ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம்

5 posters

Go down

தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம் Empty தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம்

Post by சிவா Wed Sep 18, 2013 2:38 am

சொல்லாமல் கொள்ளாமல் உயிரை எடுத்துச் செல்லும் நோய்களின் பட்டியலில், "டெங்கு' காய்ச்சலையும் சேர்க்கலாம். கொசுக்கள் கடிக்கும் போது, அதன் உடலில் உள்ள வைரஸ், மனிதர்களுக்குப் பரவுகிறது. அதன் அறிகுறி காய்ச்சல்... கவனிக்காத பட்சத்தில் உயிரிழிப்பு நேர்கிறது.

கடந்தாண்டில் திருநெல்வேலியில் 40 பேரை பலி வாங்கிய, "டெங்கு' தொடர்ந்து மதுரையைச் சுற்றியுள்ள பிற மாவட்டங்களுக்கு வேகமாக பரவியது. தென் மாவட்டங்களில் 80 பேர் வரை இறந்தாலும், மதுரை அரசு மருத்துவமனையில் "டெங்கு' காய்ச்சல் பலி எண்ணிக்கை 35 ஆனது. மதுரையில் மட்டும் 19 பேர் "டெங்கு' காய்ச்சலாலும், 6பேர் மூளைக் காய்ச்சலிலும் இறந்தனர்.தற்போது, மழை துவங்கி, அவ்வப்போது இடைவெளியில் மழை பெய்து வருகிறது. வீடு, ரோடுகளில் தண்ணீர் தேங்கி கொசுக்களை வா... வா...வென்று அழைக்கின்றன. தற்போது, அங்கொன்றும், இங்கொன்றுமாக "டெங்கு' காய்ச்சல் பரவிவருகிறது.

டெங்கு காய்ச்சலை பரப்புவது "ஏடிஸ்' வகை கொசுக்கள். டெங்கு வைரசைத் தாங்கிய இக்கொசுக்கள், பகல் நேரத்தில் மட்டுமே மனிதர்களை கடிக்கும். பருவ மழை காலத்தில் அதிகம் பரவும் இக்காய்ச்சல், ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். இந்தியாவில் இந்நோய் அதிகம் பரவுகிறது.

அறிகுறிகள்

* எலும்பு மூட்டுகளில் வலி
* தொடர் காய்ச்சல், தலைவலி
* குமட்டல், வாந்தி
* கண்ணின் உட்புறத்தில் வலி
* வயிற்றுக் கடுப்பு
* உடல் முழுவதும் அரிப்பு
* பசியின்மை
* தொண்டைப் புண்
* ஈறு, மூக்கில் ரத்தப்போக்கு

இந்த அறிகுறிகள் இருந்தால் தாங்களாகவே மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாக டாக்டரை ஆலோசிக்க வேண்டும்.

பரிசோதனைகள் என்ன:

டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அறியும் பரிசோதனை செய்யப்படும். சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில், வயதிற்கேற்ப 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை தட்டணுக்கள் இருக்க வேண்டும்.இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தால், சம்மந்தப்பட்டவருக்கு டெங்கு காய்ச்சல் இருக்க அதிக வாய்ப்பு இருக்கும். காய்ச்சலை உறுதி செய்யும் மற்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு, கூடவே தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சிகிச்சைகள் தரப்படும்.

எத்தனை நாள் காய்ச்சல்:


டெங்குவில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையால் பாதிக்கப்பட்டோருக்கு, மூன்று முதல் ஏழு நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். இதைத் தவிர, பெரிய பாதிப்பு இருக்காது.காய்ச்சல் குணமாகி, சில நாட்கள் கழித்து, மீண்டும் ஏற்பட்டால் அது இரண்டாவது நிலை. ரத்தம் உறைவதற்கான தட்டணுக்களின் எண்ணிக்கை இவர்களுக்கு குறைந்து விடும். வாய், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தப்போக்கு ஏற்படும்.இதே நிலை முற்றினால், டெங்குவின் மூன்றாம் நிலை என கருதப்படும். இவர்களுக்கு ரத்தப் போக்கின் காரணமாக, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும்.ரத்த அழுத்தம் மாறும். நாடித் துடிப்பு குறையும். மயக்க நிலையை அடையும் அபாயம் ஏற்படும். தோலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தோன்றும்.டெங்கு தாக்கி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டவர்களுக்கு தான் பாதிப்பு அதிகம். உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும்.

பள்ளிகளே எச்சரிக்கை:

வீடு, சுற்றுப்புறம் மட்டுமல்ல... பள்ளி, கல்லூரிகளிலும் "டெங்கு' பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் நிறைய உள்ளன. நிர்வாகம் செய்ய வேண்டியதென்ன?

*கல்வி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

*வகுப்பறை, கழிப்பறைகளில் தூய்மை காக்க வேண்டும். இதற்காக, போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

*குடிநீர்த் தொட்டிகளை இடைவெளியின்றி மூட வேண்டும்.

*தண்ணீர்த் தொட்டிகளில் "அபேட்' மருந்து, அடிக்கடி தெளிக்க வேண்டும்.

*கை கழுவும் இடத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் போது, தண்ணீர் தேங்காமல் கவனிக்க வேண்டும்.

*குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள, பிளாஸ்டிக், பாலிதீன்
பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

*சுகாதாரமான குடிநீர் இல்லையா... மாணவர்களுக்கு "டைபாய்டு', மஞ்சள் காமாலை நோய் வரலாம்.

எது டெங்கு?

ஜி.மாதேவன், குழந்தைகள் நல ஆராய்ச்சித்துறை இயக்குனர், அரசு மருத்துவமனை, மதுரை. வைரஸ் காய்ச்சலுக்கும், அதிக காய்ச்சலுடன் உடல் வலி இருக்கும். ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையும் குறையலாம். இதைத் தாண்டி வயிறுவலி, வாந்தி, தலைவலி, தோலில் சிவப்பு புள்ளிகள் தெரிதல், மலம் கறுப்பாக வெளியேறுதல், உடலில் எந்த துவாரத்தில் இருந்தாவது ரத்தம் கசிதல், கை, கால் குளிர்தல் போன்ற ஏதாவது ஒரு காரணம் இருந்தால் "டெங்கு' காய்ச்சலாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. "டெங்கு' காய்ச்சல் என்றவுடனே பீதியடைய வேண்டியதில்லை. ஒவ்வொருவருக்கும் உடலில் தோன்றும் அறிகுறிகளை வைத்து, அதற்கேற்றாற் போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெரியவர்களை விட, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவர்களுக்கு எளிதில் காய்ச்சல் வருகிறது. ஒருவீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், அதே கொசு மூலம் மற்றவர்களுக்கும் "டெங்கு' பரவ வாய்ப்புள்ளது. ஆனால் மனிதர்கள் மூலம் இக்காய்ச்சல் பரவாது.

தயார் நிலையில் அரசு மருத்துவமனை:

டாக்டர்.எஸ்.வடிவேல் முருகன், அரசு மருத்துவமனை, மதுரைமருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்காதவாறு தினமும் சுத்தம் செய்கிறோம். இரண்டு வார்டுகளில் 80 படுக்கைகளும், குழந்தைகள் வார்டில் 50 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது பருவமழையால், வைரஸ் காய்ச்சல் அதிகமாக உள்ளது. இதுவரை "டெங்கு' காய்ச்சலுக்கு யாரும் சிகிச்சை பெற வரவில்லை. தனியார் மருத்துவமனைகளில், "கார்டு' பரிசோதனையில் வரும் முடிவுகள், சில நேரங்களில் தவறாக இருக்கலாம். புனேயில் உள்ள "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி' மூலம் அனுமதிக்கப்பட்ட மருந்துகள் தான், "எலீசா' பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் வரும் முடிவை கொண்டு தான், "டெங்கு பாசிட்டிவ்' அறியமுடியும்.பொதுமக்களும் காய்ச்சல் என்று வந்தால், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகலாம். இங்கு 24 மணி நேர மருத்துவ வசதி, மருந்துகள், ரத்தம் இருப்பு உள்ளது. எந்தச் சூழ்நிலையையும் சந்திக்கும் வகையில், தயார் நிலையில் உள்ளோம்.

வீடுகளே பிறப்பிடம்:

பி.கே. தியாகி, இயக்குனர் (பொறுப்பு), மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனம், மதுரைநல்ல தண்ணீரில் தான் "டெங்கு' பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. சிறு சிறு பாத்திரங்களில் தண்ணீரைப் பிடித்து வைத்தால், அவை கொசுக்களுக்கு கொண்டாட்டம் தான். தொடர்ந்து மூன்று நாள் சுத்தம் செய்யாத பாத்திரத்தில், கண்டிப்பாக கொசுக்கள் முட்டையிட்டிருக்கும். பாத்திரத்தை வெறுமனே கழுவுவதை விட, அவற்றை தேய்த்து சுத்தம் செய்தால் தான், முட்டைகள் வெளியேறும். தொட்டிகளை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். மழை பெய்யும் போது, வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காதவாறு, பார்த்துக் கொள்ள வேண்டும்.

பப்பாளி இலைச்சாறு பெஸ்ட்:

மதுரை அரசு மருத்துவமனை சித்தமருத்துவப் பிரிவில் "டெங்கு' காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு பப்பாளி இலைச்சாறு மற்றும் நிலவேம்பு குடிநீர் காய்ச்சித் தரப்படுகிறது.

தடுக்கும் வழிமுறைகள்:

*நீர்த்தேக்க தொட்டிகளை மூடி வைத்தல்

*பகலில் ஜன்னல் கதவுகளை அடைத்தல்

*சமையல் அறையில் நீர்தேங்குவதை தவிர்த்தல்

*பாத்திரங்களை உடனுக்குடன் தூய்மை செய்தல்

*உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிதல்

*நீரை சூடுபடுத்தி பருகுதல்

*காய்ச்சல் அறிகுறி வந்ததும், டாக்டரிடம் ஆலோசித்தல்


தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம் Empty Re: தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம்

Post by சிவா Wed Sep 18, 2013 2:40 am

மேலும் டெங்கு பற்றி அறிய:

Dengue காய்ச்சல்
http://www.eegarai.net/t1008-dengue

டெங்கு அறிகுறிகள் என்ன?
http://www.eegarai.net/t90957-topic


தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம் Empty Re: தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம்

Post by ராஜு சரவணன் Wed Sep 18, 2013 11:11 am

பயனுள்ள பதிவு பாஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம் Empty Re: தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம்

Post by mbalasaravanan Wed Sep 18, 2013 11:16 am

ஓஹ் கடவுளே நானும் தென் மாவட்டத்துல இருக்கேன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம் Empty Re: தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம்

Post by ராஜு சரவணன் Wed Sep 18, 2013 11:18 am

mbalasaravanan wrote:ஓஹ் கடவுளே நானும் தென் மாவட்டத்துல இருக்கேன்
டெங்கு பத்தி பூவனை கவிதை ஒன்று எழுத சொல்லுங்கள்... டெங்கு போங்கடா நொங்குனு ஓடி போயிடும் புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம் Empty Re: தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம்

Post by SajeevJino Wed Sep 18, 2013 1:18 pm

எனக்கும் ஒரு தடவை டெங்கு வந்தது ..முதலில் சாதாரண காய்ச்சல் என்று அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் சிகிட்சை எடுத்தேன் ..இரு நாட்களாக காய்ச்சல்குறையவில்லை மாறாக உடலின் சக்தியும் குறைவதை உணர்தேன் ..பிறகு அவர்கள் சிகிட்சைஎனக்கு திருப்தி இல்லாததால் திருவனந்தபுரத்தில் உள்ள KIMS மருத்துவமனையில் 3 நாட்கள் சிகிட்சை எடுத்தேன் .. அவர்கள் சொல்லி தான் டெங்கு என்பதையும் அறிந்தேன்

முதலில் இருந்த மருத்துவமனையில் என்னை வைத்து தான் பலவித ஊசி மருந்துகளை test செய்தனர் ..நல்ல நேரத்திற்கு தான் KIMS சென்றேன் ..இல்லையெனில் என்னை இங்கு காண முடியாது எப்போதோ இறந்திருப்பேன்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம் Empty Re: தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம்

Post by செம்மொழியான் பாண்டியன் Wed Sep 18, 2013 1:27 pm

mbalasaravanan wrote:ஓஹ் கடவுளே நானும் தென் மாவட்டத்துல இருக்கேன்
அட நானும் தான்
நமக்கு எந்த ஊரு?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம் Empty Re: தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum