ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்

4 posters

Go down

 கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம் Empty கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்

Post by manikandan.dp Tue Jul 09, 2013 11:26 am

விவசாயிகளின் பல்லாண்டு கோரிக்கையான, நதிகளை இணைக்கும் திட்டத்தை, மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ள சூழ்நிலையில், அத்திட்டத்துக்கு முன்னோடியாக, மாநில நதிகள் இணைப்பு திட்டத்தை, தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதனால், தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், வீணாக கடலில் கலக்கும் மழைநீர் சேகரிக்கப்படும். தமிழகத்தின் நிலத்தடி நீர் மட்டமும், உயர்வதற்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் உள்ள, ஆறுகளை இணைத்து, விவசாயம் மற்றும் இதர காரியங்களுக்கு நீரை பயன்படுத்த, மாநில ஆறுகள் இணைப்புத் திட்டத்தை, தமிழக அரசு கடந்தாண்டு கொண்டு வந்தது. தேசிய பொதுப்பணித் துறையின், 75 சதவீத பங்களிப்பு, மாநில அரசின், 25 சதவீத பங்களிப்புடன், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது.
அவற்றில், பெண்ணையாறு (சாத்தனூர் அணை) - பாலாறு இணைப்பு மற்றும் பெண்ணையாறு - பாலாறு இணைப்பு; காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு; காவேரி ( மேட்டூர் அணை ) - சரபங்கா இணைப்பு ஆகிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மத்திய அரசின், பொதுப்பணித்துறை அதிகாரிகள், இத்திட்டத்துக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

ஆறுகள் இணைப்புத் திட்டத்தில், செயல்படுத்த உள்ள, ஆறுகள்:
1.பெண்ணையாறு ( சாத்தனூர் அணை ) - பாலாறு இணைப்பு:இந்த திட்டத்தில், பெண்ணையாற்றின் உபரி நீரை, பாலாற்று கிளை ஆறான, செய்யாற்றிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. சாத்தனூர் அணை முழு நீர்மட்ட அளவில், தலை மதகிலிருந்து, 23.55 கி.மீ., நீளத்துக்கு, இணைப்பு கால்வாய் வெட்டி, செய்யாற்றில் உள்ள ஆலத்தூர் அணையின் மேற்புறம் இணைக்க, திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த இணைப்பு கால்வாயிலிருந்து, 38.72 கி.மீ., நீளத்துக்கு, வரத்து கால்வாய் அமைத்து, துரிஞ்சலாற்றுடன் இணைத்து, நந்தன் வாய்க்காலுக்கு, தண்ணீர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.இத்திட்டம் நிறைவேறினால், 5.69 டி.எம்.சி., உபரி நீர், பாலாறு வடி நிலத்திற்கு திருப்பப்படும். இதன் மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, போளூர், வந்தவாசி வட்டங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ஆகியவற்றில், 46,069 ஏக்கர் நிலப்பரப்பு, பாசன வசதி பெறும் என்று, பொதுப் பணித் துறை மதிப்பிட்டு உள்ளது. திட்டத்தின் நேரடி பயன்கள் இவை.இது தவிர, இந்த பகுதியைச் சுற்றிலும் உள்ள நிலப்பரப்பில், நிலத்தடி நீர்மட்டம், வெகுவாக உயரும் வாய்ப்பு உள்ளதால், பலன் மேலும் அதிகரிக்கும். திட்டத்திற்கு, மத்திய அரசின் உதவியை பெறுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசே செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, 250 கோடி ரூபாய் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

2.பெண்ணையாறு -பாலாறு இணைப்பு:கிருஷ்ணகிரி நீர்தேக்கத்திலிருந்து, 3.5 டி,எம்.சி., நீரை, அக்டோபர் மாதத்திலிருந்து, டிசம்பர் மாதம் வரை, மாதத்திற்கு, 5 நாட்கள் வீதம், 15 நாட்களுக்கு, பாலாற்றின் கிளை ஆறான கல்லாற்றுக்கு திருப்ப, முதலில், பொதுப்பணித் துறை உத்தேசித்திருந்தது. பெண்ணையாறு நெடுங்கல் அணைக்கட்டில் இருந்து, பாலாறை இணைப்பது, பெண்ணையாற்றில் கிருஷ்ணகிரி நீர்தேக்கத்தில் இருந்து, பாலாற்றை இணைப்பதை விட, தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்புடையது என தெரிவித்து, தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு, ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால், 29, 319 ஏக்கர் நிலம், பாசன வசதி பெறும்.

3.காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு:இத்திட்டத்தில், காவேரி ஆற்றிலிருந்து, 7 டி.எம்.சி., உபரி நீரை, கட்டளை கதவணையிலிருந்து, 258 கி.மீ., நீள இணைப்பு கால்வாய் அமைத்து, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாற்றுக்குத் திருப்பி விட, திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான மதிப்பீடு, 5,155 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படுத்த, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

4.காவேரி ( மேட்டூர் அணை ) - சரபங்கா இணைப்பு:மேட்டூர் அணையிலிருந்து, 182 கி.மீ., நீள இணைப்பு கால்வாய் அமைத்து, 2 டி.எம்.சி., உபரி நீரை, சரபங்கா, திருமணி முத்தாறு மற்றும் ஏனைய சிறுவடி நிலங்களில் உள்ள, அணைக்கட்டுக்கள் மற்றும் ஏரிகளுக்கு கொண்டு சென்று, பாசன வசதியை உறுதிப்படுத்த, பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை, நிறைவேற்றுவதன் மூலம், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள, 30,430 ஏக்கர் நிலம் பயன்பெறும்.இத்திட்டத்திற்கான தோராய மதிப்பீடு, கடந்த நிதியாண்டின், விலை விகிதப்படி, 1,134 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்டது. திட்டத்திற்கான விரிவான, தள ஆய்வுகள் மேற்கொள்ளவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும், 50 லட்சம் ரூபாய்க்கு , நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து, பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாவது: பெண்ணையாறு (சாத்தனூர் அணை) - பாலாறு இணைப்புத் திட்டத்துக்கு, மத்திய அரசின் உதவியை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால், அத்திட்டத்தை, 250 கோடி ரூபாயில் செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மற்ற திட்டங்கள் குறித்து, தேசிய பொதுப் பணித் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சாத்தியக் கூறுகள் குறித்து, சாதகமான முடிவுகளை அறிவித்தால், உடனடியாக பணிகள் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி
தினமலர்

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

 கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம் Empty Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்

Post by krishnaamma Tue Jul 09, 2013 11:30 am

நல்ல படி நிறைவேற வாழ்த்துகள் புன்னகைஇந்த அளவு வடக்கே சேதம் ஏற்பட்டும் அவங்களுக்கு புத்தி வரலையே........... கருமம் டா......என்ன கொடுமை சார் இது 

அங்கே வெள்ள நிவாரண நீதி... இங்கே நமக்கு வறட்சி நிவாரண நிதியா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம் Empty Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்

Post by manikandan.dp Tue Jul 09, 2013 11:37 am

krishnaamma wrote:நல்ல படி நிறைவேற வாழ்த்துகள் புன்னகை இந்த அளவு வடக்கே சேதம் ஏற்பட்டும் அவங்களுக்கு புத்தி வரலையே........... கருமம் டா......என்ன கொடுமை சார் இது 

அங்கே வெள்ள நிவாரண நீதி... இங்கே நமக்கு வறட்சி நிவாரண நீதியா? சோகம்

100% உண்மை அம்மா .....
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அண்ணா(தி .மு .க ) வின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது .......

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

 கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம் Empty Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்

Post by krishnaamma Tue Jul 09, 2013 11:53 am

manikandan.dp wrote:
krishnaamma wrote:நல்ல படி நிறைவேற வாழ்த்துகள் புன்னகைஇந்த அளவு வடக்கே சேதம் ஏற்பட்டும் அவங்களுக்கு புத்தி வரலையே........... கருமம் டா......என்ன கொடுமை சார் இது 

அங்கே வெள்ள நிவாரண நீதி... இங்கே நமக்கு வறட்சி நிவாரண நீதியா? சோகம்

100% உண்மை அம்மா .....
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அண்ணா(தி .மு .க ) வின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது .......

நிஜம்தான் மணி, வெளிநாடுகளில் நம்நாட்டைப்பற்றி கேவலமாகவும் கிண்டலாகவும் பேசராலாம். இந்தியர்களுக்கு பொறுப்பே இல்லையா ? இப்படியா பணத்தை வேஸ்ட் செய்வா என்று கிண்டல் அடிக்கராங்களாம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம் Empty Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்

Post by manikandan.dp Tue Jul 09, 2013 12:07 pm

krishnaamma wrote:
manikandan.dp wrote:
krishnaamma wrote:நல்ல படி நிறைவேற வாழ்த்துகள் புன்னகைஇந்த அளவு வடக்கே சேதம் ஏற்பட்டும் அவங்களுக்கு புத்தி வரலையே........... கருமம் டா......என்ன கொடுமை சார் இது 

அங்கே வெள்ள நிவாரண நீதி... இங்கே நமக்கு வறட்சி நிவாரண நீதியா? சோகம்

100% உண்மை அம்மா .....
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அண்ணா(தி .மு .க ) வின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது .......

நிஜம்தான் மணி, வெளிநாடுகளில் நம்நாட்டைப்பற்றி கேவலமாகவும் கிண்டலாகவும் பேசராலாம். இந்தியர்களுக்கு பொறுப்பே இல்லையா ? இப்படியா பணத்தை வேஸ்ட் செய்வா என்று கிண்டல் அடிக்கராங்களாம் சோகம்

ஆமாம் அம்மா ....நான் வெளிநாட்டில் தான் பணிபுரிகிறேன் .....இங்கு நம் நாட்டை பற்றி வளர்ந்த நாட்டை சேர்ந்தவர் கிண்டலாக பேசுவது குறைவு .....நமிடம் இருந்து பிரிந்த,அண்டை நாட்டை சேர்ந்தவன் கிண்டலாக பேசுவதுதான் தாங்க முடியவில்லை ......

இந்த மத்திய அரசின் திறமை இன்மையால் இந்தியன் தினமும் அசிங்கப்பட்டு போவது தான் மிச்சம் ......என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

 கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம் Empty Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்

Post by krishnaamma Tue Jul 09, 2013 12:16 pm

ஆமாம் மணி.....சோகம்

என் மச்சினர் பெண் சிங்கப்பூரில் இருக்கா... அவ சொல்கிறா... " என்ன சித்தி  இது.....இங்க ஸ்கூல் களில் கூட சக அம்மக்கள் நம் இந்தியாவின் தலையை உருட்டரா " என்கிறாள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம் Empty Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்

Post by manikandan.dp Tue Jul 09, 2013 12:28 pm

என்ன அம்மா பண்றது ......
மாற்றம் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம் .......

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

 கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம் Empty Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்

Post by யினியவன் Tue Jul 09, 2013 12:53 pm

தமிழக ஆறுகளை இணைத்து அம்மா சாதனை படைத்தால் மக்கள்:

ஆறு மனமே ஆறு
இது அம்மாவின் கட்டளை ஆறு ன்னு

நிம்மதியா இருப்பாங்க - வெற்றிபெற வாழ்த்துகள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம் Empty Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்

Post by பார்த்திபன் Tue Jul 09, 2013 1:53 pm

திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் முயர்ச்சியின்போது பலர் நீதிமன்றத்தில் தடையானை பெறுவார்கள். திட்டம் தொடக்க நிலையிலேயே நிற்கும். இதுதானே காலம் காலமாக நாம் பார்த்துக்கொண்டிருப்பது. அப்படியெல்லாம் இல்லாமல் திட்டம் நல்லபடியாக நிறைவேறினால் மகிழ்ச்சி! நிறைவேற வேண்டும்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

 கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம் Empty Re: கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» தென்மாநில நதிகள் இணைப்பு திட்டம்: டில்லியில் முதற்கட்ட ஆலோசனை
» மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே ராணுவம் செயல்படும்: பிபின் ராவத்
» தமிழக அரசின் திட்டம்: கர்நாடகா முட்டுக்கட்டை
» மத்திய அரசின் 'இ-சஞ்சீவினி' திட்டம் : 'ஆன்லைன்' மூலம் மருத்துவ ஆலோசனை
» தமிழக அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம்-நாளை ஜெ தொடங்கி வைக்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum