ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள்

3 posters

Go down

தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Empty தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள்

Post by சாமி Sun Jun 30, 2013 1:11 pm

தமிழரின் தலையாய சொத்து தொல்காப்பியம். மொழியியல் அறிஞர்கள் அதன் எழுத்து, சொல் இலக்கணங்களைப் பார்த்து, படித்து வியக்கின்றனர். பொருள் இலக்கணம் அவற்றினும் மேலானதாகப் போற்றப்படுகிறது. தொல்காப்பியர் தமிழரின் அக வாழ்க்கையை பொருள் இலக்கணத்தில் கூறியுள்ளார். அதில் அறிவியல் நுட்பங்கள் பலவற்றை அவர் பதிவு செய்துள்ளார்.

கற்பு வாழ்க்கை மேற்கொண்ட (குடும்ப வாழ்க்கை) தலைவன்-தலைவி இருவரும் குழந்தைப்பேறு பெறுதலுக்கான சூழ்நிலையை இன்றைய மருத்துவத்துறை வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிற அதே நேரத்தில், "உண்மைதான்' என்று சொல்கிற செய்தியைத் தொல்காப்பியம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பறைசாற்றியுள்ளது வியப்புக்குரியது! உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் காண்போம்.

"பூப்பின் புறப்பா டீரறு நாளும்
நீத்தகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான''


(தொல்.கற்.நூ.46)

என்பது நூற்பா. இந் நூற்பாவின் மூலம், கற்பொழுக்கத்தில் பரத்தமை காரணமாகப் பிரிந்த தலைவன், தலைவி பூப்பு எய்திய மூன்று நாள் முடிந்து, அடுத்த மூன்று நாளும் முடிந்து வரக்கூடிய பன்னிரண்டு நாளும் தலைவியை விட்டுத் தலைவன் பிரிவது மரபு இல்லை என்கிறார்.

அதாவது, பெண்களுக்கு வரும் மாதவிடாய் முடிந்து மூன்று நாள் கழித்து, அடுத்தப் பன்னிரண்டு நாளும் தலைவன் தலைவியை விட்டுப் பிரிவதில்லை என்கிறார். அதற்கு இளம்பூரணர், ""இதனாற் பயன் என்னையெனின் அது கருத்தோன்றுங்காலம் என்க'' என்று விளக்கம் தருகிறார்.

நச்சினார்க்கினியர், தமிழ் அக இலக்கண மரபில் குறிப்பிடத்தக்க இறையனார் களவியல் உரைக்கு விளக்கம் தருகிறார். அதாவது, பெண் மாதவிடாய் அடைந்த முதல் மூன்று நாள் முடிந்த பின்பு நான்காம், ஐந்தாம், ஆறாம் நாள்கள் என அடுத்தடுத்த மூன்று நாளும் ஆணும் பெண்ணும் சேரக்கூடாது என்கிறார்.

அதற்கு இறையனார் களவியல் உரை, ""முதல் நாள் நின்ற கரு வயிற்றில் சாம்; இரண்டாம் நாள் நின்ற கரு குரு வாழ்க்கை உடைத்தாம்; மூன்றாம் நாள் நின்ற கரு திருவின்றாம்'' என்று கூறுகிறது.

தொல்காப்பியர் கூறிய இச் செய்தி உண்மையில் இன்றைய மருத்துவ உலகமே வியக்கும் உண்மையாகும்.
முனைவர் கா.அய்யப்பன் - நன்றி தினமணி


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Empty Re: தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள்

Post by malik Sun Jun 30, 2013 2:12 pm

இதே பதிவை சிவா இன்று காலையே பதிந்திருகின்றார்..!

எனினும்..
தமிழின் பெருமையை..
தமிழரின் தொல்காப்பியத்தின் பெருமையை..
எத்தனை முறை பகிர்ந்தாலும் சிறப்பே..!!

அருமையான பதிவு சாமி அவர்களே..!!சூப்பருங்க 
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Empty Re: தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 30, 2013 2:42 pm

மிகவும் நன்று சாமி அவர்களே....ஆயினும் நமது சிவா இதை முன்பே பதிந்துள்ளதால் அதனுடன் உங்களின் இந்த பதிவையும் இணைத்துவிட வேண்டியதுதான்புன்னகை 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Empty Re: தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
» கலாமின் விதைகள் குழுவின் பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum