ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசக் கல்வியையும் கல்விச் சுதந்திரத்தையும் வென்றெடுப்போம்!

Go down

ஈகரை இலவசக் கல்வியையும் கல்விச் சுதந்திரத்தையும் வென்றெடுப்போம்!

Post by Powenraj Tue Sep 10, 2013 9:19 am

கல்வி அறிவை பெறும் செயற்பாடாகும். எமக்கு முன் இருந்த அனைத்து தலைமுறைகளும் பெற்றுக்கொண்ட அனுபவங்களே அறிவு எனப்படுகிறது. இந்த அனுபவங்கள் அதாவது அறிவு மாபெரும் கடல் போன்ற களஞ்சியமாகும். இந்த களஞ்சியம் மனிதகுலத்தின் மாபெரும் சொத்து. இதற்குள் தான் எம்முன்னோரின் அனுவங்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டிருக்கின்றன. நியுட்டன், ஐன்ஸ்டீன், எடிசன், லிங்கன், ஹெகல், பிளேட்டோ, ஒளவையார்,வள்ளுவர், மார்க்ஸ், சித்தார்த்தன், விவேகாநந்தர், சேகுவேரா, பாரதி, கமல், கலாம், பிரபாகரன் ஏன், குப்புசாமி, வீரகத்தி, ரவி, அகிலா, விஜி என எல்லோரினதும் அனுபவங்களும் அடங்கும். இந்த அனுபவங்களே எமக்கு அறிவாக கிடைக்கின்றன. இந்த அறிவை பெறுவதற்காகவே நாம் கற்கின்றோம்.

எல்லா உயிரினங்களும் பிறந்து, உணவுண்டு. வளர்ந்து, இறந்துவிட மனிதன் மட்டும் இடையில் வேறுபடுகின்றான். உலகை கட்டுபடுத்தி வாழ்கிறான். இவ்வாறு மனிதன் வேறுபட முன்னைய தலைமுறையின் அனுபவங்களை சேமித்து பயன்படுத்துவதே காரணம். ஆகவே மனிதன் தொடர்ந்து முன்னோக்கி செல்ல அறிவை பெற வேண்டும். கற்க வேண்டும். மறுபுறம் மனிதன் சூழலையும் சமூகத்தையும் வெற்றிகரமாக எதிர்க்கொண்டு வாழ இந்த அனுபவங்கள் அதாவது அறிவு குழந்தை பருவத்திலேயே வழங்ப்பட்டு தயார்படுத்தப்படல் வேண்டும். ஆரம்பத்தில் வேட்டையாடுதல் பின் போர்; புரிதல் விவசாயம் செய்தல் என்று வளர்ந்து இன்று பரந்து விரிந்திருக்கின்றது அறிவின் தேவை.


உலகை வெற்றிகரமாக எதிர்க்கொண்டு அதில் தன்னை நிலைநிறுத்தி வாழ இந்த அனுபவம் தானாகவே சமூகத்தில் வழங்கப்பட்டது. இந்த அறிவானது பரந்து விரிவடைய விரிவடைய சமூகத்தினால் தானாகவே கிடைக்கப்பெற்ற அறிவை விட பிரத்தியேகமாகவும் விசேட ஏற்பாடுகளின் மூலமும் விசேடமானவர்களிடமிருந்து பெறவேண்டிய தேவை ஏற்ப்பட்டது.


இதுவே பள்ளிக்கூடங்களையும் ஆசிரியர்களையும் உருவாக்கியது. இவ்வாறு கல்விசாலைகளில் வழங்கப்பட்ட அறிவு கல்வி எனப்பட்டது. ஆரம்பத்தில் அரச வம்சத்தினருக்கும், உயர்குலத்தினருக்குமே இந்த கல்வி கிடைக்கப்பெற்றது. போர்க்கல்வி தேவைக்கருதி அரசால் வழங்கப்பட்டது. தொழில் கல்வி குடும்பம் வழியே பரம்பரை பரம்பரையாக பரவி சாதிகளை தோற்றுவித்தது.


பின் உயர் சாதியினர் கற்க பள்ளிக்கூடங்கள் அரசால் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டன. பணம் படைத்தோர் கற்றனர். இவ்வாறு கல்வி பணம்படைத்தோருக்கும் குறிப்பிட்ட பிரிவினருக்கும் மட்டுபடுத்தபட்டிருந்த சூழலில் தான், ஒடுக்கு முறைகளும் வர்க்கபேதமும் சுரண்டலும் அடிமைத்தனமும் நிறைந்த சமூகமுறையை புரட்சி செய்து மாற்றி சமவுடமை சமூகமுறையை ருசியாவிலே நடைமுறைபடுத்திய லெனின், எமது முன்னோர்களின் அனுபவமான அறிவு அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றும் அதனை பெறுவது அனைவரினதும் உரிமை என்றும் கூறி அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.


எமது முன்னோர்களின் அனுபவமாகிய அறிவு களஞ்சியத்தினை பணத்திற்கு விற்கும் உரிமை யாருக்கும் இல்லை, அது அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும், அதனை அரசே மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டுமென புதுவிதி செய்த லெனின் ருசியாவிலே இலவச கல்வியை அறிமுகபடுத்தினார். சமவுடமை சமூகமுறை உருவாகி இலவச கல்வி அறிமுகபடுத்தப்பட முன் 20ம% ற்கும் குறைவான எழுத்தறிவை கொண்டிருந்த ருசியா தேசம் மிக குறுகிய காலத்திலேயே விண்வெளிக்கு மனிதனை அனுப்புமளவிற்கு வளர்ச்சியடைந்தது.
இந்த வளர்ச்சி ஏற்படுத்திய தாக்கம் எம்போன்ற காலனித்துவ நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் தாக்கம் செலுத்தவே அந்நாடுகளில் முளைவிட்டிருந்த சோசலிசவாதிகளினாலும், அவர்களுக்கு போட்டியாக உருவெடுத்திருந்த மிதவாதிகளினாலும் அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டுமென்பது கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு போராட்ங்கள் முன்னெடுக்கப்பட்டன. சிறிலங்காவில் இலவசகல்விக்காக முதன்முதலில் தீவிரமாக குரல் கொடுத்தவர்கள் அப்போதைய சமசமாஜ கட்சியை சேர்ந்தவர்கள்.


இவர்களின் போராட்டம் வலுபெற்று அது மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே, அப்போதைய கல்வி அமைச்சராகவிருந்த மிதவாதியான சி. டப்ள்யு. சி. கன்னங்கர இலசகல்விக்கான சட்டமூலத்தினை பாராளுமன்றில் சமர்பித்து இலவச கல்வியின் தந்தையானார். தாய் பத்து மாதம் சுமந்து பராமரித்து பிள்ளை பெற்று வளர்க்க ஆண் பெயரில் முதலெழுத்து இட்டு இலகுவாக தந்தையாகிவிடுவது போல். இவ்வாறு இலவசக்கல்வி சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்த வேளை கொழும்பு றோயல் கல்லூhயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அப்போதைய பிரதமரான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த டீ.எஸ். சேனநாயக்க "இலவசகல்வி நடைமுறைக்கு வந்தால் எமது ஆதிகத்தை இழந்து விடுவோம்" என்று கூறினார். அவர் "எமது" என்று குறிப்பிட்டது அவர் சார்ந்திருந்த சிறிலங்காவின் முதலாளி வர்க்கத்தினை ஆகும்.


இவ்வாறு டீ. எஸ் போன்ற பலரின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியிலும் அப்போதிருந்த இடதுசாரிகளின் தீர்கமான செயற்பாடுகளினால், சிறிலங்காவில் இலவச கல்வி நடைமுறைக்கு வந்தது. அன்றைய இடதுசாரிகள் கல்வியை பெறுவது அனைவரினதும் உரிமை அதனை யாரும் விற்கவோ சொந்தம் கொண்டாடவோ முடியாது என்றதன் அடிப்படையிலும் மனிதன் வாழ்க்கை சவாலை வெற்றிகொள்ள வாழ தயாராக அறிவை பெற வேண்டும் என்றதன் அடிப்படையிலும் சிறிலங்கா மக்களுக்கு இலவச கல்வியினை கிடைக்க செய்தனர். இதனை போன்று தான் இலவச மருத்துவம், குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து என்பனவும் நடைமுறைக்கு வந்தன. இந்த மூன்றின் காரணமாக தான் சிறிலங்கா அரசின் பெயரில் சோசலிசமும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.


ஆனால், இலவச கல்வி பயன்படுத்தபட்டதோ வேறு விதமாக தான். பொதுவாக ஒர் முதலாளிதுவ அரசோ அல்லது எம் போன்ற அரைமுதலாளித்துவ நாடுகளின் அரசோ தன் மக்களுக்கு கல்வியை வழங்குவதில் இரண்டு நோக்கங்கள் இரக்கும். முதலாவது நடைமுறையிலிருக்கும் பொருளாதார முறைக்கு தேவையான தொழிலாளர்களை உருவாக்கி கொள்ளல். இரண்டாவது நடைமுறைக்கு ஏற்றாற் போல் கல்வியூடாக கருத்தியலை பரப்பி மக்களை வழிபடுத்தல்.


விளங்கும்படி சொல்வதென்றால் நடைமுறையிலிருக்கும் சமூகமுறைமைக்கு தேவையான வகையில் மக்களை அடிமையாக்கி கொள்ளல். இதனை கல்வி திட்டத்தினை ஆழமாக ஆராய்ந்தோமானால், முழு கல்வி திட்டமும் இதற்கேற்றாற்போல் கவனமாக தயாரிக்கப்பட்டிருப்பதனை காணலாம். பொலிஸ், இராணுவம், நீதிமன்றம் போன்ற அடக்கமுறை கருவிகளால் அடக்கி ஆள்வதினை விட கருத்தியல் கருவிகளால் அடிமைபடுத்துவது இலகுவானதும் எதிர்ப்பில்லாததுமாகும்.


இதற்குள் எம் போன்ற அரைமுதலாளித்துவ நாடுகளின் கல்வி திட்டத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் செல்வாக்கும் தாக்கம் செலுத்தும். ஏகாதிபத்திய நாடுகளிற்கு தன் சுரண்டலை நடத்த ஏனைய நாடுகளின் பொருளாதார சுயாதீன தன்மையை வீழ்த்துவது அவசியமாகும். இதற்காகவே உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் செயற்படுத்தப்படுகின்றன. இன்றைய எமது கலவி முறையானது முழுமையாக மேற்குறித்த இருநிறுவனங்கள் மூலமே வழிநடத்தப்படுகின்றது. இவர்களின் ஆலோசனையின் பெயரிலேயே கலைத்துறையானது எமது கல்வி முறைமைக்குள்ளிருந்து படிபடியாக அகற்றப்பட்டு வருகின்றது. கலையானது நாட்டின் சுயாதீன தன்மையின் பிரதான கூறாகும்.


எம் நாட்டிற்கு அதிகளவு கடனை வழங்கும் நிறுவனங்கள் கடன் வழங்கும் போது அரசின் செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரித்து காட்டுமாறு நிபந்தனை விதிக்கின்றன. இதன் பிரகாரம் இன்றை அரசாங்கம் இந்நிபந்தனையை நிறைவேற்ற கல்வியை தனியார் மயமாக்கி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்த திட்டம் போட்டு செயற்படுகிறது. கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சி 1977 ஆம் ஆண்டு தாராளமய (திறந்த) பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு ஆரம்பமாகி விட்டது.


தாராளமயத்தின் இயல்பு தனியார் மயமாக்கல் தான். எனினும் மாணவர்களின் எதிர்ப்பு போராட்டம் நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சி, யுத்தம் என்பன தராளமய பொருளாதாரத்தினை சரியாக நடைமுறைபடுத்தும் வாய்ப்பினை வழங்கியிராமையினால் கல்வி தனியார் மயமாக்கல் பெரிதாக இடம்பெறவில்லை. யுத்தம் முடிந்த பின் தாராளமய பொருளாதாரம் வேகமாக நடைமுறைபடுத்தபடுவதோடு கல்வி தனியார் மயமாக்கப்படுவதும் வேகமாக இடமபெறுகின்றன.
இதன் முதற்கட்டமாக கல்வியை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு படிபடியாக விலகிக்கொள்கிறது. உலகளவில் நாட்டின் தேசிய உற்பத்தி வருமானத்தில் 6% கல்விக்காக ஒதுக்கபடல் வேண்டும் என்பது யுனெஸ்கோ நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அளவுபிரமானமாகும்.


சிறிலங்காவும் இதனை ஏற்றுக்கொண்டு கைச்சாத்திட்டுள்ளது. எனினும் கடந்த வருடம் 1.8% தான் ஒதுக்கப்பட்டது. இதுவரை ஒதுக்கப்பட்டதிலேயே இது தான் குறைந்த தொகையாகும் (அட்டவனை 01). இதன் காரணமாக பாடசாலை கல்வி வீழ்ச்சியடைந்து வருகின்றது. தற்போது வரை நாட்டில் வாரத்திற்கு ஒரு பாடசாலை வீதம் மூடப்படுகிறது. கடந்த ஆறு வருடங்களில் 350ற்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகள் மூடப்படல், பாடசாலைகள் செயலிலந்து செல்லுதல், பெற்றோர்களிடம் பணம் அறவிடல், ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமை, ஆசிரியர் நியமனம் குறைவடைதல், பாடசாலைக்கல்வி வீழ்ச்சியடைதல், தனியார் மேலதிக வகுப்பு கல்வி மேலும் மேலும் வளர்ச்சியடைதல் என மேலும் பிரச்சினைகளை உருவெடுத்துள்ளன. அரச அல்லது தனியார் துறையில் பணியாற்றுபவர்க்கு உயர்தரம் அல்லது சாதாரண தரம் அல்லது புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகள் இருப்பார்கள் ஆயின், இப்பிரச்சினைகளை அனுபவத்தினூடாக தெளிவாக கூறுவார்கள்.


அவர்களின் சம்பளத்தில் குறிப்பிடக்கூடிய அளவு மேலதிக வகுப்புகளின் கட்டணங்களுக்காகவும், பாடசாலைகளில் அடிக்கடி அறவிடப்படும் கட்டணங்களிற்காகவும் செலவாவதை கூறுவார்கள். இந்த செலவுகளை ஈடுசெய்ய முடியாத விவசாயிகள், மீனவர்கள், தினக் கூலி தொழிலாளர்கள், தோட்ட தொழிலாளர்கள் தம் பிள்ளைகளை, நிறைவு செய்திட முன்பே பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலக்கிட நேரிடும். கடந்த வரலாற்றில் நிலவிய போட்டி தன்மையின் காரணமாக உயர்தர வகுப்பு மாணவர்களின் திறமை வேகமாக அதிகரித்தது, (2007ம் ஆண்டு முதல்தடவையாக 3 A சித்தி பெற்ற 153 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத நிலை வரை சென்றது).


எனினும் அதற்கீடாக பல்கலைக்கழக அனுமதி அதிகரிக்கப்படவில்லை. அட்டவனை இல.02 ஜ பார்க்கவும். இதற்கு பிரதானமான காரணமாக அமைவது கடந்த 35 வருடங்களாக கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படுவதால் பல்கலைக்கழகங்கள் வளர்ச்சியடையாமல் ஒருமட்டத்தினுள்ளேயே நிற்கும் நிலையாகும். ஆகவே அரசு இடைவெட்டும் நிதி ஓதுக்கீட்டினால் துண்டு விழும் தொகையினை சுமக்கவேண்டிய பொறுப்பு பெற்றோர்களை வந்தடைகிறது.


இன்று பாடசாலைகளை கொண்டு நடத்துவது பெற்றோர்கள் தான். இவ்வாறு அரச கல்வி நிறுவனங்கள் தரம் குறைந்து வர, மறுபுறம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. இது இவ்வாறிருக்க கல்வி இன்று மாணவர்களை வதைக்கும் விடயமாகியுள்ளது. கல்வி நிறுவனங்களில் கற்பிக்கபடுபவை அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்பற்றவையாகும். தொடர்பானவற்றை கற்பிக்க முயற்சிக்கப்படுவதும் இல்லை.


மனித சமுதாயம் மாபெரும் அர்ப்பணிப்புகளுடன் பெற்ற அறிவை எதிரியாக கருதும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளமை எத்தனை பெரிய சீரழிவு. தன் வாழ்கையில் முடிவெடுக்கும் உரிமையை தாரைவார்க்க பழக்கபடுத்துவது இவ் கல்வி முறைக்குள் தான். விளையாட்டு துறையில் அல்லது கலைதுறையில் அல்லது பிறதுறைகளில் ஈடுபாடு அதிகமாக இருப்பினும், அதிகமாக பணமீட்ட கூடிய துறையை தெரிவு செய்ய மாணவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றார்கள்.


கல்வியை கற்பது நாம் எனில் அது எப்படி கிடைக்க வேண்டும், எதனை படிக்க வேண்டும், எந்த இடத்தில் படிக்க வேண்டும் என்பவற்றை தீர்மானிக்கும் உரிமை எமக்கிருக்க வேண்டும்.


கல்வி தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை எமக்கிருக்க வேண்டும். இன்று அந்த உரிமையும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு எம்மிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கும் இலவச கல்வியையும் கல்வி சுதந்திரத்தiயும் வென்றெக்க வேண்டியது எம்முன் இன்று எழுந்துள்ள சவாலாகும்

Tamil circle


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum