரெடி பண்ணி படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணி கல்லா கட்டலாம்னு ஒரு கூட்டம் வேலை செஞ்சுகிட்டும் இருக்கு. இந்தப் படத்தை எடுத்தவர்கள் அந்த சிந்தனையில் எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. காமெடி படம் எடுக்குறேன்னு நாலஞ்சு காமெடி ஆர்டிஸ்டுங்க கால்சீட் வாங்குனீங்க சரி.. அதுக்கு காமெடி வர்றமாதிரி ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணனும்னு தோனலையா பாஸ்.. ஸ்கிரிப்ட் பேப்பரை வச்சு சூட்டிங் பண்றதுக்கு பதிலா கால்சீட் பேப்பரை நம்பியே படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இதுபோன்ற படங்களின் தயாரிப்பாளர்களை நினைத்தால் கொஞ்சம் பாவமும், நிறைய கோவமும் வருகிறது. சிலபல கோடிகளை செலவழிப்பதற்கு முன் அந்த படத்தின் கதை என்ன, ஸ்கிரிப்ட் ரெடியாகிடுச்சா.. திரைக்கதை காமெடியாய் இருக்கிறதா.. அட்லீஸ்ட் ஒரு நாலு சீன்லயாச்சும் சிரிப்பு வருதான்னு யோசித்து நிதானமாய் படம் எடுக்காமல் ஏதோ அவசரத்திற்கு சூட்டிங் போனால் இப்படிப்பட்ட படங்களை எடுத்து தான் மாட்டிக்கொள்ளவேண்டிய கஷ்டமான நிலை ஏற்படும்.



‘தமிழ்படம்’ ல் ஒவ்வொரு ப்ரேமிலும் சிவாவைப் பார்க்கும் போது சிரிப்பு வரும். தில்லுமுல்லுவில் கூட ஓரளவுக்கு சமாளித்து பாஸாகியிருந்தார். இங்கே ஒவ்வொரு ப்ரேமிலும் எரிச்சலூட்டுகிறார். கூடவே சந்தானமும்.

சிவாவிற்கு ஜோடியாய் தன்ஷிகா.. பாவம். அவர் சிவாவின் மீது காதலில் விழும் போதும் சீரியஸாய் ஏங்கி டயலாக் பேசும் போதும்.. டாஸ்மாக்கில் பால்பாக்கெட்டிற்கு ஏங்கி நிற்பது போலிருக்கிறது.

சந்தியாவிற்கு சந்தானத்திற்கு ஜோடியாய் டீ-ப்ரொமோசன். நல்லாத்தான இருக்காரு, நடிக்கிறாரு.. ஏன் நல்ல சான்ஸ்கள் வரவில்லை என யோசிக்க வைக்கிறார்.

பவர்ஸ்டாரை வைத்து திணிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் எரிச்சல். அவற்றில் பல கதாநாயக ரோல் டெமோ வீடியோ மட்டும் கொஞ்சம் சுமாராய், லேசாய் சிரிப்பூட்டுகிறது.. ஆனா அதுதான் படத்திலேயே டாப் சீன்னா பாத்துக்கங்க..

இந்தப் படத்தின் தரம் தெரிந்தோ என்னவோ இசையமைப்பாளரும் சம்பந்த சம்பந்தமில்லாமல் பின்னனி இசையெல்லாம் போட்டுவைத்திருக்கிறார்.

இயக்குநர் ஜ.ராஜசேகரன் எல்லா விதத்திலும் ஏமாற்றியிருக்கிறார்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

யா யா - திரை விமர்சனம்! Empty Re: யா யா - திரை விமர்சனம்!

Post by யினியவன் Sat Sep 21, 2013 10:49 am

படத்தாயாரிப்பாளர் கொடுத்த காசுக்கு மாலைமலர் யாயான்னு சொல்லி விமர்சனம் எழுதிட்டாணுவ புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யா யா - திரை விமர்சனம்! Empty Re: யா யா - திரை விமர்சனம்!

Post by mbalasaravanan Sat Sep 21, 2013 11:55 am

என்ன இது இப்படி விட விதமா விமர்சனம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

யா யா - திரை விமர்சனம்! Empty Re: யா யா - திரை விமர்சனம்!

Post by ரேவதி Sat Sep 21, 2013 12:05 pm

என்ன இருந்தாலும் சந்தனதிற்காக படத்தை பார்த்து விட வேண்டியதுதான் புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

யா யா - திரை விமர்சனம்! Empty Re: யா யா - திரை விமர்சனம்!

Post by M.M.SENTHIL Sat Sep 21, 2013 12:15 pm

யா யாவை திருட்டு வி.சி.டி யில கூட பாக்க முடியாது. சிவாவை நடிகன் என்று யார் சொன்னார்கள். சும்மா வந்து சும்மா போகிறார். (அதற்கு சம்பளம் மட்டும் வாங்கி கொள்கிறார்). பயங்கர கடி.
இந்த படத்தை பார்ப்பதற்கு பதிலாக நினத்தாலே இனிக்கும் படத்தின் புதிய வெளியீட்டை பார்க்கலாம். பணத்திற்கும், நேரத்திற்கும் கொஞ்சம் மரியாதை இருக்கும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

யா யா - திரை விமர்சனம்! Empty Re: யா யா - திரை விமர்சனம்!

Post by அருண் Sat Sep 21, 2013 12:22 pm

இனிவரும் காலங்களில் சந்தானம் காமெடி டிரெண்டை மாற்றினால் நல்லது.
இல்லன வெறுப்பு தான் வரும்.

யா யா சுத்த போர் யா.. தகவலுக்கு நன்றி சாமி அண்ணா.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

யா யா - திரை விமர்சனம்! Empty Re: யா யா - திரை விமர்சனம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum