ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு!

4 posters

Go down

தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு! Empty தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு!

Post by malik Tue Sep 17, 2013 2:59 pm

தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை : ஜெயலலிதா உத்தரவு..!

தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு! Sand-quarry(3)

சென்னை: தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை விதித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் கனிம நிறுவனங்களை ஆய்வு செய்ய, குழு அமைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், அரசாங்கத்திற்கு வருவாயை ஈட்டித் தருவதிலும் கனிமங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கனிமங்களை அரசின் முறையான அனுமதியின்றியோ அல்லது அரசு அனுமதித்த அளவுக்கு மேல் வரம்பு மீறியோ சுரங்க நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக ‘கடற்கரை கனிமங்கள்’, அதாவது ‘Beach Minerals’ எனப்படும் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்றவை எடுக்கப்படுவதாக பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில்,  அரசு உயர் அதிகாரிகளுடன் இது குறித்து கலந்தாலோசித்த நான், தூத்துக்குடி மாவட்டத்தில் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் கனிமக் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வருவாய்த் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையின் கீழ், வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவை அமைத்து, இது குறித்து ஒரு மாத காலத்திற்குள் ஆய்வறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்குமாறு  உத்தரவிட்டேன்.

இது மட்டுமல்லாமல், இந்தச் சிறப்புக் குழுவின் ஆய்வு முடியும் வரை சுரங்க நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், போக்குவரத்து உரிமச் சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு தூத்துக்குடி மாவட்ட கனிமத் துறை உதவி இயக்குநருக்கும் உத்தரவிடும்படி நான் பணித்திருந்தேன்.

எனது உத்தரவின் பேரில், 1957 ஆம் ஆண்டு சுரங்கம் மற்றும் கனிமங்களின் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் பிரிவு 24ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி மேற்படி சிறப்புக் குழு விரிவான ஆய்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொண்டது.  இந்தச் சிறப்புக் குழுவில் முதுநிலை மாவட்ட வருவாய் அலுவலர், நில அளவை இணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இணை இயக்குநர் மற்றும் கூடுதல் தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் ஒருங்கிணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

இதைத் தவிர, முதுநிலை துணை ஆட்சியர், நில அளவை உதவி இயக்குநர், நில அளவை ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் அல்லது உதவி புவியியலாளர் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய மண்டல சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் அடங்கிய ஆறு உப குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தக் குழுக்களும் ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

மேற்படி குழுக்கள், முதற்கட்டமாக 12.8.2013, 13.8.2013 மற்றும் 14.8.2013 ஆகிய நாட்களிலும், இரண்டாவது கட்டமாக 19.8.2013 மற்றும் 20.8.2013 ஆகிய நாட்களிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டன.  மூன்றாவது கட்டமாக, 29.8.2013 மற்றும் 30.8.2013 ஆகிய தேதிகளில் கனிம பகுப்புத் தொழிற்சாலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

4 மாவட்டங்களில் கனிம நிறுவனங்களை ஆய்வு செய்ய குழு

சிறப்புக் குழு மற்றும் உப குழுக்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று (17.9.2013) தலைமைச் செயலகத்தில் என்னிடம் ஆய்வு அறிக்கையினை சமர்ப்பித்தார்.

இதனைப் பெற்றுக் கொண்ட நான், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் கடற்கரை கனிமங்களான கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் ஆகியவற்றை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள குத்தகைதாரர்களால் பெருங்கனிமக் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பதைக் கண்டறியும் வகையில், தமிழ்நாட்டில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள எஞ்சிய 71 பெருங்கனிம குவாரிகளை இந்தச் சிறப்புக் குழு ஆய்வு செய்து உண்மை நிலையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என நான் உத்தரவிட்டுள்ளேன். வருவாய்த் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இந்தச் சிறப்புக் குழு செயல்படும்.

மேலும், மேற்படி ஆய்வு முடியும் வரை, கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் பெருங்கனிம குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும், போக்குவரத்து உரிமச் சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்கவும் உரிய உத்தரவினை பிறப்பிக்கும்படி ஆணையிட்டுள்ளேன்.

இதர மாவட்டங்களில் உள்ள பெருங்கனிமக் குவாரிகள் குறித்த ஆய்வறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், அதன் அடிப்படையில் பெருங்கனிமக் குவாரிகள் குறித்து ஒரு கொள்கை முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

நன்றி : விகடன் செய்திகள்
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு! Empty Re: தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு!

Post by DERAR BABU Tue Sep 17, 2013 3:05 pm

அனைத்தயும் அள்ளிபூட்டு இப்ப தடையா ?................ நடத்துங்க உங்க நாடகத்த .....
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு! Empty Re: தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு!

Post by mbalasaravanan Tue Sep 17, 2013 3:08 pm

அதான் அள்ளி முடிச்சாச்சுல இனி என்ன
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு! Empty Re: தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு!

Post by சிவா Tue Sep 17, 2013 3:49 pm

மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் டெர்ரர் பாபு மற்றும் பால சரவணன்!

தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மணல்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு விட்டன. அதைத் தடுக்கச் சென்ற கிராம மக்களை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி மணல் கொள்ளையர்களுக்கு காவல் புரிந்தனர். தற்பொழுதுதான் தமிழகத்தில் கனிம வளங்கள் குறைந்தது தெரிந்துள்ளது போலும் அம்மையாருக்கு. இனிமேல் எங்கும் அள்ளுவதற்கு மணல் இல்லை என்ற நிலையில் இந்த மாபெரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள் `அம்மை`யார்.

அனைத்துமே அரசியல் நாடகம்! இதில் மக்களுக்குப் பயன் தரும் செயல்கள் எதுவுமில்லை! அனைத்து நடவடிக்கைகளும் அவர்கள் கட்சியினருக்கு லாபம் தரும் நடவடிக்கைகள் மட்டுமே!


தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு! Empty Re: தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு!

Post by mbalasaravanan Tue Sep 17, 2013 5:54 pm

இவர்களையும் நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு! Empty Re: தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணல் அள்ள ஓர் ஆண்டுக்கு தடை..!!
» தமிழகம் முழுவதும் 2500 பள்ளிகளை இடிக்க உத்தரவு
» ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு
» தமிழக அரசு உத்தரவு தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை ........
» திமுகவினரின் மணல் திருட்டால் கனிம வளம் குறைகிறது-ஜெ.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum