ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் ??

3 posters

Go down

கொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் ?? Empty கொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் ??

Post by மீனு Fri Oct 23, 2009 12:34 pm

நாம் உண்ணும் உணவில் தினமும் கிடைக்கக்கூடிய கலோரியில் ஏழு சதவிகிதத்திற்கும் அதிக அளவில் கொழுப்பு இருக்கக்கூடாது.

வாய்க்கொழுப்பு அதிகமானால் செல்போனில் நாள் முழுவதும் அரட்டை கச்சேரி செய்யத் தோன்றும். உடல் கொழுப்பு அதிகமானால் யாரையாவது அடிக்கத் தோன்றும்.

ஆனால் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகிவிட்டால் இதயநோய்கள் தாக்க ஆரம்பித்துவிடும். எனவே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு நமக்கு 1200 கலோரி உணவு போதும். இந்த அளவுடைய உணவை தினமும் உண்டால் நம இரத்தத்தில் கொழுப்பு சேராது.

காலையில் காபியோ அல்லது தேனீரோ அருந்தலாம். ஆனால் அதில் ஆடை நீக்கிய பாலும், சர்க்கரையும் குறைவாக இருக்கவேண்டும்.

நினத்தபோதெல்லாம் காபி அல்ல தேநீரை அருந்துவது, நண்பர்களுக்கு கம்பெனி தருவதாக நொண்டிச்சாக்குச் சொல்லிச் சொல்லி அடிக்கடி தேநீர் குடிப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

‘வேறு வழியில்லாமல் குடித்து விட்டேன் இப்போ நெஞ்செரிச்சல் ஆரம்பித்து விட்டது’ என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம். கொழுப்பக் குறைப்பது என்பது மற்றவர்களின் ஆரோக்கியத்திற்காக அல்ல என்பதை மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்கள் குடும்ப நன்மைக்காகவும்தான்.

சாப்பிடத்தெரிந்து கொள்ளுங்கள்

என்னங்க இது கூடவா தெரியாது? ரொம்பத்தான் ... என்று சிலர் முணுமுணுப்பது காதில் கேட்கிறது. காலை டிபனுக்கு எல்லாவற்றயும் வளைத்துக்கட்ட வேண்டாம். மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை போதும். போதுமா என்கிறீர்களா? போதும்தான். உழைப்புக்கு ஏற்ற ஊதியம்தான் கிடக்கும் என்பதைப்போல உழைப்பிற்கு ஏற்ற உணவுதான் உண்ணவேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

தோசைக்கு எண்ணெய் விடாமல் இருப்பது நல்லது. சட்னிக்கு தேங்காய் வேண்டாம். காரம், புளி, உப்பு இவை குறைவாக வைத்துச் செய்த ஏதாவது ஒரு சட்னியைத் தொட்டுக் கொள்ளுங்கள். தோசைக்கு சொத சொதவென்று எண்ணெய் விட்டுக் கொண்டும் மிளகாய்ப்பொடியை ஏராளமாக எண்ணெய் விட்டு குழைத்துக் கொண்டும் இதுவரையில் சாப்பிட்டவர்களுக்கு நான் மேலே குறிப்பிட்டபடி சாப்பிடப் பிடிக்காது.

உண்மைதான் ஆனாலும் என்ன செய்வது? நீங்கள் இதுவரையில் உங்கள் விருப்பப்படி சாப்பிட்டுவிட்டீர்கள். அது போதும். இனிமேல் உங்கள் ஆரோக்கியத்திற்காக நாக்கை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். காலை டிபனோடு ஒரு டம்பளர் தண்ணீரில் பாதி மூடி எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, சிறிது உப்பு சேர்த்து ஜூஸாக குடியுங்கள்.

எனக்கு டிபன் சாப்பிட்டால் சூடாக ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் திருப்தி என்ற கதையெல்லாம் வேண்டாம். காலை ஒன்பது மணிக்குள் டிபனை முடித்துக் கொண்டு சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுங்கள்.

பகல் உணவை வெந்த காய்கறிகள், கீரை, ஒரு சப்பாத்தி, இவற்றோடு குறைவான அளவு சாதத்துடன் முடித்துக் கொள்ளுங்கள். ஒரு கப் சாம்பார், ஒரு கப் ரசம், இரண்டு கப் காய்கறிகள், ஒரு கப் மோர் இவற்றோடு ஒரு கப் சாதம் என்று சாப்பிடுவ மிகவும் நல்லது.

இவ்வாறு சாப்பிட்டால் எளிதாக செரிமானம் ஆகும். மூன்று மணிநேரத்திற்கு பசி இல்லாமலும் இருக்கும். நன்றாகக் கடைந்த மோர் ஒரு தம்ளர் குடியுங்கள். இதற்குப் பிறகு எதுவும் வேண்டாம். மாலை டிபன் வேண்டும் என்றால் காய்கறிகள பச்சையாக நறுக்கி அவற்றுடன் ஒன்று அல்லது இரண்டு பிரட் துண்டுகளச் சாப்பிடுங்கள். அவசியமானால் பால் குறைவான தேநீர் அல்ல காபி அருந்தலாம். சர்க்கரையை குறைவாக உபயோகிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டும் அல்ல எல்லோருக்குமே அவசியம்தான்.

இரவு நேரத்தில் நெய் விடாத சப்பாத்தி, முளைகட்டிய கடலையில் மிளகும் உப்பும் தூவி செய்த டிஷ் செய் சாப்பிடுங்கள். இது வேண்டாம் என்றால் கோதுமை ரவையுடன் பாசிப்பயறு கலந்து மிளகுத்தூள் சேர்த்து பொங்கலாக்கிச் சாப்பிடுங்கள். இது என்ன ஏக கெடுபிடியாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இவ்வாறு திட்டமிட்டுச் சாப்பிட்டால் உடம்பில் அதிக எடை சேராது. கொழுப்பும் ஏறாது. இதயநோய்களுக்கு டாடா சொல்லிவிட்டு ஆனந்தமாக வாழலாம்.

கொழுப்பு என்ன செய்யும்?

இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகிவிட்டால் இரத்தக்குழாய்களின் உட்புறச் சுவர்களில் கொழுப்பு படிந்து, இரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது. எனவே இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதயத்தசைகள் ஓவர்டைம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் இதயம் பலம் குறைந்து நோய்களுக்கு ஆளாகிறது.

இரத்தத்தில் கலந்த கொழுப்பு இரத்தக்குழாய்களில் அங்கங்கே சிறுசிறு கட்டிகளாகத் தேங்கிவிடும். இதனால் இதயம் மற்றும் மூளக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து விடும் அல்லது முழுவமாக தடைபட்டுவிடும். அதுபோன்ற நேரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த அடைப்புகள் பெரிய அளவில் இருக்கும்போது திடீர் இறப்பும் நேரிடுவதுண்டு.

கொலஸ்டிரால் மற்றும் உடல் எடையக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலமாக இதன் நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். புகை பிடிப்பவராக இருந்தால் அந்தப் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுங்கள். இப்போது எல்லாவற்றையும் ஒருகை பார்ப்பது என்று இறங்கி கண்டபடி சாப்பிட்டு விட்டால் இதய நோய்களுக்கு ஆளாகிவிடுவது உறுதி.

இதய அறுவ சிகிச்சை என்று போய்விட்டால் வலியும், வேதனையும், பணச்செலவும், உயிர்ப்பயமும் ஒருபக்கம் இருக்க, உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் வேளைக்கு வேளை வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படும். வாழ்க்கையே வெறுதுத்ப்போய்விடும். இவைகளை மனதில் கொண்டு ருசிக்கு மட்டுமே சாப்பிடாமல் பசிக்கு சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.

இளசுகளுக்கான எச்சரிக்கை

நம நாட்டில் நாகரிக மோகத்தின் தாக்கத்தினால் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது இளம் வயதினரிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அதிக எடை கூடுவதோடு, இரத்தத்தில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கும் அபாயம் உண்டு. மேலும் தற்போது கணிப்பொறியின் சந்நிதியிலேயே காலத்தக் கழிப்பதை ஆண்களும் பெண்களும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

உடல் உழைப்பே இல்லாத நிலையில் இந்த உணவு வகைகள் உடல் எடையக் கூட்டுவதற்கும், ஊளைச்சதை போடுவதற்கும் அடிப்படையாக அமைகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உணவு வகைகள் இவர்கள கொலஸ்டிராலின் அளவை கணிசமான அளவிற்கு உயர்த்தி இதயநோய் தாக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவை இன்றைய இளசுகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். கணிப்பொறி வேலையப் பற்றியும், கைநிறையப் பெறும் வருமானத்தைப் பற்றியுமே கவலைப்படும் இவர்கள், தங்கள் ஆரோக்கியத்தை கவனிக்கத் தவறிவிடுகின்றனர். மிதமிஞ்சிய இத்தனை உணவினால் எதிர்காலம் இவர்களுக்கு இருண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எனவே ஃபேஷனுக்கு அடிமையாகி மோசம் போகாமல் இளைய தலைமுறயினர் தவறான உணவு முறையைத் தவிர்ப்பது நல்லது.

ஃபாஸ்ட் ஃபுட்டுக்குப் பதிலாக இவர்கள் பழங்களைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். தினமும் திராட்சைச் சாறு குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இது பல் சொத்தயைத் தடுக்கிறது. மேலும் இது நன்மை செய்யும் கொழுப்பான எச்.டி. எல்லின் அளவை ஏழு சதவீதம் வரையில் உயர்த்துகிறது. ஆகவே தினமும் திராட்சையை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

மேலும் இரத்த சோகைஉள்ள பெண்கள் தினமும் 500 கிராம் அளவிற்கு திராட்சப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் இரண்டு வாரங்களில் அவர்களின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். எனவே ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்திற்கு விடைகொடுத்து பழங்களை உண்ணும் பழைய வழக்கத்திற்குத் திரும்புவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

அப்புறமென்ன கொழுப்புக்கு குட்பைதானே! 

NANDRI TO: KUMUDAM HEALTH.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் ?? Empty Re: கொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் ??

Post by தாமு Fri Oct 23, 2009 4:19 pm

உழைப்புக்கு ஏற்ற ஊதியம்தான் கிடக்கும் என்பதைப்போல உழைப்பிற்கு ஏற்ற உணவுதான் உண்ணவேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

இந்திரமயமான் வாழ்க்கையும், சுற்று சூழலும் மனிதனின் ஆயிட்காலம் குறச்சு போச்சு....

அளவான சாப்பாடு வாழ்வுக்கு போதும்.

அருமை அருமைநல்ல தகவல் மீனுமா நன்றி... கொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் ?? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் ?? Empty Re: கொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் ??

Post by யமுனாஸ் Fri Oct 23, 2009 4:53 pm

கொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் ?? Korkai

கோடைகாலத்தில் வரலாற்று நினைவுகளுடன், ஆன்மிகத்தோடு இயற்கை பேரழகை கண்டுகளிக்க விரும்பினால் நீங்கள் தேர்வு செய்யும் இடம் "கொற்கை'யாக இருக்க வேண்டும்.




தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இடம் பெறாத இந்த கொற்கையின் ரம்யமான அழகை யாரும் இன்னும் முழுமையாக உணரவில்லை.




தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் உள்ள பழைய காயலில் இருந்து 6 கி.மீ. மேற்கே இயற்கை எழில் கொஞ்சும் அழகோடு அமைந்துள்ளது கொற்கை.




மலை சுற்றுலா மையங்களுக்கு இணையாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இப்படி ஒரு குளிர்ச்சியான இடமா என்று பார்ப்போரை மயங்க வைக்கும் இடம் இது.




பழைய காயலில் இருந்து கொற்கை செல்லும் சாலையில் இரண்டு புறமும் பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் தென்னை, பனை, மா, வாழை தோப்புகள் கண்களுக்கு விருந்தாக அமைவதோடு, உள்ளத்தை குளிர்விக்கிறது.


வரலாற்று சிறப்பு மிக்க கொற்கை, பாண்டிய மன்னர்களின் முத்துக்குளி துறையாக விளங்கியுள்ளது. இதற்கு வரலாற்று சான்றுகள் பல இன்றளவும் அழியாமல் உள்ளன.




இங்கிருந்து கடல் தற்போது சுமார் 3 கி.மீ., தொலைவில் உள்ளது. சுமார் 800 முதல் 900 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் கொற்கையை ஒட்டினாற்போல் இருந்துள்ளது. இன்றும் இங்கு எந்த இடத்தில் 10 அடி தோண்டினாலும் சங்குகள் கிடைப்பதே இதற்கு சான்று.




பொற்கை பாண்டியன் நினைவாக இக்கிராமம் பொற்கை என்று முதலில் அழைக்கப்பட்டதாகவும், காலப்போக்கில் அது மருவி கொற்கை என்று மாறி விட்டதாவும் கூறப்படுகிறது.




இங்கு சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் உள்ளது. எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படும் இக்குளத்தை சுற்றி நிற்கும் பெரிய, பெரிய மரங்கள் இந்த பகுதியை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துள்ளது.




எத்தனை கடுமையான வெயில் நேரத்தில் வந்தாலும் வெயிலின் தாக்கம் சிறிதளவும் தெரியாதது இந்த இடத்தின் தனிச்சிறப்பு.




இந்த குளத்தின் நடுவில் பழமை வாய்ந்த கண்ணகி கோவில் உள்ளது. இதனை பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியன் கட்டியதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இதனால் இக்கோயிலை வெற்றிவேல் அம்மன் கோயில் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.


குளத்திற்கு எதிரே தென்னை, வாழை தோப்புகளுக்கு நடுவே பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட ஈஸ்வரமுடையார் கோவில் அமைந்துள்ளது. முற்றிலும் கற்களால் கட்டப்பட்ட இந்த கோயிலை சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.




கொற்கை கிராமத்தின் நடுவே 2000 ஆண்டு பழமை வாய்ந்த வண்ணிய மரம் ஒன்று நிற்கிறது. இந்த மரத்தை இப்பகுதி மக்கள் இன்றும் தங்கள் குழந்தையை போல் பராமரித்து வருகின்றனர்.




கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் இப்பகுதி சுற்றுலா பயணிகளை கவரும் அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்த போதிலும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட இதனை கண்டு கொள்வதில்லை.




கடந்த 1986-ம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது கொற்கை குளத்தில் வைத்து அரசு விழா நடத்தப்பட்டுள்ளது.




அப்போது கொற்கை சுற்றுலா மையமாக்கப்படும், கொற்கை குளத்தில் படகு துறை அமைக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் இன்று வரை அந்த அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகவே உள்ளன. மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.




இதனை மேம்படுத்தி சுற்றுத் தலமாக்கினால் தென்மாவட்ட மக்களின் கோடைகால வரப்பிரசாதமாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.


yamuna
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

கொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் ?? Empty Re: கொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் ??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum