ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Poll_c10நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Poll_m10நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Poll_c10நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Poll_m10நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளின் பதிவு - ஆதிரா

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty நினைவுகளின் பதிவு - ஆதிரா

Post by Aathira Sun Jun 09, 2013 7:07 pm

First topic message reminder :

நாம் எத்தனையோ நாள்களை எப்படி எப்படியோ கழித்துக் கொண்டிருக்கிறோம். யாராவது நம்மிடம் “அங்கு வருகிறீர்களா இங்கு வருகிறீர்களா?” என்று அழைத்தால் உடனடியாக நம் பதில் “எனக்கு வேலை இருக்கிறது. மன்னிக்கவும்” என்பதாகத்தான் பெரும்பாலும் இருக்கும். திருமதி பூமா அவர்கள் நல்ல தோழி. அதிகம் தொடர்பில் இருப்பதில்லை நாங்கள். எப்போதாவது பேசிக்கொள்வோம். ஏதேனும் விழாவில் எதிரெதிர் சந்தித்துக் கொள்வோம். “சனிக்கிழமை செங்கல்பட்டில் ஒரு நிகழ்ச்சி. வருகிறீர்களா” என்று அழைத்த போது அப்படித்தான் சொன்னேன். அடுத்ததாக “செங்கல்பட்டுக்கா? அவ்வளவு தூரமாச்சே” என்று சற்று நீளமாக இழுத்தேன். அவரோ விடுவதாக இல்லை. “நான் உங்களையும் எங்களுடன் இணைத்துக்கொண்டு மேலே செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். டெரெயினில் வந்தால் ஒன்றும் சிரமமில்லை. சென்னையில் இருந்து கிளம்பி வந்து விடுங்கள். நான் உங்களைச் செங்கல்பட்டு ஸ்டேஷன்ல அழைத்துக்கொள்கிறேன். நிகழ்ச்சி முடிவுற்றதும் மீண்டும் செங்கல்பட்டு ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்து விட்டுவிடுகிறேன்” என்றார். அவர் கூறியதில் இருந்து செங்கல்பட்டிலிருந்தும் செல்ல வேண்டிய இடம் தொலைவு என்பது புரிந்தது. மறுக்க முடியாத அன்பில் “சரி வருகிறேன்” என்று அரை மனதாகக் கூறிவிட்டு என் வேலையைப் பார்க்கத் தொடங்கினேன்.

நான் அப்படிக் கூறியதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. கவிஞர் ஒருவர் அவரது கவிதைப் புத்தகத்திற்காகத் தொடர்ந்து நான்கு நாட்களாக என் இல்லத்திற்கு வந்து வேலை வாங்கிக் கொண்டு இருந்தார். மறுபுறம் நான் இதழ்களுக்கு அனுப்ப வேண்டிய இரண்டு கட்டுரை வேலைகள். திடீரென என்னுடைய கவிதைகளை ஒரு நண்பர் தொகுப்பாகக் கொண்டு வந்தே தீர்வேன் என்று அடம்பிடித்து, என்னிடம் “படம் அனுப்புங்கள், கவிதை அனுப்புங்கள், அணிந்துரை அனுப்புங்கள்” என்று மிரட்டிக்கொண்டு இருந்தார். அப்படி அவர் மிரட்டா விட்டாலும் நான் அவருக்குப் பெப்பே காட்டி விட்டு செல்லும் ஆசாமிதான். வேறு வழியின்றி வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் உறங்காமல் கூகுல் ஆண்டவர் அமைத்த புகைப்படப் பூங்காவில் இருந்து படம் என்று என் கண்களுக்குத் தென்பட்டதையெல்லாம் என் கணினிக்குத் தரவிறக்கி அனுப்பியதில் விடிந்து விட்டது மொத்த இரவும்.

ஐந்து மணிக்குக் கணினியின் கண்களை மூடி அதற்கு ஓய்வு கொடுத்து விட்டு களைத்த என் கண்களுக்குப் புத்துணர்ச்சி கொடுத்தேன். ஆறரை மணிக்கு ஒரு காபியை அருந்தி வீட்டை விட்டு கிளம்பினேன். கிளம்பும்போது அலைபேசியில் பூமா. “குறுஞ்செய்தி கிடைத்ததா? பார்த்தீர்களா?” என்றார். மனித மனம் எவ்வளவு மோசமனாது பாருங்கள். அதற்குள் எனக்குள் ஒரு பளிச்... ஒரு வேளை நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்களோ! என்று துள்ளியது என் மனம் ஒரு நொடி. நான் தான் அந்தக் கவிஞரின் வேலைக்கு இடையூறு வேண்டாம் என்று நான்கு நாட்களாக அலைபேசியை சைலண்ட் மோடில் போட்டு இருந்தேனே. பக்கத்தில் இருந்து இருந்தால் வைபரேட் தெரிந்து இருக்கும். வேலையில் அது தெரியவில்லை. “பார்க்க வில்லை, சொல்லுங்கள்” என்று உற்சாகத் தொனியில் கேட்டேன். “பேருந்தில் வருவதாக இருந்தால் இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் ஆகும். நீங்கள் புகை வண்டியில் வந்து விடுங்கள். ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம். எப்படியும் எட்டரையில் இருந்து ஒன்பதுக்குள் செங்கல்பட்டு புகை வண்டி நிலையத்தில் சந்திப்பது போல வந்து விடுங்கள்” என்றார். முதல் நாள் பேசும்போது பேருந்தில் வருவதாகக் கூறியிருந்தேன். அதுவரைக்கூட எதில் பயணம் செய்யப் போகிறோம் என்று முடிவு செய்யாத நான், பூமா சொன்னது போலவே புகை வண்டியில் போவதாக முடிவு செய்து புறப்பட்டேன்.

கோடம்பாக்கம் புகைவண்டி நிலையம் சென்று, அங்கு என் வாகனத்தைப் பார்க் செய்து விட்டு உள்ளே சென்றேன். செல்வதற்கும் திரும்பி வருவதற்குமான டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டேன். “தாம்பரம் புகைவண்டி என்றால் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் உண்டு. செங்கல்பட்டு புகைவண்டி அரைமணி நேரத்திற்கு ஒன்றுதான்” என்று என் அண்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது. புகைவண்டிக்காகக் காத்திருக்க வேண்டுமோ என்று நினைத்து திரும்புகையில் சத்தமே இல்லாது அமைதியாக ஊர்ந்து வந்தது செங்கல்பட்டு புகைவண்டி. நல்ல வேலைகள் செய்யக் கிளம்பும் போது நம்மை இறைவன் காக்க வைக்க மாட்டான் என்று நினைக்கிறேன்.

இவ்வளவு எளிமையாகப் பயணம் அமையுமா என்பது எனக்குள் வியப்பு. சுகமான பயனமும். ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு நாள் என் இரு சக்கர வாகனத்திற்கு உடல் நிலை சரியில்லை. அன்று வடபழனிவரைப் பேருந்தில் சென்று வர நான் பட்டுள்ள சிரமங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டே சென்றேன். சரியாக ஒரு மணி நேரத்தில் செங்கல்பட்டு இரயில் நிலையம் வந்தது.

இறங்கி அங்கு நாளிதழ் வாங்கினேன். பெண்மணி இதழ் அழகிய வண்ணப்படத்துடன் கண்ணில் பட்டது. அது ஒன்று வாங்கினேன். மாதம்தோறும் அதில் என் கட்டுரையும் இடம்பெறுகிறதே. நண்பர் முகில் தினகரன் பாக்யாவில் அவரது சிறுகதை வந்துள்ளதாகச் சொல்லியிருந்தார். பாக்யாவையும் வாங்கிக்கொண்டு பூமாவின் கணவர் திரு. இராஜேந்திரன் அவர்கள் எண்ணுக்கு அழைத்து நான் செங்கல்பட்டு அடைந்ததைத் தெரிவித்தேன். அவர்தான் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

அவர் வெளியில் இனோவா காருடன் காத்திருப்பதாகக் கூறினார். நாங்கள் வேறொரு விழாவில் முன்னரே சந்தித்திருக்கிறோம். பளிச் முகத்துடன் காரிலிருந்து இறங்கி வரவேற்றார். பூமா அவர்கள் தாம்பரத்தில் இருந்து அங்கு வர வேண்டும் அவர் நான் பயணித்த புகைவண்டியைத் தவற விட்டுவிட்டார். அவருக்காக அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. காரில் அமர்ந்தவாறே நிகழ்வைப் பற்றிக் கேட்டு அறிந்தேன். அவர் சொன்ன தகவல்கள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை. உச்ச கட்டக் கோபத்தின் பக்க விளைவாக அடி வயிற்றில் என்னவோ செய்ய ஆரம்பித்திருந்து. அந்த விபரம் எழுத்தில் வடிக்க முடியாதது.

சற்று நேரத்தில் பூமா வந்தார்கள். கார் புறப்பட்டது. 13 கி.மி. தூரத்தை நலம் விசாரித்தலில் கடந்தோம். .


தொடரும்....


நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Tநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Hநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Iநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Rநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty Re: நினைவுகளின் பதிவு - ஆதிரா

Post by Aathira Mon Jun 10, 2013 11:44 am

யினியவன் wrote:எப்படியாவது இங்கு போகாமல் போக்கு காட்டி தப்பிக்க நெனச்ச நீங்க நல்ல வேளை அங்கே சென்றீர்கள - நல்ல அனுபவம் கிடைக்கப் பெற்றீர்கள்.

நல்லாவேற இருந்துச்சாமே காப்பி - நீங்க கலக்கலேல்ல நல்லாத்தான் இருக்கும் புன்னகை
ஆமாம் நல்ல அனுபவம். இன்னும் எழுதறேன்


நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Tநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Hநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Iநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Rநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty Re: நினைவுகளின் பதிவு - ஆதிரா

Post by Aathira Tue Jun 11, 2013 10:42 am

இது ஆழமாக மனத்தில் பதிந்த நினைவுகளின் சேமிப்பு. நிச்சயமாக நகைச்சுவைக்காக அல்ல.

நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 934614_546534398722099_404214371_n

“அவர்க்கு தமிழ் அவ்வளவாகப் படிக்கத் தெரியாது என்று காதில் குசுகுசுத்தார்” பூமா. அப்பாடா என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். அதை முடிக்கும் முன்பே இனி மாணவர்களை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறி ஒர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அமர்ந்தார் இராஜேந்திரன்.

ஒவ்வொரு முறை மேடையில் பேசும்போது எனக்கு முன்பு பேசுபவர் பேசிக்கொண்டு இருக்கும்போது இவர் பேசுவதுடன் விழா முடிந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன் நான் அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே மேடை என் கைக்கு வந்து விடும். வழக்கம்போல் அதேதான் இங்கும் நடந்தது.

பொதுவாக நான் பெரிதாக ஹோம் ஒர்கெல்லாம் செய்வது இல்லை. அதுவும் மாணவர்களிடம் என்னும் போது பல ஆண்டுகளாய் செய்கின்ற தொழில் தானே என்று வருவேன். இங்கும் அப்படித்தான் வந்தேன். ஆனால் இங்கு கொஞ்சம் எனக்கு நடுக்கம் இருந்தது. ஏன் என்று எனக்கே இன்னும் புரியவில்லை.

எப்படி ஆரம்பிப்பது. என்ன பேசுவது அவர்களுக்கு ஏற்ற மொழி நடை எது? தூய தமிழா அல்லது பேச்சுத் தமிழா? ஆங்கிலம் கலக்கலாமா? கூடாதா? அங்கு ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி முதல் கல்லூரி முடித்த மாணவிகள் வரை இருந்தார்கள். யாரை முன்னிறுத்திப் பேசுவது? என்று எண்ணற்ற குழப்பங்கள் என்னுள்.

ஒரு வினாடி சிந்தனையில் அவர்களது நிலையையும் தேவையையும் புரிந்து கொள்ள அவர்களை முதலில் அறிமுகப் படுத்திக் கொள்ளச் சொன்னால் நல்லது என்று தோன்றியது. நாம் பேசுவதற்கு முன் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வது நாம் அவர்களை மேலே எடுத்துச் செல்ல பயனாக இருக்கும். அவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொள்வதில் எனக்கும் எந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்துப் பேசுவது என்பதும் புரிந்து விடும். முக்கியமாக ஒரு நட்புப் பாலம் அமைந்து விட்டால் உரையாடலோ பேச்சோ நெஞ்சுக்கு நெருக்கமானதாக அமையும் என்பதைத் தீர்க்கமாக நம்புபவள் நான்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது ஒன்று உள்ளதே. இவ்வளவையும் சொல்லிவிட்டு அதை சொல்லாவிட்டால் எப்படி? அதை சொல்லாமல் எஸ்கேப் ஆகிவிடலாம். எப்படியும் யாராவது ஒருவர் கண்டு பிடித்து விட்டு கமெண்டாகப் போட்டு வைப்பார்கள். நான் கொஞ்ச நேரம் எஸ்கேப் ஆகிவிட இதைவிட வேறு சான்ஸ் கிடைக்குமா?

அவர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொள்ளச் சொன்னேன். தயக்கம், மயக்கம் எதுவும் இல்லாமல் எல்லோரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள். தங்களைப் பற்றிக் கூறுவதில் ஒரு போட்டியும் இருந்தது அவர்களுக்குள். எது பிடிக்கும்? எது பிடிக்காது என்பதையும் சொல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.

பொதுவாக எல்லோரும் கூறியது அவர்களின் குடும்பத்தைப் பிடிக்கும். நன்றாக உடை அணியப் பிடிக்கும். இப்படிச் சொன்னவர்களின் உடை பரிதாமாக இருந்தது. பலதரப்பட்ட ஏழைகளைச் சந்தித்து அவர்களது ஒரு நாளை மகிழ்ச்சியாக வைக்கும் ஒரு நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்சி நடத்தி வருகிறது. இவர்களெல்லாம் அந்தத் தொலைக்காட்சியின் கேமராக் கண்ணில் படவில்லையே என்று எனக்குள் ஒரு ஏக்கம்.

தொலைக்காட்சி பற்றி கேட்ட போது பெரும்பாலும் எல்லோரும் சன் மியூசிக் பிடிக்கும் என்றனர். ஆனால் பிற்பகல் அவர்களைப் பாட வைத்தோம். பாடியவர்களில் ஒருவர் கூட திரைப்படப் பாடல் பாடவில்லை. அவர்களின் இனக்குழுவின் பக்திப் பாடல்களையே பாடினர். அவர்கள் இன்னும் வெளிவராதது எனக்கு என்னவோ கஷ்டமாக இருந்தது. அவர்கள் தம் அடையாளங்களை விட வேண்டும் அல்லது மறக்க வேண்டும் எனபதல்ல இதன் பொருள். அந்த இளம் பிஞ்சுகள் வெளியுலகத்தோடு கலக்காமல் இப்படியே இருந்து விடுவார்களோ என்னும் கலக்கத்தின் தாக்கமே அது.

சுட்டிகள் இருவர் சுட்டி டீவி பிடிக்கும் என்றனர். ஒரு பத்து வயது குட்டிப்பெண் மட்டும் கே டிவி பிடிக்கும் என்றாள். கே டிவியில் என்ன வரும் எனறதற்கு கருப்பு ஸ்ரீதேவியாய் பளிச்சென்று சிரித்துக் கொண்டு சினிமா என்றாள். இவர்களின் பதிலில் இருந்து அரசு கொடுத்தத் தொலைக்காட்சிப் பெட்டி எல்லோரிடமும் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

பிடிக்காது என்று கூறிய லிஸ்டில் சுமார் எட்டு பேர் தங்கள் தந்தையைப் பிடிக்காது என்றனர். ஏன் தந்தையைப் பிடிக்காது என்றதற்கு “அவர் குடிப்பார்” என்றனர். தந்தையை மிகவும் பிடிக்கும் என்று கூறிய மூன்று பெண்களுக்குத் தந்தை இல்லை. ‘இறந்து விட்டார்’ என்றனர்.
பலர் கெட்ட வார்த்தை பேசினால் பிடிக்காது என்றனர். யார் பேசுவார்கள் என்றதற்கு வீட்டில் என்றனர். என்னென்ன கெட்ட வார்த்தைகள் பேசுவார்கள் என்று கேட்டதற்கு ஒருவரும் பதில் தரவில்லை. பதில் தரவில்லை. தலையைக் குணிந்து கொண்டு நெளிந்தார்கள்.

அந்த நிறுவனத்தில் இது மூன்றாவது தலைமுறை என்று இராஜேந்திரன் சொன்னது நினைவுக்கு வந்தது. கெட்ட வார்த்தை பிடிக்காது. குடி பிடிக்காது. அழகாக உடை அணியப் பிடிக்கும் என்று அவர்கள் கூறியது அவர்கள் எடுத்து வைக்கும் நாகரிக மாற்றத்திற்கான முதல் அடியாகத் தோன்றியது. நாகரிகமாக வாழத்துடிக்கும் ஏக்கம் அந்த மொட்டுகளுக்குள் நிரம்பி வழிந்ததை நன்கு உணர முடிந்தது.

இவை எல்லாவற்றையும் விடவும் வேதனையான கருத்து ஒன்றை ஒரு பெண் கூறினாள். இதயம் உள்ளவர்களால் தாங்கக் கூடிய வார்த்தைகளாக அவற்றை நினைக்க முடியவில்லை. ஒரு சில வினாடிகள் இதயம் துடிக்க மறுத்தது. சற்று இடிந்தே போனேன். நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாரதியின் அடங்காச் சீற்றத்துடன் மனத்திற்குள்ளாகவே அலறிக்கொண்டேன். இப்போதும் இப்பதிவைத் தொடர விடாது அந்த நினைவு நெஞ்சில் கனக்கிறது. அந்தச் சுமையை உங்களிடம் இறக்கி வைக்கிறேன் அடுத்த பதிவில் …..


நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Tநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Hநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Iநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Rநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty Re: நினைவுகளின் பதிவு - ஆதிரா

Post by Aathira Wed Jun 12, 2013 10:45 am

நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 1001465_546947635347442_1766580524_n

ஒரு பெண் இருளர் என்று தன் இனத்தைச் சொன்னாள். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன். என் அந்தக் கேள்விக்குக் காரணம் இருளர் என்பவர்களை இறைவனுக்கு நிகரானவர்கள். உலக இருளைப் போக்குபவர்கள். இவர்களின் பாம்பு பிடிக்கும் தொழிலை மையப்படுத்தித் தமிழ்க்கடவுளர்கள் பாம்புடன் அடையாளப் படுத்தப் பட்டுள்ளனர் என்று படித்திருக்கிறேன். இந்த விபரங்கள் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறதா என்பதை அறியவே அவ்வினாவைத் தொடுத்தேன். ஆனால் விளைந்தது வேறு.
“நாங்கள் நாகரிகம் தெரிந்து கொள்ளாமல், நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். எங்கள் வாழ்வு இருளில் இருப்பதால் இருளர் என்று பெயர்” என்றாள்.

“அப்பால் எவனோ செல்வான் – அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்
எப்போதும் கைகட்டுவார் – இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்”

என்று பாரதி கூறுவது போல இவர்கள் தங்களைத் தாங்களே இப்படிச் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பழக்கப் பட்டுப் போனது அவர்கள் குற்றமா? அந்நிலையில் அவர்களைத் தள்ளியிருக்கும் சமுதாயத்தின் குற்றமா? இன்னும் அந்தச் சொற்கள் சம்மட்டியால் அடித்தாற் போல் என் நெஞ்சைத் தாக்கிக் கொண்டு இருக்கிறது.

எது எதற்கோ சட்ட வரம்புகள் கொண்டு வர வேண்டும் என்கின்றனர். இன்னும் அடிமைத் தொழிலாளர்கள் ஒழிந்தபாடில்லை. ஐ பி எல் சூதாட்டம் போன்றவற்றைக் கூடச் சட்ட வரம்பு படுத்த வேண்டும். சூதாடியேனும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்க வேண்டும் என்பதில் எல்லாம் அக்கரை காட்டும் உலகம் இது. இந்த உலகத்தில் வாழும் நம்மால் அவர்களை ஊக்கப் படுத்துவது போலப் பேசுவதைத் தவிர, பெரிதாக என்ன கிழித்து விட முடியும் என்று எண்ணியபடி பேச ஆரம்பித்தேன்.

“ஆதித் தமிழினம் நீங்கள்தான். மலைவாழ் மக்கள் நீங்கள். மலை உயரமானது. மழையைத் தருவது. முத்து, பவளம், சந்தனம் போன்றவை மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான மருத்துவ மூலிகைகள் நிறைந்தது. நீங்கள் அங்கு வசிப்பவர்கள். அது போல நீங்களும் உயர்ந்தவர்கள்.

அங்கு இருக்கும் மூலிகைகளை உங்களை விட்டால் வேறு யாராவது சரியாக இனம் கண்டு பிடிக்க முடியுமா? மருந்து வேண்டுமானால் எவராவது செய்யலாம். அடையாளம் கண்டு பிடித்து விட்டாலும் மருத்துவ மூலிகைகளைப் பாம்பு, பூரான்களுக்கு அஞ்சாமல் மற்றவர்களால் பறித்துக் கொண்டு வர முடியுமா? உங்களைப் போல பாம்புகளைப் பிடித்து அதன் நஞ்சை எடுக்கும் பணியெல்லாம் வேறு யாரால் செய்ய முடியும்? ஆகையால் உங்களைத் தாழ்த்திக்கொள்ளாதீர்கள். என்று கூறி என் மனத்தை நான் தேற்றிக்கொண்டேன். அப்படித்தான் என்னால் கூற முடிகிறது. ஏனென்றால் புரையோடிய புண்ணாய் இந்த எண்ணம் அவர்களின் ஆழ் மனத்தில் பதித்து வைக்கப் பட்டுள்ளது.

“இருளர் என்பதில் ‘ள’ என்னும் எழுத்தில் அருகில் ஒரு துணை எழுத்தைப் போடுங்கள். எப்படி வருகிறது? படித்துப் பாருங்கள். என்றேன். சற்று முழித்தது போல இருந்தது. “யாராவது ஒருவர் வந்து எழுதுகிறீர்களா?” என்றேன். ஏற்கனவே கரும்பலகை இருந்தது. உடனே சுண்ணக்கட்டியும் வந்தது. சற்றும் சிந்திக்காமல் ஒரு பெண் எழுந்து வந்து இரண்டு வார்த்தையும் எழுதிக்காட்டினாள்.

“மேல் உள்ளதற்கு என்ன பொருள் (இருளர்)? கீழே உள்ளதற்கு என்ன பொருள்((இருளார்)? அதாவது இருளர் என்பதற்கு என்ன பொருள்? இருளார் என்பதற்கு என்ன பொருள்?” என்று கேட்டேன். சில வினாடிகள்தான் சிந்தித்தார்கள். ‘மேடம் இருளார் என்றால் இருட்டில் வாழாதவர்’ என்று மகிழ்ச்சியாகக் கோரசாகச் சொன்னார்கள். அதை ரசித்த திரு. இராஜேந்திரன் அவர்கள் “கம்யூனிட்டி சர்டிபிகேட் அப்படி தரமாட்டார்களே மேடம்” என்றார் சிரித்துக் கொண்டே.. அவரது ஆழ் மனத்திலும் ஒரு வேளை இப்படிச் சாதிச் சான்றிதழ் கிடைத்தால் இனப் பெயரை மாற்றி விடலாம் என்று தோன்றியிருக்குமோ என்னவோ தெரியவில்லை.

“முயற்சி செய்யுங்கள் சார்” என்று கூறிவிட்டு மாணவிகளிடம் “இனிமேல் யாராவது கேட்டால் எப்படி கூறுவீர்கள்” என்று கேட்டேன். ‘இருளார் என்று கூறுவோம்’ இதை உரக்கக் கூறினார்கள்.

இந்த எளியவர்களை இருளில் அடைத்து வைத்திருக்கும் சமுதாயத்தின் மீதும் சாதிய அமைப்பின் மீதும் கோபப் படுவதைத் தவிர நம்மால் என்ன செய்து விட முடியும்? ஆனாலும் அந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சியைப் பார்த்த போது பிரமைதான் என்றாலும் அவர்களைக் கரம் பிடித்து ஒளி உலகை நோக்கிய ஒரு நூறாண்டு தூரத்திற்கு முன்னோக்கி அழைத்து வந்தது போன்ற மகிழ்ச்சி என் உள்ளத்தில். முன்னேறியது போன்ற மகிழ்ச்சி மாணவிகளின் உள்ளத்திலும் இருந்ததை அவர்களின் முக மலர்ச்சிக் காட்டிக் கொடுத்தது.

பேசுவதில் அவர்களுக்குக் கொஞ்சம் கூட அச்சம் இல்லை. ஒரு வேகம் இருந்து. துடிப்பு இருந்தது. மிகவும் ஆர்வமாக அறிமுகம் செய்து கொண்டனர். அந்த மாணவிகளுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு எடுக்கும் ஆசிரியைகள் இருவர் இருந்தனர். பி.ஏ. படித்தவகள். அவர்கள் நாங்களும்தான் சொல்ல வேண்டும் என்று மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சொன்னதில் கட்டை அறுத்துக் கொண்டு வெளியேறத் துடிக்கும் கன்றின் முயற்சியைப் பார்க்க முடிந்தது. இப்படித் துடிக்கும் ஓர் இனத்தை இருட்டறையில் வைக்கும் உலகம் வெளிச்சத்திற்கு எப்படி வர முடியும்?

எனக்குக் கொடுக்கப் பட்டிருந்த ஆணை அவர்களுக்குப் பாலியல் வன்முறையில் இருந்து தங்களை எப்படிப் பாது காத்துக் கொள்வது, வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் சுத்தம், சுகாதாரம் ஆகியவைப் பற்றிய விழிப்புணர்வைக் கொடுக்க வேண்டும் என்பது.

மாதவிடாய், தோன்றும் பருவம், அப்போது உடல், மன அளவில் ஏற்படும் மாற்றம்,. மாதவிடாய் சுழற்சி காலம். அப்போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறைகளைப் பற்றி பேசிக்கொண்டே வந்தேன். அப்போது யாரெல்லாம் துணி நேப்கின் பயன் படுத்துகிறீர்கள் என்றேன். நான்கைந்து பேர் கரம் உயர்த்தினர். என் கண்களில் கண்ணீரே வந்து விடும் போல இருந்தது. அது சுத்தமானதுதான். அதில் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை. ஆனால் நாகரிக வளர்ச்சியில் உலகம் என்ன வேகத்தில் போய்க் கொண்டு இருக்கிறது. இவர்கள் எந்த வேகத்தில் இருக்கிறார்கள்.
“ஒரு கனம் கண்ணயர்ந்தோம்; காத தூரம் பின்னடைந்தோம்” என்று கவிஞர் குலோத்துங்கன் கூறியது நினைவில் நிழலாடியது. நொடிக்கு நொடி மாறிக்கொண்டு இருக்கும் நாகரிக உலகில் இவர்கள் இன்னும் இப்படி இருப்பது எதனால்?

மாணவர்களுக்குப் பிஸ்கெட்டும் டீயும் வந்தது.. தேநீர்க் கென்று இடை வேளையெல்லாம் விட வில்லை. அவர்களும் கேட்கவில்லை. இதனிடையில் திரு இராஜேந்திரனும் திருமதி பூமாவும் அந்நிறுவன அலுவலகத்திற்குச் சென்றனர். அம்மாணவர்களிடம் விளக்கமாகவும் தெளிவாகவும் எல்லா விஷயத்தையும் பற்றி பேச இன்னும் வசதியாக இருந்தது. சற்றேறக் குறைய இரண்டரை மணி நேரம் அவர்களுடன் உரையாடினேன். முக்கியமாக நேப்கின் பயன் படுத்துவதை விட கடையில் இருந்து பருத்தியும் காஸ் பீசும் வாங்கி சொந்தமாக நேப்கின் தயாரித்து பயன் படுத்துவது சுகாதாரத்திற்கு நல்லது என்று கூறினேன். செய்முறையையும் விளக்கினேன். மற்ற நேப்கின்களின் தீங்கை எடுத்துக் கூறினேன். ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) டைஆக்ஸின் (dioxin) முதலிய மூலப்பொருள்களால் தயாராகும் நேப்கின்களால் கருப்பைப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதையெல்லாம் எடுத்துக்கூறினேன். முக்கியமாகப் பாலியல் வன்முறையில் இருந்து அவர்களை எப்படி தற்காத்துக் கொள்வது என்று கூறினேன்.

அடுத்து சுத்தம் சுகாதாரம் பற்றியெல்லாம் பேசினோம். பிரஷால் பல் தேய்ப்பதாகப் பாதி பேர் கூறினார்கள். அதைக் கூறும்போது அவர்களுக்கு அவ்வளவு பெருமை. திரு ஜெயச்சந்திரனும் திருமதி பூமாவும் என்னிடம் கூறியிருந்த எல்லாவற்றையும் பற்றி அவர்களுடன் உரையாடினேன். அதற்குள் உணவு இடைவேளையும் வந்தது. மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து சாப்பாட்டுக்குப் பிறகு மதியம் ஒவ்வொரு குழுவும் நாடகம்,, கவிதை, பாடல்,, ஆடல். கதை என்று ஏதேனும் ஐந்து நிகழ்ச்சிகள் தர வேண்டும் என்று கூறிவிட்டு சாப்பிட அனுப்பினோம்.
நாங்களும் சாப்பிடச் சென்றோம். சாப்பாட்டு மேசையில்……..!!!! அதைப்பற்றி அடுத்த பதிவில் சொல்றேனே.


நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Tநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Hநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Iநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Rநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty Re: நினைவுகளின் பதிவு - ஆதிரா

Post by ஜாஹீதாபானு Wed Jun 12, 2013 2:15 pm

கட்டுரை படிக்கையில் நானும் உங்களோடு இருந்தது போல் ஒரு உணர்வு தோன்றுகிறது ஆதிராக்கா...

அருமை தொடருங்கள் ....மீதியும் படிக்கக் காத்திருக்கிறோம்....

மனம் கனத்த அந்தச் சம்பவத்தை வரும் பதிவில் சொல்விங்க தானே?


முக்கியமாக நேப்கின் பயன் படுத்துவதை விட கடையில் இருந்து பருத்தியும் காஸ் பீசும் வாங்கி சொந்தமாக நேப்கின் தயாரித்து பயன் படுத்துவது சுகாதாரத்திற்கு நல்லது என்று கூறினேன். செய்முறையையும் விளக்கினேன். மற்ற நேப்கின்களின் தீங்கை எடுத்துக் கூறினேன். ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) டைஆக்ஸின் (dioxin) முதலிய மூலப்பொருள்களால் தயாராகும் நேப்கின்களால் கருப்பைப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதையெல்லாம் எடுத்துக்கூறினேன்

இது எப்படியென்று எங்களுக்கும் சொல்லுங்களேன் ... நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty Re: நினைவுகளின் பதிவு - ஆதிரா

Post by Aathira Wed Jun 12, 2013 5:03 pm

Code:
[quote="மனம் கனத்த அந்தச் சம்பவத்தை வரும் பதிவில் சொல்விங்க தானே?"][/quote]



சொல்லிட்டேனே பானு. அடுத்த பதிவு போட்டாச்சே


நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Tநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Hநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Iநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Rநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty Re: நினைவுகளின் பதிவு - ஆதிரா

Post by Aathira Wed Jun 12, 2013 5:06 pm

Code:
இது எப்படியென்று எங்களுக்கும் சொல்லுங்களேன் ... 

ம்ம்ம் சொல்கிறேன். போன்  பண்ணுங்க


நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Tநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Hநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Iநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Rநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty Re: நினைவுகளின் பதிவு - ஆதிரா

Post by ஜாஹீதாபானு Wed Jun 12, 2013 6:04 pm

ஓ இதான் அந்த பதிவா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty Re: நினைவுகளின் பதிவு - ஆதிரா

Post by Aathira Fri Jun 14, 2013 6:37 pm

நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 1003127_547860588589480_2047336701_n

என்னங்க இது? சாப்பாட்டு மேசையில் என்ன இருக்கும். சாப்பாடு தானே? சாப்பிடச் சென்றோம். சாப்பிடும்போது காலையில் விட்ட இடத்திலிருந்து தொடங்கி இருளர் பற்றிய, அவர்களது திருமணம், கலாச்சாரம் பற்றிய சில சுவையான தகவல்களைத் திரு. இராஜேந்திரன் சொன்னார். கேட்டுக் கொண்டெ சாப்பிட்டேன். சாப்பாடு பற்றி சொல்லவில்லையே என்று கேட்கற மாதிரி இருக்கே. முட்டை, சாம்பார், (சாம்பாரில் என்ன காய் என்று தெரியவில்லை) ரசம், அப்பளம், மிகவும் சுவையான மாங்காய் ஊறுகாய் என்று பரிமாறினார்கள்.

மீண்டும் மதிய நிகழ்ச்சியைப் பற்றிக் கூறும் முன்பு அந்நிறுவனத்தைப் பற்றிக் கொஞ்சம். இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பு என்னும் இந்த அமைப்பு திரு. இராம், திருமதி சாய் விட்டாகர் இணையரின் அரிய முயற்சியில் 1986 ல் தொடங்கப் பட்டது. ஐந்து கிராமங்களில் தொடங்கிய இவ்வமைப்பின் சேவை இப்போது 65 கிராமங்கள் வரையில் விரிவடைந்துள்ளது.

ஆதிவாசி நூலகம் என்ற நூலகம் ஒன்று உள்ளது. பழங்குடிகள், மருத்துவ மூலிகைகள், மூலிகை மருந்துகள் தயாரிக்கும் முறை, தாவரவியல் முதலியவை குறித்த சுமார் 6000 நூல்கள் அடங்கியது.

மூலிகை மருத்துவப் பிரிவு ஒன்று உள்ளது. இங்கு மூலிகைகள் பக்குவப் படுத்தப் பட்டு மருந்துகள் தயாரித்து புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராகின்றன. இது பற்றியும் சுவையான செய்தி ஒன்று பிறகு சொல்கிறேன்.
விதைகள் சேகரித்து வைத்துள்ள விதைகள் வங்கி செயல்பட்டு வருகின்றது

கணினி, வலைத்தொடர்பு வசதிகளுடன் கூடிய இருளர் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புத் தகவல் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இருளர் இனப் பெண்களால் செய்யப்படும் கலைநயம் மிக்கக் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பிரிவு ஒன்று இயங்கி வருகிறது. இதில் தயாரிக்கப் படும் கைவினைப் பொருள்கள் கண்காட்சிகள் நடத்தி விற்பனை செய்யப் படுகிறது.

காலையும் மாலையும் நடத்தல் (walk) அல்லது ஓடுதலே சுகாதாரமான வாழ்க்கைக்கு ஒரே தீர்வு என்று இக்காலத்தவர்கள் நம்புகின்றனர். ஹெர்பல் வாக் என்னும் சுமார் ஒன்றரை கி.மீ. சுற்றளவு உள்ள ஒரு மூலிகை நடை பாதை உள்ளது.

நர்சரி என்று சொல்லக்கூடிய எல்லாவகையான மூலிகை செடிகளின் கன்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செடியிலும் பெயர் எழுதப்பட்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளது இந்த நர்சரி. ஆகாயத் தாமரையைப் பார்த்ததும் எனக்கு ஒன்று வேண்டும் என்று கேட்டேன். கண்டிப்பாக விலை கொடுக்க வேண்டும் என்றார் பூமா. கொடுத்து வாங்கிக்கொள்கிறேன் என்றேன். ஏனென்றால் அது கண்களைக் கவர்ந்தது.

இந்திரா பிரியதர்ஷினி வ்ரிக்ஷமித்ரா புரஷ்கார் விருது, தேசிய விருது, பன்னாட்டு விருது, தேசிய சுற்றுலாத் துறையின் விருது, செங்கல்பட்டு மாவட்ட அரசு விருது என்று பல விருதுகளை இந்நிறுவனம்  பெற்றுள்ளது.  

அப்பாடா மூச்சு விடாமல் சொல்லி முடிச்சிட்டேன்னு நெனக்கிறேன். இன்னும் எதாவது நினைவுக்கு வந்தால் பின்னால் எழுதுகிறேன். மேலும் விபரங்களுக்கு http://www.itwwsindia.com/itwwsindia/default.aspx இந்த இணைய தளத்தைப் பார்க்கவும்

இப்ப சாப்பிட்டு முடிச்சிட்டு மீண்டும் மாணவர்களைக் காணப் பயிலரங்கத்திற்கு வந்தோம். மாணவர்களின் முகத்தில் ரகசியமாக பெரிய வேலையை முடித்த பாவனை இருந்தது. பெரிய வட்டமாக அமர்ந்திருந்தார்கள். நாங்கள் வரும்போது திட்டமிட்டது நான், திருமதி பூமா, திரு. இராஜேந்திரன் மூவரும் ஒவ்வொருவரும் அரை மணி நேரம் பேசுவது. பின்பு மாணவர்களின் ஆடல் பாடல்களுடன் அன்றைய பயிலரங்கை முடித்து விடுவது என்று. ஆனால் அரங்கத்தின் உள் நுழைந்ததும் திருமதி பூமா குழந்தைகளின் முகத்தைக் கொண்டே அவர்களின் நாடியைப் பிடித்து விட்டார். முதலில் அவர்களின் நிகழ்ச்சியைப் பார்ப்போம் என்றார். அவ்வளவு ஆர்வமாக மாணவர்கள் அமர்ந்திருந்தனர். “எல்லோரும் தயாரா ?”என்றார். ஆயிரம் மலர்களின் பளிச் ஒவ்வொருவரின் முகத்திலும் ஒளிர்ந்தது.

எத்தனை மணிக்கு முடிக்க வேண்டும் என்று பொறுப்பு ஆசிரியரைக் கேட்டார் திரு. இராஜேந்திரன். அவர் மூன்றரை மணிக்கு அனுப்ப வேண்டும் என்றார். அப்பொதே மணி இரண்டரை. நான்கு அணியிலும் ஒவ்வொரு மாணவி தலைமை தாங்கி தன் அணியின் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

ஒவ்வொரு அணியினரும் எழுச்சியான கவிதைகளைப் படித்துக் காட்டினர். பாடல்கள் பாடினர். அங்கு இருந்த ஒலிப்பேழையில் இருந்த தங்கள் இனக்குழு பாடலுக்கு ஒவ்வொரு அணியிலும் நான்கு பேர் கொண்ட குழு அல்லது இருவர் கொண்ட குழு வந்து நடனம் ஆடினர். ‘முட்டாள் முருகேசன்’ என்னும் அழகான நகைச்சுவை நாடகத்தில் முட்டாளாக நடித்த பெண் இன்னும் நினைவில் நிற்கிறாள். காலை பயிலரங்கில் என்ன பேசினோமோ அதனை அப்படியே ‘இளமையில் காதல் ஆபத்தில் முடியும்’ தலைப்பில் நடித்துக் காட்டினர்.  

திரு. இராஜேந்திரன் குழந்தைகளை வாழ்த்திப்பேசினார். மாணவர்களிடம் பயிலரங்கம் அவர்களுக்குப் பயனுள்ளதா என்று கேட்டறிந்தார். அவர்களை இந்த பயிலரங்கத்திற்கு அழைத்து வர அவர்களின் பெற்றோர்களிடம் எவ்வளவு மன்றாட வேண்டியிருந்தது என்பதை விளக்கினார். இந்த பயிலரங்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை அவர்களின் பெற்றோர்களிடம் கூற வெண்டும் என்று கேட்டுக்கொண்டார். பயிலரங்கிற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து முடித்தார். நேரமின்மையால் மீண்டும் பேச என்னை அழைக்க வில்லை. ஆனால் நான்  இரண்டு நிமிடம் அனுமதி பெற்று அவர்களின் திறமையைப் பாராட்டிவிட்டு வாழ்த்து சொல்லி அமர்ந்தேன். மீண்டும் டீ, பிஸ்கட்டுடன் பயிலரங்கம் முடிவடைந்தது. தனித்தனியாக மாணவிகள் எல்லோரிடமும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு கிளம்பினார்கள்.

திருவிழா முடிந்த கோயிலாக அவ்விடம் காட்சியளித்தது. கிளம்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த போது திரு இராஜேந்திரன் ஒவ்வொரு இடமாக எனக்குச் சுற்றிக் காண்பித்தார். ஹெர்பல் வாக்குக்கு மட்டும் போக முடியவில்லை. ஹெர்பல் நர்சரி, ஹெர்பல் மருத்துவ மூலிகைப் பிரிவு, மசாஜ் பிரிவு (இங்கு ஒரு சுவையான சம்பவம்), பேக்கிங்க் பிரிவு, விற்பனைப் பிரிவு, மாணவர்கள் வேலை வாய்ப்பு கவுன்சிலிங்க் பிரிவு எல்லாவற்றையும் ஆங்காங்கு ஒரு சுவையான சம்பவத்தைக் கூறியபடி சுற்றிக் காண்பித்தார்..

சான்றுக்கு ஒன்று உங்களுக்கும். செய்யான் என்பது பூராண் குடும்பத்தின் தாத்தாவாம். இது இது மனிதர்களின் வாசத்தை முகர்ந்து விட்டால் கடிக்காமல் விடாதாம். பார்த்த இடத்திலேயே அதனைக் கொன்று விட வேண்டுமாம். இல்லாவிட்டால் எங்கு இருந்தாலும் அந்த வாசத்தைக் கண்டறிந்து வந்து விடுமாம். இராஜேந்திரன் ஒரு முறை ஹெர்பல் வாக் சென்று கொண்டு இருக்கும் போது செய்யான் ஒன்றைப் பார்த்தாராம். இரண்டு மூன்று நாட்கள் கழித்து வீட்டில் அமர்ந்திருக்கும் போது பள பள என்று ஏதோ ஊர்ந்து கொண்டு இருந்ததாம். பார்த்தால் செய்யானாம். வாச்மேனை அழைத்து அடிக்கச் சொன்னாராம். வாச் மேன் வந்தவுடன் கேட்ட கேள்வி “இதுக்கு முன்னாடி இதை நீங்க பாத்தீங்களா சார்? “ஆமாம் வாக்கிங்க் போகும் போது பார்த்தேன்” என்றாராம். “அதுதான் சார் அது உங்களை விரட்டிட்டு வந்திருக்கு. விடாது சார் அது. பார்த்தா உடனே அடிச்சுக் கொன்னுடனு சார். இல்லாட்டா எவ்வளவு தூரம்னாலும் தேடிக்கண்டு பிடித்து வந்து விடும்” என்றாராம். எனக்குக் கந்த சஷ்டி கவசத்தில் ‘தேளும் பாம்பும் செய்யான் பூராண் கடிவிட விஷயங்கள் கடித் துயர் அங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க” என்னும் வரிகள்தான் நினைவுக்கு வந்தன


நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Tநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Hநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Iநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Rநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Aநினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நினைவுகளின் பதிவு - ஆதிரா - Page 2 Empty Re: நினைவுகளின் பதிவு - ஆதிரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum