ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு தொழில் தொடங்க ஆலோசனை தேவை

4 posters

Go down

request சிறு தொழில் தொடங்க ஆலோசனை தேவை

Post by DhanaPrakash Mon Jul 08, 2013 10:54 am

ஈகரை நண்பர்களே.. :வணக்கம்: 
                                        சிறு தொழில் தொடங்க ஆலோசனை தேவை நண்பர்களே..
DhanaPrakash
DhanaPrakash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 08/07/2013

Back to top Go down

request Re: சிறு தொழில் தொடங்க ஆலோசனை தேவை

Post by ராஜு சரவணன் Mon Jul 08, 2013 11:14 am

தொழில் என்ன  என்று முடிவு செய்து விட்டு அதற்க்கு ஆலோசனை கேட்கிறீர்களா? அல்லது என்ன தொழில் செயலாம் என்று தொழிலை தேர்ந்தெடுக்க ஆலோசனை கேட்கிறீர்களா?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

request Re: சிறு தொழில் தொடங்க ஆலோசனை தேவை

Post by DhanaPrakash Mon Jul 08, 2013 11:22 am

ராஜு சரவணன் wrote:தொழில் என்ன  என்று முடிவு செய்து விட்டு அதற்க்கு ஆலோசனை கேட்கிறீர்களா? அல்லது என்ன தொழில் செயலாம் என்று தொழிலை தேர்ந்தெடுக்க ஆலோசனை கேட்கிறீர்களா?
 என்ன தொழில் செயலாம் என்று தொழிலை தேர்ந்தெடுக்க ஆலோசனை தேவை நண்பர்களே..
DhanaPrakash
DhanaPrakash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 08/07/2013

Back to top Go down

request Re: சிறு தொழில் தொடங்க ஆலோசனை தேவை

Post by ராஜு சரவணன் Mon Jul 08, 2013 11:35 am

வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து திரும்பும் பலரும் தொழில் தொடங்க விரும்புவது இயற்கைதான். ஆனால் அதனை தொடங்குவதற்கு முன்பு தொழில் குறித்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இன்றைய வளர்ந்த உலகில் இதனை அறிந்து கொள்ள பல வசதிகள் உள்ளன. அவற்றை முறையாக பயன் படுத்திக் கொள்வதில் தான் நம் திறமை உள்ளது. விடாமுயற்சியுடன் செயல்பட் டால் வெற்றி எனும் கனியை பறிப்பது ஒன்றும் கஷ்டமல்ல. தொழில் முனை வோருக்கு உதவ அரசாங்கமும் வங்கிகளும் தயார் நிலையில் தான் உள்ளன. அவற்றை நாம் அணுகவேண்டிய முறைதான் முக்கியம். அரசின் மாவட்ட தொழில் மையங்கள், தொழில் முனைவோருக்கு உதவ எப்போதும் தயாராகவே உள்ளன. என்ன தொழில் தொடங்க வேண்டுமென் றவுடனே சரியான திட்டமிடுதல் வேண்டும். அதற்காக அரசினையும் அதன் அதிகாரிகளையும் பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிபோட்டுக் கொண்டு தொழில்முனைவோருக்கு மானியம் வழங்குகின்றன.
சிப்காட் எனப்படும் சிறு தொழில் மையம் மூலம் இதுவரை 12 மாவட் டங்களில் 19 தொழில்மையங்கள் நிறுவப்பட்டு 1803தொழில் நிறுவனங் களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவை எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.
மானியம் வழங்கப்படும் தொழில்கள், மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு மருந்துப் பொருட்கள் உற்பத்தி சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி ஏற்றுமதி ஆபரணங்கள் மாசுகட்டுப்பாடு உபகரணங்கள் விளையாட்டுப் பொருட் கள் சிக்கன கட்டுமானப் பொருட்கள் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவை.
அரசு வழங்கும் சலுகைகள்:
15 சதவிகிதம் மானியமாக வழங்கப் படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவிகிதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தி தொடங்கி முதல் ஆறு ஆண்டு களில் செலுத்தப்படும் மதிப்புக் கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானிய மாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.
உற்பத்தி தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து அய்ந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்சம் 25 வேலையாட் களை கூடுதலாக அய்ந்து சதவிகிதம் அதிகபட்சமாக ரூபாய் அய்ந்து லட்சம் வரை வேலைவாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
அரசு வங்கிகளும் தாராளமாக கடனுதவி செய்கின்றன. தொழில் தொடங்க விரும்புவோர் தங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்கும் திட்டம் குறித்து தெரிவிப் பதோடு, தாங்கள் செய்யப்போகும் தொழில், மொத்த முதலீடு, பங்குதாரர் விவரம், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தும் முறை, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம் (சூரிட்டி) போன்ற விபரங் களை மனுவாக கொடுக்க வேண்டும். முறையான ஆய்வுக்குப் பின்னர் வழங்கப் படும் கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால், கூடுதலாக கடன் பெற லாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யும் போது அந்த உற்பத்திப் பொருட் களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம்.
முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேயைன அனுமதி கிடைக் கும். செயல் துறைத் தலைவர் (வழிகாட் டுதல்  குழு) தமிழ்நாடு தொழில் வழிகாட் டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு.
நன்றி விடுதலை.இன் 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

request Re: சிறு தொழில் தொடங்க ஆலோசனை தேவை

Post by ராஜு சரவணன் Mon Jul 08, 2013 11:36 am

நம்மில் பலர், படித்துவிட்டு சுயதொழில் தொடங்க ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்தவித தொழிலை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதில் ஒருவித குழப்ப நிலை இருக்கும்.

அப்படிப்பட்டவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் சிறந்த வழிகாட்டியாக இருந்து தொழிலை தொடங்க உதவுகிறது. தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பவர்களுக்காக, U.Y.E.G.P. திட்டத்திலிருந்து சில ஆலோசனைகளை கேள்வி பதில் வடிவில் பார்ப்போம்.

கேள்வி: லோடு ஆட்டோ வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா?

பதில்: சிறு வாகன கடன் என்பது சேவைப்பிரிவைச் சார்ந்தது. இதில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட முதலீடு ரூ.3 இலட்சம். மீதமுள்ள தொகையை பயனாளிகள் சொந்த முதலீடாக செய்வதாக இருப்பின், இந்த திட்டத்தில் பயன்பெற அடிப்படையான நலிவுற்றோர் என்ற தகுதி இல்லாமல் போய்விடும். மேலும் வாகன கடன் கேட்டு விண்ணப்பிப்பதற்கு செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம், வில்லை ஆகியன அவசியம்.

கேள்வி: U.Y.E.G.P. திட்டத்தில் கடன் பெற்றால் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படுமா?

பதில்: கண்டிப்பாக வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

கேள்வி: 36 வயது உள்ள ஒருவர் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியுமா?

பொதுப்பிரிவினராக இருந்தால், விண்ணப்பிக்கும் தினத்தில் 35 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது. சிறப்பு பிரிவினராக இருந்தால் 45 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது. 

கேள்வி: பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாமா?

பதில்: இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ட கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே. ஆகையால் தயக்கமின்றி விண்ணப்பிக்கலாம்.

கேள்வி: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வாரிசுகளுக்கு, முன்னாள் ராணுவத்தினருக்கான வயது வரம்பு சலுகை கிடைக்குமா?

பதில்: முன்னாள் ராணுவத்தினருக்கு என வழங்கப்படும் வயது வரம்பு சலுகை முன்னாள் ராணுவத்தினருக்கு மட்டுமே பொருந்தும். அவர்களின் குடும்பத்திற்கோ, பாதுகாவலில் உள்ளவர்களுக்கோ பொருந்தாது.

கேள்வி: பள்ளி மாற்றுச் சான்று பெறாதவர்கள் விண்ணப்பிக்க முடியுமா?

பதில்: பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு, மாற்றுச் சான்றிதழை பெற்று வந்தால் விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி ஏற்றுக் கொள்ளப்படும்.

கேள்வி: திட்ட அறிக்கை தயாரிக்க எவ்வளவு செலவாகும்?

பதில்: விண்ணப்பதாரர்கள் உத்தேசித்துள்ள திட்டம் குறித்த உத்தேச வரவு-செலவு மற்றும் முதலீட்டு விபரங்களை நீங்களே தயாரிக்கலாம். மாவட்ட தொழில் மையங்களிலும், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டு நிறுவனங்களிலும் கிடைக்கக் கூடிய மாதிரி திட்ட அறிக்கைகளை பார்வையிட்டும் திட்ட அறிக்கைகளை தயாரிக்கலாம்.

கேள்வி: தொலைநிலைக் கல்வி (Distance Education) மூலம் படிப்பவர்களும் விண்ணப்பிக்க முடியுமா?

பதில்: விண்ணப்பிக்க முடியும்.

கேள்வி: பழைய இயந்திரங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் தொழிலுக்கு கடன் கிடைக்குமா?

பதில்: பழைய இயந்திரங்களை விலை நிர்ணயம் செய்து விற்பவர் மற்றும் வாங்குபவர் மட்டுமே தொடர்பானது. எனவே அந்த மதிப்பீடு அரசாங்கத்திலும், வங்கியிலும் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. மேலும் பழைய இயந்திரங்கள் தாம் முதலில் நிறுவப்பட்ட இடத்தில் ஏற்கனவே வேலைவாய்ப்பு உருவாக்குதல் என்ற கடமையை செய்து முடித்துவிட்டதாக கருதப்படுகிறது. எனவே பழைய இயந்திரங்கள் கொள்முதலுக்கு கடன் கிடையாது. 

கேள்வி: பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலுக்கு, கூடுதல் இயந்திரம் வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா?

பதில்: U.Y.G.E.P. திட்டம் புதிய தொழில்களுக்கு மட்டுமே. எனவே இதில் விரிவாக்கத்திற்கு கடனுதவி கிடையாது. நீங்கள் உங்கள் சேவைப்பகுதிக்கான வங்கி மேலாளரை அணுகி சிறு தொழிலுக்கான கடனுதவியை கேட்டு பெற்றபின், மாவட்ட தொழில் மையத்தை அணுகி விரிவாக்கத்துக்கான மானியத்தை பெற்றுக்கொள்ளலாம்.

கேள்வி: U.Y.G.E.P. திட்டத்தில் கடன் பெற்றால் அந்த நிறுவனத்திற்கு தமிழக அரசின் சிறுதொழில் நிறுவனங்களுக்கான மானியங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்குமா?

பதில்: U.Y.G.E.P. திட்ட மானியமாக திட்ட முதலீட்டில் 15 சதவீதம் வழங்கப்படுகிறது. இது தவிர குறைந்த அழுத்த மானியம், வாட் மானியம், மின்னாக்கி மானியம் போன்ற சலுகைகள், விண்ணப்பதாரர் நடத்திவரும் தொழில் மற்றும் நிறுவன அமைவிட அடிப்படையில் மானியம் வழங்கப்படும்.

கேள்வி: ஏற்கனவே வேறு ஒரு மானிய கடனுதவி திட்டத்தில் கடனுதவி பெற்று, கடனை முழுவதுமான திருப்பி செலுத்தியவர்கள், U.Y.G.E.P. திட்டத்தில் புதிதாக கடன் பெற முடியுமா?

பதில்: ஏற்கனவே மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றிருந்தால், இந்த திட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்பிக்க தகுதி இல்லை. நிதி நிறுவனங்களில் சிறுதொழில் கடனுதவியை பெற்று தகுதி அடிப்படையில் மானியம் பெற்று பயன் அடையவும்.

கேள்வி: ஹாலோ பிளாக் தொழிலுக்கு, சிறு கட்டிடடம் கட்டுவதற்கான உத்தேச மதிப்பீட்டை திட்ட முதலீட்டில் சேர்த்துக் கொள்ளலாமா?

பதில்: தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் உத்தேசித்துள்ள உற்பத்தி தொழில் தொடங்குதவற்கு தேவையான கட்டிடம், இயந்திர தளவாடம் மற்றும் நடைமுறை மூலதனம் ஆகியவற்றின் மொத்த திட்ட மதிப்பு ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பி.கு: உங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுங்கள்!


..................................................................நன்றி: தினத்தந்தி
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

request Re: சிறு தொழில் தொடங்க ஆலோசனை தேவை

Post by ராஜு சரவணன் Mon Jul 08, 2013 11:38 am

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் 2013-14-ன் கீழ் தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்திருப்பது:
படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில்முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், சிறப்புப் பிரிவான மகளிர் 50 சதம் பயன்பெற வேண்டும் என ஒதுக்கீடு செய்து, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இளங்கலை, முதுகலை பட்டயப் படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ., அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சி கல்வித் தகுதி பெற்றிருப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இவர்களுக்கு ஒரு மாத காலம் தொழில்முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்யப்படும். பின்னர் வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.   
 இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் தொழில்முனைவோருக்குத் தொழில் திட்ட மதிப்பில் 25 சதம் (அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை) முதலீட்டு மானியமும் 3 சதம் வட்டி மானியமும் அளிக்கப்படும். திட்ட மதிப்பீடு ரூ. 5 லட்சத்துக்கு மேல், அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவை தொழில் தொடங்கலாம்.
பொதுப் பிரிவினர் தனது பங்காகத் திட்ட மதிப்பில் 10 சதம் செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 5 சதம் செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெறப் பரிந்துரை செய்யப்படும்.
சிறப்புப் பிரிவினரான மகளிர் இந்தத் திட்டத்தின் கீழ் 50 சதம் பயன் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள படித்த மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்டத் தொழில் மையத்தில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 257345, 255318 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

request Re: சிறு தொழில் தொடங்க ஆலோசனை தேவை

Post by manikandan.dp Mon Jul 08, 2013 12:38 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

request Re: சிறு தொழில் தொடங்க ஆலோசனை தேவை

Post by krishnaamma Mon Jul 08, 2013 2:10 pm

சூப்பர் ராஜு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: சிறு தொழில் தொடங்க ஆலோசனை தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum