ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா :)

2 posters

Go down

அப்பா :)  Empty அப்பா :)

Post by krishnaamma Sat Aug 24, 2013 8:38 pm

""சம்பத்... சவுக்கியமா...'' என்றபடியே, நாகப்பட்டினம் சுப்பு மாமா உள்ளே நுழைந்தார். சம்பத்தும், மனைவி லலிதாவும் மகிழ்ந்து வரவேற்றனர். சம்பத்தின், நேரடி தாய் மாமா அவர். சென்னை வரும் போதெல்லாம் வருவார்; விசாரித்து, ஊர் கதை பேசி விட்டுத் தான் கிளம்புவார்.
மிகவும் சந்தோஷப்பட்டார் சம்பத்.

""அட... என்ன மாமா வீட்டு பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே... சென்னை பக்கம் வர்றதில்லைன்னு முடிவா?''
""அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சம்பத். பெண்ணையும் தஞ்சாவூர்லயே கல்யாணம் செய்து கொடுத்தாச்சு. சென்னை பக்கம் ஜோலி இல்ல. விடு...இப்ப வந்துட்டேன்ல. எப்படியிருக்க, பையன் கிரி சவுக்கியமா?''
""கல்லூரியில சேர்ந்துட்டான் அப்பா... இப்ப, பி.காம்., ரெண்டாவது வருஷம் படிக்கிறான்,'' என்று சொன்னாள் லலிதா .

""சரி... மாமா, கை, கால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்,'' என்றான் சம்பத்.
""இல்லடா ...வர்றப்ப தான், ஒரு நண்பர் வீட்டுல சாப்பிட் டேன். அவரோட தான், கோயம்பேடுல பஸ் ஏறணும். உன் வீடு மாம்பலமா... சரி அப்படியே பார்த்துட்டு போயிரலாம்ன்னு வந்தேன்,'' என்று சொன்னார் சுப்பு மாமா.
""ப்ச், என்ன மாமா... வந்ததும் கிளம்புறேன்கிறீங்க... சரி, ஊர்ல அத்தை, மத்த எல்லாரும் சவுக்கியமா?''
சற்று இறுக்கமான சுப்பு, ""எல்லாரும் நல்லாயிருக்காங்க... சம்பத்து, எனக்கு ஊருக்கு கிளம்பற அவசரம்டா. அதனால, சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லிட றேன். உன் பையனை, இப்பத்தான் வர்ற வழியல, அசோக் நகர் பில்லர் பக்கம் பார்த்தேன். சிகரெட்டும், கையுமா நிக்கறான். அதுவும் டாஸ்மாக் முன்னாடி. படிக்கற பையன்... கண்டிச்சு கட்டுப்பாடா வச்சுக்க. இல்ல, விஷயம் கை மீறிடும். புரியுதா?''

""அப்பா... என்ன சொல்றீங்க? அவன் வரட்டும் அவனை...'' என்று பல்லைக் கடித்தாள் லலிதா.
""நீங்க சொல்றது புரியுது மாமா, நான் பார்த்துக்கறேன். நீங்க சாப்பிட்டு போங்களேன்.''
""வேணாம் சம்பத்து... இத சொல்லத்தான் வந்தேன். தப்பா போயிடுவானோன்னு ஒரு பயம்... அதான் சொல்லிட்டேன். பார்த்துக்கடா.''

மாமா கிளம்பி விட்டார். கனத்த மனதோடு வழியனுப்பினார் சம்பத்.
உடனே, லலிதா அர்ச்சனையை ஆரம்பித்தாள்.
""எப்பப் பாரு... ராத்திரி லேட்டா வர்றான்ங்க, அவன் மேல லேசா சிகரெட் வாசம் வந்துச்சு... நம்ம பையனாச்சே... இருக்காதுன்னு தேத்திகிட்டேன். இப்ப அப்பாவே நேரில் பார்த்துட்டு வந்து சொல்றார். அதுவும், டாஸ்மாக் பக்கத்திலங்கறார். அய்யய்யோ,'' என்று அழ ஆரம்பித்தாள்.

""ப்த்ஸ். சும்மாயிருடி...நான், அவனக் கேட்கறேன். நீ எதுவும் கேட்டு கத்தாம இரு. நம்ம பையன் தானே.''
வாசலில் பையன் கிரியின் பைக் சத்தம் கேட்டது.
""அப்பா...சுப்பு மாமா வந்தாரா? வழில பார்த்தேன்.''
""அவரும் தான் பார்த்தாருடா,'' ஆரம்பித்தாள் லலிதா. சம்பத் முறைத்ததும் அமைதியானாள்.

""என்னம்மா சொல்ற?''
""நீ பைக்ல போறப்ப ஏதேச்சையாக பார்த்தாராம்... அதச் சொல்றா. ஏதோ அவசர வேலைன்னு, வந்ததும் ஊருக்கு கிளம்பி போயிட்டார். சரி கிரி, நீ சொல்லு, காலேஜெல்லாம் எப்படிடா? ஆர்ப்பாட்டமெல்லாம் முடிஞ்சு திறந்துட்டானே... பரிட்சைக்கு பிரிப்பேர் செய்திருக்காயா?''

""அதெல்லாம் ரெடிப்பா... ஆனா, பரிட்சையை தான் ஜூன் மாசத்துக்கு, தள்ளி வச்சுட்டாங்க. மே மாச வெயில் எரிக்குதப்பா. நண்பர்களோடு சேர்ந்து, ஊட்டிக்கு நாலு நாள் டூர் போயிட்டு வரேம்பா.''
""ஊட்டிக்கா... கிழிஞ்சுது... போய் படிடா,'' அலறினாள் லலிதா.
""ப்ச்... சும்மா இரு லலிதா. நீ எப்படி போற கிரி... ரயிலா, பஸ்சா?''

""இன்னும் முடிவா கலைப்பா. நீங்க, ஓ.கே., சொல்லுறதுக்காக காத்திருக்கிறேன்.''
""ரயில்ல போடா... ஊட்டி ஹெரிடேஜ் மலை ரயில்ல, கண்டிப்பா போகணும். அத மிஸ் செய்யவே கூடாது. நான் இன்டர்நெட்ல, ஆன் - லைன்ல, "புக்' செய்து தர்றேன். எத்தனை ப்ரெண்ட்ஸ், பேர் என்னன்னு சொல்லு... என்னிக்கு கிடைக்குதோ, அன்னிக்கு, "புக்' செய்து தரேன். ஓ.கே.,யா?'' என்றார் சம்பத்.

""ஓ... கிரேட்பா, தாங்க்யூ வெரி மச். இப்பவே என் நண்பர்கள் கிட்ட சொல்லிட்டு வந்துடறேன்ப்பா. நாங்க நாலு பேர் போறோம்பா.''
""பார்த்து போயிட்டு வா,'' என்று சொல்லி சிரித்தார் சம்பத்.
திரும்பினால், காளி போல் நின்றிருந்தாள் லலிதா. கர்ஜிக்கத் துவங்கினாள்...

""மனசுல என்ன, "காதலன்' படத்துல வர்ற, அப்பா எஸ்.பி.பி.ன்னு நினைப்பா... நீங்களே முழுக்க கூத்தடின்னு சொல்லுவீங்க போலிருக்கே... அவன், இங்கயே சுத்தறான்; ஊட்டில போய் என்ன செய்வாங்கன்னு யோசிச்சீங்களா?''
அமைதியாய் சிரித்தபடி பேசினார் சம்பத் .
""முடிச்சிட்டியா... இது, பசங்களுக்கு அறியாத வயசு; அதே நேரம் அறிஞ்சுக்கற வயசும் இதுதான். வாலிப வாழ்க்கையோட ஆரம்பம்டி இது.

""இந்த வயசுல ஊரை சுத்தாம, உற்சாகமா இருக்காம, ஒரு ஊட்டிக்கு கூட டூர் போகாம... எந்த வயசுல, இதெல்லாம் செய்யறது; தெரிஞ்சுக்கறது. அதான், அவன் தெரிஞ்சுக்கட்டும், உலகத்தை பார்க்கட்டும்ன்னு கண்டுக்காதது போல ப்ரீயா விடுறேன். அவன் பரிட்சை மார்க்ஸ் பார்த்தியா... எதுலயும் சோடை போகலை. எல்லாப் பாடத்துலயும் முதல் மார்க் தான் வாங்கறான். அப்பப்ப சிகரெட் பிடிச்சான்னா... அது வயசு. சும்மா தெரிஞ்சுக்கற திமிர். பசங்களோட, அந்தக் கடை பக்கம் போயிருப்பான்; அதுக்கு மேல போக மாட்டான். படிக்கவும் செய்யணும்; வாலிப வயசுக்கான சுதந்திரமும், உலக நடப்பை தெரிஞ்சுக்கறதும் தான், அந்த வயசுப் பையனுக்கான வாழ்க்கை பாடமாக இருக்கும்.

""அவன் ஊருக்கு போயிட்டு வரட்டும். என் கம்பெனிலேயே, அப்ரண்டிசா சேர்த்து விடலாம்ன்னு இருக்கேன். பார்ட் டைமா, அங்கேயும் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். இதனால், ஈசியா வேலையும் கிடைச்சிடும். அது வரை சுதந்திரமா இருக்கட்டும்டீ.
""அவன் வயசுல, நான் இருந்தப்ப, என் அப்பா பயங்கர கண்டிப்பானவர்; என் இருபது வயசுல ஊட்டிக்கு போகலியேன்னு, ஒரு ஏக்கம், எனக்கு இப்பவும் இருக்கு. அது என் பையனுக்கும் பின்னாடி வரக் கூடாது... ஓ.கே.,யா,'' என்றார் சம்பத்.

""ஹூம்... நல்லா தான் சொல்றீங்க. ஆனாலும், கெட்டுப் போயிடுவான்னு பயமாகவும் இருக்கே.''
""டோண்ட் ஒர்ரிமா... நான் ஊருக்கே போகலை. பைக் சாவியை மறந்துட்டேன். எடுக்க வந்தப்ப நீங்க பேசுனதை கேட்டுட்டேன். நான் சும்மா, அப்பப்ப சிகரெட் பிடிச்சேன் தான் என்ன மன்னிச்சிடுப்பா. பசங்களோட சும்மா, அந்தக் கடை பக்கம் நின்னோம். உள்ளயே போலப்பா! நம்புப்பா. நான் இந்த மாசமே அப்பா கம்பெனில அப்ரண்டிசா சேர்றேம்மா,'' என்று சொன்னான் கிரி.
நெகிழ்ந்தாள் லலிதா; சிரித்தார் சம்பத்.

""நோ...நோ...கிரி நீ இப்படிச் சொன்னதே போதும். ஊட்டிக்கு போய் நல்லா என்ஜாய் செய்துட்டு, மகிழ்ச்சியா திரும்பி வா. டீன் ஏஜ்ல ஜாலியா இரு; ஆனா, கேர்புல்லா இரு. எக்சாம் முடிஞ்சதும், ஆபீஸ் பத்தி யோசிக்கலாம். ஓட்டல் தமிழ்நாடுல நாளைக்கே, ரூம் புக் செய்திடுறேன். ஓ.கே.,'' என்றார் சம்பத்.

அப்பாவின் மனமும், விருப்பமும் புரிந்த கிரி, சந்தோஷமாய் சிரித்தான்.
***

நன்றி - வாரமலர் - கிரிகா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அப்பா :)  Empty Re: அப்பா :)

Post by Muthumohamed Sat Aug 24, 2013 8:46 pm

நல்ல கதை பகிர்வு நன்றி அம்மா



அப்பா :)  Mஅப்பா :)  Uஅப்பா :)  Tஅப்பா :)  Hஅப்பா :)  Uஅப்பா :)  Mஅப்பா :)  Oஅப்பா :)  Hஅப்பா :)  Aஅப்பா :)  Mஅப்பா :)  Eஅப்பா :)  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum