ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

+7
ராஜு சரவணன்
sundaram77
ராஜா
சிவா
SHANMUGHAM
தர்மா
அகல்
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? Empty இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by அகல் Fri Jul 05, 2013 8:54 pm

திவ்யாவின் காதல் கணவன் தர்மபுரி இளவரசனின் இறப்பு யாவரும் அறிந்த ஒரு விடயம். இந்த சம்பவத்திற்கு சாதிவெறி முக்கிய காரணம் என்றாலும் ஊடகங்களுக்கும் அதில் பக்கு உண்டு. இதற்கிடையே சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது இளவரசனின் இறப்பு கொலையா ? தற்கொலையா ? என்ற ஒரு பெரிய கேள்வி மனதில் குடிகொள்ள காரணங்கள் கண்முன்னே கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் அதைப் பற்றிய எனது பார்வையை மட்டும் பதிவு செய்ய கனத்த மனதுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

1. நீதிமன்ற விசாரணையின் போது இளவரசன் தன்னை வற்புறுத்தி கூட்டிச் சென்றார், மிரட்டினார், கடத்தினார் என்ற எந்த பழியையும் இளவரசன் மீது திவ்யா போடவில்லை. இரண்டு தினங்களுக்கு முன், எனது தாயாரின் நலன் கருதி அவருடன் வாழ்வேன், இளவரசனுடன் இனி வாழப்போவதில்லை என்று நீதி மன்றத்தில் திவ்யா கூறினார். ஆனால் இளவரசனை வெறுத்து விலகியதாகக் கூறவில்லை. திவ்யா தன்னை முற்றிலும் வெறுத்திருக்கும் பட்சத்தில் இளவரசன் தற்கொலை முயற்சி செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் திவ்யா தன்னுடன் வாழப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிய பிறகும் அவர் எனக்குக் கிடைப்பார், நம்பிக்கை இருக்கிறது. திவ்யாவைச் சுற்றி இருப்போர் அவரை சுயமாக முடிவெடுக்க விடாமல் தடுக்கிறார்கள் என்று சலமில்லாமல் தனது கடைசிப் பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

2. இளவரசனின் முந்தய பேட்டிகளைப் பார்த்தல் அவரின் தெளிவும், தைரியம் நமக்குத் தெரியும். அதோடு திவ்யாவை விட்டுவிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள இளவரசனுக்கு திவ்யா வெறும் காதலியல்ல, மனைவி. தனக்குச் சொந்தமானவள். திவ்யா வார்த்தையளவில் வேண்டாம் என்று கூறியிருந்தாலும், அவள் தனது மனைவி என்பதால் சட்டம் இருக்கிறது எப்படியும் சேரமுடியும் என்ற நம்பிக்கை இளவரசனுக்கு இருந்திருக்கும்.

3. அப்படியே திவ்யாவின் வார்த்தைகளால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக வைத்துக் கொண்டாலும், புகைப்படங்களில் காணப்படும் இளவரசனின் உடல், ரயில்முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவில்லை. காரணம், அவ்வளவு வேகமாக வரும் ரயிலின்முன் விழுந்து தற்கொலை செய்துகொள்பரின் உடல் இவ்வாறு சில காயங்களுடன் தப்பி இருக்க வாய்ப்பில்லை. ஒரு பக்க முகமும், தலையும் மட்டும் காயம் அடைந்திருக்கிறது, சட்டைகூட பெரிதாக கசங்கவில்லை என்று செய்திகளில் படிக்க முடிகிறது. ரயில் விபத்தில் பெருத்த காயங்கள் இல்லாமல், சட்டை கசங்காமல் தலையில் மட்டும் காயங்களுடன் சாவது பெரும் ஆச்சர்யத்திற்குரியது.

4. சாதிய சக்திகள் ஒன்றுகூடி இளவரசனுடன் வாழபோவதில்லை என்று திவ்யாவைக் கூற வைத்த பிறகு, அவர்களின் அடுத்த நோக்கம் தங்களது சாதியைச் சேர்ந்த ஒரு ஆணிற்கு அந்தப் பெண்ணை கூடியவிரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இளவரசன்-திவ்யாவின் திருமணம் நாடறிந்தது. அதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அது சட்டப்படி செல்லக்கூடிய திருமணம்.

மறுமணம் செய்து வைக்க வேண்டுமானால் விவாகரத்துப் பெறவேண்டும். அதற்கு அந்தப் பெண்ணை ஒத்துக் கொள்ளவைத்தாலும், இளவரசன் இருந்த நிலைப்பாட்டில் அவர் திவ்யாவைப் பிரிய ஒத்துக் கொண்டிருக்க மாட்டார். அப்படியே ஒத்துகொண்டாலும் குறைந்தது ஒருவருடம் விவாகரத்திற்காக காத்திருக்கவேண்டும். அதற்குள் திவ்யா மீண்டும் தனது மனதை மாற்றிக்கொண்டு இளவரசனுடன் போனால் இதுவரை தங்கள் சாதியைக் காக்க செய்த போராட்டங்கள் வீணாகிவிடும் என்று அவர்கள் கருதி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இளவரசன் இறந்துவிட்டால் உடனடி மறுமணம் சாத்தியம் என்ற எண்ணம் தலைதூக்கி இருக்கலாம். அதனால் இந்த அவலமும் அரங்கேற்றப் பட்டிருக்கலாம்.

திவ்யா தனது தாயுடன் போக மிக முக்கியமான காரணம் அவர் தந்தையின் இறப்பு. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் என்பது அவரது பேச்சில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அந்த ஒரு காரணத்தை வைத்தே சாதிய சக்திகள் திவ்யாவை உணர்வுப் பூர்வமாக அணுகி, அவரது சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கி இருப்பார்கள். இளவரசனோடு போனால் நானும் இறந்துவிடுவேன் என்று அவரது தாயும் பயமுறுத்தி இருப்பார். என்ன செய்வதென்று தெரியாத பேதையாய், மன அழுத்தம், சாதிய நிர்பந்தம் இவற்றிற்கிடையே வேறு வழியில்லாமல் திவ்யா இளவரசனுடன் இனி வாழப்போவதில்லை என்று வார்த்தையளவில் மட்டுமே சொல்லி இருக்க வேண்டும்.

இதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா ? இல்லை இது தற்கொலையானால் அதற்கான சரியான காரணங்கள் என்ன என்பதை சாதிய/அரசியல் ஈடுபாடில்லாத, முறையான விசாரணை நடத்தப்பட்டால் வெளிச்சத்திற்கு வரும் என்று நம்புகிறேன். அப்படி நடக்குமா என்பதும், அப்படியே நடத்தாலும் விசாரணையை முடிக்க எத்தனை வருடங்கள் இழுப்பார்கள் என்பதும் பெரும் கேள்விக்குறியே !

"சாதி வெறியால் இளம் காதலர்களை இந்த நிலைக்குத் தள்ளிய நமது சமூகத்தை நினைத்து, ஒரு தமிழனாய் வெட்கித் தலை குனிகிறேன்"

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/07/blog-post_5.html

அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by தர்மா Sat Jul 06, 2013 8:13 am

சாதியை தவிர்த்து நாம் முக்கியமான ஒன்றை பார்க்கவேண்டும். 21 வயது நிரம்பாத அந்த இளைஞன் வேலை எதுவும் இல்லாமல் எப்படி அந்த பெண்ணை காப்பாற்றுவான். அவர்கள் சேர்ந்திருந்தாலும் தங்கள் தேவைகள் நிறைவேறியவுடன் திருமண வாழ்க்கை புளித்து விவாகரத்து செய்து இருப்பார்கள். இந்த வயதில் ஏற்படும் ஈர்ப்பை காதல் என்று சொல்லவே முடியாது.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by SHANMUGHAM Sat Jul 06, 2013 8:20 am

தர்மபுரி சம்பவத்தில்,  அந்தப் பையன், பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தால், என்ன செய்திருக்கும் இந்த சமூகம்?  பெண்ணை "ஏமாற்றிய" குற்றத்திற்காக, சிறையில் அடைத்திருக்கும்.  அதேபோல் அந்தப் பெண்ணையும் தண்டிக்க வேண்டும்.  ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா?  இதை ஏன் பெண் அராஜகம் என்று கூறக் கூடாது?

குறிப்பு:  இன்று பெண்கள் மிகப் பெரும்பாலான வீடுகளில் ஒத்துழைப்பாக செயல்படுவதை விட, "ஒத்துழையாமை"யாகத் தான் செயல்படுகிறார்கள்.  அவர்களிடம் அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, அதை குடும்பம் ஒற்றுமையாக உழைத்து, ஆண்களுக்கு உதவிகரமாகவும், குடும்ப முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெண் சுதந்திரம் என்ற பெயரில் அராஜகம் செய்யக் கூடாது.  சுதந்திரம் என்பது எல்லைகளுக்குட்பட்டது. இது குறித்து பெண்கள் கற்பிக்கப் பட வேண்டும்.  ஆண்கள் குடும்ப நலன் கருதி சகித்துக் கொண்டு செல்வதாலேயே, பல குடும்பங்கள் பிரியாமல் இருக்கின்றன.  இவ்வாறு எதிர் வாதம் முதல் அடாவடி வரை செய்வதை ஏன் "பெண்ணாதிக்கம்" என்று கூறக் கூடாது?
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by சிவா Sat Jul 06, 2013 8:30 am

SHANMUGHAM wrote:தர்மபுரி சம்பவத்தில்,  அந்தப் பையன், பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தால், என்ன செய்திருக்கும் இந்த சமூகம்?  பெண்ணை "ஏமாற்றிய" குற்றத்திற்காக, சிறையில் அடைத்திருக்கும்.  அதேபோல் அந்தப் பெண்ணையும் தண்டிக்க வேண்டும்.  ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா?  இதை ஏன் பெண் அராஜகம் என்று கூறக் கூடாது?

முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து!

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by அகல் Sat Jul 06, 2013 9:22 am

தர்மா wrote:சாதியை தவிர்த்து நாம் முக்கியமான ஒன்றை பார்க்கவேண்டும். 21 வயது நிரம்பாத அந்த இளைஞன் வேலை எதுவும் இல்லாமல் எப்படி அந்த பெண்ணை காப்பாற்றுவான். அவர்கள் சேர்ந்திருந்தாலும் தங்கள் தேவைகள் நிறைவேறியவுடன் திருமண வாழ்க்கை புளித்து விவாகரத்து செய்து இருப்பார்கள். இந்த வயதில் ஏற்படும் ஈர்ப்பை காதல் என்று சொல்லவே முடியாது.
தோழர்... அந்த பையன் காவல் துறைக்கு விண்ணப்பித்து அனைத்து மட்ட தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்று வேலையில் சேர காத்துக் கொண்டிருந்தான்... இந்த வயதில் திருமண செய்து என்ன செய்வார்கள் என்று நாம் கேட்கும் நேரத்தில், தமிழம் ஏன் இந்தியா முழுதும் 18 வயது பூர்த்தியாகாமலே பெரும் சதவிகிதத்தில் நிச்சயிக்கபட்ட திருமணம் நடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது... இது கிராமங்களில் வெகு சாதாரணம் அதைக் கண்கூடாக பார்க்கும் வாய்ப்புக்கள் எனக்கு அதிகம் வாய்த்திருக்கிறது... பிறகு எதற்காக 18 வயது நிரம்பினால் சுய முடிவு எடுதுக்கொள்ளளால் என்று சட்டம் இருக்கிறது. பிரச்சனை அதுவல்ல... சாதி வெறியால், சாதிய கௌரவத்தால், கௌரவக்கொலைகள் பல திரைமறைவில் நடக்கிறது... சமீத்திய நீயா நானா நிகழ்ச்சியில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது... இப்படி பாடாய்ப்படுத்தி உயிரை எடுக்கும் அளவிற்கு அவர்கள் என்ன தவறு  செய்துவிட்டார்கள் ?

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by அகல் Sat Jul 06, 2013 9:34 am

SHANMUGHAM wrote:தர்மபுரி சம்பவத்தில்,  அந்தப் பையன், பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தால், என்ன செய்திருக்கும் இந்த சமூகம்?  பெண்ணை "ஏமாற்றிய" குற்றத்திற்காக, சிறையில் அடைத்திருக்கும்.  அதேபோல் அந்தப் பெண்ணையும் தண்டிக்க வேண்டும்.  ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா?  இதை ஏன் பெண் அராஜகம் என்று கூறக் கூடாது?

குறிப்பு:  இன்று பெண்கள் மிகப் பெரும்பாலான வீடுகளில் ஒத்துழைப்பாக செயல்படுவதை விட, "ஒத்துழையாமை"யாகத் தான் செயல்படுகிறார்கள்.  அவர்களிடம் அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, அதை குடும்பம் ஒற்றுமையாக உழைத்து, ஆண்களுக்கு உதவிகரமாகவும், குடும்ப முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெண் சுதந்திரம் என்ற பெயரில் அராஜகம் செய்யக் கூடாது.  சுதந்திரம் என்பது எல்லைகளுக்குட்பட்டது. இது குறித்து பெண்கள் கற்பிக்கப் பட வேண்டும்.  ஆண்கள் குடும்ப நலன் கருதி சகித்துக் கொண்டு செல்வதாலேயே, பல குடும்பங்கள் பிரியாமல் இருக்கின்றன.  இவ்வாறு எதிர் வாதம் முதல் அடாவடி வரை செய்வதை ஏன் "பெண்ணாதிக்கம்" என்று கூறக் கூடாது?
இதே அந்தப் பையன் வேண்டாம் என்று கூறியிருந்தால் நிலை வேறாக இருந்திருக்கலாம். ஒத்துக் கொள்கிறான்...

ஆனால் பெண்கள் இப்போதுதான் சுதந்திரமாக செயல்பட ஆரபித்திருக்கிறார்கள். ஆதிக்கத்தைப் பற்றி நாம் பேச ஆரம்பித்தால், வாழ்வின் ஒவ்வொரு மட்டத்திலும் ஆணாதிக்கம் நிறைந்த சமூகம் இது. ஆண்கள் அனைவரும் வரையறையோடு செயல்படுகிறார்களா ? மனையை விபச்சார தொழில்புரிய அனுப்பும் ஆண்கள் இல்லையா ? பெண்களுக்கு இதுதான் வரையறை என்று கூற நாம் யார் ? இதுவே ஆதிக்கத்தின் ஒரு அங்கம்தான் என்பது என் கருத்து தோழரே. ஆண்கள் சகித்துக்கொள்வதால் பிரியாமல் ஒரு சில சதவித பெண்கள் இருக்கலாம். ஆனால் பெண்கள் சகித்துக் கொள்வதாலே பிரியாமல் இருக்கும் ஆண்களின் சதவிகிதம் தான் அதிகம். அதே வேளையில் அவரவரர் சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...

காதலிப்பதற்காக, ஜாதிய வெறியால் நடத்தப்பட்ட சதி என்பது மட்டுமே  இந்த கட்டுரையின் நோக்கம்...

Post by அகல் Sat Jul 06, 2013 9:40 am

இவ்வாறு அந்தப் பெண்ணை சுயமாக சிந்திக்கவிடாமல் கணவரைவிட்டு பிரிந்து செல்வதற்கு கட்டாயப்படுத்தி நிர்பந்தித்ததே ஆணாதிக்க சமூகம்தான். சாதிவெறி இரண்டாவதே. அவ்வாறே நமது சமுதாய கட்டமைப்பு இருக்கிறது..

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by SHANMUGHAM Sat Jul 06, 2013 10:58 am

அகல் wrote:
SHANMUGHAM wrote:தர்மபுரி சம்பவத்தில்,  அந்தப் பையன், பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தால், என்ன செய்திருக்கும் இந்த சமூகம்?  பெண்ணை "ஏமாற்றிய" குற்றத்திற்காக, சிறையில் அடைத்திருக்கும்.  அதேபோல் அந்தப் பெண்ணையும் தண்டிக்க வேண்டும்.  ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா?  இதை ஏன் பெண் அராஜகம் என்று கூறக் கூடாது?

குறிப்பு:  இன்று பெண்கள் மிகப் பெரும்பாலான வீடுகளில் ஒத்துழைப்பாக செயல்படுவதை விட, "ஒத்துழையாமை"யாகத் தான் செயல்படுகிறார்கள்.  அவர்களிடம் அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, அதை குடும்பம் ஒற்றுமையாக உழைத்து, ஆண்களுக்கு உதவிகரமாகவும், குடும்ப முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெண் சுதந்திரம் என்ற பெயரில் அராஜகம் செய்யக் கூடாது.  சுதந்திரம் என்பது எல்லைகளுக்குட்பட்டது. இது குறித்து பெண்கள் கற்பிக்கப் பட வேண்டும்.  ஆண்கள் குடும்ப நலன் கருதி சகித்துக் கொண்டு செல்வதாலேயே, பல குடும்பங்கள் பிரியாமல் இருக்கின்றன.  இவ்வாறு எதிர் வாதம் முதல் அடாவடி வரை செய்வதை ஏன் "பெண்ணாதிக்கம்" என்று கூறக் கூடாது?
இதே அந்தப் பையன் வேண்டாம் என்று கூறியிருந்தால் நிலை வேறாக இருந்திருக்கலாம். ஒத்துக் கொள்கிறான்...

ஆனால் பெண்கள் இப்போதுதான் சுதந்திரமாக செயல்பட ஆரபித்திருக்கிறார்கள். ஆதிக்கத்தைப் பற்றி நாம் பேச ஆரம்பித்தால், வாழ்வின் ஒவ்வொரு மட்டத்திலும் ஆணாதிக்கம் நிறைந்த சமூகம் இது. ஆண்கள் அனைவரும் வரையறையோடு செயல்படுகிறார்களா ? மனையை விபச்சார தொழில்புரிய அனுப்பும் ஆண்கள் இல்லையா ? பெண்களுக்கு இதுதான் வரையறை என்று கூற நாம் யார் ? இதுவே ஆதிக்கத்தின் ஒரு அங்கம்தான் என்பது என் கருத்து தோழரே. ஆண்கள் சகித்துக்கொள்வதால் பிரியாமல் ஒரு சில சதவித பெண்கள் இருக்கலாம். ஆனால் பெண்கள் சகித்துக் கொள்வதாலே பிரியாமல் இருக்கும் ஆண்களின் சதவிகிதம் தான் அதிகம். அதே வேளையில் அவரவரர் சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...

காதலிப்பதற்காக, ஜாதிய வெறியால் நடத்தப்பட்ட சதி என்பது மட்டுமே  இந்த கட்டுரையின் நோக்கம்...

தங்களின் கருத்துக்கு நன்றி, நண்பரே!

1.   எனது கருத்து ஆதிக்கம் என்பதே இருக்கக் கூடாது, அது ஆணாதிக்கமாக இருந்தாலும் சரி, பெண்ணாதிக்கமாக இருந்தாலும் சரி.
2.   நீங்கள் சொல்வது போல் ஆண்களின் அராஜகம் சில இடங்களில் இருக்கிறது, முழுவதுமாக இல்லை என்று சொல்வதற்கில்லை.  நினைத்துப் பாருங்கள், ஒரு 20 வருடங்களுக்கு முன்னர் ஆண்களின் அராஜகம் எவ்வளவு இருந்தது? பெண்களின் அராஜகம் எவ்வளவு இருந்தது? அதே தற்போது எவ்வளவு இருக்கிறது?  ஆண்களின் அராஜகம் பெருமளவு குறைந்திருப்பதையும், பெண்களின் அராஜகம் பெருமளவு கூடியிருப்பதையும் காணலாம்.  ஆனால், பல குடும்பங்களில் பெண்களின் அராஜகம் வெளியில் தெரியாமல் இருக்கிறது என்பது தான் உண்மை. என்ன கொடுமை சார் இது 

இந்த ஆதிக்கம் என்பதையே விடுத்து, அவரவர்களின் திறமைகளை, ஒற்றுமையாகப் பயன்படுத்தி, வளர்ச்சி காண வேண்டும், என்பதே எனது கருத்தாகும்.

அதை விடுத்து, சுதந்திரம் என்ற பெயரில் கணவணுக்குத் தெரியாமல் வரம்பு மீறி செலவு செய்வது முதல் குடும்ப நலன்களுக்கு எதிராக செயல்படுதல் வரை, மேலும் இவற்றை சுட்டிக்காட்டும் போது அந்தக் கண்டிப்புகளுக்கு (ஆதிக்கம் அல்ல) கட்டுப்படாமல் இருப்பதும், வீட்டுப் பெரியவர்களை மதிக்காமலும், அவர்கள் கண்டிக்க முடியாமல் இருத்தலையுமே, நான் பெண்ணாதிக்கம் என்று குறிப்பிடுகின்றேன்,

இந்த பெண்ணாதிக்கம் என்பது களையப்பட வேண்டும், இல்லையேல் இது மேலும் வளர்ந்து நமது கலாசாரத்திற்கே கேடாகும்.

கவனிக்க: இப்பொழுதே, இந்தப் பெண்களின் போக்கால் தாத்தா பாட்டிகளுடன் வாழும் கூட்டுக் குடும்பம் என்பது போய் விட்டது.

N.B.: இந்தத் தலைப்பு இளவரசன் மரணம் பற்றியது, நாம் விவாதிப்பது வேறு தலைப்பாகும். இந்த இடத்திற்குப் பொருத்தமில்லாததாகும். மேலும் விவாதங்களை எனது பெண்ணாதிக்கம் என்ற தலைப்பில் தொடர்வோம்.

Last edited by SHANMUGHAM on Sat Jul 06, 2013 11:04 am; edited 1 time in total (Reason for editing : தலைப்பு மாறிய விவாதம் - தொடர்ந்து எனது வேறு தலைப்பில் தொடரக் கேட்டு)
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by ராஜா Sat Jul 06, 2013 11:20 am

19 வயது கல்லூரியில் படிக்கும் மாணவன் , 21 வயது நிரம்பிய பெண்ணை திருமணம் செய்துகொண்டு எப்படி குடும்பம் நடத்துவான். அவனுக்கும் அவன் பெண்டாட்டிக்கும் அடுத்த வேலை சோற்றுக்கு என்ன பண்ணுவான்?!அடுத்த மாதம் தன் பெண்டாட்டி நாப்கின் வாங்கி தர சொன்னால் காசுக்கு என்ன பண்ணுவான் இந்த பையன்.

உன்னால் சொந்தமாக சமூகத்தையும் உன் பெற்றோரையும் நம்பியிராமல் உன்னையும் உன்னை நம்பி வந்த பெண்ணையும் காப்பாற்றிக்கொள்ள முடியுமானால் திருமணம் செய்துகொள். அதைவிட்டுட்டு காதல் அது இது என்று வசனம் பேசிக்கொண்டு பிறகு சில மாதங்களில் படிப்பையும் தொடர முடியாமல் வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியாமல் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு சண்டை போட்டுட்டு பிரிந்து போவதற்கு பேசாமல் படிப்பை முடித்து நல்ல வேலையில் சேர்ந்து பிறகு பெற்றோர் பார்க்கும் வரனையோ அல்லது காதலித்தோ திருமணம் செய்வது தான் சிறந்தது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by அகல் Sat Jul 06, 2013 11:52 am

ராஜா wrote:19 வயது கல்லூரியில் படிக்கும் மாணவன் , 21 வயது நிரம்பிய பெண்ணை திருமணம் செய்துகொண்டு எப்படி குடும்பம் நடத்துவான். அவனுக்கும் அவன் பெண்டாட்டிக்கும் அடுத்த வேலை சோற்றுக்கு என்ன பண்ணுவான்?!அடுத்த மாதம் தன் பெண்டாட்டி நாப்கின் வாங்கி தர சொன்னால் காசுக்கு என்ன பண்ணுவான் இந்த பையன்.  

உன்னால் சொந்தமாக சமூகத்தையும் உன் பெற்றோரையும்  நம்பியிராமல் உன்னையும் உன்னை நம்பி வந்த பெண்ணையும் காப்பாற்றிக்கொள்ள முடியுமானால் திருமணம் செய்துகொள். அதைவிட்டுட்டு காதல் அது இது என்று வசனம் பேசிக்கொண்டு பிறகு சில மாதங்களில் படிப்பையும் தொடர முடியாமல் வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியாமல் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு சண்டை போட்டுட்டு பிரிந்து போவதற்கு பேசாமல் படிப்பை முடித்து நல்ல வேலையில் சேர்ந்து பிறகு பெற்றோர் பார்க்கும் வரனையோ அல்லது காதலித்தோ திருமணம் செய்வது தான் சிறந்தது
தோழர் நான் முன்பே கூறியதுபோல், அந்த பையன் காவல் துறைக்கு விண்ணப்பித்து அனைத்து மட்ட தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்று வேலையில் சேர காத்துக் கொண்டிருந்தான்... சாதியம் என்ற ஒன்றால் ஏற்பட்ட அவலம் இது அதைக் களைய முயற்சிக்கவேண்டும் என்ற அடிப்படைக் காரணத்தை விட்டுவிட்டு நாம் மற்ற காரணங்களைத் தேடுவது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.

அவனது மனைவிக்கு நப்கீன் வாங்க முடியுமா முடியாத என்பது அவனது பிரச்சனை.. அதோடு நல்ல வயது முதிர்ச்சியில் திருமணம் செய்த, பெற்றோரால் திருமணம் செய்துவைக்கப் பட்ட எத்தனைபேர் தனது மனைவிக்கும் குழந்தைக்கும் தேவையானவைகளை வாங்கிக் கொடுக்கிறார்கள், நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.?? சூது, குடியில் ஊறிக் கிடக்கும் கணவனால் குழந்தைகளைக் காக்க போராடும் ஆயரம் ஆயிரம் மனைவிகள் உள்ள சமூகம் நமது சமூகம்... தினம் தினம் மனைவிகளை கொடுமைபடுத்தி விபசாரத்திற்கு அனுப்புவது முதற்கொண்டும் அத்தனை அவலங்களையும் செய்வது வயது முதிர்ச்சி பெற்றவர்களே என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம்.

அவன் வாழ்வதற்கு வாய்ப்பே கொடுக்காமல், உனக்கு என்ன தெரியும் நீ எப்படிக் காப்பாற்றுவாய் என்னும் கேள்விகள் தேவையற்றது. வயது முதிரிச்சியால் மட்டும் தான் ஒருவன் சிந்தனை முதிர்ச்சி பெறுவான் என்ற சிந்தனை ஏற்புடையதல்ல. என்பது எனது தனிப்பட கருத்து.

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum