ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்!

2 posters

Go down

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Empty ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்!

Post by தாமு Mon Oct 26, 2009 5:26 am

நம் இதயத்தை பற்றி முதலில் ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதயத்தின் பாதிப்புகளில் இருந்து சமாளிக்கத்தான் மருந்துகள் இந்த உலகில் உள்ளதே தவிர, அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது தான் முதல் உண்மை. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம்... ஒவ்வொரு மருந்தும் நமக்கு உதவிகள்தான் செய்கிறதே தவிர, போரிட்டு அந்த நோயை வெள்ள முடியாது!


ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Heartcare21072009_aஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveபைபாஸ் சர்ஜரி, ஏன்ஜியோ பிலாஸ்ட் ஆகிய சிகிச்சைகள் நமது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்கு உதவி செய்கிறது. இதயத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை தட்டிவிட்டோ அல்லது அந்த பாகத்துக்கு பதில் வேறு குழாயை வைப்பது என அனைத்தும் நம் இதயத்தின் ரத்த ஓட்டத்துக்கு மருத்துவர்களால் செய்யப்படும் ஒரு சிறு உதவிகள் மட்டும் தான். இதில் பேஸ்மேக்கரும் விதிவிலக்கல்ல.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveஆண்டுதோறும் ஹார்ட் அட்டாக்கில் மரணம் அடையும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆசியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒரு கோடி பேருக்கு மேல் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வயது முதல் 26 வயதுக்குள் இருப்பவர்களும் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார்கள் என்பது வேதனையான ஒன்று. ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு இதயக் கோளாறா என்று நீங்கள் ஆச்சரியபடுவது புரிகிறது. ஆயினும், இது நமது சமூகத்தில் புதிதல்ல என்கின்றனர், மருத்துவர்கள். ஆண்டுதோறும் பல்லாயிரம் குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது அண்மைப் புள்ளிவிவரம்.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_love'30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தான் மாரடைப்பு வரும்' என்று இன்றும் பல பேர் நம்புகிறார்கள். அது முற்றிலும் தவறு. தற்பொழுது சராசரி 26 வயதுக்குள் இருப்பவர்களும் வந்துவிடுகிறார்களாம். இந்த வயது எண்ணிக்கை மேலும் குறையலாம் என்பது வருத்தத்துக்குரிய மருத்துவர்களின் புதிய கணிப்பு.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveநமது ரத்தக் குழாயில் எல்.டி.டி(Low Density Lipo) தான் நமக்கு இதய நோய் தொடர்பான குறைகளை எல்லாம் அழைத்துவரும் நண்பராக இருக்கிறது. இதைக் குறைக்கத்தான் முடியுமே தவிர, முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveஇதய நோய் பிரச்னையில் மிகவும் பரிதாப நிலை கொண்டவர்கள் யார் என்றால், சர்க்கரை நோய் உள்ளவர்கள்தான். இவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் கூட இவர்களுக்கு தெரிவதில்லை என்பது தான் உண்மை. காரணம்..? சர்க்கரை நோய் தாக்கியவர்களுக்கு நரம்புகள் பலகீனமடைவதால், அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும்பொழுது வலி அதிக அளவில் இருக்காது. எதேச்சையாக பலவீனம், தலைசுற்று என்று பக்கத்தில் இருக்கும் மருத்துவர்களிடம் செல்லும் பொழுது மருத்துவருக்கு சந்தேகம் வந்து, இ.சி.ஜி. எடுத்துப் பார்க்கும்பொழுதுதான் அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது என அறிய முடிகிறது என்பது வேதனையான உண்மை. ஆகையால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சற்றுக் களைப்படைந்தாலும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveசாதாரண மனிதர்கள் 6 மாதம் முதல் 1 வருடம் வரை ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதுவே சர்க்கரை நோய் தாக்கியவர்களாக இருப்பின், கண்டிப்பாக 2 அல்லது 3 மாததுக்கு ஒரு முறை கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்துக்கான ஒரே மருத்துவரை தேர்ந்தெடுத்து, அவரிடமே சிகிச்சை செய்து கொள்வது மிக மிக அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveஎளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்... நமது உடலில் கெட்ட ரத்தம் (Bad Blood), நல்ல ரத்தம் (Good Blood) என இரண்டு வகையாக ரத்தத்தை மருத்துவ நிபுணர்கள் பிரித்துக் கூறுகிறார்கள். உதாரணமாக, நமது கையின் மேல் இருக்கும் கருப்பான நரம்புகள் அனைத்தும் கெட்ட ரத்தத்தைதான் கொண்டு செல்கின்றது. இதை நீங்கள் தொட்டுப் பார்த்தால், உங்களால் ஒன்றுமே அரிய முடியாது. இந்தக் கெட்ட ரத்தம் முழுக்க முழுக்க குறைந்த அழுத்தம் (Low Pressure) வகையை சேர்ந்ததால் தான் உங்களால் இதன் தன்மையை உணர முடியா நிலை ஏற்படுகிறது.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveநல்ல ரத்தம் எங்கேதான் ஓடுகிறது என கேட்கிறீர்களா? நம் உடலில் எல்லா பாகங்களிலும் இந்த இரண்டு வகை ரத்தங்கள் சென்று வந்து தான் கொண்டிருக்கிறது. நம் கை உள்ளங்கை கீழே இருக்கும் நரம்பின் இடையில் ரத்த ஓட்டத்தை தொட்டுப் பார்த்தால் இதன் துடிப்பை நீங்கள் நன்றாக உணரலாம். இதற்கு காரணம் இந்த ரத்த நரம்புகள் உயர் அழுத்தத்தை (High Pressure) சேர்ந்ததுதான். உங்கள் காய்ச்சலுக்கு டாக்டர்கள் உங்கள் கையைப் பிடித்து பல்ஸ் பார்ப்பதை அறிந்திருப்பீர்கள். அவர் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் இருக்கும் வாட்சைப் பார்ப்பார். இத்தனை வினாடிக்கு இத்தனை துடிப்புகள் என கணக்கு வைத்து உங்களின் உடலில் இருக்கும் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு என்பது முதற் கொண்டு நன்கு அறிந்து, அதற்கு தகுந்த மருந்துகளை கொடுப்பதும் இந்த நல்ல ரத்தம் ஓட்டத்தை வைத்துதான்.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveஒரு மனிதனுக்கு சராசரி உயர் ரத்த அழுத்தம் 120/80 இருக்க வேண்டும். வயதுக்கேற்ற வகையில் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 40 வயதிலும் இதே அளவு இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த வயத்துக்குப் பிறகு ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveநீங்கள் நடக்கும்பொழுது அதிகமாக மூச்சு வாங்கினாலோ அல்லது உங்கள் கண்கள் தலையை சுற்றுவது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டாலோ நீங்கள் உங்கள் உடலை முழுவதுமாக பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம். (நடந்து கொண்டிருக்கும் போதே திடீர் இதய பாதிப்பால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து ஏற்படும் மரணம் இப்போது அதிகரித்துக் கொண்டிருப்பதைக் கவனத்தில் கொள்க.)

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveஇயன்றை வரையில் நெய் வகை இனிப்புகளை சுவைப்பதைத் தவிருங்கள். ஐ.டி. முதலிய துறைகளைச் சேர்ந்தவர்கள் நொறுக்குத் தீனியாக இனிப்பை மிகுதியாக சாப்பிடுவதால், எல்.சி.டி. கொழுப்பு அதிகரித்து, வயது வித்தியாசமினிறி இதயம் பலகீனமாக்கும் மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_love"நானெல்லாம் காலையில் எழுந்ததும் வாக்கிங் பொயிடுவேன். அப்பறம் தான் உடற்பயிற்சி," என்று அதிகாரமாக சொல்பவராக நீங்கள் இருந்தால்... அது நோ யூஸ்! காலையில் எழுந்ததும் சிறிது வார்ம் அப் செய்ய வேண்டும். முதலில் தலையில் ஆரம்பித்து, அடுத்து தோள்கள், முக்கியமாக இடுப்பை முன்பும் பின்புமாக நன்றாக வளைத்து, இறுதியாக நமது பாதங்களுக்கு சிறு பயிற்சி கொடுத்த பிறகுதான் ஜாகிங் அல்லது வாக்கிங் செய்யவேண்டும். இப்படி செய்தால்தான் நீங்கள் நினைத்த மாதிரி உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடியும். இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveஅதிகாலையில் எழுந்ததும் சுடச்சுட பால் ஆடையுடன் பாலோ அல்லது டி, காபி குடிக்கும் நபராக இருந்தால், தயவு செய்து அதை மறந்துவிடுங்கள். எருமைப் பாலை விட பசும்பால் குடிக்கலாம் அல்லது புரதச்சத்து குறைந்த பாலை தேர்ந்தெடுத்துப் பருகலாம். எதை குடித்தாலும் பாலாடையை எடுத்துவிட்டு, சற்று தண்ணீர் நிலையில் இருக்கும் பாலை குடிப்பதுதான் நல்லது. இதில் 18 வயது வரை இருப்பவர்கள் மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம்.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveபைபாஸ் சர்ஜரி செய்து கொண்டவர்கள் உட்கார்ந்த நிலையில் சில பயிற்சிகளை செய்யலாம். 3 மாதம் பிறகுதான் மற்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். உடலை வளைப்பது, குனிவது போன்ற பயிற்சிகளை உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படிதான் நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveஹார்ட் சர்ஜரி செய்து கொண்டவருக்கு சலிப்பிடித்து இருமல் ஏற்பட்டால், இதயத்தில் சிறு கணம் கொண்ட தலையனையை இதமாக அனைத்துக் கொண்டுதான் இரும வேண்டும். அதேநேரத்தில், அதிகப்படியாக 1 கிலோ அல்லது 1 லிட்டர் கணத்தைத்தான் தூக்க வேண்டும். கண்டிப்பாக பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் சர்ஜரி முடிந்து, 3 மாதங்களுக்கு மட்டும்தான். 6 மாதம் வரை சரியாக கடைபிடித்துவிட்டால் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveஅசைவ பிரியர்களுக்கு மீன் மட்டும் தான் இதயத்துக்கு பலம் கூட்டும் சக்தியாக இருக்கிறது. அதற்காக, எண்ணெய்யில் பொறித்த மீன்களை அள்ளி சாப்பிடுவதும் தவறு. குழம்பு மீன்களை பிளேட் பிளேட்டாக உள்ளே தள்ளுவதும் தப்பு. வாரம் இரண்டு முறை ஒரு மனிதன் 100 கிராம் அளவில் தான் மீன் உண்ண வேண்டும்.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveவீட்டில் ஒரே எண்ணெய்யை சமைப்பதும் முற்றிலும் தவறு என்று கூறும் மருத்துவர்கள் நல்லெண்ணை, கடலெண்ணை, மற்றும் தேங்கா எண்ணையை சரி அளவில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணையை பாட்டிலுடன் சாய்த்து உபயோகப்படுத்துவதற்கு பதில் டீஸ்பூன்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதே சிறந்தது.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveகொள்ளூ ரசம் மற்றும் அன்னாச்சிபழம் நம் இதயத்துக்கு உற்ற நண்பர்கள். இவற்றை வாரம் 2 தடவை சுழற்சி முறையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதே போல் வெந்தயம், ஆரேஞ்சு பழங்கள் மற்றும் எலுமிச்சை பழங்களும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_love"ஹலோ சார் நான் இதை எல்லாம் கரெக்டா செய்கிறேன், இதனுடன் டிரெட்மில்லில் தினமும் ஒரு மணி நேரத்தில் 10 கிலோமீட்டர் சூப்பரா வேர்க்க வேர்க்க ஓட்டம் எடுப்பேன்," என்று மார்தட்டி சொல்கிறீர்களா?

சோ சாரி சார்... ஒரு மணி நேரத்துக்கு 6.5 கிலோமீட்டர் தான் உங்கள் நடை பயணம் இருக்க வேண்டும். அதுவும் நீங்கள் 35 வயதுக்குள் இருந்தால் தான் வெயிட்களை தூக்கி பழகலாம். 35 கடந்தவர்கள் வெறும் நடைபயிற்சி மற்றும் ஓட்டத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveஅதிகபடியான மகிழ்ச்சி மற்றும் துக்கங்களில் நம்மை நாமே ஆழ்த்திக் கொள்வது மிக மிக தவறு. எப்போதும் சாதாரண மனநிலையிலேயே இருக்க வேண்டும். எதிலும் 'டேக் இட் ஈஸி' பாலிஸிதான் பெஸ்ட்!

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_love"ஹய்யோ எனக்கு பைபாஸ் சர்ஜரியா?!" என்று எல்லோரையும் திகிலில் ஆழ்த்தாதீர்கள். தற்பொழுது பச்சிளம் குழந்தைக்குக் கூட இதை சர்வசாதாரணமாக நடைபெற்று வெற்றி வாகை சூடிய மருத்துவர்கள் முக்கிய நகரங்களில் இருக்கிறார்கள்.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_love35 வயதுக்குள் இருக்கும் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால், அவரது தொடையோ அல்லது கால் முட்டியின் கீழோ இருக்கும் நரம்புகள் எடுத்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சரி செய்திருப்பார்கள். அதனால் காலின் முட்டி முதல் உள்ளங்கால் வரை கட்டுகள் போட்டிருப்பார்கள். அதை அலட்சியமாக விட்டு விடுவதும் நல்லது அல்ல. 3 முதல் 6 மாதம் வரை காலுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveநம் முன்னோர்கள் சரியான நடைபயிற்சி, துணி துவைப்பது, வீட்டை மொழுகுவது, மாவாட்டுவது, நேரம் தவறாமல் உண்டது, அந்த உணவுகளை சரியாக மென்று உண்பது ஆகியவற்றால் தான் திடமாக இருந்தார்கள். அதனால், எந்த பிரச்னையை அவர்களால் எளிதில் சமாளிக்க முடிந்தது. அது மனப்பிரச்னையாக இருந்தாலும் சரி, சங்கடத்தை கொண்டதாக இருந்தாலும் சரி அவர்களை அதிகமாக பாதித்தது இல்லை.

ஆனால் இன்றோ... இதை நாம் எதை முழுமையாக செய்கிறோம்? அதிவேக உலகமாகிவிட்டது. எதிலும் வேகம், அவசரம். நில்லுங்கள் சற்று சிந்தியுங்கள்.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveகண்டிப்பாக குடி மற்றும் புகைப் பிடிக்கும் பழக்கத்தை முதலில் முழுவதுமாக கைவிட வேண்டும். இது அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பொருந்தும். இவ்விரண்டும் தான் இதய பாதிப்புக்கு முக்கியக் காரணிகளில் முன்னிலை வகிப்பவை.

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Bullet_loveஅதேபோல், மூன்று விஷயத்தை தவிர்த்துவிடுவது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. அவை... கறி (Meat), ஹர்ரி Hurry & ஸ்கேரி (Scary).



நன்றி கதிர்வேல்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Empty Re: ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்!

Post by kirupairajah Mon Oct 26, 2009 8:24 am

இதயம் பற்றி அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள். பதிவிற்கு நன்றி தாமு!


ஒரு 'ஹார்ட்' ரிப்போர்ட்! Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum