புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_m10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_m10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_m10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10 
3 Posts - 6%
heezulia
கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_m10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_m10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_m10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_m10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_m10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_m10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_m10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_m10கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 11, 2013 11:11 am

கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Images?q=tbn:ANd9GcQmOvIhSooLdMYLb-W0Mi_a43ZTC41CqFZyaFsX-G478RUeLE8RUw

கோபாலுக்கும் ரோஷிணிக்கும் திருமணம் பேசி முடிவு செய்தார்கள். மொபைலில் பேச ஆரம்பித்தார்கள். ஒருநாள், “கல்யாணமாகி ரெண்டு மூணு வருஷத்துக்கு ஜாலியாக இருந்து விட்டு, அப்புறம்தான் குழந்தை! அது வரை உங்க அப்பா, அம்மா நம்ம வீட்டுக்கு வரக்கூடாது. குழந்தை பிறந்த பிறகு, அதைப் பார்த்துக் கொள்ள ஆள் வேணுமில்லையா? அப்போ அவங்க வரலாம்’ என்றாள் ரோஷிணி. கோபால் அதிர்ந்தான். பெண் வீட்டாரிடம் கோபாலின் தாய் இதைப் பற்றிப் பேச, “எங்க பொண்ணு சொல்லறதுல என்ன தப்பு? அவள் சொல்லறது உங்களுக்கு சரிபட்டு வரலைன்னா கல்யாணமே வேணாம்’ என்று பட்டென்று சொல்லி விட்டார் பெண்ணின் அம்மா.
ஜாதகம் பார்த்து இரண்டு வீடுகளுக்கும் ஓகே. பாலாஜி வீட்டுக்கு பெண் வீட்டார் திருமணம் பேசப் போனார்கள். ஹாலில் அமர்ந்தவுடன், அறைக்குள்ளிருந்து மூன்று நாய்கள் ஓடி வந்தன. “ரொம்ப வருஷமா நாய் வளர்க்கறீங்களா?’ என்றார் பெண்ணின் அப்பா. “பாலாஜிக்க நாய்னா ரொம்ப இஷ்டம் அவன் படுக்கையிலதான் இதெல்லாம் படுக்கும்,’ என்றாள் பாலாஜியின் அம்மா வெள்ளந்தியாய். திருமணப் பேச்சு அத்தோடு நின்றது. “பெண்ணுக்கு பெட்னா ஆகாது!’
“வீட்டில் சமையலுக்கு ஆள் இருக்கு’ என்று துஷ்யந்த் சொல்ல, அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் “சமையல்காரி லீவு போட்டா என்ன பண்ணுவீங்க’ என்று கேட்டாள். துஷ்யந்த் வெகு யதார்த்தமாக, “அந்த ஒண்ணு ரெண்டு நாள்ல நீ மேனேஜ் பண்ணிட மாட்டியா?’ “நான் என்ன உன் வீட்டு சமையல்காரியா? அவ லீவு போட்டா நான் சமைக்கணுமா? ஏன் உங்க அம்மா சமைக்கமாட்டாங்களா’ என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
இருவீட்டுச் சம்மதத்துக்குப் பிறகு இருவரும் ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்தார்கள். அவள் கேட்டவற்றுக்கு மட்டும் மனோகரன் பதில் சொன்னான். திருப்பி எதையுமே அவன் கேட்கவில்லை. “அவனுக்கு சகஜமாகக் கூடப் பேசத் தெரியவில்லை. எப்படி வாழ்க்கை முழுசும் இவனோட குப்பை கொட்டறது?’
இன்னொரு ஜோடி; இன்னொரு ரெஸ்டாரண்ட். அவன் தனக்கு வேண்டியதை மட்டும் ஆர்டர் செய்தான்; அவளுக்கு என்ன வேண்டும் என்று கடைசி வரை கேட்கவே இல்லை. “தற்குறியோட எப்படி வாழறது?’
இன்னொரு பெண் பார்க்கும் படலம். பையனின் அம்மா வரவில்லை. யாரும் சரியாகக் காரணம் சொல்லவில்லை. பையனும் பெண்ணும் தனியே பேச அனுமதிக்கப்பட்டபோது, அவள் கேட்ட முதல் கேள்வி: “உங்கம்மாவுக்கு என்ன உடம்பு?’ “டிப்ரெஷன், ஹிஸ்டீரீயா,’ என்றான் எதையும் மறைக்காமல். “நோயாளி மாமியாரோட காலம் தள்ள முடியாது.’
திருமண வலைத்தளங்கள் முதல் தனியார் மேட்ரிமோனியல் சர்வீசஸ்கள் வரை எல்லா இடத்திலும் ஆண்களின் ஜாதகங்கள்தான் கொட்டிக்கிடக்கின்றன. மணப்பெண் தேவை எக்கச்சக்கம். திருமணத்துக்குத் தயாராக பெண்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அவர்கள் முன்வைக்கும் டிமாண்டுகளே மேலே பார்த்தவை. இன்று பெண்கள் தம் தேர்வுகளில் மிக உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறார்கள்.
“இன்று பெண்களும், ஆண்களுக்கு இணையாக படிக்கிறார்கள்; வேலைக்குப் போகிறார்கள்; பொறுப்பான பதவிகளை வகிக்கிறார்கள்; கைநிறைய சம்பளம் வாங்குகிறார்கள்! தமக்கு என்ன தேவை என்பதை பற்றிய தெளிவு பெண்களுக்கு இருக்கிறது. திருமண விஷயத்தில் தனக்கு இப்படி அமையவேண்டும் என்று முடிவு செய்து, கண்டிஷன்கள் போடுகிறார்கள். ஒரு பெண் தனக்கு இணையாகவோ, தன்னைவிட அதிகமாகவோ படித்த, தன்னைவிட அதிக சம்பளம் வாங்குகிற பையனையே திருமணம் செய்து கொள்ள விரும்புவது சகஜம்தான். ஆனால் இன்று அதுமட்டுமே போதாது. பையனின் ஹாபி என்ன என்று பார்க்கிறார். நிறைய புத்தகம் படிக்க விரும்புகிறவர்தான் வேண்டும் என்பதில் குறையாக இருக்கிறார். காரணம் கேட்டால், ஒரே ஹாபியாக இருந்தால்தானே எங்கள் மண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று கேட்டார்’ என்கிறார் கல்யாண மாலை மோகன்.
தங்களுக்கென்று ஒரு ஸ்பேஸ் இருக்கிறது என்பதை பெண்கள் நம்புகிறார்கள். கணவனின் துணையாக, அவன் நிழலில் காணாமல் போய்விடும் ஆபத்தை நினைத்து அச்சப்படுகிறார்கள். இரு மனங்களின் கௌரவமான ஒப்பந்தம்தான் திருமணம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். கணவனாக வருபவன் தன்னை அடக்கி ஆள முனைவாளோ என்ற அச்சமே பல பெண்களை யோசிக்க வைக்கிறது. அதனாலேயே திருமணங்களைத் தள்ளிப் போடுகிறார்கள்.
திருமணச் சந்தையில் ஜாதியின் ஆதிக்கம் அதிகம். தங்கள் ஜாதியில்தான் பெண், மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்பதில் பெற்றோர் குறியாக இருக்கின்றனர். மணப்பெண்களுக்கு இதில் மாற்றுக் கருத்துக்கள் ஏதுமில்லை. ஒரே ஜாதியாக இருந்தாலும், உட்பிரிவுகள் பார்க்கத் தவறுவதில்லை.
“என்னிடம் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வருகிற சில பெண் வீட்டார்கள், கல்யாணம் ஆகி, எவ்வளவு நாளில் பெண் தனிக்குடித்தனம் போவாள் என்று பார்த்துச் சொல்லும்படி கேட்பார்கள். பெற்றோர்கள் இல்லாது போனால் ஐந்து ஸ்டாராம். அவர்கள் தங்கள் பென்ஷனை வைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்தால் நாலு ஸ்டாராம். இப்படியாக இன்று பையன்களுக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுக்கிறார்கள். பையனின் அப்பா, அம்மாவுக்கு என்ன பட்டம் தெரியுமா? எக்ஸ்ட்ரா லக்கேஜ்!’ என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பிரபல ஜோதிடர். பெண்கள் தங்களைவிட, ஒன்றிரண்டு வயது மூத்த ஆண்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். அதிக வயது வித்தியாசம் கூடாது. அப்போதுதான் இருவருக்கும் இடையே புரிதல் இருக்குமாம். அதிக வயது வித்தியாசம் கணவர்களின் ஆதிக்கத்துக்கு அடிகோலி விடும் என்பது இவர்கள் லாஜிக்.

தொடரும் .......



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 11, 2013 11:11 am

திருமணத்துக்கு ஏன் இவ்வளவு கண்டிஷன்ஸ்? முக்கிய காரணம், பெண்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் உலக அனுபவம். பல பெண்கள், உணர்ச்சிவசப்பட்டோ, பெற்றோர் வற்புறுத்தியதாலோ திருமணம் செய்து கொண்டு, மனக்குறையுடன் வாழ்வதைப் பார்க்கிறார்கள். சில இடங்களில் விவாகரத்தே ஏற்பட்டுவிடுவதையும் பார்க்கிறார்கள். ஒத்த சிந்தனை இல்லாமல், விவாகரத்து ஏற்பட்டுவிட்டால் என்னாவது என்ற பயம் அடிமனத்தில் உண்டு. அதனால், தம்முடைய செலக்ஷன் சரியாக இருக்கவேண்டும் என்று ரொம்ப கவனமாக இருக்கிறார்கள். அந்த அதீத ஜாக்கிரதையுணர்வுதான் கண்டிஷன்களாக வெளிப்படுகின்றன.


“படிப்பு, சம்பளம் (குறைந்தபட்சம் 50 ஆயிரம்), வேலை பர்சனாலிடி இவை நான்கையும் முதலில் பார்க்கிறார்கள் அப்புறம் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், விட்டால் சிங்கப்பூர், அமெரிக்கா இதைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். மும்பை, தில்லி ஒரு மாற்று குறைவுதான். ஐ.டி. வேலையில் இருக்கும் பெண்ணாக இருந்தால், வெளிநாடு மாற்றல் கிடைக்கும் என்றால்தான் திருமணத்துக்கு ஒப்புக் கொள்கிறார். இன்று இரண்டு தரப்பினருமே ஸ்டேடஸ் பார்த்துத்தான் திருமணம் செய்து வைக்கிறார்கள். பெண்கள், வெப்சைட்களில் நூறு பேருடைய புகைப்படங்களைப் பார்த்தால், அதில் இரண்டு மட்டும் செலக்ட் செய்து, அப்புறம்தான் ஜாதகம் பார்க்கிறார்கள். அதேபோல பையன்கள் எல்லோரும் தனக்கு “அழகான பெண்தான் மனைவியாக வரவேண்டும்’ என்று தவறாமல் குறிப்பிடுகிறார்கள். பையனின் குறைந்தபட்ச உயரம் 5 அடி 8 அங்குலம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்’ என்கிறார் சாய் சங்கரா மேட்ரிமோனியல், சாய் முருகா மெட்ரிமோனியல் பஞ்சாபகேசன்.

“கலாசார முறைப் படித்தான் திருமணம். சிம்பிள் திருமணம். ரெஜிஸ்டர் திருமணம், ஓடிப்போய் திருமணமெல்லாம் சினிமாலதான். மெஹந்தி விழா தொடங்கி, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அதன் அழகுக்கும் சந்தோஷத்துக்கும் செய்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணம்ங்கிறது பெரிய டெசிஷன், பொறுப்பு. அதை ரொம்ப கவனமா எடுத்க்கணும்னு விரும்பறாங்க. கூடப் பணியாற்றுபவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் திருமணப் பிரச்னைகளைப் பார்த்து சுமார் 10% பெண்கள் கல்யாணமே வேண்டாம் என்று முடிவெடுத்துவிடுகிறார்கள்,’ என்றார் பஞ்சாபகேசன்.

இதெல்லாம் மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் சமூகங்களில்தான் ஏற்படுகிறது. கிராமங்களிலோ, சிறுநகரங்களிலோ இன்னும் இந்த அளவுக்கு கண்டிஷன்கள் பெருகவில்லை என்கிறார்கள் மேட்ரிமோனியல் நடத்துபவர்கள். அப்பா, அம்மா சொல்ற மாப்பிள்ளை திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் இன்னும் இந்தச் சமூகத்தில் இருக்கிறது.

பெண்களுக்கு திருமணம் போன்ற விஷயங்களில் முடிவெடுக்கத் தெரியாது என்ற கற்பனை பல பெற்றோர்களுக்கு இருக்கிறது. இதுபோன்ற கண்டிஷன்கள் எல்லாம் வீண் குழப்பத்தால் விளைவது என்ற கருத்தும் பெற்றோரிடம் இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை, பெண்களுக்கு விவரம் போதாது, சின்னக் குழந்தைகள் என்ற எண்ணம் இருக்கிறது.

ஆனால், உண்மை நிலை அப்படியில்லை. பல பெண்கள் மிகத் துணிவுடன் தம் கணவர்களைத் தேர்வு
செய்கிறார்கள். அவர்கள் வேண்டுவது மகிழ்ச்சியான வாழ்வு. அதற்கு எவையெல்லாம் இடையூறுகளாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ, அவற்றை விலக்கவே முயல்கிறார்கள். இது காலமாற்றத்தின் வெளிப்பாடு. சமூக முன்னேற்றத்தின் அடையாளம்.

“காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் யாவினு கைகொடுத்தே’ என்றான் பாரதி. சுயசிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் எதிர்காலம் பற்றிய தெளிவுமே இந்த கண்டிஷன்களுக்கு பின்னிருக்கும் யதார்த்தம். அதை இன்றைய பெற்றோர்களும் புரிந்துகொண்டு, பெண்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

எஸ். சந்திரமௌலி மற்றும் துளசி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 11, 2013 11:19 am

"“என்னிடம் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வருகிற சில பெண் வீட்டார்கள், கல்யாணம் ஆகி, எவ்வளவு நாளில் பெண் தனிக்குடித்தனம் போவாள் என்று பார்த்துச் சொல்லும்படி கேட்பார்கள். பெற்றோர்கள் இல்லாது போனால் ஐந்து ஸ்டாராம். அவர்கள் தங்கள் பென்ஷனை வைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்தால் நாலு ஸ்டாராம். இப்படியாக இன்று பையன்களுக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுக்கிறார்கள். பையனின் அப்பா, அம்மாவுக்கு என்ன பட்டம் தெரியுமா? எக்ஸ்ட்ரா லக்கேஜ்!’ என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பிரபல ஜோதிடர்."

அடிப்பாவிகளா........................ :அடபாவி: :அடபாவி: :அடபாவி:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 11, 2013 11:20 am

பயனுள்ள பதிவு சூப்பருங்க நன்றி
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Mகல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Uகல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Tகல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Hகல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Uகல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Mகல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Oகல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Hகல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Aகல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Mகல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Eகல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 11, 2013 3:44 pm

பாவம் ஆண்கள்



கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Mகல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Aகல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Dகல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! Hகல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! U



கல்யாணம் கண்டிஷன்ஸ் எக்கச்சக்கம்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 11, 2013 7:55 pm

“காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் யாவினு கைகொடுத்தே’

இந்த காலத்துக்கு கீழ இருக்கறதுதான் பொருந்தும்!

“காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் யாவினும் கெடுத்தே"

அல்லது

“காதலொருவனைக் கைப்பிடித்தே, இவள் காரியம் யாவினும் அவன் கைகொடுத்தே’"

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 11, 2013 8:16 pm

எனக்கு கல்யாணம் செஞ்சப்ப இந்த மாதிரி எல்லாம்
கண்டிஷன் போட்டிருந்தா நான் தப்பிச்சிருப்பேனே!!! புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக