ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்

5 posters

Go down

வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில் Empty வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்

Post by சிவா Sun Jun 16, 2013 8:08 am

வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில் 484808_507535565986212_302466038_n

சேலம் மாவட்டம் மேட்டூரில், காவிரி ஆற்றின் மீது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக பத்தாயிரம் தொழிலாளர்களைக் கொண்டு கருங்கல்லும், சுண்ணாம்பும், நேர்மையும், உண்மையும் கலந்து 1934ல் கட்டிமுடிக்கப்பட்ட மேட்டூர் அணையானது, கட்டி முடிக்கப்பட்டபோது ஆசியாவிலேயே உயரமான அணையாகவும், உலகிலேயே பெரியநீர்தேக்கமாகவும் விளங்கியது.

அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் போது 59 மைலுக்கு பரந்து விரிந்து கடல் போல தண்ணீர் காட்சியளிக்கும். நாள்தோறும் மின்சாரம் எடுக்கப்படும். அணையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பண்ணைவாடி கிராமத்தில் இருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வரர் கோயில், இரட்டை கோபுர தேவாலயம் எல்லாம் தண்ணீரில் முழ்கியிருக்கும். எங்கும் சசந்தோஷம் பொங்கியிருக்கும்.

ஆனால் இப்போது நிலமையே வேறு, கடும் வறட்சி காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கடுமையாக குறைந்து காணப்படுகிறது. இந்த நிலை இன்னும் சில நாள் நீடித்தால் சென்னை உள்ளிட்ட 11 மாவட்ட மக்களின் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் அபாயம் உள்ளது. 16 கண் மதகு அருகே தண்ணீருக்கு பதில் காய்ந்த செடிகளும், கொடிகளும், கற்களும், குப்பைகளும் கிடக்கின்றன. மின்சாரம் எடுப்பதற்காக தண்ணீர் செல்லும் சுரங்கம் வறண்டு காணப்படுகிறது. இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்ணைவாடி கிராமத்தில் வற்றிப்போய், வறண்ட வெடிப்புகளுக்கு மத்தியில் நந்தியும், தேவாலயத்தின் இரட்டை கோபுரமும் சோகக்கதை சொல்லியடி வேதனையோடு நிற்கின்றது.

பல லட்சம் ஏக்கர் டெல்டா விவசாயிகள் இந்த அணைநீரை நம்பித்தான் இருக்கிறார்கள், பிழைக்கிறார்கள்.

அணையில் 120 அடி தண்ணீர் தேங்கி நின்றால் 9,347 கோடி கனஅடி தண்ணீர் நமக்கு கிடைக்கும்

மேட்டூர் அணையானது மழை நீரையும், கர்நாடகா மாநிலத்தில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை மட்டுமே நம்பியுள்ளது. இந்த இரண்டுமே பொய்த்துப்போன நிலையில் தற்போது அணையின் நிலமை கண்ணீரை வரவழைக்கிறது.

விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தி பல நாட்களாகிவிட்டது. அணையின் மீன் வளத்தை பாதுகாக்கவும், 11 மாவட்ட குடிநீர் தேவைக்காகவும் அணையில் குறைந்த பட்சம் ஐந்து டிஎம்சி அதாவது 20 அடி தண்ணீரை தேக்கிவைத்திருக்க வேண்டும். ஆனால் குடிநீருக்காக நாள்தோறும் 600 கனஅடி திறந்துவிடப்படுவதால் நீர் மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. கட்டாய இருப்பு தண்ணீரில் இருந்தே கைவைக்கவேண்டிய அபாய நிலை, ஆனால் வேறு வழியும் இல்லை. இந்த நிலையில் இரண்டு நாள் கர்நாடாகவில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் பெருகி வந்தது, ஆஹா! தண்ணீர் வருகிறது என சந்தோஷப்படுவதற்குள் அந்த தண்ணீரும் நின்று நிலமை பழையபடி மோசமாகிவிட்டது.

எத்தனையோ பேரை காப்பாற்ற போகும் இந்த அணை வேண்டும் என்பதற்காக பல கிராமத்தினர் தங்களது வீடுகள், நிலங்களை எல்லாம் விட்டுக்கொடுத்தனர். அணையில் நீர் பெருக, பெருக வீடுகள், நிலங்கள் மட்டுமின்றி பல கோயில்களும் கூட நீரில் முழ்கியது.

அந்த கோயில்களை எல்லாம் இந்த தலைமுறை பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை, அவ்வப்போது நந்தி சிலையும், சர்ச்சின் இரட்டை கோபுரத்தையும் மட்டும் எப்போதாவது பார்த்து வருவார்கள்.

இந்த நிலையில் முதல் முறையாக தண்ணீரில் முழ்கியிருக்கும் வீரபத்திரன் கோயில் தற்போது வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. மேட்டூரில் இருந்து கொளத்தூர் வரை போய் பின் அங்கிருந்து அணைக்குள் பத்து கிலோமீட்டர் தூரம் ரிஸ்க் எடுத்து பயணம் செய்தால் இந்த கோயிலை இப்போது பார்க்கலாம். எப்போதும் தண்ணீரில் முழ்கியிருக்கும் இந்த கோயிலின் பக்கத்தில் கோடிப்பாடி கிராமம் உள்ளது. ஆனால் இந்த கிராம மக்களே இந்த கோயிலை பார்த்ததாக நினைவில் இல்லை என்கின்றனர், மிகவும் வயதான பெரியவர்கள் மட்டுமே ஆமாம் இது வீரபத்திரன் கோயில், அருமையான பெருமையான கோயிலாகும், இங்கு மண்டபம், கிணறு எல்லாம் இருந்தது என்கின்றனர்.

மேட்டூரைச் சேர்ந்த ஏ.கோபிக்கு அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் போதெல்லாம் மனசும் சந்தோஷத்தில் நிரம்பியிருக்கும், அணை வறண்டுவிட்டால் இவரது மனசும் வறண்டு விடும், ஆனாலும் வறண்ட வரலாறையும் பதிவு செய்யவேண்டும் என்பதற்காக வீரபத்திரன் கோயிலுக்கு சென்று படம் எடுத்து திரும்பியுள்ளார். அவரது படங்கள் முதன் முதலாக நமது பொக்கிஷம் பகுதியில்தான் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

- எல்.முருகராஜ்


வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில் Empty Re: வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்

Post by ராஜு சரவணன் Sun Jun 16, 2013 8:25 am

வருன பகவானின் கருணை இருந்தால் மட்டுமே தமிழகம் தப்பிக்கும். இனி ஒரு துளி நீரை கூட கர்நாடக காங்கிரஸிடமிருந்து கேட்டு பெற முடியாது.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில் Empty Re: வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்

Post by மதுமிதா Sun Jun 16, 2013 2:18 pm

அவர் எங்கே கருணை கொள்வது அண்ணா
நம்மிடம் கருணை கட்ட முடியாத அளவுக்கு - நாம் தான் மரத்தை வெட்டி வெறும் கட்டிடமாக தானே விட்டு வைத்துள்ளோம்


வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில் Mவருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில் Aவருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில் Dவருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில் Hவருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில் U



வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில் Empty Re: வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்

Post by யினியவன் Sun Jun 16, 2013 2:38 pm

கண்டோம் முன்பு இயற்கையின் பசுமைப் புரட்சி
இன்று இயற்கை அரசியல் செயற்கை நாடகத்தால் காண்கிறோம் வறட்சி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில் Empty Re: வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்

Post by krishnaamma Sun Jun 16, 2013 6:32 pm

MADHUMITHA wrote:அவர் எங்கே கருணை கொள்வது அண்ணா
நம்மிடம் கருணை கட்ட முடியாத அளவுக்கு - நாம் தான் மரத்தை வெட்டி வெறும் கட்டிடமாக தானே விட்டு வைத்துள்ளோம்

ஆமாம் மது சோகம் ரொம்ப வருத்தமாக இருக்கு படிக்கவே சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில் Empty Re: வருத்தமான வரலாற்று பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum