ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்குரு கேள்வி பதில்கள்

4 posters

Go down

சத்குரு கேள்வி பதில்கள் Empty சத்குரு கேள்வி பதில்கள்

Post by யினியவன் Fri Sep 06, 2013 4:24 pm

சத்குரு கேள்வி பதில்கள்

கேள்வி:

“சாமி கும்பிடுவதற்காகப் போகும் கோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன? பருவ வயதில் இருக்கும் மகளுடன் கோயிலுக்குப் போகும் என் போன்ற தாய்மார்களுக்கு இது எவ்வளவு பெரிய தர்மசங்கடம்?”

சத்குரு:

கடவுள் என்பது உங்களைப் பொறுத்தவரை என்ன? தெய்வீகமாக எதைக் கருதுகிறீர்கள்? ஒரு படைப்பின் மூலாதாரம்தான் கடவுள் என்று கருதுவீர்களேயானால், அதுதானே அங்கு சித்தரிக்கப்பட்டு இருக்கிறது?
செக்ஸ் என்பதை அசிங்கம் என்றோ, குற்றம் என்றோ நம் கலாச்சாரம் பார்க்கவில்லை. சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்யாமல், வாழ்க்கையின் பரிமாணத்தை அது நேருக்கு நேராகச் சந்தித்தது.

பொதுவாக, இந்த மாதிரி சிற்பங்கள் கோயிலின் வெளிப் ‌பிரகாரத்தில்தான் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களாவது வெளிப் பிரகாரத்தோடு நின்று போகின்றன. பருவ வயதில் இருக்கும் ஓர் ஆணுக்கும், பெண்ணுக்குமான பார்வைப் பரிமாற்றங்கள் சந்நிதியிலும் தொடர்வதைக் கவனித்து இருக்கிறீர்களா?

“அம்மா, நான் எப்படிப் பிறந்தேன்?” என்று கேட்டாள், எட்டு வயது மகள்.

சிறுமியிடம் இதைப்பற்றியெல்லாம் எப்படிப் பேசுவது என்று அம்மாவுக்கு சங்கடம். அதனால் அவள் சொன்னாள்ஸ “அதோ, அந்தக் குருவிதான் உன்னைக் கொண்டுவந்து என் மடியில் போட்டது கண்ணு?”

“நீ எப்படி அம்மா பிறந்தாய்?”

“அப்படியானால், பாட்டியையும் இந்தக் குருவியின் பாட்டிதான் கொண்டு வந்து போட்டது!”

“ஆமாடா செல்லம்!”

“அப்படியானால், நம் குடும்பத்தில் யாருக்குமே ஒழுங்கான பிறப்பில்லையா அம்மா?” என்று திகைத்துப் போய்க் கேட்டாள் சிறுமி.

இதுதான் உண்மை நிலை. குழந்தைகளுக்கே பாதி விஷயம் தெரியும்போது, உங்கள் மகளுக்குத் தெரியாதா, என்ன?

சிற்பங்களைப் பெயர்த்து எடுப்பதாலோ, மூடி மறைப்பதாலோ, உங்கள் மகளின் மனம் அது பற்றிச் சிந்தக்காது என்று நினைத்துவிடாதீர்கள்.

கோயில் என்பது வாழ்க்கையின் மேன்மையை உணர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. உங்களுக்குள் அமிழ்ந்துள்ள உச்சபட்ச சக்தியை தட்டி எழுப்புவதற்கான ஒரு கருவி.

இந்த உடல்ரீதியான இன்பங்களைக் கடந்து போனால்தான், வாழ்க்கையின் மேலான கட்டங்களுக்குப் போக முடியும். இந்த உண்மையை உறுதியாக எடுத்துச் சொல்வதுபோல்தான் மூலவரின் சந்நிதி உள்ளே அமைந்துள்ளது.

அந்தச் சிற்பங்களைக் கேவலம் என்று ஏன் பார்க்கிறீர்கள்? அது நிகழ்ந்ததால்தானே நீங்கள் உருவானீர்கள்? உங்கள் மகள் உருவானாள்? அது தவறென்று நினைத்தால், நீங்கள் படைக்கப்பட்டதே தவறென்று ஆகிவிடும்.

கேள்வி:

“நான்கு சுவர்களுக்குள் வைத்திருக்க வேண்டிய விஷயமல்லவா இது? இதை இப்படி அம்பலத்துக்குக் கொண்டுவர வேண்டுமா?”

சத்குரு:

யாரும் உங்களை இதைத் தெருவுக்குக் கொண்டுவரச் சொல்லவில்லை. நீங்கள் பருவ வயதில் இருந்தபோது, உங்களுக்கு இது பெரிய உறுத்தலாக இருந்திருக்காது. இன்றைக்கு உங்கள் மகள் பார்த்துவிடக்கூடாது என்பதுதான் உங்கள் பதற்றத்துக்கான காரணம்.

உயிரினம் பெருகிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக இயற்கை அவற்றுக்கு ஆண், பெண் எனத் தனித்தனி வடிவங்கள் கொடுத்தது. ஒன்றின் மீது மற்றதற்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. உடல்ரீதியான வேறுபாடுகள் தவிர, இருவரும் ஒரே அளவு மதிப்பு கொண்டவர்கள்தாம்.

இதை இன்றைய இளைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பெரும் வளர்ச்சி கண்டுள்ள நிறுவனங்களில் ஆண், பெண் என்ற பேதங்கள் களையப்பட்டு விட்டதை இன்றைக்குப் பரவலாகக் காண முடிகிறது.

மிக நுண்ணிய உயிரினம் ஆனாலும் சரி, மனிதர் ஆனாலும் சரி, இயற்கை அதன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதைக் கடந்து போக வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டியது நாம்தான்.

கோயிலுக்கு வருகையில் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும் எண்ணங்கள் எல்லாவற்றையும் வெளிப் பிரகாரத்தோடு விட்டுவிட்டு, முழுமையான ஈடுபாட்டுடன் உள்ளே வரச்சொல்லும் கலாச்சாரம் இது. அங்கே நீங்கள் தேவையற்ற பதற்றத்தைக் காட்டினால், அதுதான் உங்கள் மகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.

எது ஒழுக்கம், எது ஒழுக்கமின்மை என்று நீங்கள் எழுதிய விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது கோயில் என்ற அமைப்பு. அதை உங்கள் மேம்பாட்டுக்கு எப்படிப் பூரணமாகப் பயன்படுத்திக் கொள்வது என்று மட்டும் பாருங்கள்.

அமுதம் தேடி வந்துவிட்டு, அமுதக் கலசத்தின் மீது அமர்ந்துள்ள ஈக்களின் மீது ஏன் உங்கள் கவனம் போகிறது?

வெப்துனியா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சத்குரு கேள்வி பதில்கள் Empty Re: சத்குரு கேள்வி பதில்கள்

Post by ராஜு சரவணன் Fri Sep 06, 2013 4:49 pm

சரிதான் தல கோவில் என்பது மனிதனின் அனைத்துவிதமான பண்புகளை போதிக்கும் இடம், அதனால் தான் அப்பண்புகளை தட்டியெளுப்பும் உன்னதமான இடமாக கோவில் இருக்கிறது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சத்குரு கேள்வி பதில்கள் Empty Re: சத்குரு கேள்வி பதில்கள்

Post by பாலாஜி Fri Sep 06, 2013 4:51 pm

சத்குரு கேள்வி பதில்கள் 3838410834 சத்குரு கேள்வி பதில்கள் 103459460 சத்குரு கேள்வி பதில்கள் 1571444738 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சத்குரு கேள்வி பதில்கள் Empty Re: சத்குரு கேள்வி பதில்கள்

Post by பூவன் Fri Sep 06, 2013 4:56 pm

நல்ல சிந்தனை வரிகள் அண்ணா

என்னும் எண்ணங்களுக்கு ஏற்றது போல தான் வாழ்க்கை வண்ணம் ...


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சத்குரு கேள்வி பதில்கள் Empty Re: சத்குரு கேள்வி பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum