ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!! Empty அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!!

Post by malik Wed Jul 17, 2013 10:59 am

தன் குருவிடம் ஒருவர் கேட்டார்,
”என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?’

குரு சொன்னார், “அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்”.

“என்னால் முடியவில்லையே”!

“அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்”. “அதுவும் முடியவில்லையே!”

“சரி! அப்படி யென்றால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள்.

“குருவே! அதுவும் முடியவில்லை!”

குரு சொன்னார்,

“அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை, கடக்க முடியவில்லை, கண்டு சிரிக்க முடியவில்லை

என்றால் அந்த அவமானங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர் என்று அர்த்தம்.
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!! Empty மெய்ப்பொருள் காண்ப தறிவு -(குறள்)

Post by malik Wed Jul 17, 2013 11:01 am

ஒரு குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.

குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.

‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.

‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.

‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’

‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.

சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம்.‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.

‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.

சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்திக் கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.

வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு -(குறள்)
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!! Empty காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது..!!

Post by malik Wed Jul 17, 2013 11:04 am

ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு
சொர்க்கத்துக்குப் போனான்.

.. சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது.


‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான்.

உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.

‘‘இந்தா... இதை வெச்சுக்கோ... சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்!’’

சித்ரகுப்தன் சிரித்தான்.

‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள், லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’

‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’

‘‘வேறே எப்படி வாங்கறது?’’

‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’


‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான்.

பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்.... அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.

‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்!’’

‘‘என்ன உத்தரவு?’’

‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’

‘‘அப்புறம்?’’

‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்:

காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!! Empty வஞ்சனையால் துன்பமே..!!

Post by malik Wed Jul 17, 2013 11:09 am

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி...அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு...அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் ...நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை...ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே ...கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது...அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..'நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் ...என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்...என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!! Empty பிரார்த்தனை

Post by malik Wed Jul 17, 2013 11:20 am

இளைஞர்கள் அந்தப் படகில் ஏறினார்கள்.

படகோட்டி மண்டியிட்டு வழிபாடு செய்வதைக் கண்டு சிரித்தார்கள்

“காற்றில்லை, கடல் அமைதியாயிருக்கிறது” என்று கேலி செய்தார்கள்.

படகோட்டி வந்து படகை இயக்கினார்.

சிறிது தூரம் போனதும் காற்று பலமாக வீசியது.

அனைவரும் பிரார்த்திக்கத் துவங்கினார்கள். படகோட்டி

எச்சரிக்கையாய் இயக்கி படகைக் கரை சேர்த்தார்.

“நீங்கள் எங்கள் பிரார்த்தனையில் பங்கெடுக்கவிலையே?

வியப்புடன் கேட்டவர்களுக்குச் சொன்னார்.

“கடல் அமைதியாய் இருக்கையில் நான் பிரார்த்திக்கிறேன்

. கொந்தளிக்கும் போது படகைக் கையாள்கிறேன்”.

இதுதானே நமக்கும் வேண்டும்
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!! Empty பலவீனங்களையும் பலமாக மாற்றத்தெரிந்தவனே வெற்றியாளன்.

Post by malik Fri Jul 19, 2013 11:32 am

சைக்கிள் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஒரே ஒரு கால் உடைய ஒருவரும் தன் பெயரை போட்டியில் பதிவுசெய்தார்.

அருகில் இருந்தவர்கள் ''வெகு தூரம் சைக்கிளில் செல்ல வேண்டும். அப்போது கால் களைத்துப் போகுமே பரவாயில்லையா?'' என்றனர்.

அதற்கு அவர் ''உங்களுக்கு சைக்கிள் ஓட்டும்போது இரண்டு கால்களும் வலிக்கும். ஆனால்,

எனக்கு ஒரு கால்தான் வலிக்கும்'' என்றார் புன்சிரிப்புடன்.

தன் பலவீனங்களையும் பலமாக மாற்றத்தெரிந்தவனே வெற்றியாளன்.
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!! Empty Re: அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!!

Post by malik Fri Jul 19, 2013 11:32 am

நன்றி : தமிழ் - முகநூல் பக்கம்
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!! Empty Re: அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!!

Post by பூவன் Fri Jul 19, 2013 11:33 am

malik wrote:சைக்கிள் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஒரே ஒரு கால் உடைய ஒருவரும் தன் பெயரை போட்டியில் பதிவுசெய்தார்.

அருகில் இருந்தவர்கள் ''வெகு தூரம் சைக்கிளில் செல்ல வேண்டும். அப்போது கால் களைத்துப் போகுமே பரவாயில்லையா?'' என்றனர்.

அதற்கு அவர் ''உங்களுக்கு சைக்கிள் ஓட்டும்போது இரண்டு கால்களும் வலிக்கும். ஆனால்,

எனக்கு ஒரு கால்தான் வலிக்கும்'' என்றார் புன்சிரிப்புடன்.

தன் பலவீனங்களையும் பலமாக மாற்றத்தெரிந்தவனே வெற்றியாளன்.

அருமை பகிர்வு சூப்பருங்க சூப்பருங்க 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!! Empty Re: அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!!

Post by யினியவன் Fri Jul 19, 2013 11:40 am

நல்ல கருத்துள்ள கதைகள் மாலிக்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!! Empty குறைபாட்டுக்கு மாற்று ஏற்பாடு உண்டு..!!

Post by malik Fri Jul 19, 2013 11:44 am

அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள் இணைந்தே திரியும்.

பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும்.

நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும்.

இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது.

கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை.

இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார்.

ஆனால் மிக வித்தியாசமாக ஒன்றைச் செய்தார்.

கண்தெரிகிற குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டியிருந்தார்.

மணிச்சத்தம் கேட்டு ஊனமுற்ற குதிரை,

அடுத்ததைத் தொடரும்.

அந்த உரிமையாளர் செய்ததைத்தான் கடவுளும் செய்கிறார்.

ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை மறக்காமல்
செய்துள்ளார்.
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!! Empty Re: அவமானங்களுக்கு தகுதியுடையவர்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum