ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Go down

மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் !  நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Tue Sep 10, 2013 7:57 am

மழைப் பேச்சு !
இது இன்பத் தமிழ் !

நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி !
மின் அஞ்சல் arivumathi@hotmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அன்னம் வெளியீடு ,மனை எண் 1 நிர்மலா நகர் ,தஞ்சாவூர் .613 007.
மின் அஞ்சல் annamakaram@gmail.com செல் 94431 59371
விலை ரூபாய் 200.

நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி அவர்கள் தமிழ் உணர்வும் தமிழ் இன உணர்வும் மிக்கவர் .திரைப்படத்திற்கு ஆங்கிலச் சொற்கள் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என்ற உறுதியோடு தரமான பாடல்களை மட்டுமே எழுதி வரும் பாடல் ஆசிரியர் . ஈழத் தமிழருக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர் .நான் மதிக்கும் நல்ல கவிஞர் .
.
திருவள்ளுவரின் காமத்துப்பால் போல இன்பத்துப்பால் வடித்துள்ளார் .
.மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! உண்மைதான் படிக்கப் படிக்க இன்பம் பிறக்கும் நூல் .எல்லோருக்கும் காதல் நினைவுகளை மலர்விக்கும் அற்புத நூல் .சிறிதும் ஆபாசமின்றி , விரசமின்றி இன்பத்துப்பால் விருந்து வைத்துள்ளார்கள் .கயிறு மேல் நடக்கும் விதமாக கூடல் பற்றி மென்மையாகவும் , மென்மையாகவும் வடித்துள்ளார் .நூலின் பின் அட்டையில்' மணமக்களுக்கான மகிழ்ச்சி' நூல் என்று உள்ளது . மணமக்களுக்கு மட்டுமல்ல 'மக்களுக்கான மகிழ்ச்சி ' நூல் இது .வாங்கிப் படித்து இன்பம் பெறுக.சின்னச் சின்ன வரிகளின் மூலம் பேரின்பம் விதைத்துள்ளார் .

மிகத் தரமான அச்சு . கை அடக்க நூல் ,கட்டியான அட்டை ,வண்ணப் புகைப்படங்கள் யாவும் மிக நன்று .அன்னம் பதிப்பகத்தாருக்கு பாராட்டுக்கள் .இந்த நூலில் கவிதைகள் சிறப்பா ? வண்ணப் புகைப்படங்கள் சிறப்பா ? என்று வாசகர் மனதில் பட்டிமன்றம் நிகழ்ந்து விடும் .

திருக்குறள் போலவே இரண்டே வரிகளில் இனிய கவிதைகள் வடித்துள்ளார் .இன்ப மழைக்கும் ,இயற்கை மழைக்கும் பொருந்துவதாக உள்ளது .

நிகழ்கையில் சாரல்
நினைக்க நினைக்கத்தான் மழை !

இளம் இணையர்களின் இனிய உள்ளத்தை கவிதை வரிகளால் படம் பிடித்துக் காட்டுகின்றார் .பாருங்கள் .உணர்ச்சிகள் பற்றி இலை மறை காய் மறையாக நூலில் உள்ள கவிதைகள் உணர்த்துகின்றன .

குளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறோம்
வியர்க்க !

மண்ணில் வாழும் நிலவு காதலியையும் ,விண்ணில் உலவும் நிலவையும் ஒப்பிட்டு ஒரு கவிதை மிக நன்று .

விண்மீன்கள் விழுங்கிச் சிலிர்க்கிறது
உச்சத்தில் நிலா !

பரவசமான இன்ப நிலையை பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டுகின்றார் .காதலியின் பரவச நிலை கவிதையில் காட்டுகின்றார் .படிக்கும் வாசகனுக்கு அவன் காதலி நினைவு வருவது உறுதி .

மூடிய இமைகளின் மேல் உருட்டும் எலுமிச்சை
என் உடல் !

பாறைகளின் மேல் விழும் அருவியை நம் மனக்கண் முன் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

எல்லா அருவிப் புகைக்கு உள்ளேயும்
உருண்டு கொண்டுதான் இருக்கின்றன
பாறைக்குள் கூழாங்கல் !

இன்பத்துப்பாலை இனிக்க இனிக்க மணக்க மணக்க கவிதையாக வடித்துள்ளார் .

மூடிய இமை திறந்த உதடு உச்சம் !

காதலனிடம் போலியாக வேலை இருப்பதாகச் சொல்லி பொய் சொல்லி மகிழும் காதலியைப் பற்றி உள்ள வரிகள் .

எத்தனை எத்தனை வேலைகள் இருப்பதாக
எப்படி எப்படியெல்லாம் பொய் சொல்லியிருக்கிறார்கள் !

ஆண்மையில் பெண்மை ,பெண்மையில் ஆண்மை இருப்பது உண்மை என்பதை உணர்த்தும் வைர வரிகள் .

உச்சத்தில் மீசை முளைத்துப் பார்த்தாய் நீ
பெண்ணாகிப் போயிர்ந்தேன் நான் !

காதல் எப்படி இருக்க வேண்டும் தீண்டல் எப்படி இருக்க வேண்டும் என்று வகுப்பு எடுக்கும் விதமாக வடித்த வரிகள் நன்று .

தொடுகிற பாவனையில் தொடாமல் வருடு !
இருக்கப்படுவாய் !
நாகரிகம் என்பது காமற்ற தழுவல் !

வான் மழையையும் இன்ப மழையையும் உணர்த்தும் விதமான உன்னத வரிகள் .இதோ !

இது வானத்தின் சுமையைக் கடலறிதல் !

காதல் வருடலை , காதலர்களின் கூடலை கவிதை வரிகளில் உணர்த்துகின்றார் .

அடி வயிற்றில் தலை சாய்த்தால் சுகம் !
தலை வருடல் வாய்த்தால் சுகமே சுகம் !

.பெண்களின் ஒய்வு தினங்களில் அவர்களுக்கு ஒய்வு வேண்டும் என்ற மனிதாபிமானத்தை நன்கு உணர்த்திஉள்ளார் .சொற்ச்சிக்கனத்துடன் உணர்த்திஉள்ளார் .எல்லா ஆண்களுக்கும் புரியும் விதத்தில் உணர்த்திஉள்ளார் .

அந்த மூன்று நாட்களில் நீ தாய் !

காதல் கவிதைகளில் முத்தம் பற்றி இல்லாமல் இருக்குமா ?இதோ முத்தம் பற்றி .

சொல்ல முடியாத பாராட்டுதல்கள் முத்தங்களாகின்றன !
கண்களை திறக்காதே ! முழுமையாகப் பார்க்கலாம் திருடப்படுவதை !

நூலில் உள்ள பிடித்த கவிதைகளை மேற்கோள் காட்ட வேண்டும் என்பதற்காக மேல பக்கத்தை மடித்து வைத்து வந்தேன் .நூலின் எல்லாப் பக்கத்தையும் மடித்து விட்டேன் .பின் மறு பரிசீலனை செய்து மடித்ததை எடுத்து விட்டு மேற்கோளைக் குறைத்துக் கொண்டேன் .நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள் .எழுதியது உண்மை என்பதை உணர்வீர்கள் .




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum