ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னிய உணவுக்கு அடிமையாகலாமா?

Go down

அன்னிய உணவுக்கு அடிமையாகலாமா? Empty அன்னிய உணவுக்கு அடிமையாகலாமா?

Post by சாமி Fri Jul 26, 2013 11:42 am

மந்திய அரிசி - குறிப்பாக பாசுமதி, கோதுமை போன்ற உணவு ஏற்றுமதியில் உலக சாதனை என்று மகிழ்ந்து கொள்ளும் வேளையில், பதனம் செய்யப்பட்ட அன்னிய உணவு இறக்குமதி மதிப்பு உயர்ந்து செல்வது வேதனைக்குரிய விஷயம். மணக்க மணக்க உண்ணக் கூடிய இந்திய உணவுக்கு மவுசு குறைந்துவிட்டது. நாளுக்கு நாள் இந்திய சமையலறைகளில் பணி குறைந்து வருகிறது. பணிக்குச் செல்லும் பெண்களுக்கு சமையல் செய்ய நேரம் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளலாம். பணிக்குச் செல்லாத வீட்டு மனைவிகள்கூட அன்னிய "பாஸ்தா' வகை "பேக்கேஜ்' உணவுக்கு அடிமையாகிவிட்டனர்!

பதன உணவு தயாரிக்கும் உலக உணவு முதலைகளுக்கு இந்திய நகரங்களின் பல்பொருள் அங்காடிகள் (சூப்பர் மார்க்கெட்) முதன்மை விற்பனை மையங்களாகிவிட்டன. சின்னாளப்பட்டி பழக் கடையில் வாஷிங்டன் ஆப்பிள் கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! வியட்நாம் பசா மீன், பெருநகரங்களில் கிட்டும். நட்சத்திர ஓட்டல்களில் பலவிதமான இறக்குமதி உணவுகள் கிட்டும். கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக இந்தியாவில் இறக்குமதி உணவுகள் பன்மடங்கு உயர்ந்து இந்தியாவின் பற்றாக்குறைப் பொருளாதாரத்திற்கு விடிவு காண முடியாத சூழ்நிலை தோன்றி வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு புதிய நுகர்வோர் வர்க்கம் உருவாகிவிட்டது. அன்னிய உணவு வர்த்தகர்கள், இந்த வர்க்கத்தை ""புது நாகரிக நுகர்வோர்கள்'' என்று வர்ணிக்கிறார்கள். அவர்களுக்கு என்ன கவலை? தேசாபிமானமுள்ள ஒரு நல்ல குடிமகன் கவலைப்படும் விஷயமல்லவா இது? ""இப்புதிய நாகரிக நுகர்வோர்கள் அவர்களுடைய நல வாழ்வில் அக்கறை உள்ளவர்கள் என்பதால், உலகத்தில் உயர்ந்த உணவுக்கு, உலகத்தரமுள்ள உணவுக்கு அதிகப் பணம் செலவழிக்கிறார்கள்'' என்றும், இத்தகைய ஆடம்பரத்தை நியாயப்படுத்தும் இந்திய வணிகர்களையும் பாரதத் தாய் பொறுத்துக் கொள்கிறாள்!

÷பதனப்படுத்தப்பட்ட மாட்டுக் கறி, ஆட்டுக் கறி, மீன், பன்றிக் கறி ஆகியவை இறக்குமதி முத்திரை பெற்றிருந்தால் "நல்ல தரம்' என்று தவறாகப் பொருள் கொள்ளப்படுகிறது. பாஸ்தா, விதம் விதமான பாலாடைக் கட்டிகள், கேடு கெட்ட கிவிப் பழம் கூட இறக்குமதியாகிறது. ""கிவி'' என்றால் அது ஒரு பறவை என்று கேள்விப்பட்டுள்ளோம். இந்த நியூஜிலாந்துப் பறவை உண்ணும் பழத்திற்கும் கிவி என்று பெயர். முட்டையை விடச் சிறிய அளவில் மிளகாய்ப் பழத்தில் சணல் சுற்றியதுபோல் இருக்கும். உள்ளே பச்சையாகக் கதுப்பு உண்டு. நம்ம ஊர் சீதாப்பழம்கூட ருசியாக இருக்கும். நாட்டுக் கோழியைவிட ஈமு கோழி உயர்ந்தது என்றும், மருத்துவ குணம் உள்ளது என்றும் ஏமாற்றி கிலோ ரூ.300/- க்கு விற்ற ஈமு கோழி இறைச்சியை இன்று கிலோ ரூ.50/-க்குக் கூட வாங்க ஆள் இல்லை. அது போலத்தான் கிவிப் பழம். கிவிப் பழங்களுக்கு உலக அந்தஸ்து. அதைவிடச் சத்துள்ள கோவைப் பழத்திற்கோ சீதாப் பழத்திற்கோ உள்ளூர் அந்தஸ்து இல்லை! பெயரே அறியப்படாத பல மேலைநாட்டுக் காய்கறிகள் கூட விற்பனைக்கு வருகின்றன. அநேகமாக அவற்றை உண்பவர்களுக்குப் பெயர் தெரிந்திருக்கலாம்!

÷டன் டன்களாகப் பாஸ்தா, பெயர் அறியப்படாத அன்னியக் காய்கறிகள், ஆப்பிள், ஆரஞ்சு, கிவி போன்ற அறியப்படாத அன்னியப் பழங்கள், பாலாடைக் கட்டிகள், பால் பதனப் பொருள்கள், ஆலிவ் எண்ணெய், பதனப்பட்ட பல பெயர் அறியப்படாத உணவுகள், பெயர் தெரியாத இனிப்பு வகைகள் (ஒயின், இறைச்சி கலந்தவை) எல்லாம் சேர்த்து ஆண்டுக்கு 40 பில்லியன் டாலர் அளவில் இந்தியாவில் வியாபாரம் உள்ளது. 2020-ஐ நெருங்கும்போது நமது அர்த்தமற்ற உணவுப்பொருள் இறக்குமதியை 900 பில்லியன் டாலராக உயர்த்த "விதேசி உணவு முதலைகள்' திட்டமிட்டுவிட்டன. இந்தியப் பிரதமருக்கு இறக்குமதி செய்த ருசியான ஐஸ்கிரீமைக் கொடுத்து வாயை அடைத்துவிட்டார்கள்!

÷இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பதன உணவு வகைகளில் பற்பல முன்பிருந்தே உண்டு. பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இவை கிடைப்பது அரிதாயிருந்தது. மேல்தட்டு வர்க்கத்தினரில் சிலரின் ஆதரவு மட்டுமே இருந்தது. இன்று மேலைநாட்டு உணவு முறைகளில் முழு ஆர்வம் செலுத்தும் புதிய பணக்கார வர்க்கம் விர்ரென்று இந்தியாவில் வளர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட புதிய பணக்கார நுகர்வோர்கள் லண்டனில், பாரிசில், நியூயார்க்கில், டோரோண்டோவில், சிட்னியில் உள்ள வெள்ளைக்காரர்கள் என்ன உண்கிறார்களோ அதே உணவை இந்தியாவுக்கு வரவழைத்து உண்ணும் அளவில் விதேசி உணவுக்கு மவுசு கூடியுள்ளது!

÷இறக்குமதி செய்யப்படும் உணவே விஷமற்றது, நோய் தீர்க்கும் என்றெல்லாம் இந்தப் புதிய மேல் தட்டு நுகர்வோர் நம்பத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் உள்ள பழங்கள், காய்கறிகளில் பூச்சி மருந்து விஷம் அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் என்பதால் ""விஷமில்லா உணவை'' இறக்குமதி செய்து உண்பதாக அவர்கள் கருதுகின்றனர். இதனால்தான் சீனா, சிலி, அமெரிக்கா, நியூஜிலாந்து, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் விளையும் ஆப்பிள்கள் ஆண்டு முழுவதும் இந்தியாவுக்கு வந்தவண்ணம் உள்ளன? அது உடலுக்கு நல்லதுவே என்று வாஷிங்டன் பிராண்ட் ஆப்பிளை நம் மக்கள் உண்பதுண்டு! இது விஷம், இது விஷமில்லை என்பதற்கு எந்த அளவுகோலும் இல்லை! இந்தியா மீது கொள்ளை மரியாதை வைத்து நல்ல பழங்களாக அமெரிக்காக்காரன் அனுப்புவானா என்ன? சொல்லப்போனால், மேலை நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும்போது கண்காணிக்கக் கூடிய விஷ அளவுப் பரிசோதனைகள், சான்றிதழ் போன்ற நடைமுறை எதுவும் இறக்குமதி செய்யும் காய்கறி, பழங்களுக்கு இல்லை. ""கிவிப் பழம் சாப்பிட்டால் டெங்கு ஜுரம் வராது'' என்று விளம்பரமாவதால் கேடு கெட்ட கிவிப் பழத்தை 1 கிலோ ரூ.200 விலை கொடுத்து வாங்குவோர் உண்டு!
(தொடரும்)


Last edited by சாமி on Fri Jul 26, 2013 11:44 am; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அன்னிய உணவுக்கு அடிமையாகலாமா? Empty Re: அன்னிய உணவுக்கு அடிமையாகலாமா?

Post by சாமி Fri Jul 26, 2013 11:43 am

÷இந்தியாவுக்குள் வரும் இறக்குமதி உணவு பற்றிய பட்டியலைப் பார்த்தால் நீங்கள் அசந்து மூர்ச்சையாகி விடுவீர்கள். இவற்றால் நாம் நமது மானம், மரியாதை எல்லாவற்றையும் இழப்பதுடன், மிகவும் சிரமப்பட்டு ஏற்றுமதி உணவால் நாம் பெற்ற அன்னியச் செலாவணி அவ்வளவையும் உணவு இறக்குமதியினால் இழந்து விடுவதால், உணவு ஏற்றுமதி பற்றிப் பெருமையாக நினைக்க முடியவில்லையே!

÷ஆப்பிள், ஆரஞ்சு தவிர பெயர் அறியாப் பழங்களான கிவி, ஆங்கிலக் காய்கறிகளின் இறக்குமதி மதிப்பு 2005-06 இல் 3.5 கோடி ரூபாய் என்ற நிலை 2011-12-இல் 11 கோடியாக உயர்ந்துள்ளது. பருப்பு இறக்குமதி இதே கால கட்டத்தில் 2,500 கோடி ரூபாய் என்ற நிலை 12,000 கோடியாகவும், பாலாடைக் கட்டி போன்ற பால் பதனப் பொருள் இறக்குமதி 41 கோடி ரூபாயிலிருந்து 183 கோடி ரூபாயாகவும், மீன் உணவு இறக்குமதி 99 கோடி ரூபாயிலிருந்து 490 கோடி ரூபாயாகவும் சர்க்கரை- இனிப்புப் பண்ட இறக்குமதி 783 கோடி ரூபாயிலிருந்து 3,500 கோடி ரூபாயாகவும், பாஸ்தா இறக்குமதி 6 கோடி ரூபாயிலிருந்து 15 கோடி ரூபாயாகவும், முந்திரிப் பருப்பு இறக்குமதி 2 கோடி ரூபாயிலிருந்து 6 கோடி ரூபாயாகவும், சமையல் எண்ணெய் இறக்குமதி 8.9 கோடி ரூபாயிலிருந்து 60,000 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

÷சமையல் எண்ணெய் இறக்குமதியில் அதிகம் பங்கு வகிப்பது சுத்திகரிப்பு ஆகாத பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் அடக்கம். இம் மூன்றில் சுமார் 75 சதவீதம் பாமாயில் இறக்குமதியில் மட்டும் மிக அதிகமான அன்னியச் செலாவணி இழப்பு உண்டு. சமையல் எண்ணெய் இறக்குமதி எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறது என்ற புள்ளிவிவரம் மூச்சை நிறுத்தும் அளவுக்கு உயர்ந்து சென்று கொண்டே உள்ளது. 1992-93-இல் சமையல் எண்ணெய்ப் பற்றாக்குறை மூன்று சதவீத நிலை 2010-11-இல் 50 சதவீதமாக உயர்ந்துவிட்டது. மொத்த சமையல் எண்ணெய் தேவையில் 50 சதவீதம் மட்டுமே உள்ளூர் உற்பத்தி. ஆண்டுதோறும் 1 கோடி டன் அளவில் சமையல் எண்ணெய் இறக்குமதியாகிறது! இதனால் நமது அன்னியச் செலாவணி இழப்பு 60,000 கோடி ரூபாய்கள்.

÷இதுநாள்வரை சமையல் எண்ணெய் இறக்குமதியாளர்களும், இறக்குமதியை ஆதரிக்கும் அரசியல்வாதிகளும் தேங்காய் எண்ணெய்க்கு எதிராக ஒரு தவறான பிரசார உத்தியைப் பயன்படுத்தி வந்தனர். நிஜம் நிரூபணமானது. தேங்காய் எண்ணெய்க்கு மட்டுமே மருத்துவ குணம் உண்டு என்றும், "டிரான்ஸ்' கொழுப்பு இல்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டு மேலை நாடுகளில் டால்டா / வனஸ்பதி தேங்காய் எண்ணெயில் தயாரிக்கத் தொடங்கிய பின்னர் இந்தியாவிலும் தேங்காய் எண்ணெயால் கெடுதி இல்லை என்று ஒப்புக் கொண்டார்கள். ஒரு காலகட்டத்தில் தேங்காய் எண்ணெய், பாமாயிலை விடவும் கேவலமாக மதிக்கப்பட்டது. 2011-இல் டென்மார்க் ஆராய்ச்சியில் பாமாயிலில், எல்.டி.எல். என்று சொல்லப்படும் "கெட்ட கொலஸ்ட்ரால்' மிக அதிகம் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் மேல்தட்டு வர்க்கம் ஆலிவ் எண்ணெயை இறக்குமதி செய்யத் தொடங்கியது. 2010-11 ஆண்டில் மட்டும் நாம் 42,000 டன்கள் ஆலிவ் எண்ணெயை இறக்குமதி செய்தோம். இதனால் 110 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி இழப்பு. எதிர்காலத்தில் ஆலிவ் எண்ணெய் இறக்குமதி பன்மடங்கு உயரலாம். ஆலிவ் எண்ணெயை ஒரு காலத்தில் உடம்பில் பூசவே பயனானது. இப்போது சமையல் எண்ணெயாக ஏற்கப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெய்க்கு இலுப்பை எண்ணெய் ஈடு கொடுக்கும். தமிழ்நாட்டில் இலுப்பை மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இந்தியாவிலும் இலுப்பை அரியமரமாகிவிட்டது. மேலை நாடுகளில் ஆலிவ் மரச் சாகுபடி வளர்ந்து வருகிறது. அமெரிக்க விஞ்ஞானியோ டென்மார்க் விஞ்ஞானியோ ஆராய்ச்சி செய்து ""இலுப்பை எண்ணெய் உடலுக்கு நல்லது'' என்று அறிவிக்கும் காலம் வரும்போது இலுப்பை சாகுபடி ஊக்கம் பெறலாம்!

கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டாம். ஏழை, பணக்காரர் மேல்தட்டு கீழ்த்தட்டு என்று பாகுபாடு இல்லாமல் குண்டுக் குழந்தைகள், குண்டுப் பெற்றோர்கள் இந்தியாவில் பெருகி கூடவே கொலஸ்ட்ரால், உயர்ந்த ரத்த அழுத்த நோயால் அவதியுறும் காரணம் பாமாயிலில் தயாராகும் பண்டங்களே. ரொட்டிக் கடையில் நீங்கள் வாங்கும் கேக், பட்டர் பிஸ்கட் எல்லாம் பாமாயில் வனஸ்பதியில் செய்யப்பட்டவை. கையேந்தி பவன் போண்டா, வடை, நெய் தோசை எல்லாம் பாமாயில் சரக்குதான் என்று புரிந்துகொண்டு எச்சரிக்கையாக வாழ்ந்தால் உங்களுக்கு நன்மை.

÷இறக்குமதி உணவுப் பட்டியலில் பாதாம், பிஸ்தா, உலர்ந்த பேரீச்சை, பல வகையான கொட்டைப் பருப்புகள், அத்திப்பழம் என்று எவ்வளவோ உண்டு. உடல்நலம் பற்றிப் பேசும் மேல்தட்டு நுகர்வோர் வர்க்கம் ஏன் இந்தியாவிலேயே விளையக்கூடிய இயற்கை அங்காடி உணவுப் பொருள்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை? இந்தியாவில் இயற்கை விவசாயத்தையும் இயற்கை அங்காடியையும் வளர்த்துவிட்டால் நல வாழ்வில் பிரச்னைகள் வராது. ""வெளிநாட்டில் விளைவதெல்லாம் நஞ்சற்ற உணவு'' என்று எண்ணும் மடமையைக் கொளுத்துவோம்.

÷இந்திய உணவுகளை அலட்சியம் செய்துவிட்டு விதேசி உணவுக்கு அடிமையாகிவிட்டால் இந்த பாரத தேசமே திவாலாகிவிடும். தவிரவும் உலக உணவுப் பொருள் அங்காடிகளைக் கட்டுப்படுத்தும் விதேசி முதலைகள் ஒரு பொருளின் தேவை - வழங்கலை அனுசரித்து விலைகளை நிர்ணயிப்பதில்லை.

இந்தியாவைக் கொள்ளையடிக்கும் விலைகளை நிர்ணயிப்பதால் நாட்டைக் காப்பாற்ற விதேசி உணவைப் புறக்கணிக்கும் போராட்டங்களை உருவாக்கினால்தான் நாடு பிழைக்கும்.

வாழ்க பாரதம்.
(கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி)
நன்றி-தினமணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum