புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்ஸ்பயணம்


   
   
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Thu Jun 06, 2013 4:33 pm

எத்தனையோ ரயில்களில் ஏதேதோ ஊர்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன், ஆனால் என்னால் மறக்கமுடியாத ஒரு பயணம் கூட்ஸ் ரயிலில் போனது,

பள்ளிநாட்களில் வீட்டின் அருகாமையில் உள்ள ரயில்வே நிலையத்தினை கடந்து செல்லும் கூட்ஸ் ரயில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருப்பேன்,

அப்போதெல்லாம் கூட்ஸ் ரயிலின் கடைசிப்பெட்டியில் ஒற்றை ஆளாக நின்றபடியே கொடியை வீசி அசைக்கும் கார்டினைப் பார்த்து கையசைப்பது வழக்கம், ஒரு சிலர் பதிலுக்கு கையசைப்பார்கள், பலர் இறுக்கமான முகத்துடன் வெறித்து பார்த்தபடியே கடந்து போய்விடுவார்கள்,
எத்தனையோ ரயில்களில் ஏதேதோ ஊர்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன், ஆனால் என்னால் மறக்கமுடியாத ஒரு பயணம் கூட்ஸ் ரயிலில் போனது,

பள்ளிநாட்களில் வீட்டின் அருகாமையில் உள்ள ரயில்வே நிலையத்தினை கடந்து செல்லும் கூட்ஸ் ரயில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருப்பேன்,

அப்போதெல்லாம் கூட்ஸ் ரயிலின் கடைசிப்பெட்டியில் ஒற்றை ஆளாக நின்றபடியே கொடியை வீசி அசைக்கும் கார்டினைப் பார்த்து கையசைப்பது வழக்கம், ஒரு சிலர் பதிலுக்கு கையசைப்பார்கள், பலர் இறுக்கமான முகத்துடன் வெறித்து பார்த்தபடியே கடந்து போய்விடுவார்கள்,இந்த உலகிலே மிகதனிமையானது கார்டு வேலை என்று தோன்றும், ரயில்களைப் போல வேகமாக செல்லாமல் கூட்ஸ் மெதுவாகவே செல்லும், அதிலும் பல இடங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்து போக ஒதுங்கி வழி விட்டு நிற்க வேண்டியிருக்கும், கூட்ஸ் ரயிலின் ஒசை பாசஸ்சர் ரயிலின் ஒசையை விட மாறுபட்டது, கூட்ஸ் ரயில் போவது வீட்டின் அறைகள் ஒன்றாக நகர்ந்து போவதைப் போன்றே தோன்றும்

கூட்ஸ் ரயிலை ஒட்டுகிறவராவது கடுமையாக வேலை செய்து கொண்டிருப்பார், கடைசி பெட்டியில் இந்த கார்டு என்ன தான் செய்வார், அவர் ஏன் வெள்ளை உடை அணிந்திருக்கிறார், ரயில் நிலையத்தில் கூட்ஸ் நிற்காத போது ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஒருவர் நின்று கொண்டு வளையம் ஒன்றை வீசி எறிவார்கள், கார்ட் அதைச் சரியாக தனது கைகளுக்குள் எப்படி வாங்கி கொள்கிறார் என்று ஆச்சரியமாக பார்த்திருக்கிறேன்,

ஏனோ அந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்த்து, பேசாமல் ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு கூட்ஸ் ரயிலின் கடைசிப்பெட்டியில் அமர்ந்தபடியே நிம்மதியாகப் படித்துக் கொண்டிருக்கலாம் என நினைத்திருக்கிறேன்,

ரயிலில் ஏறிப்போவது போல கூட்ஸில் யாரும் ஏறிப்போய்விட முடியாது, அதுவே அதன்மீது கூடுதல் கவர்ச்சியை தந்திருந்தது, எப்படியாவது ஒரு நாள் கூட்ஸ் ரயிலில் அதுவும் கார்ட் கூடவே பயணம் செய்ய வேண்டும் என்று தோன்றியது, ஆனால் அதை எப்படி சாத்தியமாக்குவது என்று தெரியவேயில்லை,

கடந்து செல்லும் கூட்ஸ் ரயில் பெட்டிகளை எண்ணுவது சுவாரஸ்யமான பொழுது போக்கு, ஒரு நாளும் ஒரே போல எண்ணிக்கை கொண்ட இரண்டு கூட்ஸ் ரயில்கள் ஒடுவதேயில்லை என்பதே நான் கண்டறிந்த உண்மை, அதன்பிறகு கூட்ஸ் பெட்டிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை கொண்டு அதில் தானியம் ஏற்றிக் கொண்டு போகப்படுகிறதா, சிமெண்ட் மூடைகள் துறைமுகத்திற்கு போகிறதா என்பதை கூட கண்டுபிடிக்க பழகினேன்,

ஒருமுறை கடைசிபெட்டியில் ஒரு முக்காலி போட்டுக் கொண்டு இளவயது கார்டு ஒருவர் புத்தகம் படித்தபடியே போனது எனக்குள் இருந்த ஆசையை மேலும் கிளறிவிட்டது,

ரயில்வே நிலையத்தில் கூட்ஸ் வந்து நின்றிருந்த சமயம் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அதனுள் ஏறி உள்ளே எப்படியிருக்கிறது என்று பார்த்தேன், அது ஒரு சிறிய அறை, உள்ளே கொடி வைப்பதற்காக சொருகு கம்பி, சிக்னல் விளக்கு, சிறிய கையடக்கமான நோட்டுகள், ஒரு விசில், மடக்கு நாற்காலி, ஒரு மரப்பெட்டி, டார்ச் லைட், இரும்பு கருவிகள் சில இவையே அதனுள்ளிருந்தன, கூட்ஸ் ஜன்னல் வழியாக வெளியுலகைப் பார்ப்பதற்கு விநோதமாகத் தெரிந்தது,

கூட்ஸ் ரயிலில் பயணம் செய்வதற்கு என்ன தான் வழி என்று பலரிடமும் கேட்டிருக்கிறேன், ஒருவராலும் உதவ முடிந்ததில்லை, கல்லூரி நாட்களின் போது பழனி என்றொரு நண்பன் அறிமுகமானான், அவனது அப்பா ரயில்வேயில் பணியாற்றுகிறார், அதுவும் தொழிற்சங்கவாதி என்றான், அவனது அப்பாவை அறிமுகம் செய்து வைக்கும்படியாக கேட்டுக் கொண்டேன்,

எனது ஆசையை அவனது அப்பாவிடம் சொன்னபோது இன்னும் சின்னபிள்ளையா இருக்கியேப்பா, கூட்ஸ் ரயில்ல போறதுல என்ன இருக்கு, வெறும் அலுப்பு, எனக்கு தெரிந்த தனராஜ்னு ஒரு கார்டு இருக்கார், அவர் கிட்ட கேட்டுப் பாக்குறேன், தூத்துக்குடி வரைக்கும் உன்னை கூட்டிகிட்டு போவார் என்றார்

அவர் சொல்லி பல மாதங்கள் ஆகியும் தனராஜ் என்னை அழைக்கவேயில்லை, தற்செயலாக ஒருநாள் இரவு பழனியின் அப்பா என்னை அழைத்து நாளைக்கு உன்னை கூட்டிகிட்டு போறேனு சொல்லியிருக்கார் என்றார்

அன்றிரவு என்னால் உறங்கவே முடியவில்லை, சட்டென வயது கரைந்து எனது பத்து வயதிற்குத் திரும்பிப் போய்விட்டதை போலவே உணர்ந்தேன், மறுநாள் காலை கூட்ஸ் ரயிலில் படிப்பதற்காக மாக்சிம் கார்க்கியின் சிறுகதைகளை கையில் எடுத்துக் கொண்டேன், கூட்ஸ் ரயில்களை பற்றி அற்புதமாக எழுதியவர் அவர் தானே,

தன்ராஜ் வீட்டிற்கு போன போது அவர் என்னை மதுரையை அடுத்த திருமங்கலம் ரயில் நிலையத்தில் போய் காத்திருக்கும்படியாகச் சொன்னார், உடனே டவுன் பஸ் பிடித்து திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு சென்று காத்துக் கொண்டிருந்தேன், கூட்ஸ் ரயில் எப்போது வரும் என்றே தெரியவில்லை, வெற்றுத் தண்டவாளங்களின் மீது காகங்கள் நடந்து கொண்டிருந்தன, வெயில் ஏறிய பத்து மணி அளவில் அந்தக் கூட்ஸ் மெதுவாக ரயில் வந்து நிற்கத் துவங்கியது,

தன்ராஜ் என்னை கையசைத்து ஏறிக் கொள்ளச் சொன்னார், கூட்ஸ் ரயிலினுள் ஏறி நின்று கொண்டேன், நான் ஆசைப்பட்டது இது தான் என்று சந்தோஷமாக இருந்தது., கூட்ஸ் மெதுவாகக் கிளம்பி சீராக செல்லத்துவங்கியது, கடைசி பெட்டியின் இரும்புக் கம்பிகளை பிடித்து நின்றபடியே தூரத்து மேகங்களை, வெட்டவெளியை, மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை, பின்னோடும் மரங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன், ஒருமுறை கூட்ஸ் ரயில் இரவில் பழுதுபட்டு நின்று போன தனது அனுபவத்தை சொல்லிக் கொண்டே வந்தார் தனராஜ், காதில் கேட்டுக் கொண்டு வந்த போதும் எதுவும் மனதில் தங்கவேயில்லை,

கூட்ஸ் மிகவும் மெதுவாகப் போய் கொண்டிருந்தது, எங்காவது மூடிய ரயில்வே கேட்டிலோ, மரத்தில் ஏறி நின்றபடியோ என்னைப் போல சிறுவன் எவனாவது கூட்ஸ் ரயிலுக்கு கையசைப்பானா என்று ஆசையுடன் பார்த்துக் கொண்டேயிருந்தேன், ஒரு சிறுவனும் கண்ணில் படவேயில்லை, எதிர்த்து வீசி அடிக்கும் காற்றும், வெக்கையும் தூரத்து பனைகளின் ஒலை எழுப்பும் சப்தங்களும், வறண்ட ஆற்று பாலத்தினைக் கடக்கும் போது காணமுடிந்த ஒதுங்கி நின்ற கழுதையின் தோற்றமும், முடிவற்ற தண்டவாளங்களும் என்னை கிறங்கச் செய்திருந்தன,

இப்போது திடீரென மழை பெய்யக்கூடாதா , பெய்தால் கூட்ஸில் இருந்தபடியே மழையை வேடிக்கை பார்க்கும் அபூர்வ அனுபவத்தை பெற்றிருப்பேனே என்றெல்லாம் தோன்றியது

ஒரு யானை மீது அமர்ந்து போவது தரும் விநோத அனுபவம் போலவே கூட்ஸ் ரயிலின் பயணமிருந்தது, நான் ஆசைப்பட்டது போல அங்கே புத்தகம் படிக்க மனமே வரவில்லை, மாறாக கடந்துபோகும் நிலக்காட்சிகள், கூட்ஸின் முணுமுணுப்பு, அதன் லயமான இயக்கம் மேலாகவே கவனம் போய் கொணடிருந்தது,

என் கண்முன்னாடியே அவர் கொடியசைத்து ரயில்நிலையங்களைக் கடந்து போனார், கண்முன்னே அந்த இரும்பு வளையத்தினை கையில் வாங்கி என்னிடம் தந்தார், அவரது பணி ஒவ்வொரு ரயில் நிலையத்தினையும் கூட்ஸ் எத்தனை மணிக்கு கடந்து போனது, எங்கே நின்றது, என்று குறிப்புகளை எழுதுவது என்பதை நேரிலே கண்டு கொண்டேன், கூட்ஸிலிருந்த சரக்குகளை கவனமாக கொண்டு போய்சேர்க்கிற பொறுப்பு அவருடையது என்பதை பற்றி சொல்லிக் கொண்டே வந்தார், எல்லா வேலையும் போல இதுவும் ஒரு வேலை தான், வெயில்காலத்தில இதுல மனுசன் போக முடியாது என்றார்.

தூத்துக்குடி வரும்வரை நான் அமைதியாக வெளியுலகை வேடிக்கை பார்த்தபடியே வந்தேன், அவர் எதற்காக இந்தப் பையன் இப்படி அர்த்தமில்லாமல் கூட்ஸ் ரயிலில் பயணம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறான் என புரியாதவரை போலவே என்னை பார்த்துக் கொண்டு வந்தார்,

தூத்துக்குடியில் இறங்கியதும் அவர் என்னை அழைத்துக் கொண்டு போய் தேநீர் வாங்கி தந்தார், பிறகு நீ பஸ்ஸை பிடிச்சி வீடு போய் சேர் எனக்கு வேலை கிடக்கு என்றார்,

மாலையில் வீடு வந்து சேர்ந்த போது அம்மா எனது தோற்றத்தை பார்த்த மாத்திரம் கேட்டார்

ஏன் தலை மேல்காலு எல்லாம் புழுதி படிந்து போய் கிடக்கு, எங்கே போய் சுற்றிட்டு வர்றே

கூட்ஸ் ரயிலில் போய்வந்தேன் என்று நான் சொல்லவேயில்லை,

இன்றும் எங்காவது கூட்ஸ்ரயில் போவதைப் பார்க்கும் போது கடைசிப்பெட்டி மீதே கண்கள் போகின்றன, ஏனோ அந்த வசீகரம் குறையவேயில்லை.-s.ராமகிருஷ்ணன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 06, 2013 4:53 pm

நல்ல அனுபவ பதிவு

முன் 3 பத்திகள் இரண்டு முறை பதிந்துள்ளீர்கள் நண்பரே





கூட்ஸ்பயணம் Mகூட்ஸ்பயணம் Uகூட்ஸ்பயணம் Tகூட்ஸ்பயணம் Hகூட்ஸ்பயணம் Uகூட்ஸ்பயணம் Mகூட்ஸ்பயணம் Oகூட்ஸ்பயணம் Hகூட்ஸ்பயணம் Aகூட்ஸ்பயணம் Mகூட்ஸ்பயணம் Eகூட்ஸ்பயணம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Jun 06, 2013 6:36 pm

நல்ல அனுபவம் நண்பரே

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 06, 2013 7:11 pm

எனக்கு கூட போகணும் நு ஆசை ஆனா கார்ட் கூட இல்ல டிரைவர் கூட..! புன்னகை
உங்கள் அனுபவத்தை படிக்க நன்றாக இருந்தது.! சூப்பருங்க

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 07, 2013 6:20 pm

உங்களுடைய பதிவு சுவாரசியமாக இருந்தது

எனக்கு ரயில் ஓசை மிக பிடிக்கும்.. என்னுடைய அப்பாவை இதற்கவே ரயில் கிளம்பியவுடன் போன் பண்ணுங்கள் என்று கூறுவேன்...

என் கல்லுரி-க்கு பக்கத்திலும் ரயில் போகும்... நானும் ஒவொரு ரயிலும் போகும் போதும் எண்ணுவேன் .... அதும் ஆசிரியை பார்க்காமல் எண்ணுவது சற்று கடினமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்





கூட்ஸ்பயணம் Mகூட்ஸ்பயணம் Aகூட்ஸ்பயணம் Dகூட்ஸ்பயணம் Hகூட்ஸ்பயணம் U



கூட்ஸ்பயணம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக