புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட்சய திருடன் Poll_c10அட்சய திருடன் Poll_m10அட்சய திருடன் Poll_c10 
73 Posts - 77%
heezulia
அட்சய திருடன் Poll_c10அட்சய திருடன் Poll_m10அட்சய திருடன் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
அட்சய திருடன் Poll_c10அட்சய திருடன் Poll_m10அட்சய திருடன் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
அட்சய திருடன் Poll_c10அட்சய திருடன் Poll_m10அட்சய திருடன் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட்சய திருடன் Poll_c10அட்சய திருடன் Poll_m10அட்சய திருடன் Poll_c10 
238 Posts - 76%
heezulia
அட்சய திருடன் Poll_c10அட்சய திருடன் Poll_m10அட்சய திருடன் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
அட்சய திருடன் Poll_c10அட்சய திருடன் Poll_m10அட்சய திருடன் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அட்சய திருடன் Poll_c10அட்சய திருடன் Poll_m10அட்சய திருடன் Poll_c10 
8 Posts - 3%
prajai
அட்சய திருடன் Poll_c10அட்சய திருடன் Poll_m10அட்சய திருடன் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அட்சய திருடன் Poll_c10அட்சய திருடன் Poll_m10அட்சய திருடன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அட்சய திருடன் Poll_c10அட்சய திருடன் Poll_m10அட்சய திருடன் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அட்சய திருடன் Poll_c10அட்சய திருடன் Poll_m10அட்சய திருடன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
அட்சய திருடன் Poll_c10அட்சய திருடன் Poll_m10அட்சய திருடன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அட்சய திருடன் Poll_c10அட்சய திருடன் Poll_m10அட்சய திருடன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்சய திருடன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 10 Jun 2013 - 19:02



அட்சய திருதியை அன்று எதை வாங்கினாலும் வருடம் முழுவதும் வாங்கிக் கொண்டேயிருப்போமாமே என்ற பயத்தில் மனைவியிடம் திட்டு வாங்காமல் இந்த வருடம் முழுவதும் எப்படியாவது தப்பிவிடலாமென்று நைப்பாசையில் சென்ற வருட அட்சய திருதியைபோதே நகை வாங்க அந்த ஜுவல்லரியில் டோக்கனை வாங்கி வைத்திருந்தேன்.

''மத்யானத்துக்கு புளியோதரை, தயிர்சாதம், சிப்ஸ், பிளாஸ்க்கில் சாயங்காலம் குடிக்க காப்பி, ராத்திரி ஆளுக்கு நாலு சப்பாத்தி, தக்காளி தொக்கு எல்லாம் கட்டியாச்சு.... எதுக்கும் உன் பி.பி. மாத்திரை ரெண்டை எடுத்து வைச்சுக்கோ. 'ஐபேடை' மறக்காதே.... நகைக் கடையிலே டி.வி. இருந்தாலும் ஒரே இரைச்சலா இருக்கும்... எப்படியும் நம்ப டோக்கனுக்கு ராத்திரி எட்டு மணிக்குள்ளே தங்கம் வாங்கிடலாம்னு தோணுது.... அங்கேயே என்னென்ன நகை ஸ்டாக் இருக்கு.... இந்த டோக்கன் வரை கிடைக்கும்னு எல்லாம் டிஜிடலா டிஸ்பிளே பண்றானாம்.... நீ கிளம்ப வேண்டியதுதான்.... போய் க்யூவிலே நின்னாக்கா பெருமாள் அனுக்ரஹம் இருந்தா இன்னிக்குள்ளே தங்கம் வாங்கிடலாம்'' ஒரு புருஷனுக்குண்டான சர்வ லட்சணங்களுடன் என் மனைவி சொர்ணாவிடம் கடைக்கு கிளம்பும்படி முறையிட்டுக் கொண்டிருந்தேன்.

சர்வ அலங்கார நாயகியாக கழுத்து, காது, மூக்கு இத்யாதிகளில் நான் கல்யாணத்திலிருந்து மூக்கால் அழுதபடி வாங்கிக் குவித்திருந்த நகைகளை மாட்டிக் கொண்டு தயாராய் வந்து நின்ற சொர்ணாவைப் பார்த்துத் திடுக்கிட்டேன்.

''ஐயையோ... இதென்ன இத்தனை நகையோடயா வரப்போறே?... உனக்கென்ன பைத்தியமா... அங்கே கூட்டம் நெரியும்.... இதுக்குன்னே கத்திரிக்கோலும் கையுமா திரிவானுங்க! ஒரு பொட்டு தங்கத்தை உருவிட்டு போனாலும் சவரன் விக்கற விலைக்கு என்னவாகும்?... அதோட நாம வீடு திரும்ப ராத்திரி பத்து மணிக்கு மேலே ஆகும்.... தனியா ஆட்டோவிலே நாம வரும்போது ஏதேதோ நடக்கலாம் பேசாம கழட்டி வீட்டிலேயே வைச்சுட்டுக் கிளம்பு... நான் சொல்றதைக் கேளு உன் நல்லதுக்குத்தான்'' என்று எச்சரித்தேன். சொர்ணாவும் அன்று ஏனோ என் சொல்லைத் தட்டாத தர்மபத்தினியாய் வெறும் கழுத்து, காது கைகளுடன் புறப்பட்டது சரித்திர நிகழ்வானது.

அட்சய திருதியை தங்கவேட்டைக்கு கிளம்பியாயிற்று.

''அடுத்த வருஷம் திருப்பதி போல கையிலே பேண்டு கட்டிவிடறதா இருக்காங்களாம்'' என்று க்யூவில் யாரோ சொல்லிக் கொண்டிருந்தது வெய்யில் கடுமையில் கேட்கத் தெம்பில்லாமல் போனது. ஆளுக்கு இரண்டு இளநீர், ஐந்தாறு வெள்ளரி என கியூ வரிசைக்கு வந்து விற்றுக் கொண்டிருந்ததை வாங்கி கத்திரி உக்கிரத்¨¡ தணிக்க முயற்சித்தோம். யாரோ எதிரே போட்டிருந்த தர்ம தண்ணீர் பந்தலிலிருந்து நீர் மோரை ஒரு டம்ளர் ஐந்து ரூபாய் என்ற கொண்டு வந்து சாமர்த்தியமாக விற்றுக் கொண்டிருந்தான். 'ஏன்யா இது இலவசம்தானே' என்றதற்கு கொண்டு வந்து கொடுக்க சர்வீஸ் சார்ஜ்தான் அந்த ஐந்து ரூபாயாம்! அவனே அரை பவுன் நகை வாங்க இதுவரை இதன் மூலம் பணம் சேர்த்திருக்கிறான் என்கிறான். அப்போது அட்சய திருதியைக்கு நகை வாங்கி அலைந்த கூட்டத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ராத்திரி சப்பாத்தியைக் காலி செய்தும் நாங்கள் கடைக்குள் போகும் முறை வரவில்லை. ஆனால் கேபினில் உட்காரும் வரை முன்னேறியிருந்தோம். பக்கத்தில் உட்காரந்திருந்த சொர்ணாவிடமிருந்து குறட்டை வந்து கொண்டிருந்தது. தூங்கித் தொலைக்கட்டும் பாவம் என்று விட்டுவிட்டேன். ஏனென்றால் எனக்கும் கொட்டாவி வந்து கொண்டிருந்தது.

''ஸார்! டோக்கன் நெம்பர் ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து ஒண்ணு... டிஜிடல்லே டிஸ்பிளே பண்றான்... உங்க டோக்கன்தானே? எழுந்து கடைக்குள்ளே போங்க'' எனக்குஙப பின்னால் உட்கார்ந்திருந்த 1,09.002 டோக்கன்காரர் எழுப்பிவிட இருவரும் விழுந்தடித்து எழுந்து கடைக்குள்ளே ஓடினோம்.

அப்போது கடைக்குள்ளே இருந்த கடிகாரம் 'டிங்... டிங்' அடிக்க தூக்கக் கலக்கத்திலும் அதை எண்ணிக் கொண்டே வந்த சொர்ணா கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டிருந்தாள்.

''உங்களைத்தான்... மணி என்னன்னு பாருங்க.... சரியா ராத்திரி பன்னிரெண்டு அடிச்சாச்சு.... அப்போ திருதியை போயாச்சுன்னுதானே அர்த்தம்...'' சொர்ணா சந்தேகமாகக் கேட்டபோது எனக்குள் ஒரு சந்தோஷக் கீற்று. ஆகா, நகை வாங்குவதை இவள் தவிர்த்து என் பர்ஸ¤க்கும், கிரெடிட் கார்டுக்கும் சேதாரம் இல்லாமல் காப்பாற்றக்கூடுமென்று கொஞ்சமாக எதிர்ப்பார்த்தேன்.

''அட, நீங்க ஒண்ணு... இந்த விக்ருதி வருடத்திலே அட்சய திருதியையைவிட அட்சய சதுர்த்தி ஆரம்பத்திலே தங்கம் வாங்கறவங்களுக்குத்தான் சகல சம்பத்தும் கொட்டுமாம். எங்க கடை ஜோஸியர் பக்கத்து ரூமிலே இருக்கார். போய்க் கேளுங்க. எத்தனை விசேஷம்னு சொல்லுவார்... நீங்க எத்தனை அதிர்ஷ்டம் செஞ்சவங்கன்னு புரியும்... அப்புறம் நம்பிக்கையிருந்தா வாங்குங்க... உங்களுக்குன்னு ஸ்பெஷல் ஆ·பரா கிராமுக்கு ஒரு ரூபாய் குறைச்சலா கொடுக்கறோம்'' கல்லாவிலிருந்து ஜுவல்லரி முதலாளி என் நம்பிக்கையில் மண்ணைப் போட்டார்.

ஒரு வழியாக அட்சய சதுர்த்தி தங்கம் வாங்கும் புதுப் பழக்கத்திற்கான முன்னோடி ஜோடிகளாக ஒரு ஜோடி நகைகளை வாங்கிக் கொண்டு ஒரு ஆட்டோவைப் பிடித்து வீடு திரும்பினோம்.

வீட்டு வாசலில் கபாலி என்ற பெயருக்குத் பொருத்தமானதாகத் தோன்றும் ஒரு ஆசாமி நின்றுகொண்டிருந்ததைத் பார்த்ததும் பகீரென்றது.

''ஐயையோ திருடன் போலிருக்கேன்னா'' என்று சொர்ணா அலறினாள். எனக்குள் அவன் கத்தியைக் காட்டி மிரட்டுவானோ என்று மிரட்சியாயிருந்தது.

''இதோ பாருமா. கூவாமே நான் சொல்றதைக் கேளு! நான் திருடந்தான். ஆனா உன் வூட்லே திருடலே... என் பொஞ்சாதி இந்தத் தொழிலை வுடுவுடுன்னு பொலம்பிகினே கீறா... கஸ்மாலம் இன்னிக்கு அட்சய திருதின்னு என்னமோ சொல்றானுங்கோ... இன்னிக்கு எதை செஞ்சாலும் வருஷம் பூரா நிறைய அதையே செய்றாமாதிரி ஆவுமாம்... அதைதொட்டு இன்னிக்காச்சும் திருடாம கம்முனு வூட்ல கெடன்னு! என் பொஞ்சாதி சதாய்ச்சிகினே கிடந்தா. சரின்னுடு. பன்னிரெண்டு மணி ஆவட்டும் அப்பால தொழிலுக்குப் போவலாம்னு வந்துகினு இருந்தேன்... இந்த தெருப் பக்கமா வரச் சொல்லோ உன் வூடு பூட்டிகினு இருந்தது.... ஜன்னல் தொறந்துகீது... பாத்தா டேபிள் மேலே அத்தனை நகைங்கோ.... சரி இன்னிக்கு நல்ல வேட்டைன்னுட்டு தொழிலை தொடங்கலாம்னு நெனைக் சொல்ல ஆட்டோ சத்தம் கேட்டு உஷாராயிட்டேன்... அதே சமயம் என் வூட்டுகாரி சொன்னதும் நெனைவுக்கு வந்துச்சி... அட்சய திருதிலே இந்த தொழிலை செய்யாம வுட்டதாலே, அதுக்கு அப்பாலவும் அதை செய்ய வுடாம தடுக்கத்தான் சரியான சமயத்திலே நீங்க வந்துட்டீங்கன்னு தோணுது... அதால பொண்டாட்டி பேச்சே மந்திரம்னு இந்த தொழிலை வுட்டுடலாம்னுகீறேன். வரட்டா'' என்ற அவன் சொன்னதை கேட்டு இருவரும் மலைத்து நின்றோம்.

''கொஞ்சம் இருப்பா'' என்று சொர்ணா அவனிடம் சொல்லி விட்டு வீட்டைத் திறந்து உள்ளே போய் எதையோ கொண்டு வந்தாள்.

''இந்தா... நீ திருந்திட்டேன்னு சொன்னதுக்கு எங்க பரிசா இந்த மோதிரத்தை வெச்சுக்கோ... சுமார் இருபது பவுன் நகை டேபிள் மேலே இருந்தது அத்தனையையும் திருட்டுப் போகமா தடுத்த உன் பொஞ்சாதிக்கு எங்களோட தேங்க்ஸ்... நீயே இப்படி திருந்திட்டபோது நகை நகைன்னு வருஷம் பூராவும் சேக்கணும்னு நானும் இனிமே ஆசைப்படறதை இனனியோட விட்டுடறதா இருக்கேன்'' என்று சொர்ணா தழுதழுக்க அவன் கையில் மோதிரத்தைக் கொடுத்தாள். இவள் நகை ஆசை விட்டுவிடுவதாகச் சொல்வதை 'காமடிகீமடி பண்ணலயே'ன்னு நீங்கக் எடுத்துக் கொள்ளாமலிருந்தால் சரி!

அகிலா கார்த்திகேயன்




அட்சய திருடன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக