ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:05

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:59

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் கெட்ட பின்னே...

4 posters

Go down

கண் கெட்ட பின்னே... Empty கண் கெட்ட பின்னே...

Post by krishnaamma Wed 4 Sep 2013 - 18:29

"கிர்'ரென்ற அலார சத்தத்தில் கண் விழித்த மூர்த்தி, எழ மனமில்லாமல், கட்டிலில் புரண்டு படுத்தான். மணி 6:00, இப்போது எழுந்தால் தான், குளித்து முடித்து, மெஸ்சில் காலை உணவை முடித்து, கல்லூரி செல்ல வசதியாக இருக்கும்.
உடம்பு, "கதகத'வென்று சூடாக இருந்தது. இரவிலிருந்தே லேசாக காய்ச்சல் இருந்ததால், கண்கள் எரிந்தன. கல்லூரி செல்லவே பிடிக்கவில்லை; ஆனால், போய் தான் ஆக வேண்டும். முடிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருந்தன.
மூர்த்திக்கு வயது, 48, தஞ்சாவூரை சேர்ந்தவன். எம்.காம்., எம்.பி.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி., என்று வரிசையாக பட்டங்கள் பெற்று, துபாயில் பேராசிரியராக பணி புரிகிறான். மிக எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமுயற்சியில் முன்னேறியவன். சிறு வயதில் தந்தையை இழந்து, பள்ளி இடைநிலை ஆசிரியையான தாயின் வருமானத்தில் வளர்ந்து ஆளானவன். கூட பிறந்தவர்கள், ஒரு தம்பி மற்றும் ஒரு அக்கா.

எழுந்து பாத்ரூம் சென்று, கெய்சரை இயக்கி, வெது வெதுப்பான நீரில் குளித்து முடித்ததும், சற்று புத்துணர்வு வந்தது.
கதவை பூட்டி, வெளியே வர, அந்த வீட்டிலேயே பக்கத்து போர்ஷனில் குடியிருந்த வில்லியம்ஸ், ""என்ன சார், உடம்பு சரியில்லையா... முகமெல்லாம் வாடியிருக்கு?'' எனக் கேட்டார்.
""ராத்திரியிலிருந்து ஒரே காய்ச்சலா இருக்கு சார். கல்லூரிக்கு விடுமுறை போட முடியாது; நிறைய வேலை இருக்கு. அது தான் கிளம்பிட்டேன்.''

""போகும்போது, டாக்டரை பார்த்துட்டு போங்க சார்.''
""இப்ப முடியாது, சாயந்திரம் வரும்போது பார்த்துட்டு வரேன்.''

வில்லியம்ஸ் - ரோஸி தம்பதி மதுரையை சேர்ந்தவர்கள். திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகிறது; குழந்தைகள் கிடையாது. வில்லியம்ஸ் கட்டட பொறியாளர். மூர்த்தி வேலை முடிந்து வந்தால், சில சமயம் வில்லியம்ஸ் குடும்பத்தினருடன் தான், பேசிக் கொண்டிருப்பான். தமிழில் அளவளாவுவது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

சாப்பிட்டு முடித்து, கல்லூரியை அடைந்து, வகுப்புகளில் கவனம் செலுத்திய மூர்த்திக்கு, நேரம் ஓடியதே தெரியவில்லை.
மதிய உணவை கேன்டீனில் முடித்து விட்டு, பேராசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்கு சென்று அமர்ந்த போது தான் தெரிந்தது, அடுத்த, ஒரு மணி நேரம் வகுப்பு கிடையாது என்பது. அதற்கு, அடுத்த வகுப்புக்கான குறிப்புகளை எடுக்கத் துவங்கினான்.
சாப்பிட்ட உணவு, மேலே தொண்டைக்கு வருவது போன்றும், வாந்தி வருவது போன்ற உணர்வுமாக இருந்தது. கண் மூடி சிறிது நேரம் அமர்ந்தான். பின், குளிர்ந்த நீரை பருகியவுடன், சிறிது ஆசுவாசமாக இருந்தது.

மாலை, நேராக டாக்டரிடம் சென்றான். ""நல்ல காய்ச்சல் இருக்கு. சாப்பிட்ட உணவு செரிமான மாகாததினால ஏற்பட்டகோளாறாக இருக்கலாம். இந்த மாத்திரைகளை, இரவு உணவு முடிச்சுட்டு சாப்பிடுங்க. நாளைக்கு முழுதும் ரெஸ்ட் எடுங்க... சரி ஆயிடும். ஆகலைன்னா, மறுநாள் என்னை வந்துபாருங்க. ஈ.சி.ஜி., போல, சில டெஸ்ட் செய்து பார்க்கலாம்.''
ஆயாசமாக இருந்தது மூர்த்திக்கு. ஒரு மாதத்திற்கு முன், ஊரிலிருந்து கிளம்பும்போதே உடம்பு சரியில்லை. அடிக்கடி காய்ச்சல், தலைவலி மற்றும் உணவு மேலே வருவது மாதிரி இருந்தது.

மருத்துவரிடம் காண்பித்து, மருந்து சாப்பிட்டு விட்டுதான் கிளம்பி வந்தான். இப்ப மறுபடியும், அதே ப்ராப்ளமா...
வீட்டுக்குத் திரும்பினால், வாசலிலேயே வில்லியம்ஸ் நின்றிருந்தான். ""என்ன சார்... டாக்டர்கிட்ட போயிட்டு வந்தீங்களா?''
""போனேன் சார். செரிமானக் கோளாறா இருக்கும்ன்னு சொல்லி, மாத்திரை கொடுத்திருக்கார். சாப்பிட்டுட்டு மாத்திரை போட்டுக்கிட்டா சரியாயிடும். நாளைக்கு வெள்ளிக்கிழமை, இங்கே வாராந்திர விடுமுறை, நல்லா ரெஸ்ட் எடுக்கப் போறேன்.''

""நீங்க சாப்பிட, வெளியே போக வேண்டாம். ரோஸி கிட்ட கஞ்சி ரெடி செய்ய சொல்றேன். நீங்க அதையே சாப்பிட்டு படுங்க.''
சிறிது நேரத்தில், கஞ்சி கொண்டு வந்து, அதை ஊற்றிக் கொடுத்து, சாப்பிட வைத்தாள் ரோஸி. மாத்திரைகளை எடுத்துக் கொடுத்து, வெந்நீருடன் சாப்பிட வைத்தான் வில்லியம்ஸ். மனம் நெகிழ்ந்து, ""தாங்க்ஸ்,'' என்றவுடன், ""இதுல என்ன சார் இருக்கு! மனுஷங்களுக்கு மனுஷங்க, இது கூட செய்யலைன்னா எப்படி... நாம, நம்ம உறவு, நட்பு எல்லாரையும் விட்டுட்டு... இப்படி அயல்நாட்டுல இருக்கோம். இங்கே நாம எல்லாரும் தானே சுற்றத்தார்,'' என்று, கூறினாள் ரோஸி.

""சரி சார்... நீங்க படுங்க. குட்நைட்,'' வில்லியம்ஸ் சொல்லியவாறே வெளியேறினான்.
இரவு 8:00 மணி, மூர்த்திக்கு, தூக்கம் வரவில்லை. யாருடனாவது பேச வேண்டும் போலிருந்தது.
மனைவி வினோதினி, நேற்று மாலை தான் போன் செய்து, அவள் அத்தை இறந்து விட்டதால், சென்னைக்கு செல்வதாகவும், வெள்ளி கிழமை காலை, வீட்டுக்கு திரும்பிடுவேன் என்றும் சொல்லியிருந்தாள். துக்க வீட்டில் ஒன்றும் பேச முடியாது. எனவே, வந்தவுடன் போன் செய்வதாக கூறியிருந்தாள்.

பெரிய மகன், மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரியிலும், சின்ன மகன் வீட்டிலும் தான் இருப்பர். மூத்தவன் பிரவீணுக்கு போன் போட்டால், "நாட் ரீச்சபிள்' என்று வந்தது.
அடுத்து இளையவன் இனியவனுக்கு போட, ""சொல்லுங் கப்பா,'' என்றான்.
""என்னடா சாப்பிட்டியா, இல்லை அம்மா ஊர்ல இல்லையேன்னு, ஏதாவது, சினிமா கினிமா போயிட் டியா?''

""இல்லைப்பா, ஓட்டல்ல இப்ப தான் சாப்பிட்டு, வீட்டுக்கு போறேன்.''
""நேரத்தோட வீட்டுக்கு போயிடு. அம்மா போன் செய்தாளா?''
""இரவு ராக்போர்ட்ட பிடிச்சு, காலையில வந்து சேருவதா சொன்னாங்கப்பா.''
""சரிடா, நான் நாளைக்கு காலேஜ் போவதற்கு முன், பேசறதா அம்மாகிட்ட சொல்லுடா.''
""சரிப்பா, பை.''

அடுத்து தாயிடம் பேச வேண்டும் போல் தோன்றியது. போன் போட்டான்.
""சொல்லுப்பா, எப்படி இருக்கே?''
""கொஞ்சம் காய்ச்சலா இருக்கும்மா. டாக்டர்கிட்ட போனேன்; மருந்து குடுத்திருக்காரு. எது சாப்பிட்டாலும், மேலே வர மாதிரி நெஞ்செரிச்சலா இருக்கும்மா.''
""இனிமே இந்தியாவுலியே இருப்பேன்னு சொன்னே... இப்ப, நாடு விட்டு நாடு போய், தனியா கஷ்டப் படறியேப்பா... ஏதாவது சாப்பிட்டியா?'' அம்மா பரிதாபமாய் கேட்டாள்.

""பக்கத்து வீட்டுல ரோஸின்னு ஒருத்தங்க, இருக்காங்கம்மா. அவங்கதான் கஞ்சி வச்சுக் குடுத்தாங்க. அம்மா... உன் கையால, ஒருவாய் ரசம் சாதம் சாப்பிடணும் போல இருக்கும்மா.''
தாயின் உள்ளம் பதை பதைத்தது. அடி வயிற்றிலிருந்து உருவான கேவலை, இதற்காக தொண்டைக்குள் அடக்கிக் கொண்டாள். தொலை தூரத்தில் இருக்கும் மகனிடம், அழுது அவனை பலவீனப்படுத்தக் கூடாது.
""நீ இங்க வரும்போது, ரசம் மட்டுமில்ல நீ கேட்கிறதயெல்லாம் செஞ்சு தரேன்ப்பா.''

"சரிம்மா, களைப்பா இருக்கு. நான் இன்னொரு நாள் பேசறேன்.''
""பத்திரமா இருப்பா. மருந்துகளை சாப்பிட்டு, உடம்பை பத்திரமா பார்த்துக்கோ.''
படுக்கையில் படுத்துக் கொண்டான் மூர்த்தி. அவன் முன், பழைய சம்பவங்கள் உருண்டோடின.
சிறு வயதில் தந்தையை இழந்தான் மூர்த்தி. அம்மா கொண்டு வரும் சொற்ப சம்பளத்தில், பல நாட்கள் வத்தக் குழம்பு சாதம் தான்.

ஆனால், சும்மா சொல்லக் கூடாது. அந்த வத்தக் குழம்பு வாசனை ஊரையே தூக்கும். அவ்வளவு அருமையான கைமணம் அம்மாவிற்கு. வத்தக் குழம்பு என்றில்லை, எது வைத்தாலும், மணமும், சுவையும் அபாரமாக இருக்கும்.
குடியிருந்தது சொந்த வீடு என்றாலும், சொற்ப சம்பளத்தில் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி தான், மூர்த்தியை படிக்க வைத்தாள் அம்மா. அவனும் ஸ்காலர்ஷிப்பில் படித்து தேறி, ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்து விட்டான். அம்மா, வேலை பார்க்கும்போதே, மூன்று பிள்ளைகளுக்கும், திருமணம் முடித்து விட்டார். தம்பிக்கு படிப்பு ஏறாததால், ஒரு ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியில் வேலை கற்று, அவனே, சின்னதாக ஒரு ஒர்க் ஷாப்பை துவங்கி விட்டான்.

மூர்த்திக்கு, திருச்சியில் வேலையாதலால், அங்கேயே வீடு பார்த்து செட்டிலாகி விட்டான். அம்மாவும் ரிட்டையர்ட் ஆகி விட்டாள்.
மூர்த்தியின் மனைவி, ஒரு பட்டதாரி. சென்னையில் வளர்ந்தவள். அப்பா, ஒரு பெரிய தனியார் நிறுவன மேலாளர். அம்மா டீச்சர். ஒரு அக்காவும், ஒரு தம்பியும் கூடப் பிறந்தவர்கள்.
திருமணம் முடிந்த பின்னும், அம்மா, தம்பி என்று அனைவருடனும் ஒன்றாகத் தான் இருந்தான் மூர்த்தி. ஆறு மாதத்தில், தம்பி திருமணம் ஆகி தனியாக சென்று விட்டான்.
அதற்கு பின், 13 வருடங்களாக, அம்மா அவர்களுடன் தான் இருக்கிறாள்.

வினோதினி படித்திருந்தாலும், வேலைக்கு போவதில் விருப்பம் இல்லாதவள். சோம்பேறியும் கூட. வீட்டில் ஒரு வேலையும் செய்ய மாட்டாள். ஆனால், அம்மா, சிறு வயதிலிருந்தே சுறுசுறுப்பாக வேலை செய்து பழக்கப்பட்டவளானதால், எல்லா வேலைகளையும் செய்து வந்தாள்.

எப்போதாவது, மூர்த்தி, மனைவியிடம் கோபித்துக் கொண்டு, "அம்மாவே எல்லா வேலையும் செய்யறாங்க, நீயும் கூடமாட ஒத்தாசை செய்...' என்று கூறினால், அவள் முகம் சிறுத்துவிடும். அம்மா தான் கூறுவாள், "அவபாட்டுல இருக்கட்டும்ப்பா... அவளும் எனக்கு ஒரு மகள் தானே. நம் குடும்பத்துக்கு தானே நான் வேலை செய்யறேன். இதிலென்ன இருக்கு... எனக்கு எந்த சிரமமும் இல்லை...'என்று.

இதனால், மாமியார் - மருமகள் சண்டை அங்கு வந்ததில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன், மூர்த்தியின் கல்லூரியில் பணியாற்றிய, இரண்டு விரிவுரையாளர்கள் மலேஷியாவில் வேலை கிடைத்து சென்றனர். அவர்கள் கல்லூரியில் வணிகவியல் பாடத்திற்கு, ஒரு விரிவுரையாளர் தேவை என, அவர்கள் மூர்த்திக்கு தகவல் தெரிவிக்க, அவனுக்கும் ஆசை பற்றிக் கொண்டது.

அவர்கள் சொன்ன சம்பளமும், அங்கு இருக்கும் வசதிகளையும் கேள்விபட்ட வினோதினிக்கு தலைகால் புரியவில்லை.
"நீங்க போங்க, நாங்க இங்கே சமாளிச்சுக்கறோம்...' என பச்சைக் கொடி காட்டி விட்டாள்.
முதல் இரண்டு ஆண்டுகள், நிமிடத்தில் ஓடிய மாதிரியே இருந்தது. ஆண்டுக்கு, ஒரு முறை கோடைக்கால விடுமுறைக்கு, திருச்சி வரும் வசதியும் இருந்தது.

முதலில் எல்லாம் மூர்த்தி போன் செய்தவுடன் அழும் வினோதினி, பின், அவன் பிரிவை சாதாரணமாக ஏற்றுக் கொள்ள பழகி விட்டாள்.
மூன்று படுக்கையறை கொண்ட ப்ளாட் ஸ்ரீரங்கத்தில் வாங்க முடிந்தது. ஒரு சான்ட்ரோ கார், வினோதினிக்கு, நூறு பவுன் நகை எல்லாம் சாத்தியமாயிற்று.
மூன்றாவது வருட மத்தியில் தான், மூர்த்திக்கு அடிக்கடி உடல் கோளாறு ஏற்பட்டது. இத்தனைக்கும் வீட்டிலேயே அவனே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு, எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை. மிகவும் அசதியாக இருந்தது. காய்ச்சலும், மாதம் ஒருமுறை வரத் துவங்கியது.

மூன்று வருட அக்ரிமென்ட் முடிந்து, திருச்சிக்கே வந்து விடலாம் என்று அவன் நினைக்கையில் தான், துபாய் கல்லூரியில் இருந்து, அழைப்பு வந்தது. மூர்த்தியும், "இ-மெயில்' இன்டர்வியூ, எல்லாம் முடித்து செலக்ட் செய்யப்பட, இப்போது வாங்கும் சம்பளத்தை விட அதிகம் கிடைக்கும் என கூறினர். மலேசியா கான்ட்ராக்ட் முடிந்து, வீடு வந்த மூர்த்தியை, வினோதினியின் அக்காவும், தம்பி மனைவியும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

சுற்றிலும் மாமனார், மாமியார், மச்சான் இவர்கள் தான் இருந்தனர். அம்மா, தம்பி, அக்கா என்று யாரையும் காணோம்.
பலமான விருந்து சமைத்திருந்தாள் சமையல்காரி. ஆறு மாதத்திற்கு முன், அம்மா தஞ்சாவூரில், அவர்கள் சொந்த வீட்டுக்கே சென்று விட்டதாக வினோதினி ஏற்கனவே கூறியிருந்தாள். அது முதல் சமையல்காரி தான் சமைக்கிறாளாம்.
வினோதினி பெருத்து கனத்துப் போயிருந்தாள். அவளுக்கு நடந்தாலே மூச்சு வாங்கியது.

"அக்கா... என்னக்கா மசமசன்னு பராக்கு பார்த்துக்கிட்டு நிற்கிறே... அவருக்கு காபி கொண்டு வா...'
"இதோ வரேன்ம்மா...' வினோதினியின் அக்கா, நீலா சிட்டென பறந்தாள்.
வினோதினியின் அக்கா ஒருபுறம் காபியை நீட்ட, அவளது தம்பி மனைவி சுதா மற்றொரு புறம் காபியை நீட்ட, மூர்த்திக்கு காமெடியாக இருந்தது.

அன்று இரவு, "வினோதினி, இனிமேல் நான் திருச்சியிலேயே வேலை தேடிக்கப் போறேன்...'என்றான்.
"என்னங்க... இப்படி குண்டைத் தூக்கிப் போடுறீங்க? இப்ப தான் பசங்க வளர்றாங்க. பெரியவன் மெடிசின் முடிச்சுட்டா, நர்சிங் ஹோம் கட்டணும். சின்னவன் இப்பத்தான் பத்தாம் வகுப்பு படிக்கிறான். அவனை படிக்க வைக்கணும்...'

"இல்லைம்மா. எனக்கு உடம்பு முன்ன மாதிரி இல்லை. நெஞ்சு வலி அடிக்கடி வருது...'
"சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு, உடம்பு நோகாம வேலைக்கு போயிட்டு வந்தா... அப்படி தான் இருக்கும். இப்ப தான், எங்க அக்கா, தம்பி பொண்டாட்டி எல்லாம், என்னை மதிக்கிறாங்க. முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் அதட்டற அக்கா, இப்ப நான் காலால இட்ட வேலையை, தலையால செய்யுறதை பாத்தீங்க தானே! எல்லாம் நீங்க வெளிநாட்டுல வேலை செய்யறதுனால கிடைக்கிற மரியாதை தாங்க. அதை கெடுத்துடாதீங்க...'

சத்தம் கேட்டு, மாமியார் உள்ளே வந்து என்னவென்று கேட்க, "உன் மருமகனுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு. துபாய் வேலைக்கு போக மாட்டாராம்...'
"ஏன் மாப்பிள்ளை, குடும்பம் நல்லாயிருக்கணும்னா, நீங்க வெளிநாடு போகத் தான் வேண்டும்...' மாமியாரும் தன் பங்குக்கு கூற, மாமனார் அமைதியாக இருந்தார்.

மறுநாள், அம்மாவை தேடி, இனியவனுடன் தஞ்சாவூர் சென்றால், அம்மா கண்ணீர் மல்க வரவேற்றாள். "என்னப்பா... இப்படி மெலிஞ்சுட்ட! இனிமே இங்கேயே தானே இருப்பே...'
"இல்லைம்மா, இன்னும், ஒரு மூணு வருஷம் துபாய் போய் தான் ஆகணும். வேறு வழி இல்லை...'
"போதும்ன்ற மனசு இருந்தா எல்லாம் முடியும்ப்பா. இதோ பார்... உன் பையன், இப்பவே உன் உயரம் வளர்ந்துட்டான். இந்த வயசுல, அப்பா, நீ கூட இருந்து வழி காட்டணும்ப்பா. உனக்கு தான், அது மாதிரி அமையலை. உன் படிப்புக்கு, இங்கேயே வேலை பார்த்துக்கோப்பா. நல்லா சாப்பிட்டு, உடம்பை தேத்துப்பா. எனக்கும், வயசாறது. எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா...' அம்மாவை முடிக்க விடாமல், பாய்ந்து வாயைப் பொத்தினான்.

"நீ, ஏம்மா... இங்கே தனியா வந்துட்டே... உன்னை யாரு என்ன சொன்னா?'
"அதெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா. அப்பா இருந்த வீட்டுல இருக்கணும்ன்னு தோணிச்சு...'
"அப்பா... பாட்டி பொய் சொல்றாங்க. ஒரு நாள், பாட்டி தலைவலின்னு படுத்திருந்தாங்க. பெரியம்மா, மாமி, பத்மா பாட்டி எல்லாம் வந்திருந்தாங்க. அப்ப... அம்மா, பாட்டிக்கிட்ட, "என்ன எப்பவும் படுத்துக்கிட்டு இருக்கீங்கன்னு...' கத்தினாங்க. அப்ப பத்மா பாட்டி, "உங்களுக்கு இங்க இருக்க பிடிக்கலைன்னா. தஞ்சாவூருக்கே போயிடுங்கன்னு...' சொன்னாங்க. அது தான் பாட்டி, இங்கே வந்துட்டாங்க...' என்று மகன் கூற, மூர்த்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

"டேய்... இதெல்லாம் அங்கே போய் கேட்காதே. என் மேல் கொஞ்சமாவது அன்பு இருந்தா, நீ இதைப் பற்றி பேசக்கூடாது...' என்று கூறி அழுதாள் அம்மா.
துபாய் கிளம்பும் அன்று கூட, தலை சுற்றுவது போல் இருந்தது. டாக்டரிடம் சென்ற போது, அவர், "அடிக்கடி உங்களுக்கு உடம்புக்கு வருவது நல்லதில்லை மூர்த்தி. உங்க பயணத்தை கொஞ்சம் தள்ளி வச்சு, ஒரு முழு உடல் பரிசோதனை செய்துக்கங்க. அதற்குபின் வெளிநாடு போகலாம்...' என்றார்.

"டாக்டர் விசா எல்லாம் ரெடியாகி, இன்னிக்கு தான் பிளைட். இப்ப தான் விசா ஓ.கே., செய்ய மெடிக்கல் செக்கப் எல்லாம் செஞ்சாங்க. அதுல எல்லாம், சரியா இருக்கிறதா வந்தது. நீங்க சும்மா காப்ரா செய்யாதீங்க...' குடும்ப டாக்டர் என்ற உரிமையில், வினோதினி சொன்னாள்.
அது டெஸ்ட் செய்யாமலே ஏஜென்ட் மூலம் பெறப்பட்ட, ஒரு மருத்துவ அறிக்கை என்று கூட, அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
"அப்புறம் உங்க விருப்பம்...' டாக்டர் இன்ஜெக்ஷன் போட்டு, மருந்து கொடுத்து அனுப்பினார். ப்ளைட் ஏறும்போது காய்ச்சல் விட்டிருந்தது.

கடந்த கால நினைவுகளிலிருந்து மீண்ட மூர்த்திக்கு தாகம் எடுப்பது போலிருந்தது. அருகில் இருந்த மேஜை மேல், தண்ணீர் பாட்டில் இருந்தது. மெதுவாக எழுந்த போது, தலை சுற்றுவது போல் தோன்றியது. அடுத்த நிமிடம் வாந்தி எடுத்தான். பாத்ரூம் போக வேண்டும் என்று தோன்றியது. ஒரு அடி எடுத்து வைக்க, அந்த ரூமே தட்டாமாலை சுற்றியது. அடுத்து என்ன நடந்தது என்று அறிவதற்கு முன், வாந்தி மேலேயே தெறித்து விழுந்து, உணர்விழந்தான் மூர்த்தி. கடைசியாக, அவன் நெஞ்சில் அம்மா, மனைவி, மகன்கள் நினைப்பு ஓட , அடுத்த வினாடி உயிர் பிரிந்தது.

மறுநாள் வில்லியம்ஸ் எழுந்து வர, கதவு திறக்கப்படாமலேயே இருந்தது. லீவு தானே ரெஸ்ட் எடுப்பார் போல என்று எண்ணியவர், பதினொரு மணி ஆக, அப்போதும் கதவு திறக்காததை கண்டு, "பெல்' அடித்தும், கதவை பலமாக தட்டியும் திறக்கவில்லை. அப்போது தான், அவன் மனதில், ஏதோ விபரீதம் என்று பட, போலீசை அழைத்து, கதவை உடைக்க, அங்கே உயிரிழந்து கிடந்த மூர்த்தியின் உடலையே பார்க்க முடிந்தது.

காலை 8:00 மணிக்குள் போன் செய்வதாக, அப்பா கூறியதை, அம்மாவிடம் இனியன் கூற, போன் வராததால் வினோதினியே போன் செய்ய, மணி அடித்துக் கொண்டே இருக்க, யாரும் எடுக்கவில்லை. வினோதினி வயிற்றுக்குள் பய பந்து உருண்டது.
மதியம், 12:00 மணிக்கு தான், செய்தி, துபாய் போலீஸ் மூலம், கல்லூரியை எட்டி, இவர்களுக்கும் வர, அதைக் கேட்ட மறு விநாடி மயங்கி விழுந்தாள் வினோதினி.

அடுத்த அரை மணி நேரத்தில் விஷயம் தெரிந்தது. உறவினர்கள் வீட்டில் குவிய தொடங்கினர்.
அதற்கு பின், "பார்மால்ட்டி' எல்லாம் முடிந்து, "போஸ்ட்மார்ட்டம்' செய்யப்பட்ட மூர்த்தியின் உடல், திருச்சி வர, பதினைந்து நாட்களானது. அந்த பதினைந்து நாட்களும், வினோதினி பட்ட நரக வேதனை யாருக்கும் வரக் கூடாது.
"கடைசி நேரத்தில் எவ்வளவு அவஸ்தைப் பட்டாரோ, இவ்வளவு உறவுகள் இருந்தும், அனாதை போல் இறந்து கிடந்திருக்காரே... இதற்கெல்லாம் நான் தானே காரணம்...' அழுது அழுது, வினோதினியின் கண்ணீர் வற்றியது தான் மிச்சம்.


நன்றி - வாரமலர் -வி.ஜி.ஜெயஸ்ரீ


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கண் கெட்ட பின்னே... Empty Re: கண் கெட்ட பின்னே...

Post by பூவன் Wed 4 Sep 2013 - 18:36

இரண்டு பதிவு உள்ளதே அம்மா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கண் கெட்ட பின்னே... Empty Re: கண் கெட்ட பின்னே...

Post by krishnaamma Wed 4 Sep 2013 - 18:37

பூவன் wrote:இரண்டு பதிவு உள்ளதே அம்மா
நானும் இப்போ தான் பார்க்கிறேன் பூவன், மற்றதை எடுத்துவிடுகிறேன். மதியானமே போட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கண் கெட்ட பின்னே... Empty Re: கண் கெட்ட பின்னே...

Post by Muthumohamed Thu 5 Sep 2013 - 0:55

கதை சூப்பருங்க கண் கெட்ட பின்னே... 1571444738 கண் கெட்ட பின்னே... 1571444738 கண் கெட்ட பின்னே... 1571444738



கண் கெட்ட பின்னே... Mகண் கெட்ட பின்னே... Uகண் கெட்ட பின்னே... Tகண் கெட்ட பின்னே... Hகண் கெட்ட பின்னே... Uகண் கெட்ட பின்னே... Mகண் கெட்ட பின்னே... Oகண் கெட்ட பின்னே... Hகண் கெட்ட பின்னே... Aகண் கெட்ட பின்னே... Mகண் கெட்ட பின்னே... Eகண் கெட்ட பின்னே... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கண் கெட்ட பின்னே... Empty Re: கண் கெட்ட பின்னே...

Post by செம்மொழியான் பாண்டியன் Thu 5 Sep 2013 - 9:48

ரொம்ப பெரிசா இருக்குமா
அலுவலக நேரத்தில முடியல
ஆனா அருமையான பகிர்வு


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

கண் கெட்ட பின்னே... Empty Re: கண் கெட்ட பின்னே...

Post by krishnaamma Thu 5 Sep 2013 - 15:54

நன்றி முத்து புன்னகை பேராசை கூடாது முத்து, மேலும் " சுவற்றை வைத்து தான் சித்திரம்" என்பதும் நினைவில் வைக்கணும் புன்னகை


Last edited by krishnaamma on Thu 5 Sep 2013 - 16:18; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கண் கெட்ட பின்னே... Empty Re: கண் கெட்ட பின்னே...

Post by krishnaamma Thu 5 Sep 2013 - 15:55

செம்மொழியான் பாண்டியன் wrote:ரொம்ப பெரிசா இருக்குமா
அலுவலக நேரத்தில முடியல
ஆனா அருமையான பகிர்வு
சுத்தம்.............நீங்களுமா? புன்னகை .......போகட்டும் 2 - 3 நாளாக படியுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கண் கெட்ட பின்னே... Empty Re: கண் கெட்ட பின்னே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum